Tuesday, 18 August, 2009

இது பைத்தியக்காரனின் பதிவுக்கு எதிர்பதிவு அல்ல...

முன் குறிப்பு- இந்த இடுகை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.
பல பிளாக்கர்கள் ஒன்றுகூடி கடந்த 2007-ஆம் ஆண்டு ‘வலைப்பதிவர் பட்டறை’ நடத்தினார்கள். அந்த வலைப்பதிவு பட்டறை மூலம்தான் நான் வலையுலகிற்கு அறிமுகமானேன். பல பதிவர்கள் இணைந்து நடத்திய அந்த பட்டறைக்கு யாரிடமும் பணம் கேட்கவில்லை. அவர்களே ஆர்வமாக நடத்தினார்கள். அதோடு குறிப்பு புத்தகம், எழுதுபொருள், பிளாக் தொடங்குவது, பதிவிடுவது, எழுத்துருக்களை பயன்படுத்துவது, தரவிரக்குவது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய குறுவட்டுடன் (சி.டி) கூடிய கிழக்கு பதிப்பகத்தின் சிறு கையேடும் அடங்கிய பை அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.அதோடு காலை, மாலை தேநீர் மற்றும் மதிய சைவ சாப்பாடும் வழங்கப்பட்டது.

அதேபோல் தங்களையும் செய்யச் சொல்லவில்லை. ஆனால் சிறுகதைப் பட்டறைக்கு தாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ 400 என்பது அதிகமாகவே படுகிறது.
சிறுகதைப் பயிற்சி பட்டறைப் பற்றிய பதிவுக்கு இங்கு க்ளிக்கவும்.

எம்.எம்.அப்துல்லா said...
//ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 //

is it enough anna?? என்ற கேள்விக்கு

யுவகிருஷ்ணா said...
//is it enough anna??//

ஹலோ! துவரம்பருப்பு கிலோ நூறு ரூபாய்க்கு விற்குது :-( - என்று பதிலளித்துள்ளார்.

முரளிகண்ணன் said...
சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

400 போதுமா என சந்தேகமாகவே இருக்கிறதண்ணா. என்கிறார்

புருனோ Bruno said...
////ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 //

is it enough anna??//

கண்டிப்பாக போதாது ..... அரங்க வாடகை + உணவு ஒரு நபருக்கு அதற்கு மேல் வரும் என்று நினைக்கிறேன். இது தவிர கோப்பு, தாள்கள் போன்ற செலவுகள் இருக்கின்றன

சிவராமன் சார்

இதில் சமரசம் செய்து கொள்ள அவசியம் இல்லை

உங்கள் கைக்காசை போட்டு நீங்கள் நடுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்

குறைந்த பட்சம் 600 ரூபாயாவது வைத்துக்கொள்ளுங்கள்

என் கருத்தை மற்றவர்களும் வழிமொழிவார்கள் என்றே நினைக்கிறேன்.

பிளாக் நடத்துவது இலவசம் என்பதால்தான் இன்று இத்தனை பேர் பிளாக் நடத்துகிறார்கள். இதுவே நாளை கட்டணம் என்றால் முக்கால்வாசி பேர் காணாமல் போய்விடுவார்கள். பிளாக் நடத்துபவர்கள் அனைவரும் பெரிய வேலைவாய்ப்பில் உள்ளவர்கள், பெரிய சம்பளம் பெறுபவர்கள் இல்லையென்பது மறுக்கமுடியாத உண்மை. இதே கருத்தைத்தான் நண்பர் பாலபாரதியும் கூறியிருக்கிறார்.


♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
என்னால் ஆன முயற்சிகளை..செய்கிறேன். எப்படியும் கலந்துகொள்ளவேண்டும் என்பதே ஆசை!

பணவிசயத்தைப் பொருத்தமட்டில் மற்றவர்கள் சொல்லுவது போல.. நான் சொல்ல மாட்டேன். அகநாழிகை ஆலோசனையின் படி ஏதாவது பள்ளிகளில் இடம் பிடித்திருந்தால்.. இதைவிட குறைவான செலவுகளியேலே பட்டறையை நிச்சயம் நடத்தலாம்.

