என் மனைவிக்கு சமீப காலமாக அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்பட்டு வருகிறது. இதற்காக நரம்பியல் நிபுணர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என சிகிச்சை மேற்கொண்டும் அவ்வளவாக பலனில்லை. (தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறோம்.)
இதற்கிடையில் பலரும் மேல்மருவத்தூர் சென்று வாருங்கள். அங்கு சென்று வந்தால் குறைகள் தீரும் என்றனர். மருவத்தூர் செய்திகள் என்று தொலைக்காட்சியில் வருவ்தையும் பாருங்கள் அப்போது உங்களுக்கே புரியும் என்று சொல்ல, அதன்படியே பார்த்த என் மனைவியும் மேல்மருவத்தூர் செல்ல அதிக ஆர்வம் கொண்டாள். என்மீது அக்கறை இருந்தாள் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தாள். சரி என்று நானும் என் மனைவி மற்றும் சகோதரியும், சகோதரியின் மகனும் மேல்மருவத்தூர் சென்றோம். அர்ச்சனைக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருந்தாலும், கம்பித் தடுப்புகளை போட்டு சுற்றிக் கொண்டே வர வைத்தார்கள். (அந்தக் கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறை) சுற்றிவந்து மேல்மருவத்தூர் அம்மனை தரிசிக்க கூடிய நேரத்தில் அம்மா வருகிறார் அம்மா வருகிறார் என்று ஒரே பரபரப்புடன் அங்கிருந்தவர்கள் எங்களை நிற்க வைத்துவிட்டார்கள். பங்காரு அடிகளார் வந்து சென்றதும் எங்களை நல்ல தரிசனம்கூட செய்யவிடாமல் விரட்டாத குறையாக அனுப்பிவைத்தார்கள். அழைத்து வந்த எனக்கு மட்டுமல்ல மனக்குறைகளை போக்கும் ஆர்வத்துடன் வந்த என் மனைவியும், சகோதரியும், சகோதரியின் மகனும் இந்தச் செயலால் மிகவும் வேதனையுற்றோம். கோயிலுக்கு வெளியே வந்து அங்கிருந்தே தெரிந்த மேல்மருவத்தூர் அம்மனை வணங்கிவிட்டு வந்தோம். ம்...
4 comments:
உங்கள் மனைவியின் நலத்திற்கு எமது பிரார்த்தனைகள்
( வேற ஒன்னும் சொல்ல இயலாது )
நானும் ஒருதடவை போயிருக்கிறேன் அருமையான ஆலயம்
உங்களின் பிரார்த்தனை வெற்றிபெறட்டும்
நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life
உங்களின் பிரார்த்தனை வெற்றிபெறட்டும்
குடந்தை என்ற பெயர் பார்த்தவுடன் உங்கள் தளத்திற்கு வந்தேன் நண்பரே தொடர்கிறேன்
kudanthaiyur.blogspot.com
Post a Comment