Sunday 19 July, 2009

அம்மா


பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியும் குழந்தையும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது.

அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள்... சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள்... பார்க்க பார்க்க ஆசையாகத்தான் இருந்தது.

மனைவிக்கு பிரவசவலி எடுப்பதாக சொல்லவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். அப்போதே போன் செய்து எனக்கும் சொல்லிவிட்டார்கள். நானும் அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றால், அங்கு டாக்டர்கள் இது பொய் வலி. வீட்டிற்கு அழைத்துப் போங்கள் நன்கு வலி எடுத்தால் வந்தால் போதும் என்க, என் மனைவிக்கு பயம். முதல் பிரசவம் அல்லவா. 'இல்லை நான் இங்கேயே இருக்கேன்' என்றாள். அவள் பயப்படுவதைப் பார்த்ததும் அனைவரும் சரி என்றார்கள்.

இரண்டு நாட்கள் கழித்தே குழந்தை பிறந்தது. அதனால் விடுப்பு நாட்கள் எடுத்ததையும் தாண்டி இருக்கும்படி ஆகிவிட்டது. குழந்தை பிறந்த மறுநாள் சொல்லிக் கொண்டு உடனே வேலைக்கு வந்துவிட்டேன்.

குழந்தை ஆசை தீர கொஞ்சிக் கொண்டிருந்தேன். அப்போது சிறுநீர் கழிக்க, 'அய்யய்ய' என்றவாறு மனைவியை கூப்பிட்டேன். மனைவி வேகமாக வந்து, 'என்ன உச்சா போய்ட்டான். அவ்வளவுதானே? இதுக்கு போய் என்ன முகத்தை சுழிக்கிறீங்க என்னமோ 'கக்கா' போன மாதிரி?' என்றாள்.

நான் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றேன். பிரவசத்துக்குப் பிறகு இவளே ரொம்ப மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன்.

குழந்தைக்கு துணி மாற்றிவிட்டு அவள் சென்ற சிறிது நேரத்தில் அவள் சொன்ன மாதிரி கக்கா போய்விட்டான். 'சுந்தரி நீ சொன்ன மாதிரி கக்காய் போய்ட்டான்' என்றேன்.
திரும்பவும் வந்து துணி மாற்றிச் சென்றாள். மணியாகிவிட்டதை உணர்ந்து அலுவலகத்துக்கு கிளம்பினேன்.

வேலை முடிந்ததும் எப்போதும் நண்பர்களையெல்லாம் சந்தித்துவிட்டு தாமதமாக வீடுவரும் நான், இன்று குழந்தையை கொஞ்சுவதற்காகவே அவசர அவசரமாக வந்து சேர்ந்தேன். மனைவி என்னை வித்தியாசமாக பார்த்தாள்.

ரவெல்லாம் குழந்தை அழுதபடியே இருந்தது.'என்னடி குழந்தை தூங்காம அழுதுகிட்டே இருக்கு' என்றேன்.

'இராத்திரியில பிறந்த குழந்தைங்க அப்படித்தான் இராத்திரி எல்லாம் முழிச்சிக்கிட்டிருக்கும். பகல்லதான் தூங்கும். நீங்க வேணும்னா ஹால்ல போய் தூங்குங்க. நான் பார்த்துக்கிறேன்.' என்றாள்.

இது எனக்கு புது தகவலாக இருந்தது. வேலைக்கு செல்லவேண்டுமே என்பதால் ஹாலில் வந்து படுத்துக் கொண்டேன். ஆனாலும் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. நான்கூட இராத்திரியில்தான் பிறந்தேன் என்று அம்மா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. அப்போ அம்மாவும் இப்படித்தான் கண்முழிச்சி கஷ்டப்பட்டிருப்பாளோ? சிந்தனைகள் எங்கெங்கோ சென்றது.

'மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்து முகத்தை காண்பிச்சிட்டு போடா' -அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இந்த வாரம் அம்மாவைப் போய் பார்த்துவிட்டு வருவதுதான் முதல் வேலை என்று நினைத்துக் கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூக்கம் வந்தது.

33 comments:

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வாய் இருந்தது நண்பரே!


தாய் - வேறு என்ன சொல்ல இயலும்.

Admin said...

//'இராத்திரியில பிறந்த குழந்தைங்க அப்படித்தான் இராத்திரி எல்லாம் முழிச்சிக்கிட்டிருக்கும். பகல்லதான் தூங்கும். நீங்க வேணும்னா ஹால்ல போய் தூங்குங்க. நான் பார்த்துக்கிறேன்.'//

நட்புடன் ஜமால் சொல்வதை வழிமொழிகிறேன்..

அ.மு.செய்யது said...

அம்மா என்று எழுத‌ ஆர‌ம்பித்து விட்டாலே ப‌திவின் க‌ண‌ம் கூடிவிடுகிறது.

எந்த‌ ஆச்ச‌ரியமுமில்லை.

நெகிழ‌வும் ர‌சிக்க‌வும் வைத்த‌ ப‌திவு அன்பும‌ணி.க‌டைசி ப‌த்தி அருமை.

