காதலர்தினத்தை முன்னிட்டு என் நண்பனின் சிறப்பு கவிதை உங்கள் பார்வைக்கு!
நில்!
யார் உன்னை
அனுமதித்தது
இந்த காதல் வனத்துள்?
காடுகமழச் சிரிக்கும்
நாங்கள்
கற்பகப்பூக்கள்!
முன்பொருநாள்
மோனத்தவமிருந்து
வேண்டிநின்றோம்
எம்
காம்பினைக்கொய்ய
காதலர்க்கரம்
வேண்டுமென்று.
சீழ்நாறும்
உன்
ரோகவிரல்களால்
தீண்டாதே.
காதலின் ஸ்பரிசமே
எங்கள்ஆடை
உன்
மேனியில் கனப்பதோ
பொருளாதாரப்போர்வை.
நறுமணமே
எங்கள் பாடல்.
உனக்கோ
பேயுதட்டு பாசை.
எங்கள் இதழ்களின்
மினுமினுப்பில்
தேவமகரந்தம்
உன்
அங்கம் முழுக்க
சாதியச்சகதி.
புனிதத்தின் கருப்பையில்
பூத்தவர்கள் நாங்கள்!
நீயோ
மதங்களின் காலடியில்
மண்டியிடுகிறாய்.
எம்
நிழல் தீண்டும் தகுதியும்
உனக்கில்லை
போய்விடு!
பூமிக்கு வெளியே
காத்திருக்கிறது
உனக்ககான கல்லறை.
- கோ.பாரதிமோகன்.
நில்!
யார் உன்னை
அனுமதித்தது
இந்த காதல் வனத்துள்?
காடுகமழச் சிரிக்கும்
நாங்கள்
கற்பகப்பூக்கள்!
முன்பொருநாள்
மோனத்தவமிருந்து
வேண்டிநின்றோம்
எம்
காம்பினைக்கொய்ய
காதலர்க்கரம்
வேண்டுமென்று.
சீழ்நாறும்
உன்
ரோகவிரல்களால்
தீண்டாதே.
காதலின் ஸ்பரிசமே
எங்கள்ஆடை
உன்
மேனியில் கனப்பதோ
பொருளாதாரப்போர்வை.
நறுமணமே
எங்கள் பாடல்.
உனக்கோ
பேயுதட்டு பாசை.
எங்கள் இதழ்களின்
மினுமினுப்பில்
தேவமகரந்தம்
உன்
அங்கம் முழுக்க
சாதியச்சகதி.
புனிதத்தின் கருப்பையில்
பூத்தவர்கள் நாங்கள்!
நீயோ
மதங்களின் காலடியில்
மண்டியிடுகிறாய்.
எம்
நிழல் தீண்டும் தகுதியும்
உனக்கில்லை
போய்விடு!
பூமிக்கு வெளியே
காத்திருக்கிறது
உனக்ககான கல்லறை.
- கோ.பாரதிமோகன்.
11 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
//
எம்
நிழல் தீண்டும் தகுதியும்
உனக்கில்லை
போய்விடு!
பூமிக்கு வெளியே
காத்திருக்கிறது
உனக்ககான கல்லறை.//
அருமையான கவிதைங்க..
அதுவும் அந்த கடைசி வரி இருக்கே..
ஆஹா... என்ன சொல்வது... சாதி, மத, பணப் பேய்களுக்கான சவுக்கடி..
// காதலர்தினத்தை முன்னிட்டு என் நண்பனின் சிறப்பு கவிதை உங்கள் பார்வைக்கு! //
சிங்கத்துக்கு சிங்கம்தான் நண்பனா இருக்க முடியும் அது மாதிரி உங்களுக்க் நண்பர் அப்படின்னா என்னன்னு அவருடைய கவிதை வரிகளில் காண்பித்துவிட்டார்.
உங்களுக்கும், நண்பர் பாரதி மோகனுக்கும் நேச நாள் வாழ்த்துக்கள்
காடுகமழச் சிரிக்கும்
நாங்கள்
கற்பகப்பூக்கள்!
சீழ்நாறும்
உன்
ரோகவிரல்களால்
தீண்டாதே.
உனக்கோ
பேயுதட்டு பாசை.
பூமிக்கு வெளியே
காத்திருக்கிறது
உனக்ககான கல்லறை.
வார்த்தை பிரயோகங்கள் நளினமானவை... உங்கள் நண்பர், சிறந்த கவிஞர்... அவர் கட்டியிருக்கும் வார்த்தைகளே அதனை பறைசாற்றுகின்றன.
தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள்....
//இராகவன் நைஜிரியா said...
உங்களுக்கும், நண்பர் பாரதி மோகனுக்கும் நேச நாள் வாழ்த்துக்கள்//
உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் எமது காதலர்தின வாழ்த்துக்கள்!
//ஆதவா said...
வார்த்தை பிரயோகங்கள் நளினமானவை... உங்கள் நண்பர், சிறந்த கவிஞர்... அவர் கட்டியிருக்கும் வார்த்தைகளே அதனை பறைசாற்றுகின்றன.
தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள்....//
விரைவில் அவர் பாரதிதாசனின் காவியம் ஒன்றை புதுக்கவிதை பாணியில் எனது வலைத்தளத்தில் எழுத உள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நில்!
யார் உன்னை
அனுமதித்தது
இந்த காதல் வனத்துள்?//
நாங்க வரலாமா?
நிழல் தீண்டும் தகுதியும்
உனக்கில்லை
போய்விடு!
பூமிக்கு வெளியே
காத்திருக்கிறது
உனக்ககான கல்லறை.//
பிரமாதமான வரிகள்..
//எரிந்த்ரா said...
நில்!
யார் உன்னை
அனுமதித்தது
இந்த காதல் வனத்துள்?//
நாங்க வரலாமா?//
தங்களை அன்படன் வரவேற்கிறோம்!
//ஹரிணி அம்மா said...
நிழல் தீண்டும் தகுதியும்
உனக்கில்லை
போய்விடு!
பூமிக்கு வெளியே
காத்திருக்கிறது
உனக்ககான கல்லறை.//
பிரமாதமான வரிகள்..//
மிக்க நன்றி!
Post a Comment