Showing posts with label உங்களுக்காக.... Show all posts
Showing posts with label உங்களுக்காக.... Show all posts

Monday, 9 May 2011

பயனுள்ள பல தகவல்கள்


1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது  இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.
3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.
4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!
அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.
8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!
9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/
10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471
11) இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய் முகவரி:East Canal Bank Road, Gandhi Nagar,Adyar Chennai - 600020Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

டிஸ்கி: எனக்கு மெயிலில் வந்தவை

அப்படியே இங்கேயும் சென்று பாருங்கள்... ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Wednesday, 16 September 2009

உங்களுக்காக...

வாழ்க்கைக்கு தண்ணீர் எவ்வளவு அவசியம் என்பதை நாமறிவோம். நீர்வளம் குறைந்துவருவது கண்டுகூடு. நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டுவரும் ‘மக்கள் விழிப்புணர்வு இயக்கம்’. ஏரி,குளங்கள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொருவரும் அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பும் படி வேண்டுகோள் விடுக்கிறது. முகவரி-
மக்கள் விழிப்புணர்வு இயக்கம்,
3/20, 16ஆவது குறுக்குத் தெரு, நியூகாலனி,
குரோம்பேட்டை,
சென்னை - 600 044


***********************
நீங்கள் அய்க்கூ எழுதுபவரா?
நீங்கள் எழுதிய சிறந்த பத்து அய்க்கூவை கீழ்க்காணும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூபாய் 1,200 பரிசை பெறலாம்.
கடைசி தேதி- இம்மாதம் இறுதிக்குள். அதாவது செப்டம்பர் 30க்குள்.
முகவரி- கன்னிக்கோயில் ராஜா,
30/8 கன்னிக்கோவில் முதல் தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.


**************************

ஆச்சிக்கு பாராட்டுக்கள்!




னைவராலும் அன்புடன் ‘ஆச்சி’ என்றழைக்கப்படும் நடிகை மனோரமா ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மணமகன், மணமகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என்னும் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளார். இந்த முயற்சி நல்ல முயற்சி. இதனால் குழந்தையின்மையால் வரும் விவகாரத்து, உயிர்க் கொல்லியால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுவது போன்றவை தடுக்கப்படும். ஆச்சியின் இந்த முயற்சி வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன்.

‘தென்கச்சி’ சுவாமிநாதன் மறைவு




‘தென்கச்சி’ சுவாமிநாதன். இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவரின் ‘இன்று ஒரு தகவல்’ பிரபலம். இப்படி இவர் சொன்ன தகவல்களை வானதி பதிப்பகம் புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஊராட்சி மன்ற தலைவராகவும் ஏழு வருடங்கள் (தென்கச்சியில்) இருந்திருக்கிறார். ஊரில் விவசாயமும் செய்தவர். அந்த அனுபவத்தில் வானொலி நிலையத்தில் விவசாய செய்திகளை ஒலிபரப்ப ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வர, அதைப் பார்த்து விண்ணப்பித்து, விவசாயம் தெரிந்ததால் இவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைத்தாம். பின்பு படிப்படியாக வளர்ந்து உதவி ஆசிரியர், ஆசிரியர், உதவி நிலைய இயக்குனர் என்று வளர்ந்து வந்தவர்.‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்பு சன் தொலைக்காட்சியிலும் அந்நிகழ்ச்சியை வழங்கி உலகப் புகழ் பெற்றார்.சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tuesday, 28 July 2009

உங்களுக்காக... (28.07.2009)

டித்தள்ளுபடி தரும் திட்டம் வந்ததெப்படி?

