Wednesday, 29 April, 2009

தனிமரம் சிறுகதை - பாகம் -1

தினசரி நாட்காட்டியின் தாளைக் கிழிக்கும்போதுஅதிலிருக்கும் பொன்மொழிகளை படிப்பது என வழக்கம். அப்படி ஒருநாள் நான் படித்த பொன்மொழி எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான் இந்தச் சிறுகதை. கதையின் முடிவில் அப்பொன்மொழி உங்கள் பார்வைக்கு...


மதிய உணவு இடைவேளையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த மாலதி தன் அருகில் நிழல்விழ, நிமிர்ந்து பார்த்தாள், சேகர் நின்றிருந்தான்.
"வாங்க சார். நான் நேற்று உங்க வீட்டுக்கு வந்திருக்க கூடாது...சாரி...''
"மாலதி... சாரி கேட்கவேண்டியது நீங்க இல்லை... நான்தான்... பர்மிசனில் வீட்டுக்கு போன நான் ஆபிஸ் டிராயர் சாவியை மறந்து எடுத்துட்டுப் போனது எவ்வளவு பெரிய தப்பு. அதற்காக நீங்க வரப்போக, என் தங்கச்சி அதை தப்பா எடுத்துக்கிட்டு சே... நடந்த சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதற்காகத்தான் நான் வந்தேன்.'' என்றான்.
சேகரின் தங்கை அநாகரிமாக நடந்து கொண்டது வருத்தம் அளித்தாலும், அதை மறைத்துக் கொண்டு, " சே... சே... அதை நேற்றே நான் மறந்துட்டேன். என் மேலதான தப்பு. ஆபிஸ் வேலைக்கு பியூன் இருக்கும்போது, உங்ககிட்ட ஆபிஸ் டிராயார் சாவி வாங்க உங்க வீட்டுக்கு நான் வந்திருக்க கூடாது. என் வீடும் அதே தெருவில இருந்ததால வந்தேன்.'' என்றாள்
"மாலதி. நீங்க பெருந்தன்மையா சொன்னாலும், என் தங்கச்சி நடந்தவிதம் எனக்கே புடிக்கலைங்க. என்னன்னு தெரியலை கொஞ்ச நாளாவே இப்படித்தான் நடந்துக்கிறா.''
"எல்லாம் வயசுதாங்க காரணம்.''
"என்னங்க சொல்றீங்க? உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதானே இருக்கும். உங்ககிட்ட உள்ள இந்த பக்குவமான பேச்சு அவகிட்ட இல்லையே...''
"பக்குவங்கிறது அனுபவம் சம்பந்தப்பட்டதுங்க. எனக்கும் உங்க மாதிரி ஒரு அண்ணன் இருந்தா... நானும் அப்படித்தான் நடந்துக்குவேனோ என்னவோ... இப்ப என் குடும்ப பொறுப்பு என்மேல இருக்கிறதால கல்யான ஆசைகளை தூர நிறுத்திவைச்சிருக்கேன். ஆனா உங்க தங்கச்சிக்கு அப்படி கிடையதில்லையா... அவளுக்கு அவ கனவுகள்தான் முக்கியமா இருக்கும்.''
"ம்... இதுக்குதான் பொம்பள மனசு பொம்பளைக்குத்தான் தெரியும்னு சொன்னாங்க போலிருக்கு... சரிங்க, மணியாகுது. நான் என் சீட்டுக்கு போறேன். மறுபடியும் உங்ககிட்ட ஸாரி கேட்டுக்கிறேன்.'' என்றவாறு சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. மனதுக்குள் சேகர் சொன்னது மீண்டும் ஒலித்தது... "உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதான்... உங்ககிட்ட இருக்கிற பக்குவம் அவகிட்ட இல்லியே...' மாலதி தன்னையும் அறியாமல் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டாள்.

