Monday, 14 September, 2009

அழகு,காதல்,கடவுள்,பணம்

அழகு,காதல்,பணம், கடவுள் பற்றிய உங்களின் கருத்துகள் என்ன என்று அறிந்து கொள்ள இந்த தொடரை ஹேமா அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த தொடர் இடுகைக்கு என்னை நையாண்டி நைனா அழைத்திருந்தார்.

அழகு இருந்தால் காதல் வரும்(!)
அந்த காதல் நிறைவேற-நீடிக்க பணம் நிச்சயம் தேவைப்படும்.
அந்த பணம் அளவுக்கு அதிகமானால்-
நிம்மதிக்காக கடவுளைத் தேடிச் செல்வார்கள்...


அப்பாடி... ஒருவழியா எல்லாத்தையும் ஒண்ணாக் கோர்த்து எழுதியாச்சு என்று எகிறிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும், நம்மைப் பற்றி, நமது கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தானே இந்த இடுகை என்பதால், சற்று விளக்கமாகவும் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

(விரிவா வேற சொல்லப் போறீயா... விளங்கிடும்... என்று சொல்பவர்கள் நேரே கருத்துரை பகுதிக்கு சென்று கருத்துக்களை பதிந்துவிட்டு நகருங்கள். மற்றவர்கள் மேலே படியுங்கள்...

அகோ(ஹலோ-தான் இப்போ தமிழ்ல அகோ... உபயம் பழமைபேசி)... ஒரு நிமிடம்... மேலே என்றால் தொடர்ந்து படியுங்கள்னு சொன்னேன். நீங்க பாட்டுக்கு மேல் நோக்கி கர்சரை நகர்த்துறீங்களே... இஃகி... இஃகி...


அழகு...

அழகு என்பது காண்போர் கண்களில் இல்லை... கண்ணால் காண்பது- புற அழகு. அந்த அழகு கொஞ்ச நேரத்திலோ அல்லது (ஒப்பனை செய்து) ஒப்பேற்றிக் கொண்டிருந்தால் கொஞ்ச காலத்திலோ காணாமல் போய்விடும். நிரந்தரமான அழகு மனதைப் பொறுத்தது. சமீபத்தில் எங்கள் அலுவலக ஊழியரின் திருமண வரவேற்பில் ஒரு நிகழ்ச்சியில் பாடிய ஒருவர் ‘சொர்க்கமே என்றாலும்...’ என்ற பாடலை கொஞ்சம் மாற்றி...‘சொர்க்கமே என்றாலும் அது என்வீட்டைப் போலாகுமா... கிளியோபாட்ரா ஆனாலும் என் பொண்டாட்டிக்கு ஈடாகுமா...’ என்று பாடினார். அதுதான், அழகு... கருப்பான பெண்ணாக இருந்தாலும், நம் மனதிற்கு பிடித்துவிட்டால் அப்புறம் கிளியோபாட்ரா வந்தால்கூட பொண்டாட்டிக்கு ஈடாக மாட்டாள் என்பது விளங்கும்.(விளங்குச்சா... இல்லே விளங்கிடும்ங்கிறீங்களா...?)


காதல்...

காதலும் அதுபோலதாங்க...

‘மௌனம் பேசியதே’ படத்தில் வரும் இந்த பாடலைக் கேட்டிருக்கிறீர்களா... ‘அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடிதான். இருபதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலையே நம்மோட லவ் ஸ்டோரிதான்’ -இதுதாங்க உண்மையான காதல்...

ஆயிரம் சண்டைகள் ஆயிரம் அடிதடிகள் இருந்தாலும் ஓ...மை சுவீட்டி... ஐ லவ்யூடா செல்லம் என்று உங்க பொண்டாட்டிக்கிட்ட சொல்லிப்பாருங்கள்... போயே போச்சு... இட்ஸ்கான்... அப்புறம் என்ன ஜமாய்...


பணம்...