ஆ.ஞானசேகரன் said...

//இந்த வாரம் அம்மாவைப் போய் பார்த்துவிட்டு வருவதுதான் முதல் வேலை என்று நினைத்துக் கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூக்கம் வந்தது.//

நல்ல பகிர்வு நண்பா

Vidhoosh said...

பெண் என்பதால் எங்களுக்கு மட்டுமே தாய்மைக்கு பிறகு தாயின் உயர்வு தெரியும் என்று நினைத்திருந்தேன்.

எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான் என்று சொல்லியே விட்டீர்கள் அன்பு.

நல்ல பகிர்வு.

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசி வரிகள் நெஞ்சை நெகிழச் செய்தது நண்பா....அருமை

ராமலக்ஷ்மி said...

//நான்கூட இராத்திரியில்தான் பிறந்தேன் என்று அம்மா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது.//

தாம் பெற்றோராகையில்தான் பெற்றோரின் அருமை இன்னும் புரிகிறது. இந்த சுழற்சி தவிர்க்க இயலாதது. நல்ல பதிவு அன்புமணி.

முனைவர் இரா.குணசீலன் said...

குழந்தைக்காக இரவு முழுவதும் கண் விழிக்கும்..........
இரவு சூரியன் தாய்

என்பதை அழகாக உணர்த்திவிட்டீர்கள்..........

முனைவர் இரா.குணசீலன் said...

இன்றைய சிறுகதை மிகவும் எதார்த்தமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது....

butterfly Surya said...

அருமை..

குடந்தை அன்புமணி said...

// நட்புடன் ஜமால் said...
நெகிழ்வாய் இருந்தது நண்பரே!


தாய் - வேறு என்ன சொல்ல இயலும்.//

காலையிலேயே ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க போல...

குடந்தை அன்புமணி said...

நன்றி....

சந்ரு, ஆ.ஞானசேகரன்.

குடந்தை அன்புமணி said...

// அ.மு.செய்யது said...
அம்மா என்று எழுத‌ ஆர‌ம்பித்து விட்டாலே ப‌திவின் க‌ண‌ம் கூடிவிடுகிறது.

எந்த‌ ஆச்ச‌ரியமுமில்லை.

நெகிழ‌வும் ர‌சிக்க‌வும் வைத்த‌ ப‌திவு அன்பும‌ணி.க‌டைசி ப‌த்தி அருமை.//

உண்மைதான் செய்யது. நன்றி.

குடந்தை அன்புமணி said...

//Vidhoosh said...
பெண் என்பதால் எங்களுக்கு மட்டுமே தாய்மைக்கு பிறகு தாயின் உயர்வு தெரியும் என்று நினைத்திருந்தேன்.

எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான் என்று சொல்லியே விட்டீர்கள் அன்பு.

நல்ல பகிர்வு//

உணர்வுகளுக்கு பால் பேதமில்லையே...

குடந்தை அன்புமணி said...

நன்றி...
கார்த்திகைப் பாண்டியன், வண்ணத்துப் பூச்சியார்.

குடந்தை அன்புமணி said...

//ராமலக்ஷ்மி said...
//நான்கூட இராத்திரியில்தான் பிறந்தேன் என்று அம்மா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது.//

தாம் பெற்றோராகையில்தான் பெற்றோரின் அருமை இன்னும் புரிகிறது. இந்த சுழற்சி தவிர்க்க இயலாதது. நல்ல பதிவு அன்புமணி.//

உண்மையான கருத்து.

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
குழந்தைக்காக இரவு முழுவதும் கண் விழிக்கும்..........
இரவு சூரியன் தாய்

என்பதை அழகாக உணர்த்திவிட்டீர்கள்...//

குணசீலன் அய்யா... கவிதை எழுதலாமே... வருகைக்கு நன்றி.

க.பாலாசி said...

//இராத்திரியில பிறந்த குழந்தைங்க அப்படித்தான் இராத்திரி எல்லாம் முழிச்சிக்கிட்டிருக்கும். பகல்லதான் தூங்கும்.//

அப்படிங்களா, நல்லவேலை நான் பகலில் பிறந்தேன். அதனாலோ என்னவோ இரவில் தூங்கி பகலில் எழ அழுகிறேன்.

தாயின் வலியை மனைவி கருத்தறிக்கும் போதுதான் உணரமுடியும் போலிருக்கிறது.

துபாய் ராஜா said...

நல்லதொரு நெகிழ்வான சிறுகதை.

வாழ்த்துக்கள்.

ஆதவா said...

தாயன்பு உணர்ந்து கொள்ளும் ஒவ்வொரு மகனும் தன்னையே புரிந்து கொள்கிறான்... அன்பினால் கட்டுண்டு நல்லதையே செய்ய நினைக்கிறான்.

இக்கதையின்படி, பிரசவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே போகிறவர் உண்டு... பிரசவ வலி நன்கு எடுக்காமல் சிசேரியன் பண்ணுபவர்களும் (அல்லது பண்ணப்படுபவர்களும்) உண்டு.