மாலைநேர கடையில் காப்பி குடித்துவிட்டு தம் அடித்துக் கொண்டிருந்த சேகரைக் கண்டதும், காப்பி வாங்க வந்த ப்யூன், "சேகர் சார்...'' என்றவாறு அருகில் வந்தான்.
"என்ன அய்யாதுரை, என்ன விஷயம்?'' என்றான் சேகர்.
"நம்ம அய்யா, ஏதாவது உங்ககிட்ட விசாரிச்சாரா?'' என்றான். அய்யா என்பது கம்பெனி முதலாளியை.
"ஏன்? என்ன விஷயம்?''
"இல்ல... மதியானம் நீங்களும் மாலதி அம்மாவிம் பேசிக்கிட்டிருக்கும்போது, அய்யா வந்திருப்பாரு போல... காதல் அது இதுன்னு ஏதாவது விசயமா அப்படின்னு கேட்டாரு... அதான் உங்களை நேரா விசாரிச்சாரான்னு கேட்டேன்...'' என்று சிரித்தான்.
"நம்ம அய்யாவா அப்படிக் கேட்டாரு...'' என்றவன் நடந்ததை ப்யூனிடம் விளக்கினான்.
"அப்படியா விஷயம்... சரி நான் வர்றேன் சார்'' என்றவாறு ப்யூன் செல்ல, முதலாளி நம்மைப்பற்றி எதுக்கு விசாரிக்கணும்? என்று யோசிக்க ஆரம்பித்தான். மாலதியை தன்னுடன் இணைத்து பார்த்த முதலாளிக்கு மானசீகமாக நன்றி சொன்னான். மனத்திரையில் மாலதியின் முகம் பளீரென்று மின்னியது.

சலவைக்கற்கள் ரெத்னா இல்லம் என்று பதிக்கப்பட்ட வாசகத்துடன் கம்பீரமாக காட்சியளித்த பங்களாவின் கேட்டை நெருங்கினான் சேகர். வாட்ச்மேன் சேகரைக் கண்டதும் சிரித்து, "அய்யா பின்னாடி தோட்டத்துல உட்கார்ந்திருக்கிறார். உங்கள அங்க வரச்சொன்னார்'' என்றான்.
சேகரின் மனதிற்குள் என்ன இவர் இரண்டு நாட்களாக வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்று நினைத்துக் கொண்டான். நேற்று பியூனிடம் விசாரித்தவர், ஞாயிற்றுக்கிழமையான இன்று வீட்டிற்கு வரச்சொல்லியிருக்கிறார்... இப்போது நேரிடையாக விசாரிக்கப் போகிறாரா? இதுவரையில் கம்பெனி ஆட்களை யாரையுமே வீட்டிற்கு வரச்சொன்னது இல்லை என்று ப்யூன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. தூரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தவர், இவனைப் பார்த்ததும், "வாங்க சேகர், உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். உக்காருங்க.'' என்றார். ஆபிஸ் நேரங்களில் காட்டும் கண்டிப்பான குரல் இங்கு இல்லை. சேகர் அமர்ந்ததும், " என்ன சாப்பிடுறீங்க?'' என்றார்.
"ஒண்ணும் வேணாம் சார்... என்ன விசயமா வரச்சொன்னீங்கன்னு எனக்கு புரியவேயில்லை. ஒரே குழப்பமா இருக்கேன் சார்'' என்றான்.
"கல்யான வயசுப் பொண்ண வீட்ல வைச்சுருக்கிறது ரொம்ப கஷ்டமான விசயம் இல்லையா சேகர்?'' என்றார்.
பியூன் எல்லா விசயத்தையும் இவரிடம் வந்து சொல்லிட்டானா என்று யோசித்துக் கொண்டே, "ஆமா சார்... கால நேரத்தோட கல்யாணம் பண்ணிட்டா பிரச்சினை இல்லை'' என்றான்.
"உங்க தக்ச்சி கல்யாணத்தை ஏன் தள்ளிப் போடுறீங்க? சீக்கிரமா பார்த்து முடிக்க வேண்டியதுதானே?''
"இன்னும் அதுக்கு என்ன நான் தயார் பண்ணிக்கலை சார்..'' என்று இழுத்தான்.
"ஏன் ஏதாவது பணப்பிரச்சினையா?''
"சார்... அது வந்து...''
"சும்மா சொல்லுங்க சேகர்...''
" ஆமா சார்... எங்க அப்பா பார்த்த வேலையைத்தான் எனக்குக் கொடுத்திருக்கீங்க. எங்க அப்பா இறந்தப்போதான் நிறைய கடன் வாங்கி வைச்சிட்டு போயிருக்கிற விசயமே எங்களுக்கு தெரியும். அதையெல்லாம் இப்பதான் அடைச்சிட்டு வர்றேன். இனிமேதான் ஏற்பாடு பண்ணணும்.''
"உன் தங்கச்சி வயசுப் பொண்ணுகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிட்டதா கேள்விப்பட்டேன். அந்த விரக்கிதியிலதான் உன்ள தங்கச்சி, நம்ம ஸ்டாப் மாலதியை தப்பிதமா பேசினதா கேள்விப்பட்டேன். இந்த மாதிரி நேரத்தில நீங்க இன்னும் நாள் கடத்துறது சரியில்லைன்னு எம்மனசுக்குப்படுது'' என்றார்.
"என்னைப்பத்தி, என் குடும்பத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சி வைச்சிருக்கீங்க சார்''
"இதுக்குப் பின்னால என் சுயநலமும் இருக்கு சேகர்...''
"என்ன சொல்றீங்க சார்?''
"என் பொண்ணைப் பார்த்திருக்கீங்களா நீங்க?''
"இல்லை சார்... வெளிநாட்டில படிக்கிறதா கேள்விப்பட்டேன்....''
"ஆமா. படிட்பபு முடிஞ்சு, இப்ப ஊருக்கு வர்றா... வந்த உடனே அவளுக்கு கல்யாணம் பண்ணிடணும்னு முடிவெடுத்திருக்கேன். மாப்பிள்ளையை கூட தேர்வு பண்ணியாச்சு... அது... நீங்கதான்...''
"சார்.... நீங்க... '' அவர் குடுத்த அதிர்ச்சியிலும் மாலதி முகம் கண்முன் தெரிந்தது.
"யெஸ் சேகர். உங்க தங்கச்சி கல்யாணமும், உங்க கல்யாணமும் ஒரே நேரத்தில் வைச்சிக்கலாம். முழுச்செலவையும் நானே பார்த்துக்கிறேன். உங்களோட மூணு வருஷ சர்வீஸ்ல, உங்களுக்கே தெரியாம என் பார்வை உங்க மேலதான் இருந்திச்சு. என் மகளோட படிப்பு முடியட்டும்னு காத்திருந்தேன். இப்ப யோசிச்சு, நல்ல முடிவைச் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன். இப்ப போயிட்டு வாங்க'' என்றார்.
பதில் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல், வீடு நோக்கி கிளம்பினான்.

