Thursday, 29 October 2020

நாடுபோற்றும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு | Nachiyarkovil Kuthuvilakku

நாடுபோற்றும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு | Nachiyarkovil Kuthuvilakku

Monday, 21 September 2020

தமிழ்முகம்

 அன்புத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்!

எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன்.

இந்த இடைப்பட்ட காலத்திற்குள் ஏகப்பட்ட மாற்றங்கள்...

தஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து தாம்பரத்தில் பலவருடங்கள் தங்கியிருந்தேன். 

தற்பொழுது (மீண்டும்) குடந்தையில்தான் இருக்கிறேன். இனி எப்பொழுதும் இங்குதான் இருப்பேன்.

குடந்தையில், " கற்பகம் டிராவல்ஸ்" ஆரம்பித்து நடத்திவருகிறேன்.

இந்த கொரானா காலத்தில் 'தமிழ் முகம்' என்ற YouTube channel ஆரம்பித்துள்ளேன். அதில் தொழில்சார்ந்த வீடியோ பதிவிட்டு வருகிறேன் என்பதை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

YouTube channel லிங்கையும் உங்கள் பார்வைக்கு தருகிறேன். பாருங்கள்...

https://youtu.be/prkq34bpK7Y

இனி எந்நாளும் இணைந்திருப்போம்...!



Wednesday, 13 July 2011

படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு...

படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு...




தமிழக அரசு செயல்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி- தினமணி

Monday, 4 July 2011

காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை!


வலையுலக நண்பர்களே வணக்கம்.
உங்கள் இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி வேண்டியே இவ்விடுகை.

உண்மையாகத்தான்... உங்கள் வலைத் தளங்களில் உள்ள இடுகைகளில் நான் தேர்வு செய்திருக்கும் இடுகைகளை உபயோகப் படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி தேவை. (அறிவிப்பு விரைவில் வரும்...)

உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட இருக்கிறேன். அதற்காக உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்திற்கும் வருகை புரிவேன். உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சுற்றுலா கட்டுரைகள்,
ஆன்மிக செய்திகள், தாங்கள் வரைந்த ஓவியங்கள், சினிமா விமர்சனங்கள், சினிமா கிசுகிசுக்கள், இன்னும் சுவராசியமான செய்திகள் எதுவுமிருப்பினும்
அத்தனையும் சுடப்பட்டு வெளியிடப்படும்.

நிச்சயமாக உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியும் இடம்பெறும். மேலும் விவரங்களுக்கு முந்தைய இடுகையை படிக்க தவறாதீர்கள்.

Monday, 27 June 2011

குறைந்தபட்ச மனசாட்சியாவது வேண்டாமா?



"தானாய்க் கனிகிற கனி,
தடியால் எதற்கு அடிப்பானேன்?''

