
பள்ளி கோடை விடுமுறை தினங்களில் சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு செல்வது வாடிக்கையான விசயங்கள்தான். அப்படி நான் சென்றது, திருச்சேறையில் உள்ள மாமாவின் வீட்டிற்கு. திருச்சேறை என்பது கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் திருவாரூர் சாலையில் உள்ள கிராமம். என் மாமாவிற்கு விவசாயம்தான் தொழில்.விவசாய வயல்களுக்கு நடுவே ஒரு தோப்பும் உண்டு. அதில் வாழை, சவுக்கு, கீரை என்று பயிரி்ட்டிருப்பார்கள். அந்த தோப்புக்கு அருகிலேயே பனைமரங்கள் இருக்கும். அந்த பனை மரங்களுக்கு கீழே முனீஸ்வரர் சிலை வைத்து கும்பிட்டு வருகிறார்கள். எனக்கு பனநொங்கு நிறைய பறித்து தருவார்கள். கோடைக்கு இதமாக இருக்கும். அதோடு அந்த பனைங்காய்களை சக்கரமாக வைத்து வண்டிகள் செய்து விளையாடுவோம். மதிய நேரங்களில் முனீஸ்வரர் உலவுவார் என்று எனக்கு சொல்லியிருந்தார்கள். சிறுபிள்ளையாதலால் எனக்கு பயமாக இருக்கும். மதியம் வயலில் வேலை செய்து வந்த மாமாவை சாப்பிட கூப்பிட்டு வரச்சொல்லி என்னிடம் சொன்னார்கள். நானும் வயலுக்கு சென்றபோது சரசரவென்று சத்தம் கேட்டது. முனீஸ்வரர்தான் வருகிறாரோ என்று பயத்தில் அலறிக்கொண்டு வீட்டிற்கு ஓடிவந்துவிட்டேன். சற்றுநேரத்தி்ல் எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. என்ன ஆச்சு? என்று மாமா கேட்டார். வயலிற்கு வரும்போது சரசரவென்று சத்தம் கேட்டது. பயந்துவிட்டேன் என்றேன்.
பனைமரத்து மட்டைகள் ஒன்றோடொன்று உரசியிருக்கும். அந்த சத்தத்தைக்கேட்டு பயந்திட்டியா என்று சிரி்ததார்கள். எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்வி்ட்டது.
பனைமரம் ஒன்றில் ஓணான் கொடி ஒன்று படர ஆரம்பித்தது. சில மாதங்களில் மரம் முழுவதும் படர்நதுவி்ட்டது. ஆணவமாக அந்த ஓணான் கொடி சொன்னதாம் பனைமரத்திடம்..." நானும் இந்த சில மாதங்களாக பார்க்கிறேன். வளராமல் அப்படியே இருக்கிறாயே? நீ சுத்தவேஸ்ட்!"
அதற்கு அந்த பனைமரம் சொன்னதாம்: " இப்படி சொன்னது பதினொராயிரமாவது செடி நீ ."
இது எப்படி இருக்கு!
இதே திருச்சேறையில் கூட்டு புளியாமரம் என்று சொல்லக்கூடிய இடம் ஒன்று உள்ளது. சாலையோரங்களில் ஒரே இடத்தில் நிறைய புளியமரங்கள் இருக்கும் இடத்திற்கு அப்பெயர். அப்போதெல்லாம் வெளியூர்களிலிருந்து கும்பகோணத்திற்கு பலசரக்கு வாங்குவதற்காக மாட்டு வண்டிகள் கட்டிக்கொண்டு வருவார்கள். அப்படி வருபவர்கள் அந்த கூட்டு புளியந்தோப்பில் ஓய்வு எடுப்பது வழக்கம். அப்படித்தான் இரவு வேளையில் ஒரு மாட்டு வண்டிக்காரர், வண்டியை நிறுத்திவி்ட்டு, மாடுகளை வண்டியின் சக்கரத்தில் கட்டி, வைக்கோலை அதற்கு போட்டுவிட்டு, வண்டியில் ஏறி துண்டைவிரித்து போட்டு மல்லாக்க படுத்திருக்கிறார். அவரின் தலைக்கு நேர் மேலே தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சடலத்தை அப்போதுதான் கவனித்திருக்கிறார். எப்படி இருந்திருக்கும் அவருக்கு? விழுந்தடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தவருக்கு சில மணிநேரங்களுக்கு பேச்சே வரவில்லை.