உங்களுக்கும் பளு குறையும்.

400 ரூபாய் எனக்கு பொருட்டு அல்ல. அது கூட செலுத்தமுடியாதவர்கள் இங்கு உண்டு!( மூன்று வருடங்களுக்கு முன் நான் வலை உலகிற்குள் வந்தபோது என் மாத சம்பளமே ஐந்தாயிரம் தான்) அவர்களின் நிலை!


ஆண்மை குறையேல்.... said...
நுழைவுக் க‌ட்ட‌ண‌ம் குறைத்தால் ப‌ர‌வாயில்லை..400/‍ அதிக‌ம்...ஏசி ஹால் தேவையா? யோசிக்க‌வும்.

karpaka said...
//இந்த ரிஸார்ட்டிலுள்ள செண்ட்ரலைஸ்டு ஏஸி பொருத்தப்பட்ட கான்ஃப்ரன்ஸ் ஹாலை புக் செய்திருக்கிறோம்.//

ஏ.சி. ஹால்... இந்த மழை நேரத்தில்... தேவையா... ஒரு பள்ளிக்கூடத்தில் ஏற்பாடு செய்திருக்கலாம். செலவு குறையும்.

//காலை தேனீர் அல்லது காபி, மதியம் சைவ - அசைவ உணவுகள் (பப்பே சிஸ்டம்), மாலை தேனீர் அல்லது காபி ஆகியவற்றுக்காக கலந்து கொள்ளும் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 வசூலிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. //

அசைவ உணவுகள் தேவையில்லை. மற்றவை ஓ.கே. முடிந்தவரை தொகையினை குறைத்தால் நிறைய பேர் கலந்து கொள்ள முடியும். கூட்டத்தை குறைப்பதற்கான முயற்சியாக இந்தக் கட்டணத்தை எண்ணுகிறேன். என் எண்ணம் சரிதான் என்றால்... இந்த பட்டறை நிகழ்ச்சி பற்றிய பதிவுகளைத்தான் (என்னைப் போன்ற சம்பளம் குறைவாக பெறுவோர்கள்) படித்து தெரிந்து கொள்ள முடியும்.

தங்களின் முயற்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் மேலே உள்ள கருத்துக்களையெல்லாம் யோசித்துப் பாருங்கள். இல்லாவிடில் நிகழ்ச்சிகளின் தொகுப்பை குறுவட்டாக குறைந்த செலவில் வெளியிட முடியுமா என்றாவது பாருங்கள். எங்களைப் போன்றவர்களுக்கு அவ்வசதியையாவது செய்து கொடுங்கள். நன்றிக்குரியவர்களாக இருப்போம்.

15 comments:

Bleachingpowder said...

வித்தியாசமான பார்வை. எனக்கும் உங்கள் கருத்து சரியாதான் படுது. ஏசி ஹால், அசைவ உணவு, ரிசார்ட் போன்ற ஆடம்பரம் தேவையில்லை தான். ஆனால் அவர்களுடைய நோக்கம் நிச்சயம் போற்றதக்கது

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல யோசனைகள்.. சிவராமன் அண்ணா இவற்றை செயல்படுத்தலாம்

பைத்தியக்காரன் said...

அன்பின் குடந்தை அன்புமணி,

உங்களது ஆரோக்கியமான இடுகைக்கு நன்றி. பின்னூட்டமாக இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால், தனி இடுகையாகிவிடும். 'பட்டறை' தொடர்பான இடுகையில் பல நண்பர்களும் இது குறித்து சொல்லியிருக்கிறார்கள். எனவே விரைவில் தனி இடுகையாக எழுதுகிறோம்.

உங்கள் அன்புக்கு நன்றி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

யுவகிருஷ்ணா said...

அன்புமணி!