ஆடிமாதம் வந்தால் போதும் வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். மக்களும் பொருட்களை அள்ளிக்கொண்டு வருவார்கள். தள்ளுபடி வழங்க ஆடி மாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
இதற்கு முக்கிய காரணம் விவசாயிகள்தான். அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு என்பதறிவோம். அப்போதெல்லாம் பிரதான தொழிலே விவசாயம்தான். விவசாயிகள் ஆடி மாதம்தான் தங்கள் நிலங்களில் விவசாயத் தொழிலை ஆரம்பிப்பார்கள். தங்களின் கையிருப்பைக் கொண்டு விதைகள், உரங்கள் வாங்கவும், தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கவென செலவிடுவார்கள். தை மாதம்தான் அறுவடை செய்வார்கள். அப்போதுதான் அவர்களிடம் மீண்டும் பணப்புழக்கம் இருக்கும். ஆடி - தை மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வியாபாரம் மந்தமாக இருக்கும். அந்த மந்த நிலையைக் களைந்து பொதுமக்களை ஈர்த்து வியாபாரம் செய்யவே இந்த ஆடித்தள்ளுபடி திட்டம்' வந்தது எனலாம்.


ழைப்பவர்களுக்குத்தான் எப்போதும் பெருமை என்பதை சிறுவர்களிடமும் பாடல்களின் வழியாக புகுத்திய பழைய பாட்டு ஒன்று. (நீங்களும் பாடியிருப்பீர்கள் தானே?)

மழ வருது
மழ வருது
நெல் அள்ளுங்க.

முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

ஏர் உழர மாமனுக்கு
எண்ணி வையுங்க

சும்மாக்கிடக்கிற
மாமனுக்கு சூடு வையுங்க.


ஞ்ச ஒழிப்புத்துறை சுறுசுறுப்பா ஆயிட்டாங்களா? இல்லை மக்களிடம் விழிப்புணர்வு வந்துடிச்சான்னு தெரியலைங்க. சமீப காலமாக லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது. இதைப்படிக்கும் போது உங்களுக்கும் இவரையெல்லாம் பிடிக்காம இருக்கிறாங்களேன்னு யாரையாவது பார்த்து நெனைச்சிருக்கீங்களா? இன்னும் ஏன் மனசுக்குள்ளே நெனைக்கிறீங்க... செயல்படுத்திட வேண்டியதுதானே. எப்படி தெரியப்படுத்துறது? நம்மள அடையாளம் வைச்சிக்கிட்டு பின்னாடி பழிவாங்குவாங்களேன்னு பயம் இருக்கா? அப்ப ஒன்ணு செய்யுங்க...

இந்த எண்ணுக்கு போன் (பொது தொலைபேசியிலிருந்துதான் போன் பண்ணுங்களேன்...)

தொலைபேசி எண் - 044- 2825 5899

செல் - 94440 49224

மெயிலும் அனுப்பலாங்க... Spl acchn @ cbi.gov.in


ப்புறம் பெண்களை கிண்டல் செய்யறவங்களைப் பற்றி புகார் சொல்ல, சாலை விபத்து பற்றிய தகவல் சொல்ல விரும்புறீங்களா அதுக்கு ஒரு ஒரு செல் பேசி எண் இருக்குங்க...

செல் - 95000 99100 இந்த எண்ணுக்கு எஸ்.எம். எஸ். பண்ணினா போதும் உடனடி நடவடிக்கைன்னு சொல்றாங்க.


சைட்டாலஜி என்றால் என்ன தெரியுமா?

மனதை அரிக்கும் பெண்களைப் பற்றியது இல்லைங்க...
மண்ணை அரிக்கும் செல்/ கரையான் பற்றி படிக்கும் படிப்புக்குத்தான் இப்படி சொல்றாங்கோ...


ப்புறம் படிச்சிட்டீங்களா கருத்துக்களை மறக்காம பின்னூட்டமா தெரிவிச்சிட மறக்காதீங்க.

தமிழிஷ்-ல் இந்த இடுகை.

Thursday, 9 April 2009

உங்களுக்காக...