தடியால் அடித்தாலும் பரவாயில்லை. ஆனால், 'கல்'லால் அடிக்கும் கைங்கர்யத்தை என்னவென்று வொல்வது?
ஒரு வினைக்கான வேதிப்பொருளைப் பல்வினைக்கும் பயன்படுத்துவது மனிதப் புத்தியின் மகத்தான செயல்தான். ஆனால், அந்தச் செயல் மகத்தானவற்றுக்கென்றால், மனிதனை "மாண்புமிகு' என்று மார்தட்டிச் சொல்லலாம்.
என்ன விளங்கவில்லையா?
வீடு வந்த விருந்தாளிக்கு வெந்ததும் வேகாததுமாய் வடித்துக் கொட்டும் ஓர் இரைவேக்காட்டுக் கதியைப்போல் திகழ்கிறது இன்றைய வர்த்தக உலகம்.
'விளைந்தது வீ(தி)டு வந்து சேரும்' என்பது விவசாய விதி என்றால், பிஞ்சைப் பறித்து வெம்ப வைத்து விற்பனைக்கு விடுவதென்பது இன்றைய வியாபார உலகின் "விவேக' விதியோ?
உலகம் ஒரு வியாபாரச் சந்தைதான்; ஆனால், அதில் கொஞ்சமேனும் நேர்மை, நீதி அல்லது குறைந்தபட்சம் மனசாட்சியாவது வேண்டாமா?
ஒவ்வொரு பருவத்திலும் அந்தப் பருவத்துக்குத் தேவையான அல்லது அந்தப் பருவத்தில் இயற்கையாகவே கிடைக்கும் விளைபொருட்களைச் சந்தையில் விற்பது சகஜந்தான்.
குளிர்காலம் வரும் முன்பே குல்லா நெய்வது ஓர் உற்பத்தித் தர்மம்தான். ஆனால், புடவை உடுத்த வைப்பதற்காகச் சிறுமியைப் பருவக்காரியாக்குவது பாதகச் செயல் இல்லையா?
கோடைக்காலம் கொழுந்துவிடத் தொடங்கி விட்டாலே... மா, பலா, தர்ப்பூசணி போன்ற கனி வகைகள் கடைவீதிக்கு வந்து கண்களை ஈர்க்கின்றன. அவை பழுத்தவையா அல்லது பழுக்க வைக்கப்பட்டவை? என்பதே நமது கேள்வி.
உதாரணத்துக்கு, முக்கனியில் முதற்கனியான மாங்கனியை எடுத்துக் கொள்வோம். இவை கிளைகளிலேயே கனிந்தா கடைத்தெருவுக்கு வருகின்றன? இல்லை... இல்லை... சந்தைக்குச் சரக்காக்கும் அவசரத்தில் காய்களாகவே கொய்யப்பட்டு, பிறகு பெரிய பெரிய கிடங்குகளில்- "கார்பைடு' என்ற வேதியியல் கார்பைடுக் கற்களின் வெப்பத்தில் "குளிர்காய்ந்த' மாங்காய்களோ, தாம் பழுத்துவிட்டதாய்ப் பாவனை செய்கின்றன.
பிறகென்ன... ? தகதகக்கும் ஒரு தங்க நிறத்தோடு அவை கடைவீதிக்கு வந்து கண் சிமிட்டுகின்றன.
இந்நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புவது இதைத்தான். நாம் மேற்சொன்ன "கார்பைடு' கல் என்பது என்ன? அது என்ன வேலை செய்கிறது?
உலோகத் தகடுகளை உருக்கி ஒட்டவைக்கும் ஒருவித எரிவாயுவைக் கருத்தரிப்பவைதான் இந்த கார்பைடுக் கற்கள்.
இரும்பையே எரித்து உருக்கும் இந்த வேதியியல் கற்களின் வெதுவெதுப்பில் கனிபவைதான் நாம் ஒவ்வொரு கோடையிலும் வாங்கி விழுங்கும் இந்த மாங்கனிகள் மன்னிக்கவும் "கார்பைடுக் கனிகள்!'
ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கார்பைடுக் கனிகள் விற்பனைக்கு வருவ தோ, அப்போது சமூக நல ஆர்வலர்கள் அதற்குக் கண்டனக் குரல் எழுப்புவதோ ஒன்றும் புதிதில்லைதான். ஆனால், வர்த்தக முதலைகள் சிலரோ, சம்பந்தப்பட்டவர்களையும் அரசு அதிகாரிகளையும் "சரிகட்டி' சரக்கை எப்படியோ சந்தைப்படுத்தி விடுகின்றன.
இந்தச் சரிகட்டும் காசில்- கார்பைடுக் கனிய வைத்தல் அல்லாத, வயிற்றுக்குள் வன்முறைச் சம்பவம் நிகழ்த்தாத மாற்று ஒன்றை இவர்கள் மலர்த்துவார்களேயானால், இந்தக் "குடல் காப்பாற்றிகளை' கும்மிட்டுத் தொலைக்கலாம்.
வாசனையற்று, வெறும் "விழி ஈர்ப்பு விசை'யாய் நிறங்காட்டும் சுவையற்ற இந்த கனிகளைச் சுவைத்தால், நுனி நாக்கில் நமச்சலெடுக்கும். பிறகு, அவை குடலுக்குள் குந்தி கும்மியடிக்கும்.
பிறகென்ன...?
மருத்துவர்; மருந்து; மாத்திரை; மனவேதனைதான். எனவே, இவை போன்றவற்றை உண்டுணர்ந்து குடல் நொந்து குமையாமல் கண்டுணர்ந்து புறந்தள்ளுவதே "மாண்புமிகு மக்கள்' பண்பாகும்.

