Monday 9 May, 2011

பயனுள்ள பல தகவல்கள்


1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது  இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.
3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.
4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!
அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.
8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!
9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/
10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471
11) இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய் முகவரி:East Canal Bank Road, Gandhi Nagar,Adyar Chennai - 600020Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

டிஸ்கி: எனக்கு மெயிலில் வந்தவை

அப்படியே இங்கேயும் சென்று பாருங்கள்... ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Wednesday 4 May, 2011

மருத்துவமனையில் ரஜினிகாந்த்... (அரசியல்?!)


ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ராணா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. அப்போது உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் ரஜினிகாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

 இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை மருத்துவ மனையில் 2 நாள்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்ற மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டதும், அன்று மாலை நடைபெற்ற பொன்னர் சங்கர் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் மிகவும் தர்மசங்கடமான நிலையில் இருந்ததையும் தமிழக மக்கள் அறிவார்கள்.

இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட விண்ணைத்தாண்டி வருவாயா, மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதை தொடர்ந்து . இந்த 4 படங்களின் வெற்றி விழா மே 7 ஆம் திகதி ரஜினிகாந்த் தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு கேடயம் வழங்கவும் ரஜினி சம்மதித்திருந்தார்.

ஆனால் இப்போது மே 7ஆம் தேதி நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வது நிச்சயமற்றநிலை நிலவுகிறது. இதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும் சம்மந்தம் இல்லை என்றே நம்புவோம்.அவர் பூரண குணம் அடைய பிரார்த்திப்போம்.

Sunday 1 May, 2011

கண்கொள்ளா அந்த காட்சி...


இருள் சூழத்தொடகியதும் காணக்கிடைக்கும் அந்தக் கண்கொள்ளா அந்த காட்சி... காணத்தவறாதீர்கள்...

சென்னை நகரின் மையத்தில் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட (அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில், ரூ.8 கோடி செலவில் 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சவால் விடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு பிரமாண்டமான தாவரவியல் பூங்காவான செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை அண்ணாசாலையில்,  வாகனங்களின் சத்தங்களுக்கு மத்தியில், பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்து அமைதியும் ரம்மியமும் நிலவிய அந்த இடத்தில் தமிழக அரசு செம்மொழி பூங்காவை அமைத்துள்ளது.


 செம்மொழி பூங்காவை ஒவ்வொன்றாக ரசித்தவாறு சுற்றிப்பார்க்க வேண்டுமானால் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும். பூங்காவின் உள்ளே ஒன்றே கால் மீட்டர் தூரம் நடந்தால்தான் அனைத்தையும் கண்டுரசிக்க முடியும்.

குழந்தைகள் விளையாடி மகிழ யானை வடிவில் சறுக்குமரம், ஊஞ்சல் - இப்படி இன்னும் இன்னும்...

எழில் சூழ்ந்த மரங்கள், விதவிதமான தாவரங்கள், பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் கொண்ட இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதால் சுத்தமான காற்றை சுவாசிப்பதுடன் வாக்கிங் சென்றதுபோலும் ஆகிவிடும். பரபரப்பு மிக்க இடத்திற்கு மத்தியில் ரம்மியான சூழ்நிலையில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா சென்னைவாசிகளுக்கு நிச்சயம் வரப்பிரசாதம்தான்.

முக்கியமான செய்தி...
காலை எட்டுமணி முதல் இரவு எட்டுமணிவரை பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். முழுநேர பொழுதுபோக்கிற்கு உகந்த இடம் என்றாலும்  மாலை ஆறுமணிக்குமேல் நீர்ஊற்றுகளில் வண்ணமின் விளக்குகள் காட்டும் ஜாலங்களை கண்டு மகிழாமல் திரும்பாதீர்கள்.

 பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை. மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் ஜந்து ரூபாய். கார், பைக் பார்க்கிங் வசதி உண்டு. உள்ளே தீனி பண்டங்கள் உட்பட எதுவும் கிடைக்காது. அதுவும் நல்லதாகத்தான்படுகிறது.  பூங்காவை அசுத்தப்படுத்தபடாமல் இருக்க உதவுமில்லையா?
பூங்காவுக்கு வெளியேயாவது கடைகள் அமைக்கலாம்.

என்ன போட்டோ ஒன்றுதானா? என்கிறீர்களா?
நம்ம வலைபதிவர்கள் பலரும் இதுபற்றி எழுதியிருக்கிறார்கள், அதில் விடுபட்ட செய்திகளைத்தான் நான் பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவர்களின் வலைத்தளங்களுக்கும் சென்று பாருங்கள். படங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.
http://vs-jothilakshmi.blogspot.com/2011/01/classical-language-park-chennai.html
http://valaimanai.blogspot.com/2011/03/blog-post.html
http://ilakindriorpayanam.blogspot.com/2010/12/blog-post.html
http://haasya-rasam.blogspot.com/2010/12/blog-post_05.html


தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...