Friday, 10 July, 2009

அவன், அவள், அது (உயிரோடை சிறுகதைப் போட்டிக்ககாக எழுதப்பட்டது)

முதலிரவு அறைக்குள் பால் சொம்புடன் நுழைந்தாள் அவள். உள்ளே நுழையும் போதே பார்த்தாள். அவன் கட்டிலுக்கு அப்பால் ஜன்னலோரத்தில் நின்று கொண்டு சிகெரட் பிடித்துக் கொண்டிருப்பதை. இவள் நுழைந்ததைக்கூட அவன் பொருட்படுத்த வில்லை. திருமணத்தின் போதுகூட அவன் முகம் உம்மென்று இருப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
அப்போதே அவளுக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது. நாம் அடியெடுத்து வைக்கும் இடம் எப்படி இருக்குமோ என்று. அம்மா, அப்பாவை சின்ன வயதிலேயே இழந்தவள். அண்ணனின் தயவில் அண்ணியின் திட்டுக்களில் வளர்ந்தவள். இப்போது மாப்பிள்ளை பற்றி சொன்னால் போதும் அண்ணி சாமியாடிவிடுவாள் என்பதால் என்ன இருந்தாலும் பேசி சரி பண்ணிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில்தான் கழுத்தை நீட்டினாள்.

"பால் சாப்பிடுறீங்களா?"

சிகெரட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு அவளருகில் வந்தான். "இதோ பாரு... நீ என்னன்வோ கற்பனைப் பண்ணிக்கிட்டு இங்க வந்திருப்பே.... இங்க அப்படி எதுவும் நடக்காது. நான் ஒரு பெண்ணை தீவிரமா காதலிச்சேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதாகவும் இருந்தேன். ஆனா, நடக்கல. என் வாழ்க்கையில அவளுக்கு மட்டும்தான் இடம். உன்மேல காதல் இல்லாம, விருப்பம் இல்லாம உன்கிட்ட உறவு வைச்சிக்க முடியாது. நான் காமந்தரன் இல்ல. வாழ்க்கையை அனுபவிக்கணும்னா காதலிக்கணும். காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்யணும். அந்த அனுபவமே வேற. அவ கிடைக்கலைங்கிறதுக்காக உன்னைக் காதலிக்கவும் முடியாது. என் நிலைமையை புரிஞ்சிக்க."

படபடவென்று பேசி முடித்தவனை பார்த்து திக்கித்து நின்றாள். இது பேசி தீர்த்துக் கொள்ளக்கூடிய விசயமல்ல. இவனிடம் அதிகப்படியான அன்பு செலுத்தித்தான் மாற்றணும் என்று புரிந்து கொண்டாள். மாற்ற முடியுமா என்று மலைப்பும் வந்தது.
கட்டிலில் கிடந்த தலையணையில் ஒன்றை எடுத்துக் கொண்டு கீழே பெட்ஷீட்டை விரித்து படுத்துக் கொண்டாள்.

அவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும், பதிலும் இல்லாததைக் கண்டு அவனுக்கே ஒருமாதிரியாகத்தான் இருந்தது. எவ்வளவு அதிர்ச்சியான தகவலைச் சொல்லியிருக்கிறேன், ஒருவித ரியாக்சனும் இன்றி இருக்கிறாளே...


பொழுது விடிந்தது. முதலிரவில் நடந்ததை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தாள். அவராக சொன்னாலன்றி எதுவும் கேட்கக்கூடாது என்று மனஉறுதியுடன் இருந்தாள். அவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்று மாமியாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

திருமண விடுப்பு முடிந்து அலுவலகத்திற்கு சென்றான். மதியம் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றாள். முதலில் உன்னை இங்கல்லாம் யாரு வரச்சொன்னது என்று அவன் கத்தினான். அத்தைதான் கொடுத்தனுப்பிச்சாங்க என்றதும்தான் அடங்கினான். அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு வியப்பை அளித்தாலும் அவனால் காதலியை மறக்க முடியாமல் தவித்தான். அந்த தவிப்பு இவளிடம் வெறுப்பாக உமிழ்ந்தது. மாதங்கள் உருண்டோடியது. அவனை மட்டும் அசைக்கவே முடியவில்லை. மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த சமயத்தில்தான் குமார் அறிமுகமானான். அந்த அலுவலகத்திலேதான் வேலை பார்க்கிறான். முதலில் மெல்லிய புன்னகையில் ஆரம்பித்த நட்பு மெல்ல பற்றிக் கொண்டது. ஒரு நாள் அவர்கள் இருவரும் காணாமல் போனார்கள்.

முதலில் அவனால் இதை நம்பமுடியவில்லை. விரக்தியில் பாருக்கு சென்று தண்ணியடிக்க ஆரம்பித்தான். அவனுக்குள் கேள்விகள் பல மண்டையைக் குடைய ஆரம்பித்தது. எவ்வளவுதான் விலக்கிப் போனாலும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டவள் எப்படி ஓடிப் போனாள்? அப்படி என்ன உடல் சுகம் வேண்டிக்கிடக்கிறது? மண்ணரிக்கப் போகும் இந்த சரீரத்திற்கு இத்தனை வீரியமா? இந்த உலகில் காதலைவிட காமம்தான் பெரிதா? போதை ஏற ஏற அதையும் அனுபவித்து பார்த்துவிடுவது என்று நினைத்தான். ரூம்பாயை கூப்பிட்டு விசயத்தைச் சொன்னான்.

அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு அழகான பெண் வந்தாள். அவளை நெருங்க எழுந்தவன் போதையில் தள்ளாடி விழுந்தான். அவள் பதறிப் போய் அவனைப் பிடித்து மெல்ல கட்டிலில் அமர்த்தினாள். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வாந்தியெடுத்தான். சட்டென அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு பாத்ரூமிற்கு அழைத்துப் போனாள். கொஞ்சம் நிலைமை சரியாகியதும், முகமெல்லாம் துடைத்துவிட்டு சோபாவில் அவனை அமரவைத்துவிட்டு தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவன் நெஞ்சை நீவிவிட்டாள்.

காசுக்காக உடலை விற்கும் அவள் செய்யும் பணிவிடைகளைப் பார்த்தான். அவனுக்கு அவன் மனைவியின் ஞாபகம் வந்தது. காமம் தாண்டிய அன்பு புரிந்தது. அந்த அன்பில் கிறங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் இப்போது காதலியின் நினைவு சுத்தமாக அழிந்து போயிருந்தது.

23 comments:

தண்டோரா said...

நான் தான் முதல்ல..(பால் சொம்பு இல்ல)

நசரேயன் said...

நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

எளிமையான நடையில் எந்த ஒரு காம்பிளிகேடட் குறிப்புகளை செருகாமல்
கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.

நல்லா வந்திருக்கு அன்புமணி.

வாழ்த்துக்கள் !!!!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்!!

ஆ.ஞானசேகரன் said...

//காமம் தாண்டிய அன்பு புரிந்தது//

உண்மை

Keith Kumarasamy said...
This comment has been removed by the author.
Keith Kumarasamy said...

Moderation வைங்க அன்புமணி... பர்சனலா கருத்து அனுப்ப முடியல.. கதை நல்லாருக்கு

குடந்தை அன்புமணி said...

//தண்டோரா said...
நான் தான் முதல்ல..(பால் சொம்பு இல்ல)//

கதைப்படி சம்பவம் நடந்து பல மாசம் ஆச்சில்லையா, அதனால பால் சொம்புக்கு வேலை இல்லை.

குடந்தை அன்புமணி said...

//நசரேயன் said...
நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நசரேயன்.

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
எளிமையான நடையில் எந்த ஒரு காம்பிளிகேடட் குறிப்புகளை செருகாமல்
கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.

நல்லா வந்திருக்கு அன்புமணி.

வாழ்த்துக்கள் !!!!//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி செய்யது.

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள்!!//

மிக்க நன்றி ஞானசேகரன்.

குடந்தை அன்புமணி said...

// Keith Kumarasamy said...
Moderation வைங்க அன்புமணி... பர்சனலா கருத்து அனுப்ப முடியல.. கதை நல்லாருக்கு//

நீண்ட இடைவேளைக்கு பிறகான தங்கள் வருகைக்கு முதலில் நன்றி. எனது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது thambaramanbu@gmail.com என்ற மெயில் அட்ரஸ்க்கு அனுப்புங்கள்.

தமிழன் வேணு said...

சிறுகதையென்பது தேவைப்படுகிறபோது சூழ்நிலைகளைப் புரிய வைக்க வேண்டும் என்கிற எளிய உண்மையைப் புரிந்துகொண்டு, அனாவசியமான விவரணைகளுக்குச் செல்லாமல், சம்பாஷணைகள் மூலமாகவே அதைக் கையாண்டிருக்கிற பாணி மிக அலாதியாக இருக்கிறது. அருமையான நடை! வாழ்த்துக்கள்!

தமிழன் வேணு

உயிரோடை said...

கதை போட்டியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. வெற்றி பெற வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

// தமிழன் வேணு said...
சிறுகதையென்பது தேவைப்படுகிறபோது சூழ்நிலைகளைப் புரிய வைக்க வேண்டும் என்கிற எளிய உண்மையைப் புரிந்துகொண்டு, அனாவசியமான விவரணைகளுக்குச் செல்லாமல், சம்பாஷணைகள் மூலமாகவே அதைக் கையாண்டிருக்கிற பாணி மிக அலாதியாக இருக்கிறது. அருமையான நடை! வாழ்த்துக்கள்!

தமிழன் வேணு//

தங்களின் கருத்து மிக்க நன்றி நண்பரே.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

குடந்தை அன்புமணி said...

//உயிரோடை said...
கதை போட்டியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. வெற்றி பெற வாழ்த்துகள்//

மிக்க நன்றி.

Vidhoosh said...

ரொம்ப நல்ல நடை. நல்லா எழுதிறிக்கீங்க. வாழ்த்துக்கள்.
--வித்யா

குடந்தை அன்புமணி said...

// Vidhoosh said...
ரொம்ப நல்ல நடை. நல்லா எழுதிறிக்கீங்க. வாழ்த்துக்கள்.
--வித்யா//

தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

Cable Sankar said...

வாழ்த்துக்கள்..

குடந்தை அன்புமணி said...

//Cable Sankar said...
வாழ்த்துக்கள்...//

நன்றி கேபிள் சங்கர் சார்.

சந்ரு said...

நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

//சந்ரு said...
நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்//

நன்றி- தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...