-கோ. பாரதிமோகன். இவரின் சில கவிதைகளை எனது மற்றொரு வலைத்தளமான கவிதைகுரலில் படித்திருப்பீர்கள். திருச்சியிலிருந்து வெளிவரும் துடிப்பு மாத இதழில் எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு... அவரின் அனுமதியோடு... 

Thursday, 16 June 2011

வலைப்பதிவர் ராஜீவ்காந்தி நலம்பெற பிரார்த்திப்போம்...


எழில்கவி வலைப்பதிவரும், எனது நண்பருமான ராஜீவ்காந்தி அவர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைய நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்...

அவர் குணமடைய வேண்டி நண்பர் சூர்யநிலா எழுதிய சிறு கவிதை...

உனது ராகங்கள் எப்போதும்
எங்களுக்கு கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்
அது செந்தமிழ் ராகமாக
எப்போதும் இசையோடு வேண்டும்
இளகிய இதயமிருப்பவருக்கு
வலி வரத்தான் செய்யும்...
அதையும் வெல்லும் வல்லமை
உனக்குண்டு...
வாழிய நீ பல்லாண்டு...

-கவிஞர் சூர்யநிலா

(ராகா குறுஞ்செய்தி இதழ், செந்தமிழ் இலக்கிய குறுஞ்செய்தி இதழும் நடத்தி வருகிறார்)

Monday, 9 May 2011

பயனுள்ள பல தகவல்கள்


1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது  இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.
3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.
4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!
அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.
8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!
9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/
10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471
11) இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய் முகவரி:East Canal Bank Road, Gandhi Nagar,Adyar Chennai - 600020Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

டிஸ்கி: எனக்கு மெயிலில் வந்தவை

அப்படியே இங்கேயும் சென்று பாருங்கள்... ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Wednesday, 4 May 2011

மருத்துவமனையில் ரஜினிகாந்த்... (அரசியல்?!)


ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ராணா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. அப்போது உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் ரஜினிகாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

 இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை மருத்துவ மனையில் 2 நாள்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்ற மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டதும், அன்று மாலை நடைபெற்ற பொன்னர் சங்கர் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் மிகவும் தர்மசங்கடமான நிலையில் இருந்ததையும் தமிழக மக்கள் அறிவார்கள்.

இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட விண்ணைத்தாண்டி வருவாயா, மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதை தொடர்ந்து . இந்த 4 படங்களின் வெற்றி விழா மே 7 ஆம் திகதி ரஜினிகாந்த் தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு கேடயம் வழங்கவும் ரஜினி சம்மதித்திருந்தார்.

ஆனால் இப்போது மே 7ஆம் தேதி நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வது நிச்சயமற்றநிலை நிலவுகிறது. இதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும் சம்மந்தம் இல்லை என்றே நம்புவோம்.அவர் பூரண குணம் அடைய பிரார்த்திப்போம்.

Sunday, 1 May 2011

கண்கொள்ளா அந்த காட்சி...


இருள் சூழத்தொடகியதும் காணக்கிடைக்கும் அந்தக் கண்கொள்ளா அந்த காட்சி... காணத்தவறாதீர்கள்...

சென்னை நகரின் மையத்தில் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட (அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில், ரூ.8 கோடி செலவில் 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சவால் விடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு பிரமாண்டமான தாவரவியல் பூங்காவான செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை அண்ணாசாலையில்,  வாகனங்களின் சத்தங்களுக்கு மத்தியில், பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்து அமைதியும் ரம்மியமும் நிலவிய அந்த இடத்தில் தமிழக அரசு செம்மொழி பூங்காவை அமைத்துள்ளது.


