பதிவர் கோமா அவர்கள் ஒரு படத்தை தன்பதிவில் போட்டு அதை கண்டுபிடியுங்கள் பார்கலாம்னு சொன்னாங்க. சரி, நாமளும் அப்படி ஒரு பதிவு போடலாம்னு யோசிச்சப்ப, இந்த கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. இந்த கதைக்கு முடிவை நான் எழுதலை. அதை சொல்லப்போவது நீங்கள் தான். என்ன தயாரா?
இந்த கதை, பல வருடங்களுக்கு முன் நடந்தது. (இந்த வரி, நீங்கள் சொல்லப்போகும் முடிவிற்கும் சம்பந்தப்பட்ட ஒரு க்ளுவாகவும் இருக்கும்) அந்தக்காலத்திலும் வேலைதேடி அண்டை நாடுகளுக்கு பயணம் செல்வது வாடிக்கையான விடயம்தான். அந்த மாதிரி ஒரு நான்கு நண்பர்கள் பயணம் தொடர்ந்தார்கள்.முதல் நபருக்கு சிற்பம் செய்யும் வேலையும், 2-ம் நபருக்கு தையல் வேலையும், 3-ம் நபருக்கு ஆபரணத்தொழிலும், 4-ம் நபருக்கு மந்திர தந்திர வேலைகளும் தெரியும்.
நால்வரும் பயணக் களைப்பில் ஒரு இடத்தில் கூடாரமடித்து தங்கினார்கள். வழி செலவுக்காக அவர்கள் கையில் விலை மதிப்பற்ற பொருட்கள் பலவும் வைத்திருந்ததால், அப்பொருட்டகள் களவுப் போகாமல் இருக்க, இந்த இரவுப் பொழுதில் ஒவ்வொருவரும் மாற்றி காவல் இருப்பது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். அதன்படி முதலில் சிற்பத் தொழில் தெரிந்தவன் காவல் இருந்தான். அவனுக்கு தூக்கம் வராமல் இருக்க தன் கைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பெண் சிற்பத்தை செய்ய ஆரம்பித்தான். அவனின் காவல் நேரம் முடிவதற்குள் சிலையை செய்து முடித்தான்.
பின்பு, தையல் தொழில் செய்பவன் காவலுக்கு வந்தான். அவன் சிற்பி செய்த சிலையைப் பார்த்தான். அந்த சிலைக்கு ஆடைகள் தைத்து, அவன் காவல் நேரத்தை பூர்த்தி செய்தான்.
பின்பு காவல் பொறுப்பை ஆபரணத் தொழில் செய்யபவனிடம் ஒப்படைத்தான். அவன் சிலையையும், அதற்குத் தைக்கப்பட்ட ஆடைகளையும் கண்டு, இதற்கு ஆபரணம் செய்து போட்டால் அழகாக இருக்கும் என்று தோன்ற, அப்படியே செய்து முடித்தான். அடுத்து, காவல் பொருப்பு மந்திர, தந்திர தொழில் தெரிந்தவனிடம் சென்றது.
அவன் தனக்கு தெரிந்த மந்திரத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த சிலைக்கு உயிர் கொடுத்தான். பொழுது விடிந்தது.
அனைவரும் கண்விழித்தனர். அழகுமிக்க பெண்ணெருத்தி அங்கிருப்பதைக் கண்டு அதிசயத்தனர்.
இப்பொழுது அவர்களுக்குள் ஒரு சண்டையே மூண்டது. சண்டைக்கு காரணம் அந்த உயிர்பெற்ற பெண்ணை யார் திருமணம் செய்து கொள்வது என்பதுதான். சண்டை முற்றி ஒரு தீர்வு பெறமுடியாமல் தடுமாறினார்கள். அதற்காக அந்த நாட்டு அரசனை அணுகுவது என்று முடிவு செய்தனர்.
அரசனும் நடந்தவற்றை எல்லாம் கேட்டு, ஒரு தீர்ப்பு சொன்னார். அந்த தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டனர்.
அந்த தீர்ப்பு என்னவாக இருக்கும்.
நீங்கள் சொல்லுங்கள்!
