Sunday, 5 April 2009

வலைப்பதிவர் சந்திப்பும், ஆதங்கமும்.

திட்டமி்ட்டபடி சென்னை மெரீனா கடற்கரையில், காந்திசிலை கீழே இடவசதியில்லாததால் (காந்தியை மொக்கை போட்டு கொடுமை படுத்தாதீ்ங்க/ நிலாவும் அம்மாவும் சொன்னதை படித்திருப்பார்களோ என்னவோ) சற்றுத்தள்ளி, உள்ளே மணலில் வட்டமாக அமர்ந்தோம். எண்ணிக்கை வரவர கூடிக்கொண்டே போவதால் சற்று பெரிய வட்டமாக போயிற்று.
முதலில் பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். இதுவரை பதிவுகளின் மூலமே அறிமுகமான பல பதிவர்கள் நிலவினை கண்டு மலர்ந்த அல்லியென ஆனார்கள்.
எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை, அவரவர்கள் சொல்ல நினைப்பதை சொல்லலாம் என்று ஒருவர் சொல்ல, வாசகர்கள் தங்களுக்கு பதிவிடும்போது ஏற்படும் சந்தேகங்களைப் பற்றி கேட்கலாம் ஆரம்பித்து வைத்தார்கள்.
பதிவர் ஒருவர் தனது பதிவுகளை திருடி ஒரு தமிழில் வெளிவரும் கம்யூட்டர் புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள் எந்த அனுமதியின்றி என்று வருத்தப்பட்டார். அதற்கு பலரும் ஆலேசனை செய்து அவர்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பலாம் என்பது தீர்வாக சொல்லப்பட்டது.
ஒரு பதிவர் எனது பதிவுகளை யாரேனும் திருடி பத்திரிகையில் போட்டால் அவர்களுக்கு நான் ஐம்பது ரூபாய் கொடுப்பேன் என்று கமெண்ட் அடித்தார். மற்றொருவர் இதற்குத்ததான் தொழில் நுட்ப விசயங்களையெல்லாம் பதிவாக போடக்கூடாது என்று (சும்மா லுலாய்க்கு)கமெண்ட் அடித்தார் ஒருவர்.
ஆர்எஸ்எஸ் பற்றி ஒருவர் சொல்ல, வலையிலும் ஆர்.எஸ்.எஸ் - ஆ! என்று டைமிங்க ஜோக் அடித்தார் ஒருவர்.
பதிவர்களில் பெரும்பாலோர் அலுவலக கணிணியையே உபயோகி்ன்றனர். அதனல் சனி,ஞாயிறுகளில் பலர் வலைத்திற்கு வருவதில்லை. எனவே அன்று பதிவிடுவது வீண் என்றும் கருத்து கூறப்பட்டது.
நம் வலைக்குத்தான் வந்து படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல் வலைப்பதிவுகளை Site Feed- ல் Blog Posts Feed- ல் full - என்று கொடுங்கள். அதன் மூலம் நம் பதிவுகளை முழுமையாக படிக்க கொடுக்கலாம் என்றார்.
ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று பேச்சு எழுந்தது. சிலர் தமிழ் பதிவுகளை கூகுள் ஏற்றுக் கொள்வதில்லையே என்று கேட்டபோது, Monetize - ல் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் விளம்பரம் கிடைக்கும் என்றனர்.நான் அவ்வாறு சம்பாதிக்கிறேன் என்றார் லக்கிலுக்.
வலைப்பதிவர் பட்டறை இப்பொழுதெல்லாம் நடத்தப்படுவதில்லையே என்று ஒருவர் வினவினார்.
(வலைப்பதிவர் பட்டறை என்பது பழைய பதிவர்கள் ஒன்றிணைந்து பல வலைத்தளத்தைப் பற்றி அறிமுகமில்லாத நபர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களையும் பதிவராக மாற்றிவிடும் ஒரு பட்டறை. இந்த மாதிரி நடந்த ஒரு பட்டறையின் மூலம்தான் நானும் பதிவராக மாறினேன்.)
முன்பு பட்டறை நடத்திய நண்பர்கள் பெரும்பாலும் இங்கு இல்லை. ஆர்வமிருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மீண்டும் நடத்தலாம் என்று கருத்து கூறப்பட்டது.
அடுத்தமுறை வெட்டவெளியில் சந்திப்பு நடத்தாமல், அரங்கினுள் நடத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. காரணம் முன்பு பத்து பதிவர்கள் மட்டும் சந்தித்தனராம். இப்போது முப்பதுக்கும் மேற்பட்ட பதிவர்கள் வந்திருந்தபடியால், பொது இடமாதலால் சிலர் பேசுவது கேட்கவில்லை.அல்லது கவனிக்க முடியவில்லை.
(கோடைக்காலம்... விடுமுறையை அனுபவிக்க மக்கள் கலர் கலராக குவிந்திருந்தனர்.அதனால் கவனமும் சிதறியது.)
இரண்டு மணிநேரம் போதவில்லை என்பதே பலரின் ஆதங்கமாக இருந்தது.

