அய்க்கூ அந்தாதி என்ற வகையில் இக்கவிதை.(அதாவது ஒரு அய்க்கூ கவிதையின் முடிவில் இருந்து மற்றொரு அய்க்கூ கவிதை தொடர்வது)
காகம் கரைந்தது
அழைப்பா தகவலா
விருந்தினர் வருகை
*************
விருந்தினர் வருகை
இருப்பு கொள்ளவில்லை
வறுமை
**********
வறுமையால்
ஆடைகுறைத்தால் சேரிப்பெண்
வசதிக்காக நடிகை
**********
நடிகையின் காதல்
கலைந்தது
ஒப்பனைப்போல்
********
ஒப்பனைப்போல் அல்ல
உண்மைதான்
அந்திச் சிவப்பு
**********
சிவப்பாகிப் போனது தேசம்
சோசலிச கொள்கை காரணமல்ல
வன்முறை
********
வன்முறையை போதிக்கிறதோ
அய்யனார் கையில்
அறுவாள்.
- ஜெ.அன்புமணி