31 comments:
ஹாஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
என்னண்ணே இவ்ளோ பழைய்ய கதையெல்லாம் போடுறீங்க :)
பெண் மானம் காப்பவனே சிறந்த கணவன் அப்படின்னு நீதிக்கதையில சொல்லியிருப்பாங்க. நீங்க சொன்ன கதையில புதுசா ஏதும் டுவிஸ்ட் இருக்கான்னு நீங்கதான் சொல்லனும்
உடைகள் தைத்துக் கொடுத்து அந்தப் பெண்ணின் மானம் காத்தவனைத்தான் அவள் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார்..
Silaiya padaithavan appan agiran.Silaiku nagai potavan sogotharanagiran.Silaiku- uyir koduthavan kadavulaikiran.Silai manam kathavane kanavakiran(Tailor).Enna namma answer sariya? - Jegan Mohan
அன்புமணி!!
நாங்க தீர்ப்பை சொல்லுபவர்கள் அல்ல!! தீர்ப்பை மாத்தி எழுதுபவர்கள்!!!
(அப்பாடி! ஒருவழியா சமாளிச்சாச்சு!! விடு ஜூட்!!)
உருவாக்கியதால் சிற்பி தாய் ஆகிறான்!
உடைகொடுத்ததால் தையல்காரன் அண்ணன் ஆகிறான்!
உயிர் கொடுட்ததால் மந்திரவாதி தந்தை ஆகிறான்...!
ஆஹவே... ஆபரணம் அண்வித்தவைனையே!திருமணம் செய்ய சொல்லியிருப்பார் எண்று படித்த நினைவு
சொன்னது சரியா???
ஆக்கப்பட்ட பொருள், அதுவும் நூதனமான, நுட்பமான மக்களும் அவர்களின் திறன் அனைத்தும் அரசாங்கத்திற்கே சொந்தம். அவள் அரசை சேர்ந்தவள். மேலும் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் சளைக்காமல் மொக்கை போட்டு, நம் பகைவர்களை நம் நாட்டு எல்லைக்குள்ளே கால் வைக்காது பாதுகாக்கும் நமது "நையாண்டி நைனா"விற்கு அவளை தாரமாக கொடுக்கிறேன்.
நீங்கள் அனைவருமே என் அடிமைகள்தான்..அதனால் ஹி..ஹி.. அந்த பெண்ணை நாந்தான் கட்டிக்குவேன்...ராஜா சொன்னது
மகா பாரதத்தில் ஒரே பெண்ணை ஐவர் மணந்திருக்கின்றனர்.. அதே போல் நால்வருமே அந்த பெண்ணை மணந்து கொள்ள சொல்லியிருப்பார். அந்த காலத்தில் இது சகஜம் தானே..
நான் இந்த பக்கம் வரவே இல்லை...
அன்புமணி அண்ணே..இந்த மாதிரி புதிர் பதிவு போடும் போது Comment Moderation வைங்க!
நம்மாளுக வெவரமானவுக...ஒரு ஆளு பதில் சொன்னத வச்சே, பதில் சொல்லிருவாங்க!
அதிகப் பிரசிங்கித்தனத்திற்கு மன்னிக்கவும்.
நானும் பள்ளியில் படிச்சுதுதான்.
உருவாக்கியதால் சிற்பி தாய் ஆகிறான்!
உடைகொடுத்ததால் தையல்காரன் அண்ணன் ஆகிறான்!
உயிர் கொடுத்ததால் மந்திரவாதி தந்தை ஆகிறான்...!
அழகுற ஆபரணம் கொடுத்ததால் கொல்லன், சகோதரி ஆகிறான்.
ஆனால் அழகியை ஆட்கொள்ள, ஆள்பவன் தேவைப்படுவதால், ஆளும் அரசனே மணந்து கொள்கிறான்!
\\கொல்லன், சகோதரி ஆகிறான்.\\
கொல்லன் எப்படி சகோத்ரி ஆக முடியும் பழமைபேசி...
சகோதரன்னு என் சிற்றறிவு சொல்லுது..
//டக்ளஸ்....... said...
\\கொல்லன், சகோதரி ஆகிறான்.\\
கொல்லன் எப்படி சகோத்ரி ஆக முடியும் பழமைபேசி...
சகோதரன்னு என் சிற்றறிவு சொல்லுது..
//
நல்ல கதையா இருக்கே? சிற்பி தாயாகுறான்.... கொல்லன் சகோதரி ஆகக் கூடாதாங்க?!
அது எப்பிடி இருந்தாலும், அழகி உங்களுக்கும் இல்லை, எனக்கும் இல்லை...இராசாவுக்குத்தான்!!