 செம்மொழி பூங்காவை ஒவ்வொன்றாக ரசித்தவாறு சுற்றிப்பார்க்க வேண்டுமானால் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும். பூங்காவின் உள்ளே ஒன்றே கால் மீட்டர் தூரம் நடந்தால்தான் அனைத்தையும் கண்டுரசிக்க முடியும்.

குழந்தைகள் விளையாடி மகிழ யானை வடிவில் சறுக்குமரம், ஊஞ்சல் - இப்படி இன்னும் இன்னும்...

எழில் சூழ்ந்த மரங்கள், விதவிதமான தாவரங்கள், பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் கொண்ட இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதால் சுத்தமான காற்றை சுவாசிப்பதுடன் வாக்கிங் சென்றதுபோலும் ஆகிவிடும். பரபரப்பு மிக்க இடத்திற்கு மத்தியில் ரம்மியான சூழ்நிலையில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா சென்னைவாசிகளுக்கு நிச்சயம் வரப்பிரசாதம்தான்.

முக்கியமான செய்தி...
காலை எட்டுமணி முதல் இரவு எட்டுமணிவரை பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். முழுநேர பொழுதுபோக்கிற்கு உகந்த இடம் என்றாலும்  மாலை ஆறுமணிக்குமேல் நீர்ஊற்றுகளில் வண்ணமின் விளக்குகள் காட்டும் ஜாலங்களை கண்டு மகிழாமல் திரும்பாதீர்கள்.

 பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை. மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் ஜந்து ரூபாய். கார், பைக் பார்க்கிங் வசதி உண்டு. உள்ளே தீனி பண்டங்கள் உட்பட எதுவும் கிடைக்காது. அதுவும் நல்லதாகத்தான்படுகிறது.  பூங்காவை அசுத்தப்படுத்தபடாமல் இருக்க உதவுமில்லையா?
பூங்காவுக்கு வெளியேயாவது கடைகள் அமைக்கலாம்.

என்ன போட்டோ ஒன்றுதானா? என்கிறீர்களா?
நம்ம வலைபதிவர்கள் பலரும் இதுபற்றி எழுதியிருக்கிறார்கள், அதில் விடுபட்ட செய்திகளைத்தான் நான் பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவர்களின் வலைத்தளங்களுக்கும் சென்று பாருங்கள். படங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.
http://vs-jothilakshmi.blogspot.com/2011/01/classical-language-park-chennai.html
http://valaimanai.blogspot.com/2011/03/blog-post.html
http://ilakindriorpayanam.blogspot.com/2010/12/blog-post.html
http://haasya-rasam.blogspot.com/2010/12/blog-post_05.html


Saturday, 30 April 2011

தல அஜீத்-ன் தடலாடி முடிவு


'தல' அஜீத் ரசிகர் மன்றத்தை தடலாடியாக கலைத்து,
 ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்திருக்கிறார்.
இதுபற்றி தல ரசிகர்களாகிய உங்களின் கருத்து என்ன?

Friday, 29 April 2011

ராணா, திரை செய்தி

ராணா படப்பூஜை ஸ்டில்கள் வெளிவந்துவிட்டன.   

இன்னும் பல படங்களை நக்கீரன் வெளியிட்டிருக்கிறது. அங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.
http://www.nakkheeran.in/users/frmGalleryList.aspx?GV=695&GSS=4

Thursday, 21 April 2011

அயல் கிரகவாசிகள்

பூமிக்கு வெளியே சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களிலும் இது தவிர சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களிலும். மனித இனம் போல வேறு உயிரினம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த அயல் கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்ததாகவும் அவர்களை பார்த்ததாகவும் ஐரோப்பியர்கள் அடிக்கடி சொல்வது உண்டு.
ரஷியாவில் உள்ள சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உள்ள உறைபனி குப்பைகளில் ஒரு அயல் கிரகத்து உயிரினத்தின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை பார்த்ததாகவும் சமீபத்தில் 2 பேர் தெரிவித்தனர்.

