Monday 23 February, 2009

அய்க்கூ அந்தாதி

அய்க்கூ அந்தாதி என்ற வகையில் இக்கவிதை.(அதாவது ஒரு அய்க்கூ கவிதையின் முடிவில் இருந்து மற்றொரு அய்க்கூ கவிதை தொடர்வது)

காகம் கரைந்தது
அழைப்பா தகவலா
விருந்தினர் வருகை
*************

விருந்தினர் வருகை
இருப்பு கொள்ளவில்லை
வறுமை

**********

வறுமையால்
ஆடைகுறைத்தால் சேரிப்பெண்
வசதிக்காக நடிகை
**********

நடிகையின் காதல்
கலைந்தது
ஒப்பனைப்போல்
********

ஒப்பனைப்போல் அல்ல
உண்மைதான்
அந்திச் சிவப்பு
**********

சிவப்பாகிப் போனது தேசம்
சோசலிச கொள்கை காரணமல்ல
வன்முறை
********

வன்முறையை போதிக்கிறதோ
அய்யனார் கையில்
அறுவாள்.

- ஜெ.அன்புமணி

44 comments:

தமிழ் said...

அருமை

வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

//திகழ்மிளிர் said...
அருமை

வாழ்த்துகள்//


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

தமிழ் said...

உழவனைப் பற்றி ஒரு சிறு கவிதை

தங்களின் கவிதையின் தொடர்ச்சியாகவும் இருக்கட்டுமே

அறுவாளை எடுத்தவனைக் கண்டால்
அலறும் உலகம்.இவனை
அடையாளம் கண்டுக் கொள்ளுவதில்லை.

குடந்தை அன்புமணி said...

//திகழ்மிளிர் said...
உழவனைப் பற்றி ஒரு சிறு கவிதை

தங்களின் கவிதையின் தொடர்ச்சியாகவும் இருக்கட்டுமே

அறுவாளை எடுத்தவனைக் கண்டால்
அலறும் உலகம்.இவனை
அடையாளம் கண்டுக் கொள்ளுவதில்லை.//


அறுவாள் எடுத்தவனை
அடையாளம் காணமறுக்கும் உலகம்
விவசாயி
சிறிது மாற்றியிருக்கிறேன். நன்றாக உள்ளதா?

தமிழ் said...

/அறுவாள் எடுத்தவனை
அடையாளம் காணமறுக்கும் உலகம்
விவசாயி
சிறிது மாற்றியிருக்கிறேன். நன்றாக உள்ளதா?/

நான் எதுகை மோனையில் எழுதினேன்.
தங்கள் அய்க்கூ வடிவில் மாற்றி உள்ளீர்கள்

ஆனால் மொத்தத்தில் ஒரு அழகான அய்க்கூ அடையாளம் காண பட்டுள்ளது அல்லது கவிதை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது

நன்றி நண்பரே

வாழ்த்துகள்

மீண்டும் ஒரு முறை

அன்புடன்
திகழ்

குடந்தை அன்புமணி said...

//திகழ்மிளிர் said...
நான் எதுகை மோனையில் எழுதினேன்.
தங்கள் அய்க்கூ வடிவில் மாற்றி உள்ளீர்கள்

ஆனால் மொத்தத்தில் ஒரு அழகான அய்க்கூ அடையாளம் காண பட்டுள்ளது அல்லது கவிதை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது

நன்றி நண்பரே//

ஒரு புதிய அய்க்கூவை தோன்றவைத்தமைக்கு உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி! நன்றி! நன்றி!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.. வித்தியாசமா இருக்கு.. இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த கவிதைகள்..

தமிழ் said...

அறுவாள் எடுத்தவனை
அடையாளம் காணமறுக்கும் உலகம்
உழவன்

இப்படி என்று இந்த அய்க்கூ வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது
அண்மையில் படித்த சி.கருணாகரசு அவர்களின் அய்க்கூ இதன் தொடர்ச்சியாக வருவதைக் கவனித்துப் பாருங்கள்

உழவன் கண்ணீரை
அழுதே துடைக்கிறது
வானம்


வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.. வித்தியாசமா இருக்கு.. இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த கவிதைகள்..//


நன்றி கார்த்திகைப்பாண்டி!

குடந்தை அன்புமணி said...