முதலில் அவள் அவளுக்கே சொந்தம்... யாருக்குத் தான் சொந்தம் என்பதை அவள்தான் முடிவு செய்யவேண்டும்.. ஒரு பெண்ணைப் பெற்றுவிட்டதால் சொந்தம் கொண்டாடிட முடியாது.. பெண் என்ன பொருளா?? வந்தார் போனார் எல்லாம் சொந்தம் கொண்டாடிட..
அவள் யாருக்கும் சொந்தமில்லை... அல்லது
அவள் யாருக்குச் சொந்தமோ அதை அவளே தேர்ந்தெடுக்கவேண்டும்!!
கதை இப்படியே முடிவு பெறுவது நன்று!!
ஆரம்பிச்சிட்டீங்களா... நீங்களும்,
திரு.மாதவராஜ் சார் தான் இந்த மாதிறி (விடு)கதை எழுதி கொஞ்சம் மூலையை வேலை வாங்கினார்.
இப்ப நீங்களும். வரவேற்கிரேன்.
இப்படி இன்னும் நிறைய கதை எழுதுங்க..
கதை பழையது என்றாலும் படிக்க நல்லாயிருந்தது. நான் எவ்ளவு சோசித்தும் விடை கிடைக்கவில்லை அன்புமணி சார்.
நீங்க விடை அறிவித்த பின் பார்த்து கொள்கின்றேன்.
விடுகதையும், அதன் விடையும் படிச்சிட்டேன்
நன்றி,
இனிமே இது மாதிரி அடிக்கடி போடுங்க.
என்ன இது சின்ன புள்ளைத்தனமா இருக்கு.
பைசல் பண்ணி நான் இங்கே மணவறையிலே இருக்கேன். அழைத்துவாருங்கள் பெண்ணை.
அப்போ சிற்பி தாயனதையும், கொல்லன் சகோதரியானதையும் வன்மையாக கண்டிக்கிறேன் மிஸ்டர். பழமைபேசி..
நாட்டாமை தீர்ப்ப நாலு பேரும் கேட்டுதான் ஆகணும்
அட லூசுப் பயலுகளா....
உங்ககிட்டத்தான் திறமை இருக்கே...
எல்லாரும் சேர்ந்து எத்தனை பீஸ் வேணுமே ரெடி பண்ணிக்க வேண்டியதுதானே...
4% வாட் மட்டும் அரசாங்கத்துக்கு கட்டுனா போதும்...
அப்படின்னு சொல்லியிருப்பாரோ
நான் விடுகதையிலே மாப்பிள்ளை பெஞ்சு
நாட்டாம !!!!! தீர்ப்ப மாத்தி சொல்லு !!!!!
அப்படி என்ன தான் சொன்னாரு ராஜா ....?????
தையல்காரர்தான் மாப்பிள்ளை.
அருமையான கதை
தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.html
அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...
http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html
நையாண்டி நைனா said...
என்ன இது சின்ன புள்ளைத்தனமா இருக்கு.
பைசல் பண்ணி நான் இங்கே மணவறையிலே இருக்கேன். அழைத்துவாருங்கள் பெண்ணை.
//////////////////
ha ha....
மாப்பிள்ளை ரெடி..பொன்னை கூப்பிடுங்க
SUREஷ் said...
அட லூசுப் பயலுகளா....
உங்ககிட்டத்தான் திறமை இருக்கே...
எல்லாரும் சேர்ந்து எத்தனை பீஸ் வேணுமே ரெடி பண்ணிக்க வேண்டியதுதானே...
4% வாட் மட்டும் அரசாங்கத்துக்கு கட்டுனா போதும்...
அப்படின்னு சொல்லியிருப்பாரோ
///////////////////////////////
கிறுக்கு பசங்க..
இது வேதாளம் விக்ரமாதித்யன் கிட்ட் சொன்ன கதையாச்சே
அரசர், அந்த பெண் விருப்பம் அறிந்து மணக்கும்படி கூறியிருக்கலாம்.
//அமுதா said...
இது வேதாளம் விக்ரமாதித்யன் கிட்ட் சொன்ன கதையாச்சே//
இருக்கட்டுமே! கதை யாருதுங்கிறது முக்கியமில்ல.(என்னுடைய கதைன்னும் நான் சொல்லை) முடிவை சொல்லுங்க!
அன்புமணி சார்...
சீக்கிரம் முடிவை சொல்லுங்க சார்
Post a Comment