அவர்கள் நடந்து சென்ற போது இதை பார்த்ததாக தெரிவித்தனர். இதை அவர்கள் போட்டோ எடுத்து இணையதளத்தில் இணைத்து விட்டனர்.
அழுகிய நிலையில் காணப்பட்ட அந்த உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. அதன் வாய் திறந்தபடி இருந்தது. அது 2 அடி உயரமே இருந்தது. அதன் வலது காலை காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் இருந்தன.

மண்டை ஓடு போன்ற தலையில் ஒரு வாய் இருந்தது. இந்த அயல் கிரகவாசி விபத்தில் இறந்து போய் இருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர்.

இணையதளத்தில் இடம் பெற்ற அயல் கிரகவாசியின் உடலை ஒரு சில நாட்களில் 7 லட்சம் பேர் பார்த்தனர். ஆனால் இதை சிலர் அயல் கிரகவாசியின் உடல் என்பதை ஏற்றுக் கொள்ள வில்லை. இது ஒரு போலி வீடியோ என்றும் அயல்கிரகவாசி மாதிரியாக தயாரிக்கப்பட்ட ஒரு மாடல் என்றும் கூறி உள்ளனர்.
(நன்றி- nakkheeran.in

அயல்கிரகவாசி பற்றிய வீடியோ காட்சி பார்க்க...
http://in.news.yahoo.com/-dead-alien--found-in-siberian-snow.html

Monday, 28 March 2011

ஓ போடுவதில் சிக்கல்




வ்வொரு தேர்தலின்போதும் அரசியல்கட்சிகளின் மேல் இருக்கும் எதிர்ப்பை, நம்பிக்கையின்மையை, ஊழல்வாதிகளைக் கண்டு அவர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய 49ஓ-படிவத்தை பயன்படுத்தி வந்தனர். அந்த படிவத்தை பயன்படுத்த வாக்காளர்கள் கையெழுத்து போட்டு வாங்கி பயன்படுத்தலாம் என்பது பழைய விதிமுறை.

ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகளை மிகவும் கறாராக செயல்படுத்தி வரும் தேர்தல் கமிஷன் இதிலும் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. 49ஓ படிவத்தை பெறுபவர்கள் தங்களின் முழு முகவரி, அவர் சார்ந்த பகுதியின் பாகம் எண் மற்றும் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டுமாம். இப்படிவத்தின் கவரை தேர்தல் கமிஷனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவிற்குப் பின் இந்தக் கவர்கள் பிரிக்கப்பட்டு, அதில் அந்த நபர் குறிப்பிட்டிருக்கும் காரணங்களை சரிபார்ப்பார்களாம். அரசியல் காரணங்கள் தவிர வேறு காரணங்கள் இருப்பின் அந்த நபரை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு பதிவு செய்வார்களாம். அந்த பதிவுகள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படுமாம்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு நீங்கள் தயார் என்றால் ஓ போடலாம்!

Tuesday, 28 September 2010

மேல் மருவத்தூர் மகிமை

என் மனைவிக்கு சமீப காலமாக அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்பட்டு வருகிறது. இதற்காக நரம்பியல் நிபுணர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என சிகிச்சை மேற்கொண்டும் அவ்வளவாக பலனில்லை. (தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறோம்.)

