Friday 7 August, 2009

சொல்லத்தான் நினைக்கிறேன்...



* செல்போன் என்பது தொலை தொடர்பு சாதனம் என்பது போய் தொல்லை தரும் சாதனமாக மாற்றிவிட்டார்கள். முதலில் பேசுவதற்காக மட்டுமே பயன்பட்டு வந்ததை பாடல் கேட்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் இப்போது வீடியோ வரை வந்தாகிவிட்டது. இனிமேல் திரைப்படங்கள்கூட தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இந்த எண்ணை அழுத்தினால் இந்த திரைப்படங்கள் கிடைக்கும் என்ற காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போலும்.

தாம்பரம் சானடோரியத்தில் ஏறி பூங்கா நிறுத்தம் வரை பயணம் தினசரி ரயில் பயணத்தை மேற்கொள்பவன் நான். இதற்குள் ஏகப்பட்ட நிறுத்தங்கள் இருக்கின்றன. ஒரு சிலர் காதில் (ஹியர் போன்) மாட்டிக் கொண்டு பாடல் கேட்கிறார்கள். ஆனால் பலர் சத்தமாக பாடலை வைத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு தொல்லை தருகிறோமே என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார்கள். ஒருவர் நான் ஒரு ராசியில்லாத ராஜா என்று பாடல் போட அடுத்தவர் டாடி மம்மி வீட்டில் இல்லை என்ற பாடலை ஒளிபரப்ப... அந்த நிகழ்வை மனதிற்குள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நீண்ட பயணத்தின்போதுதான் பெரும்பாலும் எனக்கு கவிதைகள் பிறக்கும். அதற்கு இந்த ரயில் பயணம் பெரும் வசதியாக இருந்தது. ஆனால் இப்போது... இதை அவர்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேன்...


பிரபல பாடகர் யேசுதாஸ் அவர்கள் பற்றி ‘சங்கீத சாகரம் யேசுதாஸ்’ என்ற தலைப்பில் மணிமேகலை பிரசுரத்தார் நூல் வெளியீட்டு விழா நாரதகான சபாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்விழாவில் யேசுதாஸ் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர்- இயக்குனர் பார்த்திபன், நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்கள். (இது நடந்தது 1993 அல்லது 94 என்று நினைக்கிறேன்.) நானும் நண்பர்களும் கலந்து கொண்டோம்.

விழா ஆரம்பித்து சிறிது நேரத்தில் நடிகை கஸ்தூரி வந்தார். மேடையில் அமர்ந்தவர் பார்வையாயளர்களை நோக்கி பார்த்தார். அப்போது எங்கள் பக்கம் பார்வையை ஓட்டியவர் புன்னகைத்தார். பின்பு கையை ஆட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். உடனே என் நண்பர்கள் ‘என்னைப் பார்த்துதான்’ இல்லை என்னைப் பார்த்துதான்’ என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டார்கள். இப்படியே ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டிருந்தோம்.


திடீரென ஒரு பரபரப்பு...
கஸ்தூரி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டுமென்பதால் கிளம்புவதாக சொல்லி கிளம்பினார். மேடையைவிட்டு இறங்கியவர் நாங்கள் அமர்ந்திருந்த வரிசையை நோக்கி வேகமாக சிரித்துக் கொண்டு வந்தார். வந்தவர் நாங்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் இருந்த ஒரு ஜோடியை பார்த்து எப்படியிருக்கீங்க...(அவர்கள்... சென்னை தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் கணவன்- மனைவி ஜோடி) பார்த்து ரொம்ப நாளாச்சு என்றும் இன்னும் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்...

33 comments:

Raju said...

கஸ்தூரி மேட்டர் சரியான காமெடி..!

நையாண்டி நைனா said...

hahahahahaha....

நையாண்டி நைனா said...

என்னத்தை நெனக்கிறியலோ அதை சொல்ல வேண்டியது தானே...

ஹேமா said...

மணி,சூடான அனுபவம்தான்.

நையாண்டி நைனா said...

/*நீண்ட பயணத்தின்போதுதான் பெரும்பாலும் எனக்கு கவிதைகள் பிறக்கும். அதற்கு இந்த ரயில் பயணம் பெரும் வசதியாக இருந்தது. ஆனால் இப்போது...*/

நானும் வன்மையாக கண்டிக்கிறேன் பாசு...
நானும் வன்மையாக கண்டிக்கிறேன் பாசு...