(தொடரும்)

Thursday, 9 April, 2009

உங்களுக்காக...

சாப்ட்வேர் இன்ஜினியர் படம் எடுத்தால் என்ன பேர் வைப்பார்?
ஜி மெயில் சன்ஆப் இமெயில்
ரேம் தேடிய மதர்போர்டு
7GB
எனக்கு 20 MB உனக்கு 18 MB
சொல்ல மறந்த பாஸ்வேர்டு
எங்கோ ஒரு புரோகிராமர்
ஒரு மவுஸ்-ன் கதை
மானிட்டருக்குள் மழை
புதுக்கோட்டையிலிருந்து ஒரு பென்டியம் 4
காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க!
Hard disk-க்கு மரியாதை
எல்லாம் processor செயல்

எரிந்துபோன சிகெரட் சாம்பல் சொன்னது...
இன்று நான், நாளை நீ!

இதை தவிருங்கள், ஆபத்தானவை என்று யு.எஸ்.ஏ. அறிவித்திருக்கிறதாம்!
1. D'cold
2. vicksaction 500
3. Actifed
4. Coldarin
5. Cosome
6. Nise
7. Nimulid
8. Cetrizet-D
-they contain PPA(Phenyl Propanol Amide). Causes Stroke.
தகவல் : செம்முரசு குருஞ்செய்தி இதழ்... தொடர்புக்கு - 9894899510

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று போதிக்கும் பள்ளிகளின் பெயர்களை பாருங்கள்...(எனக்குத் தெரிந்த இரண்டு பள்ளிகளின் பெயர்கள் மட்டும் இங்கே)
கோபாலய்யர் தொடக்கப்பள்ளி, கோபாலபுரம், சென்னை.
ராமசாமிமுதலியார் உயர்நிலை பள்ளி, அம்பத்தூர், சென்னை.