இதற்கிடையில் பலரும் மேல்மருவத்தூர் சென்று வாருங்கள். அங்கு சென்று வந்தால் குறைகள் தீரும் என்றனர். மருவத்தூர் செய்திகள் என்று தொலைக்காட்சியில் வருவ்தையும் பாருங்கள் அப்போது உங்களுக்கே புரியும் என்று சொல்ல, அதன்படியே பார்த்த என் மனைவியும் மேல்மருவத்தூர் செல்ல அதிக ஆர்வம் கொண்டாள். என்மீது அக்கறை இருந்தாள் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தாள். சரி என்று நானும் என் மனைவி மற்றும் சகோதரியும், சகோதரியின் மகனும் மேல்மருவத்தூர் சென்றோம். அர்ச்சனைக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருந்தாலும், கம்பித் தடுப்புகளை போட்டு சுற்றிக் கொண்டே வர வைத்தார்கள். (அந்தக் கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறை) சுற்றிவந்து மேல்மருவத்தூர் அம்மனை தரிசிக்க கூடிய நேரத்தில் அம்மா வருகிறார் அம்மா வருகிறார் என்று ஒரே பரபரப்புடன் அங்கிருந்தவர்கள் எங்களை நிற்க வைத்துவிட்டார்கள். பங்காரு அடிகளார் வந்து சென்றதும் எங்களை நல்ல தரிசனம்கூட செய்யவிடாமல் விரட்டாத குறையாக அனுப்பிவைத்தார்கள். அழைத்து வந்த எனக்கு மட்டுமல்ல மனக்குறைகளை போக்கும் ஆர்வத்துடன் வந்த என் மனைவியும், சகோதரியும், சகோதரியின் மகனும் இந்தச் செயலால் மிகவும் வேதனையுற்றோம். கோயிலுக்கு வெளியே வந்து அங்கிருந்தே தெரிந்த மேல்மருவத்தூர் அம்மனை வணங்கிவிட்டு வந்தோம். ம்...

Wednesday, 28 July 2010

பின்னூட்ட சூறாவளியுடன் ஒரு சந்திப்பு!


அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கைபேசி அலைத்தது. யாரென்று பார்த்தால் பின்னூட்ட சூறாவளி ராகவன் அண்ணன். திடீரென்று அவரிடமிருந்து அழைப்பு வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வணக்கம்
என்றேன், சந்தேகத்துடன். மறுமுனையில் நான் நைஜீரியா ராகவன் பேசுறேன் என்றார். எங்கிருந்துண்ணே என்றேன். சென்னையிலிருந்தான் என்றார்.நலவிசாரிப்புகளுக்குப் பிறகு இன்னைக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நாளைக்கு சாயங்காலம் வர்றேன் என்றேன். சரி என்றார்.

ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் (அன்று அவர்களின் உறவினர்கள் வந்துவிட்டதால்) சந்திக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு மறுநாள் அலுவலகம் முடிந்த பிறகு மாலை அண்ணனுக்கு போன் செய்தேன். இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என்றார்.

ஏழேகாலுக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன். என்றேன். அவரும் சரியென்றார். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று போன் செய்ததால் சற்று தாமதமாக போகலாம் என்பதற்காகவே அப்படி சொன்னேன்.

அண்ணனின் வீட்டிற்கும் எனது அலுவலகத்திற்கும் நடை தூரம் (என்கிட்ட வண்டி இல்லே. அதனாலே நடைதூரத்தைத்தானே சொல்லமுடியும்) அவ்வளவுதான்.

வீட்டிற்கு சென்றதும் அன்புடன் வரவேற்றார். வீட்டின் கூடத்தில் அரவிந்த் அவரின் மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அரவிந்திடம் இவரைத் தெரிகிறதா என்று கேட்க, சென்றமுறை சந்தித்ததை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். அண்ணியாரும்தான். நல விசாரிப்புகளுக்கு பிறகு அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.

பதிவுலகம் பற்றி பேச்சு வந்தது. முன்புபோல் இடுகையிட முடியவில்லை (முன்பு மட்டும் அதிகமா இடுகையிட்டமாக்கும் என்று) கூறினார். அதோடு பதிவுலக சண்டை சச்சரவினால் மிகவும் வருத்தமாகவே பேசினார். கூகுள் இலவசமாக தரும் வரையில் இவ்வளவு நபர்கள் எழுதிவருவார்கள். ஒருவேளை கட்டணம் என்றால் எத்தனைபேர் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதே நிச்சயமில்லாத நிலையில் இப்படி சண்டை போட்டுக்கொண்டு இருப்பது பற்றி வருத்தமுடன் போசினார். பதிவர் சந்திப்பு வைப்போமா என்றதற்கு,இந்தப்பிரச்சினையால் யாரையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் அவர் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. சென்னையில் குறிப்பிட்ட சிலரை மட்டும் சந்தித்ததாகக் கூறினார். அவர்களில் நானும் ஒருவன் என்றபோது மிகவும் மகிழ்வுற்றேன்.