(இது சும்மா... லுல்லுல்லாயிக்கு தான், பயணிகளே.. எங்களை காப்பாத்துறதுக்கு நன்றி. நன்றியை இங்கே தனியா வாங்கிகோங்க....)

குடந்தை அன்புமணி said...

//டக்ளஸ்... said...
கஸ்தூரி மேட்டர் சரியான காமெடி..!//

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு எங்கள் அலுவலகத்தில் இதைவைத்தே ஓட்டு ஓட்டென்று ஓட்டிவிட்டார்கள். போங்கள்...

குடந்தை அன்புமணி said...

//(இது சும்மா... லுல்லுல்லாயிக்கு தான், பயணிகளே.. எங்களை காப்பாத்துறதுக்கு நன்றி. நன்றியை இங்கே தனியா வாங்கிகோங்க....)//

எங்களைப் போல கவிதை எழுதுபவர்கள் நிறுத்திவிட்டால் உங்களுக்கு எதிர்கவிதை போடுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்...

பர்வாயில்லையா...(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

குடந்தை அன்புமணி said...

//ஹேமா said...
மணி,சூடான அனுபவம்தான்.//

சுடச்சுட வந்து படிச்சதற்கு நன்றி தோழி...

பழமைபேசி said...

இஃகிஃகி!

தேவன் மாயம் said...

வந்தவர் நாங்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் இருந்த ஒரு ஜோடியை பார்த்து எப்படியிருக்கீங்க...(அவர்கள்... சென்னை தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் கணவன்- மனைவி ஜோடி) பார்த்து ரொம்ப நாளாச்சு என்றும் இன்னும் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்.///

என்ன செய்யச் சொல்றீங்க..எல்லாம் அப்படித்தான்!!

Vidhoosh said...

செல்போன் தரும் எரிச்சல்கள் சொல்லி மாளாது.
கஸ்தூரி - ஐயோ பாவம்....நீங்கள்தான்.

--வித்யா

நட்புடன் ஜமால் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு

கஸ்தூரியின் படம்.

செல்போன் பற்றி நீங்க சொன்னது அருமை.

சொல்லரசன் said...

//எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்//

சொல்லாமலே தெரிந்துகொண்டோம்

ராமலக்ஷ்மி said...

நினைப்பதை சொல்ல முடியவில்லையா:))?

ஆ.சுதா said...

நினைவுகள் மலருது!!

துபாய் ராஜா said...

கஸ்தூரி படமும் நல்லாருக்கு. :))

க.பாலாசி said...

//நடிக்கும் கணவன்- மனைவி ஜோடி) பார்த்து ரொம்ப நாளாச்சு என்றும் இன்னும் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்... //

ஆனா முடியாதுல்ல. வழிஞ்ச அசட தொடைக்கவே நேரம் சரியா இருந்திருக்கும். என்ன சரிதானே.

ஆ.ஞானசேகரன் said...

//நீண்ட பயணத்தின்போதுதான் பெரும்பாலும் எனக்கு கவிதைகள் பிறக்கும். அதற்கு இந்த ரயில் பயணம் பெரும் வசதியாக இருந்தது. ஆனால் இப்போது... இதை அவர்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேன்...//

உங்களை பார்த்தால் பாவமா இருக்கு நண்பா... என்ன பன்னுறது சொல்லதான் முடியும் அவர்கள் கேட்கனுமே??

ஆ.ஞானசேகரன் said...

///எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்... ///

ம்ம்ம்ம் நல்லா இருக்கே... இன்னும் சிரித்து முடிக்கவில்லை........

குடந்தை அன்புமணி said...

//பழமைபேசி said...
இஃகிஃகி!//

வருகைக்கு நன்றி பழமை...

குடந்தை அன்புமணி said...

//என்ன செய்யச் சொல்றீங்க..எல்லாம் அப்படித்தான்!!//

உங்களுக்கும் அப்படி அனுபவம் இருந்திருக்கும் போல...

குடந்தை அன்புமணி said...

//Vidhoosh said...
செல்போன் தரும் எரிச்சல்கள் சொல்லி மாளாது.
கஸ்தூரி - ஐயோ பாவம்....நீங்கள்தான்.