பள்ளியைப் பற்றி சொன்னதால் அது தொடர்புடைய நணபர் ஒருவரின் கவிதை...
கிராமத்து மாணவன்
இறுதியாண்டு படிப்பு
ஐந்தாம்வகுப்பு
- நாணற்காடன்,
செல்- 9942714307

எனக்கு எஸ்.எம்.எஸ். வந்ததிலிருந்து...

கன்னிக்கோயில் ராஜா. இவர் என் நண்பர், கவிஞர்.பல அய்க்கூ தொகுப்பு நூல்களையும் வெளியி்ட்டிருக்கிறார்.'பொதிகை மின்னல்' சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார்.
இவர் தினந்தோறும் தன் கைப்பேசி (செல்போன்) மூலம் தினசரி 300 -க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் அய்க்கூ அனுப்புகிறார். சனிக்கிழமைதோறும் மகளிர் அய்க்கூக்களை மட்டும் அனுப்புகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளின் செய்திகளை (தாங்கள் அனுப்பினால் அதை) அனைவருக்கும் அனுப்பி வைக்கிறார். இதை விளையாட்டடாக செய்யப்போக இன்று ஏகப்பட்ட நண்பர்களை பெற்றிருக்கிறார். தொடர்ந்து 1500 நாட்களைத் தாண்டி இந்தச் சேவையை இலவசமாக செய்துவருகிறார். அவருக்கு நீங்களும் அய்க்கூ அனுப்பலாம், வாழ்த்து தெரிவிக்கலாம்.
அவரின் முகவரி:
கன்னிக்கோயில் ராஜா,
30/8, கன்னிக்கோயில் முதல்தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 18
9841236965

Tuesday, 7 April, 2009

விடைதாருங்கள் இந்த சிறு(விடு)கதைக்கு.

பதிவர் கோமா அவர்கள் ஒரு படத்தை தன்பதிவில் போட்டு அதை கண்டுபிடியுங்கள் பார்கலாம்னு சொன்னாங்க. சரி, நாமளும் அப்படி ஒரு பதிவு போடலாம்னு யோசிச்சப்ப, இந்த கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. இந்த கதைக்கு முடிவை நான் எழுதலை. அதை சொல்லப்போவது நீங்கள் தான். என்ன தயாரா?

இந்த கதை, பல வருடங்களுக்கு முன் நடந்தது. (இந்த வரி, நீங்கள் சொல்லப்போகும் முடிவிற்கும் சம்பந்தப்பட்ட ஒரு க்ளுவாகவும் இருக்கும்) அந்தக்காலத்திலும் வேலைதேடி அண்டை நாடுகளுக்கு பயணம் செல்வது வாடிக்கையான விடயம்தான். அந்த மாதிரி ஒரு நான்கு நண்பர்கள் பயணம் தொடர்ந்தார்கள்.முதல் நபருக்கு சிற்பம் செய்யும் வேலையும், 2-ம் நபருக்கு தையல் வேலையும், 3-ம் நபருக்கு ஆபரணத்தொழிலும், 4-ம் நபருக்கு மந்திர தந்திர வேலைகளும் தெரியும்.