திருச்சேறையில் உள்ள சிவன் கோயில் கடன் நிவர்த்தி ஸ்தலம் என்றழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்திற்கு தொடர்ந்து 11 வாரங்கள் தி்ங்கட்கிழமை பூஜை செய்து வந்தால் கடன் தொல்லைகள் தீரும் என்று சமீபகாலமாக பெரும் பரபரப்பு அடைந்து வருகிறது. பாழடைந்து போன இத்திருத்தலம் இப்போது சீரும் சிறப்புமாக இருக்கிறது. இங்கு பெரிய கோயிலாக சாரநாத பெருமாள் கோயிலும் உள்ளது. இதே திருச்சேறையில் நடைபெறும் செடல் திருவிழாவும் மிகவும் பிரபலம்.
இன்னும் எங்கள் ஊரைப்பற்றி சமயம் வாய்க்கும்போது எழுதுகிறேன்.
25 comments:
\\அந்த பனைங்காய்களை சக்கரமாக வைத்து வண்டிகள் செய்து விளையாடுவோம்\\
அந்த நாட்களுக்கு இழுத்து சென்று விட்டன.
\\பனைமரம் ஒன்றில் ஓணான் கொடி ஒன்று படர ஆரம்பித்தது. சில மாதங்களில் மரம் முழுவதும் படர்நதுவி்ட்டது. ஆணவமாக அந்த ஓணான் கொடி சொன்னதாம் பனைமரத்திடம்..." நானும் இந்த சில மாதங்களாக பார்க்கிறேன். வளராமல் அப்படியே இருக்கிறாயே? நீ சுத்தவேஸ்ட்!"
அதற்கு அந்த பனைமரம் சொன்னதாம்: " இப்படி சொன்னது பதினொராயிரமாவது செடி நீ ."
இது எப்படி இருக்கு!\\
நல்லாயிருக்கு.
இப்ப வேலை!.. இரவு வரேன்.
ம்ம்ம்.. திருச்சேறை.... ஊரின் பெயரைக் கண்டாலே அதில் பக்தி ஒழுகுகிறது. பழங்கால ஊராக இருக்கவும் வாய்ப்புண்டு.. சரிதானே அன்புமணி அவர்களே??
உங்கள் விடுமுறை கழித்தல் இனிமையாக இருந்ததும், எனக்கும் நினைவுகளைக் கிளறிவிட்டதுமாகும்.
எங்கே அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்கள்??
அண்ணே... நான் நாச்சியார்கோவில்ல படிச்சேன்...
நான் வந்து 1977 வரை அங்க இருந்தேன்.. அதாவது SSLC படிக்கற வரை அங்கதான் இருந்தேன்..
அப்ப நீங்க...
உங்களோடு ஊருக்கு போய் வந்த உணர்வு.. கும்பகோணம் பக்கம் எனக்கு மிகவும்பிடித்த ஊர் என்றால் குடிகாடுதான்.. கிராமங்களின் அழகே தனிதானே நண்பா..
பனைமர கதை சூப்பர்
ஊர் நினைவுகள்.. அனுபவங்கள்.. அருமை அன்புமணி!
நீண்ட இடைவேளைக்கு பிறகு வருகை தந்திருக்கும் ஜமாலுக்கு வரவேற்பு!
அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம் ஆதவா!
//Anonymous said...
அண்ணே... நான் நாச்சியார்கோவில்ல படிச்சேன்...
நான் வந்து 1977 வரை அங்க இருந்தேன்.. அதாவது SSLC படிக்கற வரை அங்கதான் இருந்தேன்..
அப்ப நீங்க...//
என் வயதை தெரிந்து கொள்ள ஆர்வமா? பின்னணியில் ஒளிந்திருப்பது யார்? உங்களைவிட இளையவன்தான்!
//கார்த்திகைப் பாண்டியன் said...
உங்களோடு ஊருக்கு போய் வந்த உணர்வு.. கும்பகோணம் பக்கம் எனக்கு மிகவும்பிடித்த ஊர் என்றால் குடிகாடுதான்.. கிராமங்களின் அழகே தனிதானே நண்பா..//
நிச்சயமாக நண்பா! அப்ளிகேசன் ஏதாவது வந்ததா?
//அப்ளிகேசன் ஏதாவது வந்ததா?//
ஏம்ப்பா? நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா?
பனநொங்கு நிறைய பறித்து தருவார்கள். கோடைக்கு இதமாக இருக்கும். அதோடு அந்த பனைங்காய்களை சக்கரமாக வைத்து வண்டிகள் செய்து விளையாடுவோம்.///
பழைய ஞாபகங்களைக்கிளறுகிறீர்களே நண்பரே!!
//" நானும் இந்த சில மாதங்களாக பார்க்கிறேன். வளராமல் அப்படியே இருக்கிறாயே? நீ சுத்தவேஸ்ட்!"
அதற்கு அந்த பனைமரம் சொன்னதாம்: " இப்படி சொன்னது பதினொராயிரமாவது செடி நீ ."//
நெத்தியடி !!!
