Saturday, 4 April 2009

பிரபல பதிவராக விருப்பமா?

பிரபல பதிவராக யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதற்கு பத்து பத்து வழிகளை அவ்வப்போது பலர் அள்ளிவிட்டும் வருகிறார்கள். நான் அப்படி எதுவும் சொல்லப்போவதில்லை.இதற்கு எளிய வழி எதுவும் இல்லையா? இருக்கிறது.

சென்னையில் அவ்வப்பபோது நடத்தப்படும் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ளுங்கள். பல பிரபல பதிவர்கள் அங்கு வருவார்கள். பிரபல பதிவர்களை சந்தித்து அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். புதிய பதிவர்களை வரவேற்கும் விதமாக நடைபெறும் இந்த சந்திப்பு வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகே நடைபெறும். எல்லோரும் வட்டமடித்து அமர்ந்திருப்பார்கள். அனுமதி இலவசம். என்ன ரெடியா?

இடம் : மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை

நாள் : 05- 04 -2009. ஞாயிற்றுக்கிழமை

சந்திப்பு பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள-

பாலபாரதி – 9940203132

லக்கிலுக் – 9841354308

அதிஷா – 9884881824

கேபிள் சங்கர் - 9840332666

21 comments:

ttpian said...

கருனனிதிக்கு புலிகல் கொலை மிரட்டல்?
மலிவு விளம்பரம் தேடுவதில்,தமிழக அரசியல்வாதிகள்,மிக மிக மட்டமானவர்கள்

குடந்தை அன்புமணி said...

// ttpian said...
கருனனிதிக்கு புலிகல் கொலை மிரட்டல்?
மலிவு விளம்பரம் தேடுவதில்,தமிழக அரசியல்வாதிகள்,மிக மிக மட்டமானவர்கள்//

அனைத்துப் பின்னூட்டங்களும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. இதில் வலைப்பதிவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

பழமைபேசி said...

நண்பா, எனக்கு துண்டு போட்டு இடம் புடிச்சி வையுங்க சரியா?

குடந்தை அன்புமணி said...

//பழமைபேசி said...
நண்பா, எனக்கு துண்டு போட்டு இடம் புடிச்சி வையுங்க சரியா?//

சரி,நண்பா!

Raju said...

என்னால வரமுடியாத்தற்கு வருந்துகிறேன் நண்பா...
அப்படியே எனக்கும் கொஞ்சம் "யோசனைகளை வாங்கி ரகசியமா" மெயில் அனுப்புங்க!
கேபிள் அண்ணன ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க!

லோகு said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
சென்னையில் இருந்தா மட்டும் தா பிரபலமா??



(சும்மா லுளுலாய்)

ஆ.சுதா said...

அடடா நாளக்கி பார்த்து என்க்கு மேட்ச் இருக்கே...ச்சோ கொஞ்சம் வருத்தம் தான், (இல்லன்னாலும் வந்திட்டுதான வேறு வேல பாப்போம்)
சரி என்னவிடுங்க அனபுமணி நீங்க போரீங்களா?

குடந்தை அன்புமணி said...

//டக்ளஸ்....... said...
என்னால வரமுடியாத்தற்கு வருந்துகிறேன் நண்பா...
அப்படியே எனக்கும் கொஞ்சம் "யோசனைகளை வாங்கி ரகசியமா" மெயில் அனுப்புங்க!
கேபிள் அண்ணன ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க!//


பகிரங்கமாகவே என் வலையில் சொல்கிறேன் நண்பா!

குடந்தை அன்புமணி said...

//லோகு said...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
சென்னையில் இருந்தா மட்டும் தா பிரபலமா??

(சும்மா லுளுலாய்)//

நான் அந்த கருத்தில் சொல்லவில்லை நண்பரே! பிரபல பதிவர்கள் வருவார்கள். அவர்களிடம் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றே சொல்கிறேன்.

லக்கிலுக் said...

