Monday, 11 May, 2009

சிற்றிதழ் ஆசிரியராக நான்...

பள்ளிப்பருவத்திலேயே கையெழுத்து பத்திரிக்கை நடத்தியவர்களைப் பற்றி என் தமி்ழ் வாத்தியார் பாடம் நடத்தினார். அதில் எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, அதை எனது நண்பனிடம் சொல்ல, அவனும் உதவி செய்வதாக சொல்ல, 'நந்தவனம்' என்று பெயர் சூட்டி கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பித்தாயிற்று.
முதலில் பத்து பிரதிகள் போட்டோம். படித்தவர்கள் 'அட, இந்த சின்னப்பசங்களும் நல்லா எழுதறாங்க' என்று சொல்ல, அடுத்த பிரதி கையிருப்பைக் கொண்டும், கடன் வாங்கியும் அச்சில் செளியிடுவது என்று முடிவாயிற்று.
நண்பனின் அம்மா வட்டிக்கு பணம் தருவார்கள். பத்திரிகையில் விளம்பரம் போட்டு அதில் வரும் பணத்தை எடுத்து திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற
அசட்டுத் துணிச்சலில் அவர்களிடம் பணம் வாங்கிவி்ட்டேன்.

நானும் என் நண்பனும் விளம்பரத்திற்காக அலைந்த போதுதான் விளம்பரம் வாங்குவதன் அருமை தெரிந்தது. எல்லோரும் நம்மை பார்த்த விதமே ஒரு மாதிரியாக இருந்தது. சிலர் விளம்பரத் தொகை அதிகம் என்று பேரம் பேசினார்கள். ஒருவழியாக சில விளம்பரங்களுடன் 100 புத்தகம் போட்டு வெளியிட்டோம்.

கடைகளில் கெஞ்சிக்கேட்டு விற்பனைக்கு கொடுத்தோம். அதில் சில பிரதிகளும் விற்பனை ஆனது. ஆர்வமுள்ள சிலருக்கு புத்தகங்கள் இலவசமாக கொடுத்தோம். அந்தப்புத்தகங்கள் கைமாறி கைமாறி பலரையும் சென்றடைந்தது.

தினமும் பள்ளிவி்ட்டதும் எனது நண்பனை அழைத்துக்கொண்டு விளம்பரம் வாங்க கடைத்தெருவிற்கு செல்வோம். வழக்கம்போல என் நண்பனை அழைக்க, அவனின் அம்மா அனுப்ப மறுத்துவி்ட்டார்கள். நான் தனியே நடத்துவது என்று முன்னிலும் ஆர்வமானேன்.

நண்பரொருவர் ஒரு முகவரியை என்னிடம் கொடுத்து, 'இவர் பத்திரிகையில் ஆர்வமுள்ளவர். இவரைப்போய் பார்த்தால் உனக்கு உதவி செய்வார்' என்று கூற, ஆரவமுடன் நானும் அந்த(வலங்கைமான்) முகவரிக்கு சென்றேன். அந்த நண்பர் கடைத்தெருவில் பெரிய மளிகைகடை வைத்திருந்தார். 'சரி, இவரிடம் ஒரு விளம்பரமும் வாங்கிவிடவேண்டியதுதான்' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு என்னைப்பற்றி அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

நான்கொடுத்த புத்தகங்களை வாங்கி வைத்துவி்ட்டு(புரட்டிப்பார்கக்கூட இல்லை) ஒரு துண்டு காகிதம் எடுத்து ஏதோ எழுதினார். பின்பு என்னிடம் கொடுத்தார். அதில்...
நந்தவனத்திற்கு ஓய்வளிக்கவும்...
* உழைப்பு விரயம்
* கால விரயம்
* பணம் விரயம்
இப்படிக்கு ....
என்று கையழுத்திட்டிருந்தார்.
எனக்குள் பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.
அந்த வாசகங்களை இன்றும் மறக்காமல் இருக்கிறேன் என்றால்... அந்த வாசகங்கள் உண்மைதான் என்று அர்த்தம்!

18 comments:

thevanmayam said...

பள்ளிப்பருவத்திலேயே கையெழுத்து பத்திரிக்கை நடத்தியவர்களைப் பற்றி என் தமி்ழ் வாத்தியார் பாடம் நடத்தினார். அதில் எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, அதை எனது நண்பனிடம் சொல்ல, அவனும் உதவி செய்வதாக சொல்ல, 'நந்தவனம்' என்று பெயர் சூட்டி கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பித்தாயிற்று.///

அடடே!! பள்ளிப் பருவத்திலேயா?

thevanmayam said...

