கட்டுமானத்தொழில் செய்துவரும் எனது மற்றொரு நண்பர் ஆர்.எஸ்.நாதன், இங்கே அவரின் கவிதையை க(கா)ட்டியிருக்கிறார். உங்கள் கருத்தை கொட்டுங்கள்!
நிறைய நிறைய அர்த்தங்கள்
நீசொன்தென்ன?
சைகையில் சொன்ன செய்தி
*************
தொடாமலே பேசிக்கொண்டிருக்கையில்
அவள் கண்ணில் விழுந்த தூசி
காற்றுக்கு நன்றி!
*************
வேறுபெயரில் வாழ்த்து
தெரியாமலா போகும்
உன் கையெழுத்து..
**************
உனக்கான காத்திருப்பு
இலையைகிள்ளும் வேளையில்
யார் யாரோ உன் சாயலில்.
- ஆர்.எஸ்.நாதன்,கும்பகோணம்.
24 comments:
\\தொடாமலே பேசிக்கொண்டிருக்கையில்
அவள் கண்ணில் விழுந்த தூசி
காற்றுக்கு நன்றி!\\
அட தூள்
// வேறுபெயரில் வாழ்த்து
தெரியாமலா போகும்
உன் கையெழுத்து.. //
அதான... எப்படி தெரியாமல் போகும்..
//
- ஆர்.எஸ்.நாதன்,கும்பகோணம்.//
நம்ம ஊர் ஆளு...
குடந்தை சேர்ந்தவரா நீங்க... வாங்கோ, வாங்கோ...
வருகை தந்து ரசித்த ஜமாலுக்கு நன்றி!
//இராகவன் நைஜிரியா said...
//
- ஆர்.எஸ்.நாதன்,கும்பகோணம்.//
நம்ம ஊர் ஆளு...
குடந்தை சேர்ந்தவரா நீங்க... வாங்கோ, வாங்கோ...//
நான் பிறந்தது தஞ்சாவூர், வளர்ந்தது குடந்தை (கும்பகோணம்), வாழ்வது (சென்னை)தாம்பரத்தில்.
// அன்புமணி said...
//இராகவன் நைஜிரியா said...
//
- ஆர்.எஸ்.நாதன்,கும்பகோணம்.//
நம்ம ஊர் ஆளு...
குடந்தை சேர்ந்தவரா நீங்க... வாங்கோ, வாங்கோ...//
நான் பிறந்தது தஞ்சாவூர், வளர்ந்தது குடந்தை (கும்பகோணம்), வாழ்வது (சென்னை)தாம்பரத்தில். //
கும்மோணமா... படிச்சீங்களா.. நானும் கும்மோணம்தான்... படிச்சேன்... இப்போ நைஜிரியாவில் இருக்கேன்...
//கும்மோணமா... படிச்சீங்களா.. நானும் கும்மோணம்தான்... படிச்சேன்... இப்போ நைஜிரியாவில் இருக்கேன்...//
குடந்தை சிறியமலர் மேனிலைப்பள்ளியில் படித்தேன்.
எந்த வருடத்தில்? நான் 1993-ல் சென்னைக்கு வந்துவிட்டேன்.
// அன்புமணி said...
எந்த வருடத்தில்? நான் 1993-ல் சென்னைக்கு வந்துவிட்டேன். //
நான் படித்தது 1974- 1983..
முதலில் பாணாதுறை, பின் 7 - 10 வரை ஓரியண்டல் ஹை ஸ்கூல், பின் +1, +2 பாணாதுறை..
டிகிரி.. கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்.. 1985 - ல் குடந்தையை விட்டு கிளம்பிவிட்டேன்.
ஒரே ஊர்காரங்களா ஆயிட்டோம். மிக்க மகிழ்ச்சி!
தொடாமலே பேசிக்கொண்டிருக்கையில்
அவள் கண்ணில் விழுந்த தூசி
காற்றுக்கு நன்றி!\\//
தொட்டுட்டான்!
/ வேறுபெயரில் வாழ்த்து
தெரியாமலா போகும்
உன் கையெழுத்து.. //
அதான... எப்படி தெரியாமல் போகும்..//
ஆமாமா!
நான் பிறந்தது தஞ்சாவூர், வளர்ந்தது குடந்தை (கும்பகோணம்), வாழ்வது (சென்னை)தாம்பரத்தில்.//
அன்புமணி அய்யா நான் படித்தது
தஞ்சை மருத்துவக்கல்லூரி!!!
மேட்டரைச்சொல்லுங்க!
//அன்புமணி அய்யா நான் படித்தது
தஞ்சை மருத்துவக்கல்லூரி!!!
மேட்டரைச்சொல்லுங்க!//
ஆகா! சுத்தி சுத்தி நம்மாளுங்கதானா? உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுதே!
/ வேறுபெயரில் வாழ்த்து
தெரியாமலா போகும்
உன் கையெழுத்து.. //
இதுதான் இருக்குரதுல்லையே டாப்..
தங்கள் கொடுத்த ரேட்டிங்குக்கு நன்றி கார்திகைப்பாண்டி!
நல்ல கவிதைகள் அன்புமணி.. கற்பனை எனும் கடலில் மிதக்காமல் யதார்த்தம் எனும் வானில் உலவுகிறது கவிதைகள்.
கண்ணில் விழுந்த தூசி கவிதை அதன் பின்னர் நடக்கும் நிகழ்வை மறைத்து கவிதை சொல்லுகிறது. அட போட வைக்கிறது
யாரோ உன் சாயலில் கவிதையில் காதல் மிதப்பில் இருக்கும் காதலனின் நிலையைப் படம் பிடிக்கிறது.
அழகு மிகுந்த குறும்பாக்கள்... எழுதியவருக்கு வாழ்த்துகள்.
thamilish இன் ஓட்டு பெட்டியை வைத்திருக்கலாமே அன்பு???
எனது ஓட்டு!!! உங்கள் நண்பருக்கு!!
// ஆதவா said...
thamilish இன் ஓட்டு பெட்டியை வைத்திருக்கலாமே அன்பு???
எனது ஓட்டு!!! உங்கள் நண்பருக்கு!!//
கவிதை பற்றிய கருத்துக்கு மிக்க நன்றி ஆதவா! முயற்சிக்கிறேன்!
கவிதை போட்டுள்ளேண் வரவும்
//தொடாமலே பேசிக்கொண்டிருக்கையில்
அவள் கண்ணில் விழுந்த தூசி
காற்றுக்கு நன்றி!//
ஆழம். உங்கள் நண்பர் அருமையாக எழுதியிருக்கிறார். நாதனுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்க.
மிக்க அன்புடன்
வருகை தந்து ரசித்து, கவிதை பற்றி கருத்தும் தந்தமைக்கு மிக்க நன்றி!
நல்ல ஹைக்கு...
//கவின் said...
நல்ல ஹைக்கு...//
கருத்துக்கு மிக்க நன்றி!
Post a Comment