நால்வரும் பயணக் களைப்பில் ஒரு இடத்தில் கூடாரமடித்து தங்கினார்கள். வழி செலவுக்காக அவர்கள் கையில் விலை மதிப்பற்ற பொருட்கள் பலவும் வைத்திருந்ததால், அப்பொருட்டகள் களவுப் போகாமல் இருக்க, இந்த இரவுப் பொழுதில் ஒவ்வொருவரும் மாற்றி காவல் இருப்பது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். அதன்படி முதலில் சிற்பத் தொழில் தெரிந்தவன் காவல் இருந்தான். அவனுக்கு தூக்கம் வராமல் இருக்க தன் கைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பெண் சிற்பத்தை செய்ய ஆரம்பித்தான். அவனின் காவல் நேரம் முடிவதற்குள் சிலையை செய்து முடித்தான்.
பின்பு, தையல் தொழில் செய்பவன் காவலுக்கு வந்தான். அவன் சிற்பி செய்த சிலையைப் பார்த்தான். அந்த சிலைக்கு ஆடைகள் தைத்து, அவன் காவல் நேரத்தை பூர்த்தி செய்தான்.
பின்பு காவல் பொறுப்பை ஆபரணத் தொழில் செய்யபவனிடம் ஒப்படைத்தான். அவன் சிலையையும், அதற்குத் தைக்கப்பட்ட ஆடைகளையும் கண்டு, இதற்கு ஆபரணம் செய்து போட்டால் அழகாக இருக்கும் என்று தோன்ற, அப்படியே செய்து முடித்தான். அடுத்து, காவல் பொருப்பு மந்திர, தந்திர தொழில் தெரிந்தவனிடம் சென்றது.
அவன் தனக்கு தெரிந்த மந்திரத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த சிலைக்கு உயிர் கொடுத்தான். பொழுது விடிந்தது.
அனைவரும் கண்விழித்தனர். அழகுமிக்க பெண்ணெருத்தி அங்கிருப்பதைக் கண்டு அதிசயத்தனர்.
இப்பொழுது அவர்களுக்குள் ஒரு சண்டையே மூண்டது. சண்டைக்கு காரணம் அந்த உயிர்பெற்ற பெண்ணை யார் திருமணம் செய்து கொள்வது என்பதுதான். சண்டை முற்றி ஒரு தீர்வு பெறமுடியாமல் தடுமாறினார்கள். அதற்காக அந்த நாட்டு அரசனை அணுகுவது என்று முடிவு செய்தனர்.
அரசனும் நடந்தவற்றை எல்லாம் கேட்டு, ஒரு தீர்ப்பு சொன்னார். அந்த தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டனர்.
அந்த தீர்ப்பு என்னவாக இருக்கும்.
நீங்கள் சொல்லுங்கள்!

Sunday, 5 April, 2009

வலைப்பதிவர் சந்திப்பும், ஆதங்கமும்.