நானும் என் நண்பனும் விளம்பரத்திற்காக அலைந்த போதுதான் விளம்பரம் வாங்குவதன் அருமை தெரிந்தது. எல்லோரும் நம்மை பார்த்த விதமே ஒரு மாதிரியாக இருந்தது. சிலர் விளம்பரத் தொகை அதிகம் என்று பேரம் பேசினார்கள். ஒருவழியாக சில விளம்பரங்களுடன் 100 புத்தகம் போட்டு வெளியிட்டோம்.
///
நம்மாளுங்க பணத்தை வெளியே உடமாட்டானுங்கோ!!!

thevanmayam said...

நான்கொடுத்த புத்தகங்களை வாங்கி வைத்துவி்ட்டு(புரட்டிப்பார்கக்கூட இல்லை) ஒரு துண்டு காகிதம் எடுத்து ஏதோ எழுதினார். பின்பு என்னிடம் கொடுத்தார். அதில்...
நந்தவனத்திற்கு ஓய்வளிக்கவும்...
* உழைப்பு விரயம்
* கால விரயம்
* பணம் விரயம்
இப்படிக்கு ....
என்று கையழுத்திட்டிருந்தார்.
எனக்குள் பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.///

3 அருமையான வாசகங்கள்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம்தானே நண்பா..

ஆ.முத்துராமலிங்கம் said...

பள்ளிப் பருவத்திளே நல்ல முயற்சிக் கொண்டு அனுபவம் வாங்கியிருக்கீங்க.
எல்லாமே அனுபவம் கற்று தந்து விடும்.

" உழவன் " " Uzhavan " said...

பரவாயில்லை நண்பரே.. இன்னொரு இதழுக்கு ஆசியராகும் வாய்ப்பு வராமலா போகும்...

அ.மு.செய்யது said...

இந்த பதிவிலிருந்து கையெழுத்து பத்திரிக்கை குறித்த நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

//* உழைப்பு விரயம்
* கால விரயம்
* பணம் விரயம்
இப்படிக்கு ....
என்று கையழுத்திட்டிருந்தார்.
//

சில நேரங்களில் நம்மை ஒருவர் இம்மாதிரி இகழும் போது தான் ஒரு புதிய உத்வேகம் ஏற்படும்.

குடந்தைஅன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம்தானே நண்பா...//

உண்மைதான் நண்பா! அந்த அனுபவந்தான் பிற்பாடு பலவிதங்களில் உதவி செய்தது. பல நண்பர்களை எனக்கு தந்தது.

குடந்தைஅன்புமணி said...

//சில நேரங்களில் நம்மை ஒருவர் இம்மாதிரி இகழும் போது தான் ஒரு புதிய உத்வேகம் ஏற்படும்.//

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் குடும்ப சூழ்நிலையும் அனுசரித்துப்போக வேண்டியிருப்பதால், நாம் நிர்ணயித்த லட்சியங்களில் பின்வாங்க வேண்டியிருக்கிறது. நம் கை நமக்கு உதவி என்று வரும்போது நமது லட்சியங்களை தொடரலாம் என்றே ஒத்திவைக்க நேர்கிறது.

குடந்தைஅன்புமணி said...

தேவா,முத்துராமலி்ங்கம், உழவன் ஆகியோரின் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி!

நசரேயன் said...

ம்ம்.. நல்ல அனுபவம் தான்

ஆதவா said...

நானும் இப்படியொன்று செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நண்பர்கள் உடன் சேரவில்லை. பணமும் அவ்வளவாக இல்லை!!!

உங்கள் அனுபவம் பிற்காலத்தில் கைகொடுக்கும்!!!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வித்யாசமான மனிதர்
வித்யாசமான அனுபவம்

சொல்லரசன் said...

//* உழைப்பு விரயம்
* கால விரயம்
* பணம் விரயம்//

முயற்சியை கைவிடாதீர்கள்.உழைப்பு உண்மையாகும்,காலம் கூடிவரும்,பணம் தேடிவரும் முயற்சியிருந்தால் மட்டுமே.

குடந்தைஅன்புமணி said...

// சொல்லரசன் said...
//* உழைப்பு விரயம்
* கால விரயம்
* பணம் விரயம்//

முயற்சியை கைவிடாதீர்கள்.உழைப்பு உண்மையாகும்,காலம் கூடிவரும்,பணம் தேடிவரும் முயற்சியிருந்தால் மட்டுமே.//

முதன் முதலாக வருகை தந்திருக்கும் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்! அடிக்கடி வாங்க!

Anonymous said...

நெஞ்சில் இன்னும் அந்த தாகம் உண்டா? அந்த வரிகளை ஒரு பாடமாக கொண்டீர்களா? சில தாகங்கள் தணிவதில்லை தீரும்வரை...

குடந்தைஅன்புமணி said...

பத்திரிகைதுறையின்மீது இன்னும் அந்த தாகம் இருக்கு தமிழரசி...

நட்புடன் ஜமால் said...

சில தோல்விகளே வெற்றி முதல் படி

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...