Friday, 9 July 2010

பொள்ளாச்சி நசன்

'பொள்ளாச்சி நசன்'. இவரை 1990-லிருந்து- அதாவது நான் 'நந்தவனம்' என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தி வந்த அத்தருணங்களிலிருந்து தெரியும். நண்பர்கள் மூலம் அவரது அறிமுகம் கிடைத்தது. 'சிற்றிதழ் செய்தி' என்ற இதழை நடத்தி வந்தார். அவருக்கு வரும் சிற்றிதழ்களைப் பற்றி நல்ல அறிமுகத்தோடு நடத்தி வந்தார். அதோடு வரும் சிற்றிதழ்களை எல்லாம் சேமித்து அவணக் காப்பகமாகவும் இன்றளவும் வைத்துள்ளார்.
   தமிழ்மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக தமிழ்ப்பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார். காலமாற்றங்களுக்கு கேற்ப தனது பணியை இப்போது இணையத்திலும் (அவரே இணையத்தை வடிவமைத்து) செய்து வருகிறார். அரிதான பல தமிழ் நூல்களை மின்னூலாக்கும் (நாள் ஒரு நூல் என்ற முறையில்) பெரு முயற்சியில் பல புத்தங்கள் வந்துள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்றுக் கொள்ள இசை வடிவிலான முயற்சிகளையும் செய்து வருகிறார். இதனை பதிவிரக்கியும் பயன்படுத்தும் நோக்கில் தந்துள்ளார். இவரைப் பற்றி இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள அவரது நேர்காணல் படிக்க இங்கு http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=4533&Itemid=212 சுட்டவும்.
அவரது தளத்தினைக் கண்டால் இன்னும் அவரது உழைப்பு, முயற்சி எல்லாம் தெரியவரும். அவரது வலைத்தளம் செல்ல http://www.thamizham.net/

Thursday, 24 June 2010

தமிழ் வளர்க்க என்ன திட்டம்? (பரிசு போட்டி!)


கோவையில் நடைபெறும் உலக தமிழ் செநம்மொழி மாநாடு குறித்து பல்வேறு பலவேறு எண்ணங்கள் நிலவி வரும் வேளையில், எனக்கு வந்த குறுஞ் செய்தி  இந்த செம்மொழி மாநாடு குறித்து தகவலோடு ஒரு போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது. அந்தத் தகவல் அப்டியே உங்கள் பார்வைக்கு...

தற்போது கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு இதுவரை அரசு செலவழித்த தொகை சுமார் 1,500 கோடி. இந்த தொகை உங்களிடம் இருந்தால், மாநாடு நடத்தாமல் மக்களிடம் தமிழ் உணர்வு அதிகரிக்க என்ன செய்வீர்கள்?  உங்கள் திட்டங்களை உடனே குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். கடைசி நாள் - 25/06/2010
குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டிய  தொலைபேசி எண்- 9688429731
 சிறந்த திட்டங்களை தரும் 5 நபர்களுக்கு புத்தகப் பரிசு.

Sunday, 20 June 2010

காதல்

"வந்தனா போடுற டிரஸ்ஸும், அவளோட அழகான மேக்கப்பையும் பார்த்து அவனவன் சொக்கிப்போய் திரியிறானுங்க... அவ தனக்கு கிடைக்க மாட்டாளான்னு அவனவன் ஏங்கித் தவிக்கிறான். அவளே வ-ய வந்து உன்கிட்டே "ஐ லவ்யூ சொல்லியிருக்கா... நீ 'சாரி'ன்னு சொல்லியாட்டியாமே! உனக்கு என்னடா ஆச்சு?''