சாப்ட்வேர் இன்ஜினியர் படம் எடுத்தால் என்ன பேர் வைப்பார்?
ஜி மெயில் சன்ஆப் இமெயில்
ரேம் தேடிய மதர்போர்டு
7GB
எனக்கு 20 MB உனக்கு 18 MB
சொல்ல மறந்த பாஸ்வேர்டு
எங்கோ ஒரு புரோகிராமர்
ஒரு மவுஸ்-ன் கதை
மானிட்டருக்குள் மழை
புதுக்கோட்டையிலிருந்து ஒரு பென்டியம் 4
காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க!
Hard disk-க்கு மரியாதை
எல்லாம் processor செயல்

எரிந்துபோன சிகெரட் சாம்பல் சொன்னது...
இன்று நான், நாளை நீ!

இதை தவிருங்கள், ஆபத்தானவை என்று யு.எஸ்.ஏ. அறிவித்திருக்கிறதாம்!
1. D'cold
2. vicksaction 500
3. Actifed
4. Coldarin
5. Cosome
6. Nise
7. Nimulid
8. Cetrizet-D
-they contain PPA(Phenyl Propanol Amide). Causes Stroke.
தகவல் : செம்முரசு குருஞ்செய்தி இதழ்... தொடர்புக்கு - 9894899510

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று போதிக்கும் பள்ளிகளின் பெயர்களை பாருங்கள்...(எனக்குத் தெரிந்த இரண்டு பள்ளிகளின் பெயர்கள் மட்டும் இங்கே)
கோபாலய்யர் தொடக்கப்பள்ளி, கோபாலபுரம், சென்னை.
ராமசாமிமுதலியார் உயர்நிலை பள்ளி, அம்பத்தூர், சென்னை.

பள்ளியைப் பற்றி சொன்னதால் அது தொடர்புடைய நணபர் ஒருவரின் கவிதை...
கிராமத்து மாணவன்
இறுதியாண்டு படிப்பு
ஐந்தாம்வகுப்பு
- நாணற்காடன்,
செல்- 9942714307

எனக்கு எஸ்.எம்.எஸ். வந்ததிலிருந்து...

கன்னிக்கோயில் ராஜா. இவர் என் நண்பர், கவிஞர்.பல அய்க்கூ தொகுப்பு நூல்களையும் வெளியி்ட்டிருக்கிறார்.'பொதிகை மின்னல்' சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார்.
இவர் தினந்தோறும் தன் கைப்பேசி (செல்போன்) மூலம் தினசரி 300 -க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் அய்க்கூ அனுப்புகிறார். சனிக்கிழமைதோறும் மகளிர் அய்க்கூக்களை மட்டும் அனுப்புகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளின் செய்திகளை (தாங்கள் அனுப்பினால் அதை) அனைவருக்கும் அனுப்பி வைக்கிறார். இதை விளையாட்டடாக செய்யப்போக இன்று ஏகப்பட்ட நண்பர்களை பெற்றிருக்கிறார். தொடர்ந்து 1500 நாட்களைத் தாண்டி இந்தச் சேவையை இலவசமாக செய்துவருகிறார். அவருக்கு நீங்களும் அய்க்கூ அனுப்பலாம், வாழ்த்து தெரிவிக்கலாம்.
அவரின் முகவரி:
கன்னிக்கோயில் ராஜா,
30/8, கன்னிக்கோயில் முதல்தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 18
9841236965

Saturday, 29 November 2008

உங்களுக்காகவும்...

இந்த வலைப்பதிவு என் தனிப்பட்ட ஒருவனின் படைப்புகளுக்காக மட்டும் அல்ல. உங்களுக்காகவும்தான். படைப்புகள் அனுப்பலாம். இலக்கிய அமைப்புகள் நடத்தும் நண்பர்கள் தங்கள் அமைப்புகளில் கலந்துகொள்ளும் சிறப்பு விருதினர்களின் சுவராசியமான உரைகளை தொகுத்து அனுப்பலாம். இலக்கியம் மட்டும் அல்ல... , பயன்பெறக் கூடிய அனைத்தும் அனுப்பலாம். ரெடி! முகவரி- ஜெ.அன்புமணி, 40,பெரியார் தெரு, சென்னை- 600 047
கைபேசி எண்- 98409 92769

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...