Tuesday, 7 July, 2009

இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...

கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...(இந்தப் படத்துக்குரிய செய்தி இங்கு இல்லை)

"என்ன ராமசாமி வீட்டு பக்கமே காணுமேன்னு பார்த்தா தங்கம் சீரியல் பார்த்திக்கிட்டு உட்கார்ந்திருக்கியா?"

"புதுசா ஆரம்பிச்சிருக்காங்களே. எப்படி இருக்குன்னு பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரிதான் போகுது."

"அரசியல் கட்சிகளும் அவங்க போடுற பட்ஜெட்டும்கூட ஒரேமாதிரிதான் போகுது."

"என்னப்பா பட்ஜெட் பத்தி சொல்லி பயமுறுத்துற? என்ன விசயம்?"

"மத்திய அரசின் பட்ஜெட்டில வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரிவிதிப்பு உயர்த்தி இருக்காங்கப்பா"

"அடக்கொடுமையே! ஏற்கெனவே தங்கம் பதிமூன்றாயிரத்தை தாண்டிச்சிடுச்சு. இப்படி செஞ்சா ஏழைபாளைங்க என்ன பண்றது?"

"ஏன் இந்த வரி உயர்த்தப்படுதுன்னு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு காரணத்தையும் சொல்றாரு... 2004 வருடத்திற்கு பிறகு இப்போதுதான் உயர்த்தப்படுதாம். இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவாங்கன்னு தெரியும். அதனால்தான் வணிகமுத்திரை (பிராண்டட்) நகைகள் உற்பத்திக்கு மீதான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறதுங்கிறாரு."

"என்ன நம்ம ஆற்காடு மின்சாரத்தைப் பத்தி பேசின மாதிரியே பேசறாரு. அது கிடக்கட்டும், அப்ப தங்க விலை குறையுமா?"

"அதுதான் இல்ல... பிராண்டட் நகைகள் உற்பத்தி செய்யிற நிறுவனங்கள் மிகவும் கம்மி. இதனால பொதுமக்களுக்கு பலன் எதுவும் இல்லைங்கிறாரு இந்திய தங்க மார்க்கெட் தலைவர் சீல்சந்த் ஜெயின். அதோட பிராண்டட் நகைகளுக்கு இப்போது 2 சதவிகிதம்தான் வரி விதிக்கப்படுகிறதாம். இதை ரத்து செய்வது என்பது வெறும் கண்துடைப்புதான்."

"ஏற்கெனவே வரதட்சணையால பெண்களுக்கு திருமணம் நடக்கிறதே அபூர்வமா இருக்கு. இதனால பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் சாபத்துக்கு ஆளாவார்ங்கிறது மட்டும் உறுதி."

"வரதட்சணைன்னு சொன்னோன்னதான் ஞாபகத்துக்கு வருது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில நிலம்பூர்ங்கிற கிராமத்தில வரதட்சணை கொடுமையை ஒழிக்கிறதில கிராம பஞ்சாயத்து தலைவர் சாதனை பண்ணியிருக்காரு."

"என்னப்பா சொல்றே? வரதட்சணையை ஒழிச்சிருக்காரா?"

"ஆமாம்பா. நாற்பதாயிரம் பேர் வசிக்கிற அந்த கிராமத்தில 30 வயதாகியும் திருமணம் செய்ய முடியாம 1,300 பேர் இருக்கிறதா அவருக்கு தெரிய வந்திருக்கு. அதோட வரதட்சணை கொடுத்து மகளை வாழ வைச்ச பல குடும்பங்கள் வறுமையில வாடுறதையும். வரதட்சணை கொடுக்க முடியாமததால பல பெண்கள் வாழா வெட்டியா முடங்கி கிடக்கிறதையும் அவரு பார்த்திருக்காரு."

"அதுக்கு என்ன பண்ணினாராம்?"

