Monday, 28 March 2011

ஓ போடுவதில் சிக்கல்




வ்வொரு தேர்தலின்போதும் அரசியல்கட்சிகளின் மேல் இருக்கும் எதிர்ப்பை, நம்பிக்கையின்மையை, ஊழல்வாதிகளைக் கண்டு அவர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய 49ஓ-படிவத்தை பயன்படுத்தி வந்தனர். அந்த படிவத்தை பயன்படுத்த வாக்காளர்கள் கையெழுத்து போட்டு வாங்கி பயன்படுத்தலாம் என்பது பழைய விதிமுறை.

ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகளை மிகவும் கறாராக செயல்படுத்தி வரும் தேர்தல் கமிஷன் இதிலும் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. 49ஓ படிவத்தை பெறுபவர்கள் தங்களின் முழு முகவரி, அவர் சார்ந்த பகுதியின் பாகம் எண் மற்றும் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டுமாம். இப்படிவத்தின் கவரை தேர்தல் கமிஷனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவிற்குப் பின் இந்தக் கவர்கள் பிரிக்கப்பட்டு, அதில் அந்த நபர் குறிப்பிட்டிருக்கும் காரணங்களை சரிபார்ப்பார்களாம். அரசியல் காரணங்கள் தவிர வேறு காரணங்கள் இருப்பின் அந்த நபரை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு பதிவு செய்வார்களாம். அந்த பதிவுகள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படுமாம்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு நீங்கள் தயார் என்றால் ஓ போடலாம்!

3 comments:

r.v.saravanan said...

pagirvukku nandri

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

முனைவர் இரா.குணசீலன் said...

நீங்க என்ன செஞ்சாலும் நாங்க மக்களை ஏமாத்தாம விடமாட்டோம் என்று சபதம் ஏற்றிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்!!!!!!

முனைவர் இரா.குணசீலன் said...

நீண்ட நாளுக்குப் பிறகு வந்திருக்கீங்க..
வலைப்பக்க வடிவமைப்பு அழகாகவுள்ளது நண்பா..

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...