--வித்யா//

உண்மைதான்...

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
நீண்ட நாட்களுக்கு பிறகு

கஸ்தூரியின் படம்.

செல்போன் பற்றி நீங்க சொன்னது அருமை.//

ஆமாங்க இன்னமும் ஹீரோயினாத்தான் நடிப்பேன் ஒத்தக்காலில் நிற்கிறாங்களாம்.

குடந்தை அன்புமணி said...

//சொல்லரசன் said...
//எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்//

சொல்லாமலே தெரிந்துகொண்டோம்//

அது!

குடந்தை அன்புமணி said...

//ராமலக்ஷ்மி said...
நினைப்பதை சொல்ல முடியவில்லையா:))?//

ஆமாங்க... சொன்னா நம்மள ஒரு மாதிரியா பார்க்கிறாங்க...

குடந்தை அன்புமணி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நினைவுகள் மலருது!!//

ஆமாங்க... அங்க இன்னமும் வேலை நெருக்கடி தீரலையா...

குடந்தை அன்புமணி said...

//துபாய் ராஜா said...
கஸ்தூரி படமும் நல்லாருக்கு. :))//

அவங்களும் நல்லாத்தான் இருப்பாங்க...

குடந்தை அன்புமணி said...

//க. பாலாஜி said...
//நடிக்கும் கணவன்- மனைவி ஜோடி) பார்த்து ரொம்ப நாளாச்சு என்றும் இன்னும் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்... //

ஆனா முடியாதுல்ல. வழிஞ்ச அசட தொடைக்கவே நேரம் சரியா இருந்திருக்கும். என்ன சரிதானே.//

இப்படியெல்லாம் வெளிப்படையா சொல்லப்படாது.

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
//நீண்ட பயணத்தின்போதுதான் பெரும்பாலும் எனக்கு கவிதைகள் பிறக்கும். அதற்கு இந்த ரயில் பயணம் பெரும் வசதியாக இருந்தது. ஆனால் இப்போது... இதை அவர்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேன்...//

உங்களை பார்த்தால் பாவமா இருக்கு நண்பா... என்ன பன்னுறது சொல்லதான் முடியும் அவர்கள் கேட்கனுமே??//

கேட்கற மாதிரி இருந்தா சொல்லலாம். நம்மளையெல்லாம் கிராமத்தான் ரேஞ்சுக்கு பீல் பண்ணுவாங்க...

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
///எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்... ///

ம்ம்ம்ம் நல்லா இருக்கே... இன்னும் சிரித்து முடிக்கவில்லை...//

சிரித்து முடிச்சிட்டு சொல்லுங்க அடுத்ததை எடுத்துவிடுவோம்...

அ.மு.செய்யது said...

//தாம்பரம் சானடோரியத்தில் ஏறி பூங்கா நிறுத்தம் வரை பயணம் தினசரி ரயில் பயணத்தை மேற்கொள்பவன் நான்.//

சில மாதங்களுக்கு முன்பு உங்களை நான் சந்திருந்தால் நாம் எபோதோ ரயில்
பயணத்தில் நண்பர்களாயிருப்போம்.
நானும் அதே மார்க்கத்தில் அடிக்கடி பயணம் செய்பவன்.

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
//தாம்பரம் சானடோரியத்தில் ஏறி பூங்கா நிறுத்தம் வரை பயணம் தினசரி ரயில் பயணத்தை மேற்கொள்பவன் நான்.//

சில மாதங்களுக்கு முன்பு உங்களை நான் சந்திருந்தால் நாம் எபோதோ ரயில்
பயணத்தில் நண்பர்களாயிருப்போம்.
நானும் அதே மார்க்கத்தில் அடிக்கடி பயணம் செய்பவன்.//

ரயில் நம்மை இணைத்து வைக்காவிட்டாலும் வலைவீசி புடிச்சிட்டோமில்ல...

Joe said...

//
இதை அவர்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேன்...
//
சொல்லி விடலாம், தவறில்லை.
Ear-phones அதிக சத்தம் வைப்பது அருகிலிருப்பவர்களுக்கு தொந்தரவு, கேட்பவர்கள் காது சீக்கிரம் செவிடாகும் வாய்ப்பும் அதிகம்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...