Wednesday 28 July, 2010

பின்னூட்ட சூறாவளியுடன் ஒரு சந்திப்பு!


அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கைபேசி அலைத்தது. யாரென்று பார்த்தால் பின்னூட்ட சூறாவளி ராகவன் அண்ணன். திடீரென்று அவரிடமிருந்து அழைப்பு வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வணக்கம்
என்றேன், சந்தேகத்துடன். மறுமுனையில் நான் நைஜீரியா ராகவன் பேசுறேன் என்றார். எங்கிருந்துண்ணே என்றேன். சென்னையிலிருந்தான் என்றார்.நலவிசாரிப்புகளுக்குப் பிறகு இன்னைக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நாளைக்கு சாயங்காலம் வர்றேன் என்றேன். சரி என்றார்.

ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் (அன்று அவர்களின் உறவினர்கள் வந்துவிட்டதால்) சந்திக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு மறுநாள் அலுவலகம் முடிந்த பிறகு மாலை அண்ணனுக்கு போன் செய்தேன். இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என்றார்.

ஏழேகாலுக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன். என்றேன். அவரும் சரியென்றார். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று போன் செய்ததால் சற்று தாமதமாக போகலாம் என்பதற்காகவே அப்படி சொன்னேன்.

அண்ணனின் வீட்டிற்கும் எனது அலுவலகத்திற்கும் நடை தூரம் (என்கிட்ட வண்டி இல்லே. அதனாலே நடைதூரத்தைத்தானே சொல்லமுடியும்) அவ்வளவுதான்.

வீட்டிற்கு சென்றதும் அன்புடன் வரவேற்றார். வீட்டின் கூடத்தில் அரவிந்த் அவரின் மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அரவிந்திடம் இவரைத் தெரிகிறதா என்று கேட்க, சென்றமுறை சந்தித்ததை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். அண்ணியாரும்தான். நல விசாரிப்புகளுக்கு பிறகு அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.

பதிவுலகம் பற்றி பேச்சு வந்தது. முன்புபோல் இடுகையிட முடியவில்லை (முன்பு மட்டும் அதிகமா இடுகையிட்டமாக்கும் என்று) கூறினார். அதோடு பதிவுலக சண்டை சச்சரவினால் மிகவும் வருத்தமாகவே பேசினார். கூகுள் இலவசமாக தரும் வரையில் இவ்வளவு நபர்கள் எழுதிவருவார்கள். ஒருவேளை கட்டணம் என்றால் எத்தனைபேர் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதே நிச்சயமில்லாத நிலையில் இப்படி சண்டை போட்டுக்கொண்டு இருப்பது பற்றி வருத்தமுடன் போசினார். பதிவர் சந்திப்பு வைப்போமா என்றதற்கு,இந்தப்பிரச்சினையால் யாரையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் அவர் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. சென்னையில் குறிப்பிட்ட சிலரை மட்டும் சந்தித்ததாகக் கூறினார். அவர்களில் நானும் ஒருவன் என்றபோது மிகவும் மகிழ்வுற்றேன்.

16 comments:

sakthi said...

ராகவன் அண்ணா அவர் துணைவியார் அரவிந்த் இவர்கள் கோவையில் எங்களை சந்தித்ததும் மறக்க இயலாத நிகழ்வு அன்பான மனிதர்கள் !!!!

ஆ.ஞானசேகரன் said...

நல்லது.... இந்த வெள்ளிகிழமை சிங்கை வருகின்றார். முடிந்தமட்டும் சந்திக்கின்றேன்..

ராம்ஜி_யாஹூ said...

nice, where is the photos

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல மனுஷங்க இன்னும் இருக்காங்க நண்பா..:-)))

மதுரை சரவணன் said...

நல்ல நண்பர் ...மறக்க முடியாத எதார்த்தவாதி...அவர் உள்ளம் நம்மைப்போன்றோரை சேர்த்து வைக்கும்... பகிர்வுக்கு நன்றீ.

butterfly Surya said...

மகிழ்ச்சி. கைபேசி எண் மாறி விட்டதா..??

அ.முத்து பிரகாஷ் said...

புகைப்படம் பகிருங்கள் தோழர் ... புதியவர்கள் எங்களுக்கு முகம் தெரியாதல்லவா ?

குடந்தை அன்புமணி said...

\\ராகவன் அண்ணா அவர் துணைவியார் அரவிந்த் இவர்கள் கோவையில் எங்களை சந்தித்ததும் மறக்க இயலாத நிகழ்வு அன்பான மனிதர்கள் !!!!\\
நிச்சயமாக... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

குடந்தை அன்புமணி said...

\\ஆ.ஞானசேகரன் said...
நல்லது.... இந்த வெள்ளிகிழமை சிங்கை வருகின்றார். முடிந்தமட்டும் சந்திக்கின்றேன்..\\

நிச்சயம் சந்தியுங்கள் தோழா...

குடந்தை அன்புமணி said...

\\ராம்ஜி_யாஹூ said...
nice, where is the photos\\

போட்டோ எடுக்கவில்லை. நான் தனிப்பட்ட முறையில் சந்தித்தது நண்பா.

குடந்தை அன்புமணி said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல மனுஷங்க இன்னும் இருக்காங்க நண்பா..:-)))\\

உண்மைதான் நண்பா.

குடந்தை அன்புமணி said...

\\மதுரை சரவணன் said...
நல்ல நண்பர் ...மறக்க முடியாத எதார்த்தவாதி...அவர் உள்ளம் நம்மைப்போன்றோரை சேர்த்து வைக்கும்... பகிர்வுக்கு நன்றீ.\\

தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

குடந்தை அன்புமணி said...

\\butterfly Surya said...
மகிழ்ச்சி. கைபேசி எண் மாறி விட்டதா..??\\

இல்லையோ... அதே எண்தான்.

குடந்தை அன்புமணி said...

வருகைக்கு நன்றி சுவேதா, நியோ.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பகிர்வு.நியாயமான வருத்தம்.குடும்பமாக ஒன்னா இருக்க வேண்டியவங்க ஏன் அடிச்சுக்கனும்?

குடந்தை அன்புமணி said...

\\சி.பி.செந்தில்குமார் said...
நல்ல பகிர்வு.நியாயமான வருத்தம்.குடும்பமாக ஒன்னா இருக்க வேண்டியவங்க ஏன் அடிச்சுக்கனும்?\\

இதே போல எல்லாரும் யோசித்தால் தீர்வு கிடைத்துவிடும்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...