சந்திப்பு பற்றிய விவரங்களை பதிவிட்டதற்கு நன்றி.

பிரபலம் பிரபலமல்லாத என்றெல்லாம் பதிவர்களை பிரித்துப் பார்ப்பது சரியல்ல என்று நினைக்கிறேன். எல்லோருமே பதிவர்கள் தான். சரக்கும், நேரமும் இருப்பவர்கள் நீடிக்கிறார்கள் என்று மட்டும் சொல்லலாம்.

குடந்தை அன்புமணி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
அடடா நாளக்கி பார்த்து என்க்கு மேட்ச் இருக்கே...ச்சோ கொஞ்சம் வருத்தம் தான், (இல்லன்னாலும் வந்திட்டுதான வேறு வேல பாப்போம்)
சரி என்னவிடுங்க அனபுமணி நீங்க போரீங்களா//

ஆமாம் நண்பா! நீங்களும் கட்டாயம் வாங்க!

குடந்தை அன்புமணி said...

//லக்கிலுக் said...
சந்திப்பு பற்றிய விவரங்களை பதிவிட்டதற்கு நன்றி.

பிரபலம் பிரபலமல்லாத என்றெல்லாம் பதிவர்களை பிரித்துப் பார்ப்பது சரியல்ல என்று நினைக்கிறேன். எல்லோருமே பதிவர்கள் தான். சரக்கும், நேரமும் இருப்பவர்கள் நீடிக்கிறார்கள் என்று மட்டும் சொல்லலாம்.//

இதுக்குத்தான் அங்க வரச்சொல்லி அழைப்பு விடுத்தேன். பிரபல என்பதற்கு பதில் அனுபவ பதிவர் என்று சொல்லிட்டாப்போச்சு!

வேத்தியன் said...

சந்திப்பு நன்றாக நடக்க வாழ்த்துகள்...
இலங்கையில இருந்துட்டு இத மட்டும் தான் சொல்ல் முடியும்...
:-)

ச்சும்மா உல்லுலாயிக்கு...

குடந்தை அன்புமணி said...

//வேத்தியன் said...
சந்திப்பு நன்றாக நடக்க வாழ்த்துகள்...
இலங்கையில இருந்துட்டு இத மட்டும் தான் சொல்ல் முடியும்...
:-)

ச்சும்மா உல்லுலாயிக்கு...//

பதிவர் சந்திப்பின் தொகுப்பை உங்களுக்கு வழங்கி, உங்கள் ஆற்றாமையை ஈடு செய்தால் போயிற்று!

தேவன் மாயம் said...

பிரபலமாயிட்டா எங்களைக்
கண்டுக்கங்க அன்பு!!

தேவன் மாயம் said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
சென்னையில் இருந்தா மட்டும் தா பிரபலமா??



(சும்மா லுளுலாய்)///

ஏங்க, அன்புமணிக்கிட்டப் போய்!!!

குடந்தை அன்புமணி said...

// thevanmayam said...
பிரபலமாயிட்டா எங்களைக்
கண்டுக்கங்க அன்பு!!//

நீங்களெல்லாம் எங்களை மறக்காம இருந்தா சரிதான்!

சென்ஷி said...

:-))

சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்று பிரபல பதிவராக மற்றவருக்கு ஆலோசனை சொல்ல என் வாழ்த்துக்கள்

Arasi Raj said...

காந்தி தாத்தாவை மொக்கை போட்டு கொடுமைப் படுத்தாதீங்க ..Pls

Anonymous said...

ஆஹா இதான் விசயமா???
நானும் நீங்க ஏதோ நல்ல ஐடிய கொடுக்க போறீங்கன்னு வந்திட்டன்!
வாழ்த்துக்கள் சந்த்திப்பிற்கு

ஆதவா said...

நல்லபடியாக போய் சந்திச்சுட்டு வாங்க. இன்னொரு முறை சென்னை வரும் பொழுது வாய்ப்பு கிடைத்தால் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன்..

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...