Sunday, 20 June 2010

காதல்

"வந்தனா போடுற டிரஸ்ஸும், அவளோட அழகான மேக்கப்பையும் பார்த்து அவனவன் சொக்கிப்போய் திரியிறானுங்க... அவ தனக்கு கிடைக்க மாட்டாளான்னு அவனவன் ஏங்கித் தவிக்கிறான். அவளே வ-ய வந்து உன்கிட்டே "ஐ லவ்யூ சொல்லியிருக்கா... நீ 'சாரி'ன்னு சொல்லியாட்டியாமே! உனக்கு என்னடா ஆச்சு?''

"டேய்... நீயே சொல்லிட்டியே... அவ போடுற டிரஸ், மேக்கப்... இதெல்லாம் பார்த்து நானும் ரொம்ப ரசிச்சிருக்கேன். ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கில்லைப்பா... காதலுக்கு கண்ணில்லாம கூட இருக்கலாம்... அந்தஸ்து... இதுக்கு முன்னால காதல் கசந்துரும்டா... பேசாம அவ அழகை மட்டும் ரசிச்சிக்கிட்டு போயிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான். இன்னைக்கு எனக்கு அவ தேவதையா தெரியலாம்... அவளுக்கும் நான் ராஜகுமாரனா தெரியலாம்.. கல்யாணத்துக்குப்பிறகு... நடைமுறை வாழ்க்கையில செட்டாகுதுடா... எனக்கேத்த ஒருத்தி இந்த உலகத்துலே பிறந்திருக்காமயா போகப்போறா'' என்றான் தீர்க்கமாய்!

Thursday, 10 June 2010

ஒரு வினாடிக் கதை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்காக சென்ற அப்பா சந்தோசமாக வீட்டுக்கு வந்தார்.
 ''என்ன போன காரியம் என்ன ஆச்சு? நல்லபடியா முடிஞ்சிதா...''
''பத்திரப் பதிவு அலுவலகத்திலே இன்னைக்கு யாருமே லஞ்சம் கேக்கலை. எல்லாரும் திருந்திட்டாங்களா? ஆச்சரியமாயிருக்குடி''  என்று மனைவியிடம் சொன்னபடி சட்டையைக் கழற்றினார் அப்பா.
 ''அப்பா...நீங்க பத்திரப்பதிவு செய்யப்போறீங்கன்னு தெரிஞ்சதால, நான்தான் அந்த ஆபீசுக்கு போன் பண்ணி இன்னைக்கு உங்க அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வராங்க... கவனமா இருங்கன்னு போன் பண்னேன்... ''

என்றாள் மகள் செல்வி.
தந்தை எதுவும் சொல்லத் தோன்றாமல் மகளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

Monday, 8 February 2010

சமூகமும், நிகழ்வுகளும்...

நீதி வெல்வது எப்போது?
ரியானாவை சேர்ந்த 14 வயது மாணவி ருசிகா (டென்னிஸ் வீராங்கனை) மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. ரத்தோரை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை உ.பி. மாநில வாலிபர் ஒருவர் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்திருக்கிறார். அப்போது ரத்தோரின் முகத்தில் மட்டும் கத்தி குத்து விழுந்திருக்கிறது. அந்த இளைஞர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்த வழக்கு 19 வருடங்களாக நடந்து வருகிறதாம். சம்பந்தப்பட்ட அந்த மாணவி டி.ஜி.பி ரத்தோர் வழக்கை வாபஸ் பெறச் சொல்லிதொடர்ந்து மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

வித்தியாசமான (வசதி படைத்த) காதலரா நீங்கள்?
காதலர் தினம் வருடா வருடம் கொண்டாடப்பட்ட வந்தாலும் எதிர்ப்புகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஹெ-காப்டர் மூலம் வானில் பறந்தபடி காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், மும்பையில் தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் சென்ற வருடம் இரண்டு பேர்மட்டுமே கொண்டாடினர். இந்த வருடமும் இதுவரை 14 பேர் பதிவு செய்திருக்கிறார்களாம்! ம்... ம்...

தாய்மைக்கு வணக்கம்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வருடந்தோறும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகளை செய்து வருகிறது. சென்ற வருடம் வைரமுத்து, சு.கி.சிவம் உட்பட 10 பேரின் தாய்மார்களுக்கு பாராட்டு விழா நடத்தியது. அதுபோல் இந்த வருடம் மயில்சாமி அண்ணாதுரையின் தாயார் பாலசரஸ்வதி, இசையமைப்பாளர் ஏ,ஆர் ரஹ்மானின் தாயார் கரீமா பேகம், இயக்குநர் சங்கரின் தாயார் முத்துலட்சுமி உட்பட 14 பேரின் தாயார் தேர்வு செய்யப்ட்டுள்னர். இந்த விழா வரும் 11-ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது.
 
காஷ்மீர் மாநிலத்தில் பனிப்புயல் தாக்கி

 உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு எனது

கண்ணீர் அஞ்சலி. அவர்களது குடும்பத்தாருக்கு

ஆழ்ந்த இரங்கல். காயமுற்ற வீரர்கள்

விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
 




தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...