//திகழ்மிளிர் said...
அறுவாள் எடுத்தவனை
அடையாளம் காணமறுக்கும் உலகம்
உழவன்

இப்படி என்று இந்த அய்க்கூ வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது
அண்மையில் படித்த சி.கருணாகரசு அவர்களின் அய்க்கூ இதன் தொடர்ச்சியாக வருவதைக் கவனித்துப் பாருங்கள்

உழவன் கண்ணீரை
அழுதே துடைக்கிறது
வானம்


வாழ்த்துகள்//

இதையும் ஒருஅய்க்கூ தொடரா போட்டிடலாமா?

தேவன் மாயம் said...

அன்பு உங்களுக்கு வேலை கொடுத்து உள்ளேன்!!

குடந்தை அன்புமணி said...

//thevanmayam said...
அன்பு உங்களுக்கு வேலை கொடுத்து உள்ளேன்!!//


என்ன டாக்டரைய்யா?

Anonymous said...

அண்ணா கலக்கிட்டீங்க

Anonymous said...

அண்ணா கலக்கிட்டீங்க

Anonymous said...

இந்த கவிதை வடிவம் இப்ப தான் கேள்விபட்டிருகன்... நல்லா இருந்த்தது கவிதை ... வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

//கவின் said...
இந்த கவிதை வடிவம் இப்ப தான் கேள்விபட்டிருகன்... நல்லா இருந்த்தது கவிதை ... வாழ்த்துக்கள்//

வருகைக்கு மிக்க நன்றி!

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை அன்பு!
சிறப்பாகக் கோர்த்திருக்கிறீர்கள்!
வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...

//ஜோதிபாரதி said...
அருமை அன்பு!
சிறப்பாகக் கோர்த்திருக்கிறீர்கள்!
வாழ்த்துகள்!//

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

ஆதவா said...

மன்னிக்கவும் அன்பு./// உங்கள் பக்கம் நான் எட்டிப் பார்க்காமல் இருந்துவிட்டேன்.. (எப்படி விட்டுப் போச்சுன்னு தெரியலை!!)

ஆதவா said...

அந்தாதி ஒன்றை நான் ஆரம்பிக்கலாம் என்றூ நினைத்திருந்தேன்... நம் பதிவர்கள் பின்னூட்டத்தில் கவிதை தொடுப்பார்களா என்ற சந்தேகம் இருந்தமையால் யோசனையை தள்ளி வைத்துவிட்டேன்...

ஹைக்கூ!! தேன்பா, அல்லது குறும்பா... எனக்கு மிகவும் பிடித்த கவிதை படிமம்.. மூன்று அல்லது நான்கடிகள்.... ஆனால் கருவோ உரைத்ததைப் போன்று இருக்கும்...

உங்கள் தேன்பாக்கள் மிகவும் அருமையானவை

ஆதவா said...

காகம் கரைந்தது
அழைப்பா தகவலா
விருந்தினர் வருகை


நம்பிக்கைதான்..... எங்க வீட்டில் காகம்

நிறைய இருக்கின்றன... கரைகின்றன... யாரும் வருவதில்லை...

ஆதவா said...

விருந்தினர் வருகை
இருப்பு கொள்ளவில்லை
வறுமை


இதை நன்கு உணர்ந்த குடும்பத்திலிருந்து

வந்தவன் நான்..... அருமையான தேன்பா...


வறுமையால்
ஆடைகுறைத்தால் சேரிப்பெண்
வசதிக்காக நடிகை

எனது நண்பர், சிவா.ஜி அவர்கள்

எழுதிய
கிழிசல் எனும் கவிதை நினைவுக்கு வந்தது!!! என்றாலும் மூன்றே வரிகளில் அழகாக சுருக்கி எழுதியது

பாராட்டுக்குரியது

குடந்தை அன்புமணி said...

//ஆதவா said...
மன்னிக்கவும் அன்பு./// உங்கள் பக்கம் நான் எட்டிப் பார்க்காமல் இருந்துவிட்டேன்.. (எப்படி விட்டுப் போச்சுன்னு தெரியலை!!)//

பரவாயில்லை நண்பா! தங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

ஆதவா said...

நடிகையின் காதல்
கலைந்தது
ஒப்பனைப்போல்


வா......வ்/./// கலக்கல்....  நடிகையின்

வாழ்க்கையும் அப்படித்தான்....


ஒப்பனைப்போல் அல்ல
உண்மைதான்
அந்திச் சிவப்பு


நிச்சயமாக... ஆனால் ஒப்பனையோ என்றுகூட

தோன்றும்..


கீழ்வானம் ஒப்பனை செய்ததைப் போன்று சிவந்திருக்கும்.... அதிகாலை அல்லது சாயுங்காலம்....