பணம் இல்லைன்னா பிணம்னு சொல்வாங்க. வாழ்க்கையை வாழ பணம் தேவைதான். அதற்காக பணத்துக்காக ஓடிக்கிட்டே இருக்க கூடாது. அப்படி பணத்திற்கு பின்னாடி ஓடினவங்கயோட கதையை அன்றாடம் செய்தித்தாளில்(கள்ளக் காதல், லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களின் பட்டியல் இப்படி...) பார்க்கலாம். இதுக்குமேல இதற்கு விளக்கம் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.


கடவுள்...

இதற்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது. உதவிக்கு கண்ணதாசனத்தான் கூப்பிடணும்...

‘தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலையென்றால் அது சிலைதான்...’
இன்னொன்றையும் இங்க சொல்லணும்...
எங்கு ஆடம்பரம் பெருகுகிறதோ அங்கு கடவுள் இருக்கமாட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம். இது ஆலயங்களுக்கும் பொருந்தும்தானே...


விதிமுறைப்படி மூன்றுமுதல் ஐந்து நண்பர்களை அழைக்கலாமாம்...
மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதற்காக நான் மூன்று நண்பர்களை மட்டும் அழைக்கிறேன்...


அய்யனார் பற்றிய கனவுகளில் இருக்கும், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்...


அழகை பாதுகாப்பது பற்றியும்,காதலர்களுக்கும் டிப்ஸ் தந்துகொண்டிருக்கும் நம்ம தேவா சார்...


கவிதைகளில் கலக்கிக் கொண்டிருந்த(ரொம்ப காலமாக வலைப்பதிவிடாமல் இருக்கும்)நண்பர் ஆ.முத்துராமலிங்கம். ஆகியோரை அன்புடன் இடுகையிட அழைக்கிறேன்.

20 comments:

க.பாலாஜி said...

//அழகு இருந்தால் காதல் வரும்(!)
அந்த காதல் நிறைவேற-நீடிக்க பணம் நிச்சயம் தேவைப்படும்.
அந்த பணம் அளவுக்கு அதிகமானால்-
நிம்மதிக்காக கடவுளைத் தேடி செல்வார்கள்...//

இதுவே நல்லாதான் இருக்கு அன்பரே....

//‘சொர்க்கமே என்றாலும் அது என்வீட்டைப் போலாகுமா... கிளியோபாட்ரா ஆனாலும் என் பொண்டாட்டிக்கு ஈடாகுமா...’ என்று பாடினார். அதுதான், அழகு... கருப்பான பெண்ணாக இருந்தாலும், நம் மனதிற்கு பிடித்துவிட்டால் அப்புறம் கிளியோபாட்ரா வந்தால்கூட பொண்டாட்டிக்கு ஈடாக மாட்டாள் என்பது விளங்கும்.//

என்னமா பீலா உட்ராங்கப்பா....

//எங்கு ஆடம்பரம் பெருகுகிறதோ அங்கு கடவுள் இருக்கமாட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம். //

உண்மையும் இதுதான் அன்பரே....

பதில்கள் அனைத்தும் அருமை.....

நையாண்டி நைனா said...

Very Nice work Dear Friend.

ஹேமா said...

மணி,ஒவ்வொன்றையும் அனுபவிச்சுச் சொன்னமாதிரி.பணம் வாழ்க்கைக்குத் தேவை.பணமே வாழ்க்கை ஆனால்தான் பிரச்சனையே அங்கு தொடங்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகு !

தேவன் மாயம் said...

அன்பு மாட்டி விட்டீங்களா! பாக்கியே ஓண்ணு எழுதாமல் இருக்கு!

/அழகு இருந்தால் காதல் வரும்(!)
அந்த காதல் நிறைவேற-நீடிக்க பணம் நிச்சயம் தேவைப்படும்.
அந்த பணம் அளவுக்கு அதிகமானால்-
நிம்மதிக்காக கடவுளைத் தேடி செல்வார்கள்.../

ரொம்ப அழகாச் சொல்லிவிட்டீர்கள்!

குடந்தை அன்புமணி said...

