Monday, 8 February 2010

சமூகமும், நிகழ்வுகளும்...

நீதி வெல்வது எப்போது?
ரியானாவை சேர்ந்த 14 வயது மாணவி ருசிகா (டென்னிஸ் வீராங்கனை) மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. ரத்தோரை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை உ.பி. மாநில வாலிபர் ஒருவர் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்திருக்கிறார். அப்போது ரத்தோரின் முகத்தில் மட்டும் கத்தி குத்து விழுந்திருக்கிறது. அந்த இளைஞர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்த வழக்கு 19 வருடங்களாக நடந்து வருகிறதாம். சம்பந்தப்பட்ட அந்த மாணவி டி.ஜி.பி ரத்தோர் வழக்கை வாபஸ் பெறச் சொல்லிதொடர்ந்து மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

வித்தியாசமான (வசதி படைத்த) காதலரா நீங்கள்?
காதலர் தினம் வருடா வருடம் கொண்டாடப்பட்ட வந்தாலும் எதிர்ப்புகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஹெ-காப்டர் மூலம் வானில் பறந்தபடி காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், மும்பையில் தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் சென்ற வருடம் இரண்டு பேர்மட்டுமே கொண்டாடினர். இந்த வருடமும் இதுவரை 14 பேர் பதிவு செய்திருக்கிறார்களாம்! ம்... ம்...

தாய்மைக்கு வணக்கம்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வருடந்தோறும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகளை செய்து வருகிறது. சென்ற வருடம் வைரமுத்து, சு.கி.சிவம் உட்பட 10 பேரின் தாய்மார்களுக்கு பாராட்டு விழா நடத்தியது. அதுபோல் இந்த வருடம் மயில்சாமி அண்ணாதுரையின் தாயார் பாலசரஸ்வதி, இசையமைப்பாளர் ஏ,ஆர் ரஹ்மானின் தாயார் கரீமா பேகம், இயக்குநர் சங்கரின் தாயார் முத்துலட்சுமி உட்பட 14 பேரின் தாயார் தேர்வு செய்யப்ட்டுள்னர். இந்த விழா வரும் 11-ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது.
 
காஷ்மீர் மாநிலத்தில் பனிப்புயல் தாக்கி

 உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு எனது

கண்ணீர் அஞ்சலி. அவர்களது குடும்பத்தாருக்கு

ஆழ்ந்த இரங்கல். காயமுற்ற வீரர்கள்

விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
 




7 comments:

இராகவன் நைஜிரியா said...

காஷ்மீரில் உயிரிழந்த நம் ராணுவ வீரர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

கவி அழகன் said...

good keep writing

கார்த்திகைப் பாண்டியன் said...

காஷ்மீரில் உயிரிழந்த நம் ராணுவ வீரர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Anonymous said...

//காஷ்மீர் மாநிலத்தில் பனிப்புயல் தாக்கி

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு எனது

கண்ணீர் அஞ்சலி. அவர்களது குடும்பத்தாருக்கு

ஆழ்ந்த இரங்கல். காயமுற்ற வீரர்கள்

விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.


எனது அனுதாபங்களும்

நட்புடன் ஜமால் said...

காஷ்மீரில் உயிரிழந்தவர்களை இழந்தவர்களுக்கு எனது பிரார்த்தனைகள்.

கமலேஷ் said...

காஷ்மீரில் உயிரிழந்த நம் ராணுவ வீரர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Unknown said...

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...