"வரதட்சணை கொடுமையை பத்தி விளக்கி தெருக்கூத்து, திரைப்படம்னு வீதிக்கு வீதி போட்டு காண்பிச்சிருக்காரு. அதோட பொதுமக்கள்கிட்ட வரதட்சணை வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன்னு உறுதி மொழி எழுதி வாங்கிருக்காரு."

"இன்னப்பா.... தெருக்கூத்தையும், படத்தையும் பார்த்து மக்கள் திருந்திட்டாங்களா என்ன? நம்புறமாதிரியா இருக்கு?"

"ஒருசில மாதங்களுக்கு எந்தவித பலனும் இல்லாமத்தான் இருந்திருக்கு. கடந்த ஆறு மாசமா அங்க எந்தவித வரதட்சணை கொடுமையும் இல்லையாம். சுமுகமா போய்கிட்டிருக்காம்."

"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்றாங்களோ? இந்த முறையை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்தால் எவ்வளவு நல்லாருக்கும்." என்றவாறு நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டார்.

26 comments:

பழமைபேசி said...

அன்புச் செல்லமும் நீங்களும் தஞ்சாவூர் போனப்ப எடுத்த படமாங்க அது?

குடந்தை அன்புமணி said...

//பழமைபேசி said...
அன்புச் செல்லமும் நீங்களும் தஞ்சாவூர் போனப்ப எடுத்த படமாங்க அது?//


இல்லை நண்பா. மாமல்லபுரத்தில் எடுத்த படம்.

முனைவர்.இரா.குணசீலன் said...

ஒரு காலத்துல ஆண்கள் தான் பொன்னும் பொருளும் பெண்வீட்டாருக்குத் தந்து திருமணம் செய்து கொண்டார்கள்......
இன்னும் வரதட்சனைக் கொடுமை நம்மை விட்டு நீங்காதது வருத்தமாகத் தான் உள்ளது...

செந்தழல் ரவி said...

avvvvvvvvvv

இந்த படத்தை எல்லாம் யாரு நெட்ல போடுறது ?

ராமலக்ஷ்மி said...

அந்த பஞ்சாயத்துத் தலைவர் போற்றுதலுக்குரியவர்!

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
ஒரு காலத்துல ஆண்கள் தான் பொன்னும் பொருளும் பெண்வீட்டாருக்குத் தந்து திருமணம் செய்து கொண்டார்கள்......
இன்னும் வரதட்சனைக் கொடுமை நம்மை விட்டு நீங்காதது வருத்தமாகத் தான் உள்ளது...//

அதுவும் பெண்கள் சமஉரிமை கேட்கும் இந்த காலத்திலும் என்பதுதான் இன்னும் கொடுமையாக உள்ளது.

சொல்லரசன் said...

ஒரு பஞ்சாயத்து தலைவர் செய்யதுமுடிப்பதை மாநில முதல்வர்களால் செய்யமுடியாதா?

jackiesekar said...

அன்பு இன்னும் நம்சமுகத்தில் அந்த பேய் இருப்பதால்தான் நம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கபடுகின்றார்கள்

நட்புடன் ஜமால் said...

சிவாஜி படத்தில் ஒரு பாட்டு வருமே

.....


அது போல இருக்கு ...

நசரேயன் said...

//இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...//

கண்டிப்பா

பாலாஜி said...

//ஒரு பஞ்சாயத்து தலைவர் செய்யதுமுடிப்பதை மாநில முதல்வர்களால் செய்யமுடியாதா?//

முடியாது என்று தோன்றுகிறது, சுயநலமுல்ல முதல்வர்களால்.

பாலாஜி said...

//"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்றாங்களோ? இந்த முறையை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்தால் எவ்வளவு நல்லாருக்கும்.//

இந்த அடி தங்கத்தின் விலைஉயர்வாக இருக்கக்கூடும்.

குடுகுடுப்பை said...

அந்த அம்மாவுக்கு கழுத்து வலிக்காதா.

பெண்களே சொல்லுங்கள்

Thamizhmaangani said...

