Sunday, 1 May 2011

கண்கொள்ளா அந்த காட்சி...


இருள் சூழத்தொடகியதும் காணக்கிடைக்கும் அந்தக் கண்கொள்ளா அந்த காட்சி... காணத்தவறாதீர்கள்...

சென்னை நகரின் மையத்தில் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட (அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில், ரூ.8 கோடி செலவில் 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சவால் விடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு பிரமாண்டமான தாவரவியல் பூங்காவான செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை அண்ணாசாலையில்,  வாகனங்களின் சத்தங்களுக்கு மத்தியில், பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்து அமைதியும் ரம்மியமும் நிலவிய அந்த இடத்தில் தமிழக அரசு செம்மொழி பூங்காவை அமைத்துள்ளது.


 செம்மொழி பூங்காவை ஒவ்வொன்றாக ரசித்தவாறு சுற்றிப்பார்க்க வேண்டுமானால் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும். பூங்காவின் உள்ளே ஒன்றே கால் மீட்டர் தூரம் நடந்தால்தான் அனைத்தையும் கண்டுரசிக்க முடியும்.

குழந்தைகள் விளையாடி மகிழ யானை வடிவில் சறுக்குமரம், ஊஞ்சல் - இப்படி இன்னும் இன்னும்...

எழில் சூழ்ந்த மரங்கள், விதவிதமான தாவரங்கள், பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் கொண்ட இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதால் சுத்தமான காற்றை சுவாசிப்பதுடன் வாக்கிங் சென்றதுபோலும் ஆகிவிடும். பரபரப்பு மிக்க இடத்திற்கு மத்தியில் ரம்மியான சூழ்நிலையில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா சென்னைவாசிகளுக்கு நிச்சயம் வரப்பிரசாதம்தான்.

முக்கியமான செய்தி...
காலை எட்டுமணி முதல் இரவு எட்டுமணிவரை பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். முழுநேர பொழுதுபோக்கிற்கு உகந்த இடம் என்றாலும்  மாலை ஆறுமணிக்குமேல் நீர்ஊற்றுகளில் வண்ணமின் விளக்குகள் காட்டும் ஜாலங்களை கண்டு மகிழாமல் திரும்பாதீர்கள்.

 பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை. மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் ஜந்து ரூபாய். கார், பைக் பார்க்கிங் வசதி உண்டு. உள்ளே தீனி பண்டங்கள் உட்பட எதுவும் கிடைக்காது. அதுவும் நல்லதாகத்தான்படுகிறது.  பூங்காவை அசுத்தப்படுத்தபடாமல் இருக்க உதவுமில்லையா?
பூங்காவுக்கு வெளியேயாவது கடைகள் அமைக்கலாம்.

என்ன போட்டோ ஒன்றுதானா? என்கிறீர்களா?
நம்ம வலைபதிவர்கள் பலரும் இதுபற்றி எழுதியிருக்கிறார்கள், அதில் விடுபட்ட செய்திகளைத்தான் நான் பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவர்களின் வலைத்தளங்களுக்கும் சென்று பாருங்கள். படங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.
http://vs-jothilakshmi.blogspot.com/2011/01/classical-language-park-chennai.html
http://valaimanai.blogspot.com/2011/03/blog-post.html
http://ilakindriorpayanam.blogspot.com/2010/12/blog-post.html
http://haasya-rasam.blogspot.com/2010/12/blog-post_05.html


2 comments:

பாட்டு ரசிகன் said...

சுவையான வர்ணனை...

அந்த அழகை நாங்கள் விரைவில் ரசிப்போம்..

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...