ஒருவகையில் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதே. ஆனாலும் வலைப்பதிவர் பட்டறையையும், இதையையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.

வலைப்பதிவர் பட்டறைக்கு ஓரளவுக்கு ஸ்பான்சர்கள் கிடைத்தார்கள். நிறைய வலைப்பதிவர்கள் நன்கொடையும் தந்தார்கள்.

சிறுகதைப் பட்டறைக்கு அவ்வாறு ஸ்பான்சர்களை பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் நடத்தலாம் என்பது சரியான யோசனையாக இருந்தபோதிலும், பதிவர்களுக்கு ஒரு ‘அவுட்டிங்’ என்ற வகையிலேயே ரெசார்ட் புக் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்மின் நண்பருடைய ரெசார்ட் என்பதால் மற்றவர்களுக்கு கொடுப்பதை விட உரையாடல் அமைப்பினருக்கு மிகக்குறைந்த கட்டணத்திலேயே கொடுத்திருப்பார்கள் என்றும் தெரிகிறது.

வலைப்பதிவர்களுக்கு அவர்கள் வழங்குவதாக உறுதியளித்திருக்கும் கையேடு தொகுப்புக்கே செலவு நானூறு ரூபாயைத் தொடும் என்பதுதான் இன்றைய நிலை.

முதன்முறையாக நடத்தப்படும் பட்டறை என்பதால் கொஞ்சம் சிறப்பாக நடத்த அமைப்பாளர்கள் நினைத்திருக்கலாம்.

நட்புடன் ஜமால் said...

உங்கள் பார்வை ஆரோக்கியம் நண்பரே.

க. பாலாஜி said...

உங்கள் கருத்து மற்றும் யோசனைகளுடன் நான் ஒத்துப்போகிறேன் அன்பரே..

குடந்தை அன்புமணி said...

//Bleachingpowder said...
வித்தியாசமான பார்வை. எனக்கும் உங்கள் கருத்து சரியாதான் படுது. ஏசி ஹால், அசைவ உணவு, ரிசார்ட் போன்ற ஆடம்பரம் தேவையில்லை தான். ஆனால் அவர்களுடைய நோக்கம் நிச்சயம் போற்றதக்கது//

அவர்களின் நோக்கத்தை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். எல்லாரும் பயன்பெற வேண்டுமென்பதாக இருக்க வேண்டும் என்பதாலேயே இவ்விடுகை.

குடந்தை அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல யோசனைகள்.. சிவராமன் அண்ணா இவற்றை செயல்படுத்தலாம்//

நன்றி கார்த்தி

குடந்தை அன்புமணி said...

//பைத்தியக்காரன் said...
அன்பின் குடந்தை அன்புமணி,

உங்களது ஆரோக்கியமான இடுகைக்கு நன்றி. பின்னூட்டமாக இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால், தனி இடுகையாகிவிடும். 'பட்டறை' தொடர்பான இடுகையில் பல நண்பர்களும் இது குறித்து சொல்லியிருக்கிறார்கள். எனவே விரைவில் தனி இடுகையாக எழுதுகிறோம்.

உங்கள் அன்புக்கு நன்றி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்//

அந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம் தோழரே...

குடந்தை அன்புமணி said...

//யுவகிருஷ்ணா said...

ஒருவகையில் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதே. ஆனாலும் வலைப்பதிவர் பட்டறையையும், இதையையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.

வலைப்பதிவர் பட்டறைக்கு ஓரளவுக்கு ஸ்பான்சர்கள் கிடைத்தார்கள். நிறைய வலைப்பதிவர்கள் நன்கொடையும் தந்தார்கள்.