//க.பாலாஜி said...
//‘சொர்க்கமே என்றாலும் அது என்வீட்டைப் போலாகுமா... கிளியோபாட்ரா ஆனாலும் என் பொண்டாட்டிக்கு ஈடாகுமா...’ என்று பாடினார். அதுதான், அழகு... கருப்பான பெண்ணாக இருந்தாலும், நம் மனதிற்கு பிடித்துவிட்டால் அப்புறம் கிளியோபாட்ரா வந்தால்கூட பொண்டாட்டிக்கு ஈடாக மாட்டாள் என்பது விளங்கும்.//

என்னமா பீலா உட்ராங்கப்பா....//

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா பாலாஜி...

குடந்தை அன்புமணி said...

//நையாண்டி நைனா said...
Very Nice work Dear Friend.//

உண்மையாகவா...

குடந்தை அன்புமணி said...

//ஹேமா said...
மணி,ஒவ்வொன்றையும் அனுபவிச்சுச் சொன்னமாதிரி.பணம் வாழ்க்கைக்குத் தேவை.பணமே வாழ்க்கை ஆனால்தான் பிரச்சனையே அங்கு தொடங்கும்.//

நாம அனுபவிச்சத மட்டும்தான் பகிர்ந்துக்கணும்ங்கிறதையும் தாண்டி என்னைப் பாதித்தவைகளையும்தான் என் இடுகைகளில் பிரதிபலிக்கச் செய்கிறேன் தோழி...

குடந்தை அன்புமணி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
அழகு !//

நன்றி.

குடந்தை அன்புமணி said...

//தேவன் மாயம் said...
அன்பு மாட்டி விட்டீங்களா! பாக்கியே ஓண்ணு எழுதாமல் இருக்கு! //

தினசரி இரண்டு இடுகை போடக்கூட தயங்காத உங்களுக்கு இதெல்லாம் சும்மா சாதாரணமப்பா....

ஜெஸ்வந்தி said...

உங்கள் விளக்கங்கள் அற்புதம் அன்புமணி. எல்லோரும் இந்த கடவுள் விடயத்தில் தான் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். நீங்கள் கண்ணதாசனை உதவிக்குக் கூப்பிட்டுச் சொன்ன ‘தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலையென்றால் அது சிலைதான்...’ அழகு.

கவிக்கிழவன் said...

பணம் இல்லைன்னா பிணம்னு சொல்வாங்க. வாழ்க்கையை வாழ பணம் தேவைதான். அதற்காக பணத்துக்காக ஓடிக்கிட்டே இருக்க கூடாது.

நல்ல எழுதிறீங்க

குடந்தை அன்புமணி said...

//ஜெஸ்வந்தி said...
உங்கள் விளக்கங்கள் அற்புதம் அன்புமணி. எல்லோரும் இந்த கடவுள் விடயத்தில் தான் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். நீங்கள் கண்ணதாசனை உதவிக்குக் கூப்பிட்டுச் சொன்ன ‘தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலையென்றால் அது சிலைதான்...’ அழகு.//

வாங்க ஜெஸ்வந்தி... மிக்க நன்றி...

குடந்தை அன்புமணி said...

//கவிக்கிழவன் said...
பணம் இல்லைன்னா பிணம்னு சொல்வாங்க. வாழ்க்கையை வாழ பணம் தேவைதான். அதற்காக பணத்துக்காக ஓடிக்கிட்டே இருக்க கூடாது.

நல்ல எழுதிறீங்க//

நன்றி நண்பா...

தியாவின் பேனா said...

நல்லா இருக்கு அன்பரே....

ராமலக்ஷ்மி said...

அருமையான விளக்கங்கள் அன்புமணி!

செந்தில் நாதன் said...

எளிமையா அழகா இருக்கு!!

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

தியா
ராமலெஷ்மி
செந்தில்நாதன்

அ.மு.செய்யது said...

//‘அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடிதான். இருபதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலையே நம்மோட லவ் ஸ்டோரிதான்’ -இதுதாங்க உண்மையான காதல்...
//

தாறுமாறா வழிமொழிகிறேன்.

ஆணித்தரமான கருத்துகளுடன் பதிவு..கனம் !!

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!


முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...