அந்த படத்த பாத்தபிறகு போன வாரம் நீயா நானா நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வருது!!(நிகழ்ச்சி தலைப்பு- ஆடம்பர கல்யாணம் vs சிக்கனமான கல்யாணம்)

ஜெஸ்வந்தி said...

அந்தப் பொண்ணு போட்டோவை இன்னும் ஒருக்காப் பாருங்கோ அன்புமணி. இத்தனை பாரத்தைச் சுமந்தும் அவ நிமிர்ந்த்துதான் நிற்கிறா. இந்தக் காலப் பெண்களை எப்படியும் குனிய வைக்க முடியாது பாருங்கோ!

ஆபிரகாம் said...

நானும்தான் பொறாமை பட்டுகிறன்!

ஆ.ஞானசேகரன் said...

//கடந்த ஆறு மாசமா அங்க எந்தவித வரதட்சணை கொடுமையும் இல்லையாம். சுமுகமா போய்கிட்டிருக்காம்."//

நல்ல விடயம் நண்பா... பகிர்வுக்கு நன்றி

குடந்தை அன்புமணி said...

//சொல்லரசன் said...
ஒரு பஞ்சாயத்து தலைவர் செய்து முடிப்பதை மாநில முதல்வர்களால் செய்யமுடியாதா?//

முடியாது என்று நீங்கள் சொல்வதையெல்லாம் எவனோ ஒருவன் எங்கோ செய்து கொண்டுதான் இருக்கிறான்
- அப்துல் கலாம்


இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

குடந்தை அன்புமணி said...

//jackiesekar said...
அன்பு இன்னும் நம்சமுகத்தில் அந்த பேய் இருப்பதால்தான் நம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கபடுகின்றார்கள்//

பேயோட்டிகள்தான் இப்போதைய தேவையாக இருக்கிறது.

குடந்தை அன்புமணி said...

//ராமலக்ஷ்மி said...
அந்த பஞ்சாயத்துத் தலைவர் போற்றுதலுக்குரியவர்!//

நிச்சயமாக போற்றுதலுக்குரியவர்தான்.

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
சிவாஜி படத்தில் ஒரு பாட்டு வருமே

.....


அது போல இருக்கு ...//

ரொம்ப நாளாச்சு ஜமால், சிவாஜி பாட்டு கேட்டு. அது என்ன பாட்டு?

குடந்தை அன்புமணி said...

// நசரேயன் said...
//இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...//

கண்டிப்பா //

மேலே உள்ள படத்தைப் பார்த்துதானே...

குடந்தை அன்புமணி said...

// பாலாஜி said...
//"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்றாங்களோ? இந்த முறையை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்தால் எவ்வளவு நல்லாருக்கும்.//

இந்த அடி தங்கத்தின் விலைஉயர்வாக இருக்கக்கூடும்.//

வரதட்சணை ஒழிந்தால் தங்கம் விலையேறினாலும் கவலைப்பட வேண்டியதில்லையே...

குடந்தை அன்புமணி said...

//குடுகுடுப்பை said...
அந்த அம்மாவுக்கு கழுத்து வலிக்காதா.

பெண்களே சொல்லுங்கள்//

// ஜெஸ்வந்தி said...
அந்தப் பொண்ணு போட்டோவை இன்னும் ஒருக்காப் பாருங்கோ அன்புமணி. இத்தனை பாரத்தைச் சுமந்தும் அவ நிமிர்ந்த்துதான் நிற்கிறா. இந்தக் காலப் பெண்களை எப்படியும் குனிய வைக்க முடியாது பாருங்கோ!//

நோ கமெண்ட்ஸ்...

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

செந்தழல் ரவி.
தங்க மாங்கனி.
ஆபிரகாம்.
ஆ.ஞான சேகரன்.

சந்ரு said...

சபாஸ்... பதிவு அருமை. சிந்திக்க வைத்தது.....

நம்ம பக்கமும் வந்து பாருங்க பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க.....

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...