Wednesday, 16 September, 2009

உங்களுக்காக...

வாழ்க்கைக்கு தண்ணீர் எவ்வளவு அவசியம் என்பதை நாமறிவோம். நீர்வளம் குறைந்துவருவது கண்டுகூடு. நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டுவரும் ‘மக்கள் விழிப்புணர்வு இயக்கம்’. ஏரி,குளங்கள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொருவரும் அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பும் படி வேண்டுகோள் விடுக்கிறது. முகவரி-
மக்கள் விழிப்புணர்வு இயக்கம்,
3/20, 16ஆவது குறுக்குத் தெரு, நியூகாலனி,
குரோம்பேட்டை,
சென்னை - 600 044


***********************
நீங்கள் அய்க்கூ எழுதுபவரா?
நீங்கள் எழுதிய சிறந்த பத்து அய்க்கூவை கீழ்க்காணும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூபாய் 1,200 பரிசை பெறலாம்.
கடைசி தேதி- இம்மாதம் இறுதிக்குள். அதாவது செப்டம்பர் 30க்குள்.
முகவரி- கன்னிக்கோயில் ராஜா,
30/8 கன்னிக்கோவில் முதல் தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.


**************************

ஆச்சிக்கு பாராட்டுக்கள்!
னைவராலும் அன்புடன் ‘ஆச்சி’ என்றழைக்கப்படும் நடிகை மனோரமா ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மணமகன், மணமகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என்னும் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளார். இந்த முயற்சி நல்ல முயற்சி. இதனால் குழந்தையின்மையால் வரும் விவகாரத்து, உயிர்க் கொல்லியால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுவது போன்றவை தடுக்கப்படும். ஆச்சியின் இந்த முயற்சி வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன்.

‘தென்கச்சி’ சுவாமிநாதன் மறைவு
‘தென்கச்சி’ சுவாமிநாதன். இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவரின் ‘இன்று ஒரு தகவல்’ பிரபலம். இப்படி இவர் சொன்ன தகவல்களை வானதி பதிப்பகம் புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஊராட்சி மன்ற தலைவராகவும் ஏழு வருடங்கள் (தென்கச்சியில்) இருந்திருக்கிறார். ஊரில் விவசாயமும் செய்தவர். அந்த அனுபவத்தில் வானொலி நிலையத்தில் விவசாய செய்திகளை ஒலிபரப்ப ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வர, அதைப் பார்த்து விண்ணப்பித்து, விவசாயம் தெரிந்ததால் இவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைத்தாம். பின்பு படிப்படியாக வளர்ந்து உதவி ஆசிரியர், ஆசிரியர், உதவி நிலைய இயக்குனர் என்று வளர்ந்து வந்தவர்.‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்பு சன் தொலைக்காட்சியிலும் அந்நிகழ்ச்சியை வழங்கி உலகப் புகழ் பெற்றார்.சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

12 comments:

குடந்தை அன்புமணி said...

நீங்கள் அனுப்பும் அய்க்கூ, நூலாக வரும். விரைந்து அனுப்புங்கள் தோழர்களே...

க.பாலாஜி said...

நல்ல தகவல் பகிர்வு அன்பரே...

ஆச்சி மனோரமாவின் முயற்சிக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

தென்கச்சி கோ. சுவாமிநாதனின் இறப்பை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை..எங்கள் வீட்டில் அனைவருமே காலை நேரத்தில் ஒலிபரப்பாகும் அவரின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிக்கு காத்துகிடந்திருக்கிறோம்...

மனதை விட்டு நீங்கா அந்த மாமனிதரின் ஆத்மா சாந்தியடைய பிரார்தணை செய்வோம்.

" உழவன் " " Uzhavan " said...

நல்ல தொகுப்பு.
எழுதிருவோம். ஆமா அய்க்கூ னா என்ன? அதற்கான இலக்கணம் என்ன நண்பா?

குடந்தை அன்புமணி said...

// " உழவன் " " Uzhavan " said...
நல்ல தொகுப்பு.
எழுதிருவோம். ஆமா அய்க்கூ னா என்ன? அதற்கான இலக்கணம் என்ன நண்பா?//

நண்பர் ரசி ஆதித்யாவின் வலைத்தத்திற்கு சென்று பாருங்கள் நவநீத் (எ உழவன்) விரிவாக கூறியிருக்கிறார். (என் வலைத்தளத்தில் அவரின் லிங்க இருக்கிறது.)

தியாவின் பேனா said...

நல்ல தகவல்

பட்டிக்காட்டான்.. said...

நல்ல பகிர்வு..

இராகவன் நைஜிரியா said...

எங்களுக்காக, உங்களால் தொகுக்கப்பட்ட உங்க்ளுக்காக அருமையிலும் அருமைங்க. அழகான தொகுப்புங்க

குடந்தை அன்புமணி said...

வருகைக்கு மிக்க நன்றி...
• தியாவின் பேனா
• பட்டிக்காட்டான்

குடந்தை அன்புமணி said...

//இராகவன் நைஜிரியா said...
எங்களுக்காக, உங்களால் தொகுக்கப்பட்ட உங்க்ளுக்காக அருமையிலும் அருமைங்க. அழகான தொகுப்புங்க//

தங்கள் வருகையும் கருத்துகளும் மகிழ்வைத் தருகிறது. அடிக்கடி வாங்க...

goma said...

ஆச்சி மனோரமாவின் கோரிக்கை பெண்ணினத்துக்கு வெளிச்சம் தர ,அவர் ஏற்றி வைத்த விளக்கு
நின்று நிதானமாக ஒளி வீசட்டும்

க.பாலாசி said...

அன்பரே...நலம் நலமறிய ஆவல். பல நாட்களாக தங்களை காணவில்லையே. என்ன ஆயிற்று....எப்போது வலையுலகம் மீண்டு(ம்) வருகிறீர்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

‘தென்கச்சி’ சுவாமிநாதன் மறைவு.......

மிகவும் வருத்தப்பட வேண்டிய தருணம் !

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...