பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்காக சென்ற அப்பா சந்தோசமாக வீட்டுக்கு வந்தார்.
''என்ன போன காரியம் என்ன ஆச்சு? நல்லபடியா முடிஞ்சிதா...''
''பத்திரப் பதிவு அலுவலகத்திலே இன்னைக்கு யாருமே லஞ்சம் கேக்கலை. எல்லாரும் திருந்திட்டாங்களா? ஆச்சரியமாயிருக்குடி'' என்று மனைவியிடம் சொன்னபடி சட்டையைக் கழற்றினார் அப்பா.
''அப்பா...நீங்க பத்திரப்பதிவு செய்யப்போறீங்கன்னு தெரிஞ்சதால, நான்தான் அந்த ஆபீசுக்கு போன் பண்ணி இன்னைக்கு உங்க அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வராங்க... கவனமா இருங்கன்னு போன் பண்னேன்... ''
என்றாள் மகள் செல்வி.
தந்தை எதுவும் சொல்லத் தோன்றாமல் மகளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
12 comments:
சிறுகதை அருமை
தொடருங்கள்
அட.. நல்ல ஐடியாவா இருக்கே... ஆகமொத்தம் யாரும் திருந்தல...
தொடர்வோம் வேலு... உங்கள் ஆதுரவோடு...
நன்றி பாலாசி...திருந்தின மாதிரி தெரியல... கொஞ்சம் பயந்த மாதிரிதான் இருக்காங்க. தொடர்ந்து ரெய்டு பண்ணினாங்கன்னாதான் பயம் இருக்கும். பார்ப்போம்...
குட்டி கதை அருமை.
நண்பரே.. நலமா..??
//butterfly Surya said...
குட்டி கதை அருமை.
நண்பரே.. நலமா..??//
நன்றி நண்பா... நான் நலமே....தாங்கள் கேட்பதன் அர்த்தம் புரிகிறது. பணிச்சுமை காரணமாக வலைத்தளத்தில் முழுமையாக வலம் வர முடியவில்லை. முடிந்தபொழுது அவசியம் அனைவரின் வலைத்தளத்திற்கும் வருகிறேன். தாங்கள் நலமுடன் இருக்க ஆசைப்படும்... உங்கள் நண்பன்.
வணக்கம். கதை நல்லா இருந்தது.
ரொம்ப நாள் ஆச்சுங்க உங்களைப் பார்த்து? நலமா?
நல்லாயிருக்கு நண்பரே!
------------------
எல்லோரும் கேட்டதுதான் நலமா-ரொம்ப நாளாயிற்றே!
//இராகவன் நைஜிரியா
வணக்கம். கதை நல்லா இருந்தது.
ரொம்ப நாள் ஆச்சுங்க உங்களைப் பார்த்து? நலமா?//
//நட்புடன் ஜமால்
நல்லாயிருக்கு நண்பரே!
------------------
எல்லோரும் கேட்டதுதான் நலமா-ரொம்ப நாளாயிற்றே!//
நலமே... பணிச்சுமை அதிகமாகிவிட்டது...முடிந்தவரையில் நேரம் ஒதுக்கி அனைவரின் வலைத்தளத்திற்கும் வந்துபோகிறேன்... யாரும் வருத்தப்பட வேண்டாம். தாங்களும் நலமுடன் இருக்கவே விரும்புகிறேன்.
என்ன செய்வது அந்த அளவிற்கு கீழ்தரமாக நடந்துகொள்கிறார்கள் . நமது சேவகர்கள்
அவர் பெண்ணை ...ஒரு நாள் முதல்வராக்கிப் பார்க்கலாமே
நல்லா இருக்குங்க. இவர்கள் எந்த காலத்திலும் திருந்தமாட்டார்கள்
Post a Comment