Thursday 9 April, 2009

உங்களுக்காக...

சாப்ட்வேர் இன்ஜினியர் படம் எடுத்தால் என்ன பேர் வைப்பார்?
ஜி மெயில் சன்ஆப் இமெயில்
ரேம் தேடிய மதர்போர்டு
7GB
எனக்கு 20 MB உனக்கு 18 MB
சொல்ல மறந்த பாஸ்வேர்டு
எங்கோ ஒரு புரோகிராமர்
ஒரு மவுஸ்-ன் கதை
மானிட்டருக்குள் மழை
புதுக்கோட்டையிலிருந்து ஒரு பென்டியம் 4
காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க!
Hard disk-க்கு மரியாதை
எல்லாம் processor செயல்

எரிந்துபோன சிகெரட் சாம்பல் சொன்னது...
இன்று நான், நாளை நீ!

இதை தவிருங்கள், ஆபத்தானவை என்று யு.எஸ்.ஏ. அறிவித்திருக்கிறதாம்!
1. D'cold
2. vicksaction 500
3. Actifed
4. Coldarin
5. Cosome
6. Nise
7. Nimulid
8. Cetrizet-D
-they contain PPA(Phenyl Propanol Amide). Causes Stroke.
தகவல் : செம்முரசு குருஞ்செய்தி இதழ்... தொடர்புக்கு - 9894899510

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று போதிக்கும் பள்ளிகளின் பெயர்களை பாருங்கள்...(எனக்குத் தெரிந்த இரண்டு பள்ளிகளின் பெயர்கள் மட்டும் இங்கே)
கோபாலய்யர் தொடக்கப்பள்ளி, கோபாலபுரம், சென்னை.
ராமசாமிமுதலியார் உயர்நிலை பள்ளி, அம்பத்தூர், சென்னை.

பள்ளியைப் பற்றி சொன்னதால் அது தொடர்புடைய நணபர் ஒருவரின் கவிதை...
கிராமத்து மாணவன்
இறுதியாண்டு படிப்பு
ஐந்தாம்வகுப்பு
- நாணற்காடன்,
செல்- 9942714307

எனக்கு எஸ்.எம்.எஸ். வந்ததிலிருந்து...

கன்னிக்கோயில் ராஜா. இவர் என் நண்பர், கவிஞர்.பல அய்க்கூ தொகுப்பு நூல்களையும் வெளியி்ட்டிருக்கிறார்.'பொதிகை மின்னல்' சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார்.
இவர் தினந்தோறும் தன் கைப்பேசி (செல்போன்) மூலம் தினசரி 300 -க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் அய்க்கூ அனுப்புகிறார். சனிக்கிழமைதோறும் மகளிர் அய்க்கூக்களை மட்டும் அனுப்புகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளின் செய்திகளை (தாங்கள் அனுப்பினால் அதை) அனைவருக்கும் அனுப்பி வைக்கிறார். இதை விளையாட்டடாக செய்யப்போக இன்று ஏகப்பட்ட நண்பர்களை பெற்றிருக்கிறார். தொடர்ந்து 1500 நாட்களைத் தாண்டி இந்தச் சேவையை இலவசமாக செய்துவருகிறார். அவருக்கு நீங்களும் அய்க்கூ அனுப்பலாம், வாழ்த்து தெரிவிக்கலாம்.
அவரின் முகவரி:
கன்னிக்கோயில் ராஜா,
30/8, கன்னிக்கோயில் முதல்தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 18
9841236965

14 comments:

Raju said...

நான் படித்த பள்ளியின் பெயர் கூட "பாண்டிய குல சத்திரிய நாடார்கள் மேல் நிலைப் பள்ளி" தான்..
என்ன கொடுமை?

வாழ்த்துக்கள் ..க.கோ.ராஜா.

Anonymous said...

பட பெயருகள் எல்லாம் கலக்கல்!

இராகவன் நைஜிரியா said...

என்னே ஒரு அருமையான கற்பனை அன்பு.

வாழ்க, வாழ்க.

ஆதவா said...

சாப்ட்வேர் இன்ஜினியர் படம் எடுப்பது பழைய SMS...

சிகரெட் சொல்லும் செய்தி சிந்திக்க வைக்கும்!!!

ஜாதிகள் இல்லை என்று சொல்லும் பள்ளிகள் ஜாதி இல்லாமல் குழந்தைகளை சேர்ப்பதில்லை.. சில குறிப்பிட்ட மதங்களுக்கென்று தனி பள்ளியே உண்டு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை நல்லா இருந்தது.

பள்ளிகளின் விஷயத்தில் திரு. ஆதவா சொன்னதை வழிமொழிகிறேன்.

க.கோ. ராஜா - அய்க்கூ ஆச்சரியம்

ஆ.சுதா said...

சாப்ட்வேர் இன்ஜினியர் படம் எடுத்தால் என்ன பேர் வைப்பார்?

இதை முன்பே எஸ்.எம்.எஸ் இல்
படித்திருக்கின்றேன்.
-=-

ஒருவரின் கவிதை...
கிராமத்து மாணவன்
இறுதியாண்டு படிப்பு
ஐந்தாம்வகுப்பு

இக்கவிதை எனக்கு பொருந்தும்.
-=-

எரிந்துபோன சிகெரட் சாம்பல் சொன்னது...
இன்று நான், நாளை நீ!

கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு என்பார்கள். காசி ஆனந்தனின் நறுக்குகள் போல் இதுவும் நறுக் என்று உள்ளது.

அந்த நல்ல மனசுகாரரை எல்லோரும் பாராட்டனும்.

வேத்தியன் said...

சாஃப்ட்வேர் என்ஜினியர் வைக்கும் படப் பெயர்கள் கலக்கல்...
சூப்பர்...

பீர் | Peer said...

//சாப்ட்வேர் இன்ஜினியர் ...// சிலவை முன்னமே படித்திருந்தாலும், அனைத்தும் அருமை.

ஆ.சுதா said...

புத்தாண்டு வாழ்த்துகள் அனபுமணி சார்.

Arasi Raj said...

சரி தானுங்க...அந்த காலத்துல நம்ம தாத்தாக்களை எல்லாம் ஜாதி பேரை சொல்லி பலக்கிட்டாங்க ....அவங்க ஆரம்பிச்ச பள்ளிகளுக்கும் அப்படியே பேர் வந்துடுச்சு...

அதெல்லாம் விடுங்க....பள்ளியில் சேர முதல் தகுதி ஜாதி சான்றிதழ் தானே ?

ஜாதிங்குறது நம்ம சமூகத்தை விட்டு போகனும்னா பூமி ஒரு தடவை அழிஞ்சு தோன்றனும் ...

மணிஜி said...

யோவ்..நீ என்ன ஜாதிய்யா?அது தெரியாதுங்க..ஆனா எனக்கு ரெண்டு பொஞ்சாதீங்க

பழமைபேசி said...

கற்பனைத் திலகம்!

kuma36 said...

//எரிந்துபோன சிகெரட் சாம்பல் சொன்னது...
இன்று நான், நாளை நீ!///

சூப்பரான மெசேஜ்!

படம் பெயர்கள் கலக்கல்.

Anonymous said...

anbuvanam.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading anbuvanam.blogspot.com every day.
same day loans
payday loans in canada

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...