"டேய்... நீயே சொல்லிட்டியே... அவ போடுற டிரஸ், மேக்கப்... இதெல்லாம் பார்த்து நானும் ரொம்ப ரசிச்சிருக்கேன். ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கில்லைப்பா... காதலுக்கு கண்ணில்லாம கூட இருக்கலாம்... அந்தஸ்து... இதுக்கு முன்னால காதல் கசந்துரும்டா... பேசாம அவ அழகை மட்டும் ரசிச்சிக்கிட்டு போயிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான். இன்னைக்கு எனக்கு அவ தேவதையா தெரியலாம்... அவளுக்கும் நான் ராஜகுமாரனா தெரியலாம்.. கல்யாணத்துக்குப்பிறகு... நடைமுறை வாழ்க்கையில செட்டாகுதுடா... எனக்கேத்த ஒருத்தி இந்த உலகத்துலே பிறந்திருக்காமயா போகப்போறா'' என்றான் தீர்க்கமாய்!

Thursday, 10 June 2010

ஒரு வினாடிக் கதை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்காக சென்ற அப்பா சந்தோசமாக வீட்டுக்கு வந்தார்.
 ''என்ன போன காரியம் என்ன ஆச்சு? நல்லபடியா முடிஞ்சிதா...''
''பத்திரப் பதிவு அலுவலகத்திலே இன்னைக்கு யாருமே லஞ்சம் கேக்கலை. எல்லாரும் திருந்திட்டாங்களா? ஆச்சரியமாயிருக்குடி''  என்று மனைவியிடம் சொன்னபடி சட்டையைக் கழற்றினார் அப்பா.
 ''அப்பா...நீங்க பத்திரப்பதிவு செய்யப்போறீங்கன்னு தெரிஞ்சதால, நான்தான் அந்த ஆபீசுக்கு போன் பண்ணி இன்னைக்கு உங்க அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வராங்க... கவனமா இருங்கன்னு போன் பண்னேன்... ''

என்றாள் மகள் செல்வி.
தந்தை எதுவும் சொல்லத் தோன்றாமல் மகளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

Monday, 8 February 2010

சமூகமும், நிகழ்வுகளும்...

நீதி வெல்வது எப்போது?
ரியானாவை சேர்ந்த 14 வயது மாணவி ருசிகா (டென்னிஸ் வீராங்கனை) மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. ரத்தோரை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை உ.பி. மாநில வாலிபர் ஒருவர் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்திருக்கிறார். அப்போது ரத்தோரின் முகத்தில் மட்டும் கத்தி குத்து விழுந்திருக்கிறது. அந்த இளைஞர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்த வழக்கு 19 வருடங்களாக நடந்து வருகிறதாம். சம்பந்தப்பட்ட அந்த மாணவி டி.ஜி.பி ரத்தோர் வழக்கை வாபஸ் பெறச் சொல்லிதொடர்ந்து மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

வித்தியாசமான (வசதி படைத்த) காதலரா நீங்கள்?
காதலர் தினம் வருடா வருடம் கொண்டாடப்பட்ட வந்தாலும் எதிர்ப்புகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஹெ-காப்டர் மூலம் வானில் பறந்தபடி காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், மும்பையில் தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் சென்ற வருடம் இரண்டு பேர்மட்டுமே கொண்டாடினர். இந்த வருடமும் இதுவரை 14 பேர் பதிவு செய்திருக்கிறார்களாம்! ம்... ம்...

தாய்மைக்கு வணக்கம்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வருடந்தோறும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகளை செய்து வருகிறது. சென்ற வருடம் வைரமுத்து, சு.கி.சிவம் உட்பட 10 பேரின் தாய்மார்களுக்கு பாராட்டு விழா நடத்தியது. அதுபோல் இந்த வருடம் மயில்சாமி அண்ணாதுரையின் தாயார் பாலசரஸ்வதி, இசையமைப்பாளர் ஏ,ஆர் ரஹ்மானின் தாயார் கரீமா பேகம், இயக்குநர் சங்கரின் தாயார் முத்துலட்சுமி உட்பட 14 பேரின் தாயார் தேர்வு செய்யப்ட்டுள்னர். இந்த விழா வரும் 11-ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது.
 
காஷ்மீர் மாநிலத்தில் பனிப்புயல் தாக்கி

 உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு எனது

கண்ணீர் அஞ்சலி. அவர்களது குடும்பத்தாருக்கு

ஆழ்ந்த இரங்கல். காயமுற்ற வீரர்கள்

விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
 




தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...