அது என்னமோ நம்ம சொந்த ஊர்னாலே அலாதி தாங்க...அழகா பதிவு செஞ்சிருக்கீங்க..
ரசித்து வாசித்தேன்.
பனைமரத்திற்கும் எனக்கும் நிரைய சம்பந்தமுன்னு. கோடைவிடுமைறை பயணம் ஏங்க வைக்கின்றது. நானும் சிறு வயதில் லீவுக்கு என் ஆச்சி ஊருக்கு போவதுண்டு. உங்கள் பயணத்தை படித்தும் எனக்கு அதுதான் நியாவகத்துக்கு வந்தது.
|அதற்கு அந்த பனைமரம் சொன்னதாம்: " இப்படி சொன்னது பதினொராயிரமாவது செடி நீ ."
இது எப்படி இருக்கு!|
இது நச்!! (ஆமா ஓணான் தெரியும் ஓணான் செடியா கேள்வி படாத பெயர் அல்லது அதற்கு எங்களூரில் வேறு பெயர் இலருக்களாம்)
|கூட்டு புளியாமரம் | இந்த நிகழ்வை நான் பாத்திருந்தால் அவ்வளவுதான்..!!
அந்தளவுக்கு பயம்
இன்னும் எங்கள் ஊரைப்பற்றி சமயம் வாய்க்கும்போது எழுதுகிறேன்.
நிச்சயம் எழுதுங்கள் அன்பு மணி.
அருமையான பதிவு இது.
நல்லாதான் அனுபவிச்சிருக்கீங்க வாழ்க்கைய..
//அதோடு அந்த பனைங்காய்களை சக்கரமாக வைத்து வண்டிகள் செய்து விளையாடுவோம்.//
அந்த நாள் ஞாபகம்....... ரசிக்கவைத்தது.
நல்ல அனுபவ கதை, நல்ல எதார்தமாக்க சொல்லிய பாங்கு அருமை நண்பா
பல நினைவுகள் மேலோங்குதுங்க நண்பா!
//பழைய ஞாபகங்களைக்கிளறுகிறீர்களே நண்பரே!!//
//பல நினைவுகள் மேலோங்குதுங்க நண்பா!//
பழைய ஞாபகங்களுக்கு சென்றதற்கு என் பதிவு காரணமாக அமைந்ததற்கு மகிழ்கிறேன்.
நன்றி!
ஆ.ஞானசேகரன்,சொல்லரசன்,
உழவன்
//நிச்சயம் எழுதுங்கள் அன்பு மணி.
அருமையான பதிவு இது.//
கண்டிப்பா எழுதுகிறேன்.
இந்த கிராம வாழ்க்கையில் ஒரு சுகம் இருக்கிறதே அது ஒரு தனிசுகம். அதுவும் சொந்தங்களின் வீடுகளுக்கு செல்வது பரமசுகம். 2004ல் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியில் சொந்தங்கள் வீட்டுக்கு, நான், எனது தம்பி, என் மாமா மகன், என் ஒன்றுவிட்ட அண்ணா ஆகியோர் போய் ஒரு வாரம் தங்கிவிட்டுவந்த சுகந்தமான் நாட்களை மீட்டு வந்தது உங்கள் படைப்பு. கூடவே சுருக்கென்று ஒரு வலி.....புடையன் பாம்பை 3 அடிக்குச்சிகொண்டு அடித்த, அப்போது 7 வயதோ 8 வயதோ நிரம்பிய என் மச்சாளின் பையன் இப்போது எங்கே????? யாராவது தேடித்தருவீர்களா???
//Keith Kumarasamy said...
இந்த கிராம வாழ்க்கையில் ஒரு சுகம் இருக்கிறதே அது ஒரு தனிசுகம். அதுவும் சொந்தங்களின் வீடுகளுக்கு செல்வது பரமசுகம். 2004ல் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியில் சொந்தங்கள் வீட்டுக்கு, நான், எனது தம்பி, என் மாமா மகன், என் ஒன்றுவிட்ட அண்ணா ஆகியோர் போய் ஒரு வாரம் தங்கிவிட்டுவந்த சுகந்தமான் நாட்களை மீட்டு வந்தது உங்கள் படைப்பு. கூடவே சுருக்கென்று ஒரு வலி.....புடையன் பாம்பை 3 அடிக்குச்சிகொண்டு அடித்த, அப்போது 7 வயதோ 8 வயதோ நிரம்பிய என் மச்சாளின் பையன் இப்போது எங்கே????? யாராவது தேடித்தருவீர்களா???//
தங்களின் நிலையை உளப்பூர்வமாக உணர்கிறேன் தோழரே! ஆனால் ஆறுதல் சொல்ல முடியாமல்தான் தவிக்கிறோம்...
Post a Comment