சிறுகதைப் பட்டறைக்கு அவ்வாறு ஸ்பான்சர்களை பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் நடத்தலாம் என்பது சரியான யோசனையாக இருந்தபோதிலும், பதிவர்களுக்கு ஒரு ‘அவுட்டிங்’ என்ற வகையிலேயே ரெசார்ட் புக் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்மின் நண்பருடைய ரெசார்ட் என்பதால் மற்றவர்களுக்கு கொடுப்பதை விட உரையாடல் அமைப்பினருக்கு மிகக்குறைந்த கட்டணத்திலேயே கொடுத்திருப்பார்கள் என்றும் தெரிகிறது.//

ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக சொல்லவில்லை. அதுபோன்று ஸ்பான்சர் பிடிக்க முடியவில்லையென்றாலும் புத்தக விற்பனை மையங்கள் அமைக்க அனுமதிக்கலாம். அதன்மூலம் வருவாய் பெற வழியுண்டு. நல்லி குப்புசாமி அவர்களை தெரிந்தவர்கள் மூலம் அணுகினால் ஸ்பான்சர் கிடைக்கலாம். ‘அவுட்டிங்’ செல்ல பிறகொரு நிகழ்வு தனியாக ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

//வலைப்பதிவர்களுக்கு அவர்கள் வழங்குவதாக உறுதியளித்திருக்கும் கையேடு தொகுப்புக்கே செலவு நானூறு ரூபாயைத் தொடும் என்பதுதான் இன்றைய நிலை.

முதன்முறையாக நடத்தப்படும் பட்டறை என்பதால் கொஞ்சம் சிறப்பாக நடத்த அமைப்பாளர்கள் நினைத்திருக்கலாம்.//

அவர்களின் மெனக்கெடு புரிகிறது... இருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டுகிறேன். சி.டி யாக கொடுப்பது சிக்கனமாக முடியும் என்பது என் கருத்து.

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
உங்கள் பார்வை ஆரோக்கியம் நண்பரே.//

என்னைப் போன்றவர்களுக்காகத்தான் இந்த இடுகை

//க. பாலாஜி said...
உங்கள் கருத்து மற்றும் யோசனைகளுடன் நான் ஒத்துப்போகிறேன் அன்பரே..//

மிக்க நன்றி நண்பரே...

ஆ.ஞானசேகரன் said...

கனிவான யோசனைகள்தான்...

அ.மு.செய்யது said...

எது எப்படியோ என்னைப் பொறுத்தமட்டில், என்னால் 400 செலவு செய்யமுடியும் ??

ஆனால் பலருக்கு இந்த தொகை கொஞ்சம் கேள்விக்குறி தான்.ஒரு நல்ல பயனுள்ள நிகழ்ச்சி,பணம் என்ற ஒரே காரணத்துக்காக தவிர்க்கப்பட கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

மேலும் பைத்தியக்காரன்,யுவகிருஷ்ணா இவர்களின் கருத்திலும் நியாயமில்லாமல் இல்லை.பார்ப்போம்.

இடுகைக்கு நன்றி அன்புமணி !!!

வால்பையன் said...

முதன்முறை என்பதால் சில ரிஸ்க்குள் இருக்கும்!
தவறுகள் போக போக சரி செய்யப்படுவது தானே இயல்பு!
யாருக்கு தான் கைகாசை தண்ணியாக செலவு செய்ய மனம் வரும்!

இராகவன் நைஜிரியா said...

நன்றி அன்பு...

அருமையான இடுகை.

ரூ. 400 என்பது எனக்குப் பெரியவிசயமே இல்லை. ஆனால் கலந்து கொள்ள இயலாத நிலையில் நான் இருக்கின்றேன். பணம் இருந்தாலும், இந்த மாதிரி விச்யங்கள் இங்கு எனக்குக் கிடைக்காதல்லவா?

முதல் தடவை செய்யும் போது என்னதான் பட்ஜெட் போட்டாலும், துண்டு விழாமல் செய்யவது என்பது ரொம்ப கஷ்டமான காரியம்.

இரண்டு / மூன்று பட்டறைகள் நடத்தியபின் அவர்களுக்கும் சரியான கணக்குப் புரிய ஆரம்பிக்கும், அதன் பின் குறைக்க இயலும் என்பது என் நம்பிக்கை.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...