பதிவர் சந்திப்பு படங்களுக்கு இங்கே செல்லவும். http://aganaazhigai.blogspot.com/2009/04/5409.html

29 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஒரு பதிவர் எனது பதிவுகளை யாரேனும் திருடி பத்திரிகையில் போட்டால் அவர்களுக்கு நான் ஐம்பது ரூபாய் கொடுப்பேன் என்று கமெண்ட் அடித்தார்.\\

ஹா ஹா ஹா

லோகு said...

சுண்டல் சாப்டீங்களா

குடந்தை அன்புமணி said...

//லோகு said...
சுண்டல் சாப்டீங்களா//


நீங்க வராததால, நான் வேண்டாம்னு சொல்லி்ட்டு டீ மட்டும் சாப்பிட்டோம்!

narsim said...

நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்

Unknown said...

கட்டுரை நல்லா இருக்கு.

Raju said...

\\அதனல் சனி,ஞாயிறுகளில் பலர் வலைத்திற்கு வருவதில்லை. எனவே அன்று பதிவிடுவது வீண் என்றும் கருத்து கூறப்பட்டது.\\
நம்மள சரியா கணிச்சுருக்காங்கப்பா...!
எங்களுக்கு தெரியப் படுத்தியதற்கு நன்றிண்ணே...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சந்திப்பாக இருக்கின்றது பாராட்டுகள்

லக்கிலுக் said...

க்ரிஸ்பா இருக்கு இந்தப் பதிவு!

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள் அன்பு.

மிக்க நன்றி.

அகநாழிகை said...

நல்ல பதிவு அன்புமணி.

Suresh said...

அருமை தலைவா நேரிலே பார்த்தது போல் ஒரு உணர்வு

சென்ஷி said...

//\\ஒரு பதிவர் எனது பதிவுகளை யாரேனும் திருடி பத்திரிகையில் போட்டால் அவர்களுக்கு நான் ஐம்பது ரூபாய் கொடுப்பேன் என்று கமெண்ட் அடித்தார்.\\//

:-))

Suresh said...

திரும்ப வாங்க :-) வோட்ட போடுங்க :-) தமிழ்மண்த்தில்

Suresh said...

மச்சான் நீ ரொம்ப நல்லவன் :-)

ஆதவா said...

நல்லா இருக்குங்க.. வராத எங்களுக்கு ஒரு ஆறுதல்!!!

பதிவர் சந்திப்பு இதுவரை கார்த்திகைப் பாண்டியரோடும், சொல்லரசரோடும் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது!! இனிமே இந்தமாதிரி பழைய பதிவர்களையும் சந்திக்க வேண்டும்!!!

நீங்க அங்க போயிருக்கீங்கன்னு நம்பவேயில்லை!!! என்னவோ தெரியலை!!!

ச.முத்துவேல் said...

ஓ! இவ்வளோ விஷயம் நடந்ததா? தண்டத்துக்கு நான் அங்க உக்காந்த்துட்டிருந்திருக்கேன்.
/(கோடைக்காலம்... விடுமுறையை அனுபவிக்க மக்கள் கலர் கலராக குவிந்திருந்தனர்.அதனால் கவனமும் சிதறியது.)
ஒருவேளை இதுதான் காரணமா?ச்சேசே. நான் ரொம்..ப நல்லவன்.
பரவாயில்ல. அங்க கோட்டைவிட்டதை இங்கப் பு(ப)டிச்சுட்டேன். நன்றி, அன்புமணி.

Anonymous said...