கக்கா, உச்சா, போன்றவை புன்னகையை வரவழைத்தது.... (நான் இப்பொழுதும் "சூசூ" என்றுதான் சொல்லுவேன் :D )

அன்புடன்
ஆதவா

ஆ.சுதா said...

நெகிழ்வு!
கடைசி பத்தியில் அம்மாவின் முகம்.



_______________________________

ஆதவனின் வரவு மகிழ்வு.
______________________________

அமுதா said...

அருமை. சில விஷயங்களை உணரும்பொழுதுதான் சில எண்ணங்கள் வெளிவருகின்றன. தாய்மையும் தந்தைமையும் உணரும் பொழுது தான் நமக்கு கூட இப்படி என்ற எண்ணம் வெளிப்படும்.

ஹேமா said...

மணி சீக்கிரம் போய் அம்மாவைப் பாத்திட்டு வாங்க.அம்மா அப்பாவைப் பாகக்ணும் நினைச்சா ஒத்தி வைக்கக் கூடாது.அது மனசுக்கு பாரமாவே இருக்கும்.என் அனுபவம் இது.

குடந்தை அன்புமணி said...

//அப்படிங்களா, நல்லவேலை நான் பகலில் பிறந்தேன். அதனாலோ என்னவோ இரவில் தூங்கி பகலில் எழ அழுகிறேன். //

பாலாஜி, உங்கள் சோம்பேறித்தனத்திற்கு இப்படி ஒரு மழுப்பலான பதிலா... வாழ்க...

தாயின் வலியை மனைவி கருத்தறிக்கும் போதுதான் உணரமுடியும் போலிருக்கிறது.//

அப்படித்தான் போலிருக்கு...

குடந்தை அன்புமணி said...

//துபாய் ராஜா said...
நல்லதொரு நெகிழ்வான சிறுகதை.

வாழ்த்துகள்.//

மீண்டும் வலைத்தளத்திற்கு வருகை. நன்றி துபாய் ராஜா.

குடந்தை அன்புமணி said...

// ஆதவா said...
தாயன்பு உணர்ந்து கொள்ளும் ஒவ்வொரு மகனும் தன்னையே புரிந்து கொள்கிறான்... அன்பினால் கட்டுண்டு நல்லதையே செய்ய நினைக்கிறான்.

இக்கதையின்படி, பிரசவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே போகிறவர் உண்டு... பிரசவ வலி நன்கு எடுக்காமல் சிசேரியன் பண்ணுபவர்களும் (அல்லது பண்ணப்படுபவர்களும்) உண்டு.

கக்கா, உச்சா, போன்றவை புன்னகையை வரவழைத்தது.... (நான் இப்பொழுதும் "சூசூ" என்றுதான் சொல்லுவேன் :D )

அன்புடன்
ஆதவா//

என்னடாது வலைத்தளம் பிரைட்டா இருக்கேன்னு பார்த்தேன்... ஓ... ஆதவா வருகை. வாங்க... வாங்க...ரொம்ப இடைவெளி விடாதீங்க ஆதவா...

குடந்தை அன்புமணி said...

// ஆ.முத்துராமலிங்கம் said...
நெகிழ்வு!
கடைசி பத்தியில் அம்மாவின் முகம்.//

வாங்க முத்து. வேலைப்பளு குறைஞ்சிடுச்சா. இனி இதிக இடுகைகளை எதிர்பார்க்கிறேன்.

குடந்தை அன்புமணி said...

//அமுதா said...
அருமை. சில விஷயங்களை உணரும்பொழுதுதான் சில எண்ணங்கள் வெளிவருகின்றன. தாய்மையும் தந்தைமையும் உணரும் பொழுது தான் நமக்கு கூட இப்படி என்ற எண்ணம் வெளிப்படும்.//

ரொம்ப சந்தோசமா இருக்கு. தங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

குடந்தை அன்புமணி said...

//ஹேமா said...
மணி சீக்கிரம் போய் அம்மாவைப் பாத்திட்டு வாங்க.அம்மா அப்பாவைப் பாகக்ணும் நினைச்சா ஒத்தி வைக்கக் கூடாது.அது மனசுக்கு பாரமாவே இருக்கும்.என் அனுபவம் இது.//

உண்மைதான் தோழி. நான் மாதம் ஒருமுறையேனும் போய் வருகிறேன்.

குடந்தை அன்புமணி said...

//T.V.Radhakrishnan said...
அருமை//

இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன். ஆமாங்க. பிரபல பதிவர்கள் எல்லாம் என் வலைக்கு வருகை தந்திருக்காங்களே...

அடிக்கடி வாங்க சார்.

குடந்தை அன்புமணி said...

// நசரேயன் said...
நல்லா இருக்கு//

நானும் உங்களைப் போல எழுதணும்னு பார்க்கிறேன் முடியலையே...

எம்.எம்.அப்துல்லா said...

அழகு!அருமை!

இந்த வாரம் அம்மாவைப் பார்க்க நானும் ஊருக்குக் கிளம்பணும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நெகிழ்ச்சியான பதிவு

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...