Thursday, 24 June 2010

தமிழ் வளர்க்க என்ன திட்டம்? (பரிசு போட்டி!)


கோவையில் நடைபெறும் உலக தமிழ் செநம்மொழி மாநாடு குறித்து பல்வேறு பலவேறு எண்ணங்கள் நிலவி வரும் வேளையில், எனக்கு வந்த குறுஞ் செய்தி  இந்த செம்மொழி மாநாடு குறித்து தகவலோடு ஒரு போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது. அந்தத் தகவல் அப்டியே உங்கள் பார்வைக்கு...

தற்போது கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு இதுவரை அரசு செலவழித்த தொகை சுமார் 1,500 கோடி. இந்த தொகை உங்களிடம் இருந்தால், மாநாடு நடத்தாமல் மக்களிடம் தமிழ் உணர்வு அதிகரிக்க என்ன செய்வீர்கள்?  உங்கள் திட்டங்களை உடனே குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். கடைசி நாள் - 25/06/2010
குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டிய  தொலைபேசி எண்- 9688429731
 சிறந்த திட்டங்களை தரும் 5 நபர்களுக்கு புத்தகப் பரிசு.

Sunday, 20 June 2010

காதல்

"வந்தனா போடுற டிரஸ்ஸும், அவளோட அழகான மேக்கப்பையும் பார்த்து அவனவன் சொக்கிப்போய் திரியிறானுங்க... அவ தனக்கு கிடைக்க மாட்டாளான்னு அவனவன் ஏங்கித் தவிக்கிறான். அவளே வ-ய வந்து உன்கிட்டே "ஐ லவ்யூ சொல்லியிருக்கா... நீ 'சாரி'ன்னு சொல்லியாட்டியாமே! உனக்கு என்னடா ஆச்சு?''

"டேய்... நீயே சொல்லிட்டியே... அவ போடுற டிரஸ், மேக்கப்... இதெல்லாம் பார்த்து நானும் ரொம்ப ரசிச்சிருக்கேன். ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கில்லைப்பா... காதலுக்கு கண்ணில்லாம கூட இருக்கலாம்... அந்தஸ்து... இதுக்கு முன்னால காதல் கசந்துரும்டா... பேசாம அவ அழகை மட்டும் ரசிச்சிக்கிட்டு போயிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான். இன்னைக்கு எனக்கு அவ தேவதையா தெரியலாம்... அவளுக்கும் நான் ராஜகுமாரனா தெரியலாம்.. கல்யாணத்துக்குப்பிறகு... நடைமுறை வாழ்க்கையில செட்டாகுதுடா... எனக்கேத்த ஒருத்தி இந்த உலகத்துலே பிறந்திருக்காமயா போகப்போறா'' என்றான் தீர்க்கமாய்!

Thursday, 10 June 2010

ஒரு வினாடிக் கதை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்காக சென்ற அப்பா சந்தோசமாக வீட்டுக்கு வந்தார்.
 ''என்ன போன காரியம் என்ன ஆச்சு? நல்லபடியா முடிஞ்சிதா...''
''பத்திரப் பதிவு அலுவலகத்திலே இன்னைக்கு யாருமே லஞ்சம் கேக்கலை. எல்லாரும் திருந்திட்டாங்களா? ஆச்சரியமாயிருக்குடி''  என்று மனைவியிடம் சொன்னபடி சட்டையைக் கழற்றினார் அப்பா.
 ''அப்பா...நீங்க பத்திரப்பதிவு செய்யப்போறீங்கன்னு தெரிஞ்சதால, நான்தான் அந்த ஆபீசுக்கு போன் பண்ணி இன்னைக்கு உங்க அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வராங்க... கவனமா இருங்கன்னு போன் பண்னேன்... ''

என்றாள் மகள் செல்வி.
தந்தை எதுவும் சொல்லத் தோன்றாமல் மகளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...