சிறிது நேரத்தில் கலைந்துவிடுகிறதே



சிவப்பாகிப் போனது தேசம்
சோசலிச கொள்கை காரணமல்ல
வன்முறை


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

குடந்தை அன்புமணி said...

//ஆதவா said...
அந்தாதி ஒன்றை நான் ஆரம்பிக்கலாம் என்றூ நினைத்திருந்தேன்... நம் பதிவர்கள் பின்னூட்டத்தில் கவிதை தொடுப்பார்களா என்ற சந்தேகம் இருந்தமையால் யோசனையை தள்ளி வைத்துவிட்டேன்...

ஹைக்கூ!! தேன்பா, அல்லது குறும்பா... எனக்கு மிகவும் பிடித்த கவிதை படிமம்.. மூன்று அல்லது நான்கடிகள்.... ஆனால் கருவோ உரைத்ததைப் போன்று இருக்கும்...

உங்கள் தேன்பாக்கள் மிகவும் அருமையானவை//


முயற்சிகளை நாம் தொடர்ந்து செய்வோம். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். உடனே தொடங்குங்கள்!

ஆதவா said...

வன்முறையை போதிக்கிறதோ
அய்யனார் கையில்
அறுவாள்.


சில அய்யனார்கள் காதலும்

சொல்கின்றன..... (எனது அனுபவம்... அதை பிறிதொரு நாள் சொல்கிறேன்..)


அனைத்து தேன்பாக்களும் தேனைப்

போன்று இனிமையாக இருக்கின்றன... தொடருங்கள்// நீங்கள் ஏன் தமிழிஷ் வாக்குப் பெட்டியை வைத்திருக்கவில்லை??? நாங்க

ஓட்டு போடுவோம்ல....

குடந்தை அன்புமணி said...

//நீங்கள் ஏன் தமிழிஷ் வாக்குப் பெட்டியை வைத்திருக்கவில்லை??? நாங்க

ஓட்டு போடுவோம்ல.... //

எனக்கு அதற்கான வழிமுறைகள் (அங்கு சென்று வந்தபிறகும்) புலப்படவில்லை.

ச.முத்துவேல் said...

வாழ்த்துக்கள் அன்புமணி.

குடந்தை அன்புமணி said...

//ச.முத்துவேல் said...
வாழ்த்துக்கள் அன்புமணி.//


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

தேவன் மாயம் said...

அய்யா!
ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா?

தேவன் மாயம் said...

வந்து இருப்பமே உடனே!

தேவன் மாயம் said...

பயங்கர லேட்!
சாரி சாரி சாரி

தேவன் மாயம் said...

ஒப்பனைப்போல் அல்ல
உண்மைதான்
அந்திச் சிவப்பு //

நல்ல ரசனை

RAMYA said...

முதன் முறையாக அதுவும் பயங்கர லேட்!

மன்னிக்கவும்!!

RAMYA said...

பத்தி பத்தியாக அருமையாக
எழுதி இருக்கின்றீர்கள் அன்புமணி
வாழ்த்துக்கள்!!!

குடந்தை அன்புமணி said...

//thevanmayam said...
அய்யா!
ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா?

வந்து இருப்பமே உடனே!
பயங்கர லேட்!
சாரி சாரி சாரி//

லேட்டாக வந்தாலும் தங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ! இனிமேல் சொல்லிடுறேன்.

குடந்தை அன்புமணி said...

//RAMYA said...
முதன் முறையாக அதுவும் பயங்கர லேட்!

மன்னிக்கவும்!!
பத்தி பத்தியாக அருமையாக
எழுதி இருக்கின்றீர்கள் அன்புமணி
வாழ்த்துக்கள்!!!//

முதன்முறையாக எனது வலைத்தளத்திற்கு வருகை தந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி !

கவி அழகன் said...

கொள்ளுவதில்லை
மிருகங்கள் தங்கள் வர்கத்தை
மனிதனை தவிர

இலங்கையிலிருந்து

கவி அழகன் said...

இலங்கையிலிருந்து

நட்புடன் ஜமால் said...

தொடர் ஹைக்கூக்கள்

அத்தனையும் அருமை.

குடந்தை அன்புமணி said...

Kavi kilavan, நட்புடன் ஜமால் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி !

butterfly Surya said...

அருமை. வாழ்த்துகள்

வாழ்த்துகள் அன்புமணி.

அன்புமணி அமர்க்களம்

அமர்களமான கவிதைகள்

{{இது அய்கூ அல்ல}}

akil said...

வானம் நனைத்தது மண்ணை..
எம் மனத்தை
உம் கவிதை...
பாராட்டுக்கள்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...