திட்டமி்ட்டபடி சென்னை மெரீனா கடற்கரையில், காந்திசிலை கீழே இடவசதியில்லாததால் (காந்தியை மொக்கை போட்டு கொடுமை படுத்தாதீ்ங்க/ நிலாவும் அம்மாவும் சொன்னதை படித்திருப்பார்களோ என்னவோ) சற்றுத்தள்ளி, உள்ளே மணலில் வட்டமாக அமர்ந்தோம். எண்ணிக்கை வரவர கூடிக்கொண்டே போவதால் சற்று பெரிய வட்டமாக போயிற்று.
முதலில் பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். இதுவரை பதிவுகளின் மூலமே அறிமுகமான பல பதிவர்கள் நிலவினை கண்டு மலர்ந்த அல்லியென ஆனார்கள்.
எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை, அவரவர்கள் சொல்ல நினைப்பதை சொல்லலாம் என்று ஒருவர் சொல்ல, வாசகர்கள் தங்களுக்கு பதிவிடும்போது ஏற்படும் சந்தேகங்களைப் பற்றி கேட்கலாம் ஆரம்பித்து வைத்தார்கள்.
பதிவர் ஒருவர் தனது பதிவுகளை திருடி ஒரு தமிழில் வெளிவரும் கம்யூட்டர் புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள் எந்த அனுமதியின்றி என்று வருத்தப்பட்டார். அதற்கு பலரும் ஆலேசனை செய்து அவர்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பலாம் என்பது தீர்வாக சொல்லப்பட்டது.
ஒரு பதிவர் எனது பதிவுகளை யாரேனும் திருடி பத்திரிகையில் போட்டால் அவர்களுக்கு நான் ஐம்பது ரூபாய் கொடுப்பேன் என்று கமெண்ட் அடித்தார். மற்றொருவர் இதற்குத்ததான் தொழில் நுட்ப விசயங்களையெல்லாம் பதிவாக போடக்கூடாது என்று (சும்மா லுலாய்க்கு)கமெண்ட் அடித்தார் ஒருவர்.
ஆர்எஸ்எஸ் பற்றி ஒருவர் சொல்ல, வலையிலும் ஆர்.எஸ்.எஸ் - ஆ! என்று டைமிங்க ஜோக் அடித்தார் ஒருவர்.
பதிவர்களில் பெரும்பாலோர் அலுவலக கணிணியையே உபயோகி்ன்றனர். அதனல் சனி,ஞாயிறுகளில் பலர் வலைத்திற்கு வருவதில்லை. எனவே அன்று பதிவிடுவது வீண் என்றும் கருத்து கூறப்பட்டது.
நம் வலைக்குத்தான் வந்து படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல் வலைப்பதிவுகளை Site Feed- ல் Blog Posts Feed- ல் full - என்று கொடுங்கள். அதன் மூலம் நம் பதிவுகளை முழுமையாக படிக்க கொடுக்கலாம் என்றார்.
ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று பேச்சு எழுந்தது. சிலர் தமிழ் பதிவுகளை கூகுள் ஏற்றுக் கொள்வதில்லையே என்று கேட்டபோது, Monetize - ல் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் விளம்பரம் கிடைக்கும் என்றனர்.நான் அவ்வாறு சம்பாதிக்கிறேன் என்றார் லக்கிலுக்.
வலைப்பதிவர் பட்டறை இப்பொழுதெல்லாம் நடத்தப்படுவதில்லையே என்று ஒருவர் வினவினார்.
(வலைப்பதிவர் பட்டறை என்பது பழைய பதிவர்கள் ஒன்றிணைந்து பல வலைத்தளத்தைப் பற்றி அறிமுகமில்லாத நபர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களையும் பதிவராக மாற்றிவிடும் ஒரு பட்டறை. இந்த மாதிரி நடந்த ஒரு பட்டறையின் மூலம்தான் நானும் பதிவராக மாறினேன்.)
முன்பு பட்டறை நடத்திய நண்பர்கள் பெரும்பாலும் இங்கு இல்லை. ஆர்வமிருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மீண்டும் நடத்தலாம் என்று கருத்து கூறப்பட்டது.
அடுத்தமுறை வெட்டவெளியில் சந்திப்பு நடத்தாமல், அரங்கினுள் நடத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. காரணம் முன்பு பத்து பதிவர்கள் மட்டும் சந்தித்தனராம். இப்போது முப்பதுக்கும் மேற்பட்ட பதிவர்கள் வந்திருந்தபடியால், பொது இடமாதலால் சிலர் பேசுவது கேட்கவில்லை.அல்லது கவனிக்க முடியவில்லை.
(கோடைக்காலம்... விடுமுறையை அனுபவிக்க மக்கள் கலர் கலராக குவிந்திருந்தனர்.அதனால் கவனமும் சிதறியது.)
இரண்டு மணிநேரம் போதவில்லை என்பதே பலரின் ஆதங்கமாக இருந்தது.

பதிவர் சந்திப்பு படங்களுக்கு இங்கே செல்லவும். http://aganaazhigai.blogspot.com/2009/04/5409.html

Saturday, 4 April, 2009

பிரபல பதிவராக விருப்பமா?

பிரபல பதிவராக யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதற்கு பத்து பத்து வழிகளை அவ்வப்போது பலர் அள்ளிவிட்டும் வருகிறார்கள். நான் அப்படி எதுவும் சொல்லப்போவதில்லை.இதற்கு எளிய வழி எதுவும் இல்லையா? இருக்கிறது.

சென்னையில் அவ்வப்பபோது நடத்தப்படும் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ளுங்கள். பல பிரபல பதிவர்கள் அங்கு வருவார்கள். பிரபல பதிவர்களை சந்தித்து அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். புதிய பதிவர்களை வரவேற்கும் விதமாக நடைபெறும் இந்த சந்திப்பு வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகே நடைபெறும். எல்லோரும் வட்டமடித்து அமர்ந்திருப்பார்கள். அனுமதி இலவசம். என்ன ரெடியா?

இடம் : மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை

நாள் : 05- 04 -2009. ஞாயிற்றுக்கிழமை

சந்திப்பு பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள-

பாலபாரதி – 9940203132

லக்கிலுக் – 9841354308

அதிஷா – 9884881824

கேபிள் சங்கர் - 9840332666

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...