Showing posts with label அய்க்கூ கவிதைகள்.. Show all posts
Showing posts with label அய்க்கூ கவிதைகள்.. Show all posts

Monday, 16 February 2009

அய்க்கூ கவிதைகள்.



கட்டுமானத்தொழில் செய்துவரும் எனது மற்றொரு நண்பர் ஆர்.எஸ்.நாதன், இங்கே அவரின் கவிதையை க(கா)ட்டியிருக்கிறார். உங்கள் கருத்தை கொட்டுங்கள்!

நிறைய நிறைய அர்த்தங்கள்
நீசொன்தென்ன?
சைகையில் சொன்ன செய்தி

*************

தொடாமலே பேசிக்கொண்டிருக்கையில்
அவள் கண்ணில் விழுந்த தூசி
காற்றுக்கு நன்றி!

*************

வேறுபெயரில் வாழ்த்து
தெரியாமலா போகும்
உன் கையெழுத்து..

**************

உனக்கான காத்திருப்பு
இலையைகிள்ளும் வேளையில்
யார் யாரோ உன் சாயலில்.

- ஆர்.எஸ்.நாதன்,கும்பகோணம்
.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...