வலையிலும் ஆர்.எஸ்.எஸ்.... நல்ல டைமிங் ஜோக்தான்! ரசித்தேன்!

நல்ல பகிர்வு நண்பரே!

ஆ.சுதா said...

பதிவர் சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அன்புமணி.

நசரேயன் said...

நல்ல வர்ணனை

குடுகுடுப்பை said...

நான் இதுவரை ஒரு படுவரௌயும் பாத்ததில்லை

மணிஜி said...

வருகைக்கு நன்றி.தொடர்ந்து உரையாடுவோம்...93400 89989

Anonymous said...

கலக்கல் பதிவு!

சத்தியமூர்த்தி said...

//ஒரு பதிவர் எனது பதிவுகளை யாரேனும் திருடி பத்திரிகையில் போட்டால் அவர்களுக்கு நான் ஐம்பது ரூபாய் கொடுப்பேன் என்று கமெண்ட் அடித்தார்.//

அடியே கொல்லுதே, ஐடியா அள்ளுதே. உடனே தினமலர் ஆபிஸுக்கு போய் ஒரு வரி விளம்பரம் கொடுக்கணும்.

\\அதனல் சனி,ஞாயிறுகளில் பலர் வலைத்திற்கு வருவதில்லை. எனவே அன்று பதிவிடுவது வீண் என்றும் கருத்து கூறப்பட்டது.\\

முக்காவாசி பேரு ஆபிஸ்லருந்துதான் படிக்கறாய்ங்க! அதான் காரணம். அப்போ சனிக்கிழமை டிராபிக் இல்லாம இருக்கறதுல நான் தனி ஆளு இல்ல. எல்லார் கண்ணும்தான் நொள்ளயா? இப்பதான் தமிழனுக்கே உரிய சந்தோஷம் வருது ;)

****
இத்த படிங்க

Arasi Raj said...

நல்லா இருக்கு அன்பு...

முகம் தெரியாத நண்பர்களை நேர்ல பார்க்கும் போது இனம் புரியாத சந்தோசம் இல்லியா

காந்தியை காப்பாத்தினதுக்கு நன்றி ...

எப்டி எல்லாரும் பேச பேச நீங்க ஒரு நோட்டுல குறிப்பு எடுத்தேங்கள... இப்படி புல்லட் போட்டு வரிசைப் படுத்தியிருக்கீங்க

குடந்தை அன்புமணி said...

//நிலாவும் அம்மாவும் said...
நல்லா இருக்கு அன்பு...

முகம் தெரியாத நண்பர்களை நேர்ல பார்க்கும் போது இனம் புரியாத சந்தோசம் இல்லியா

காந்தியை காப்பாத்தினதுக்கு நன்றி ...

எப்டி எல்லாரும் பேச பேச நீங்க ஒரு நோட்டுல குறிப்பு எடுத்தேங்கள... இப்படி புல்லட் போட்டு வரிசைப் படுத்தியிருக்கீங்க//

அப்படியெல்லாம் இல்லை. வீட்டிற்கு வந்ததும், நடந்தை நினைத்துப் பார்த்தால் எல்லாம் தன்னால ஞாபகத்திற்கு வரும். நான் தவறவிட்ட சிலவற்றை நண்பர் கூல்கார்த்தி பதிவா எழுதியிருக்கார்.

ராஜன் said...

//இரண்டு மணிநேரம் போதவில்லை என்பதே பலரின் ஆதங்கமாக இருந்தது//

பதிவர் சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

Cable சங்கர் said...

நல்லா கவர் பண்ணியிருக்கீஙக்.. குடந்தை அன்புமணி நானும் உங்க ஊர்காரந்தான்.

குடந்தை அன்புமணி said...

//Cable Sankar said...
நல்லா கவர் பண்ணியிருக்கீஙக்.. குடந்தை அன்புமணி நானும் உங்க ஊர்காரந்தான்.//

அடடா! இத்தனை நாள் தெரியாமப்போச்சே! நேரில் இரண்டு மூன்று முறை பார்த்தும் பேசிக்கொள்ளவில்லை. இனி தவறவிடமாட்டேன்! நிச்சயம் சந்திப்போம்! தொடர்பு கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோடைக்காலம்... விடுமுறையை அனுபவிக்க மக்கள் கலர் கலராக குவிந்திருந்தனர்.அதனால் கவனமும் சிதறியது

:)-

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...