Tuesday, 2 June, 2009

நூல் வெளியீட்டு விழாவும், முத்தான சந்திப்பும்.


திட்டமிட்டபடி 'பொன்விசிறி' அய்க்கூ நூல் வெளியீட்டடு விழாவுக்குகிளம்பிக்கொண்டிருந்தேன். அப்போதே நம்ம பதிவர் முத்துராமலிங்கம் போன்செய்து எனது வருகையை உறுதி செய்து கொண்டார். பதிவின் மூலம் மட்டுமேஅறிமுகமான அவரை சமீபத்தில்தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டுஇவ்விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தேன். எனது பதிவில் இருந்தபுகைப்படத்தை வைத்து, நான் அரங்கினுள் நுழைந்ததுமே என்னை அடையாளம்கண்டு என்னருகில் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். மிகவும் இளைமையானநண்பர். பழக இனிமையானவராகவும் இருக்கிறார்.
இந்நிகழ்வு பற்றி அவரும் பதிவிட்டிருக்கிறார்... விரிவாகவே...விடுபட்டவைமட்டும் இங்கே...


தமிழை வளர்க்க வேண்டியவர்கள் தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள் மட்டுமல்லாது அனைவரும் செய்ய வேண்டும். கவிதை எழுதுவதற்கு படிப்போ, பதவியோ முக்கியமல்ல, அனுபவமே போதும் பண்டைய காலத்தில் அரசர்கள்,அரசிகள், படைவீரர்கள், புலவர்கள், துறவிகள் வரை பலரும் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். அதைப்போலவே கணிப்பொறியியல் படைத்த அருணாசலசிவாவும் கவித்திறைன வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார் முகிலை ராசபாண்டியன்.

மரபு கவிதை, புதுக்கவிதை தொடர்ந்து அய்க்கூவில் கரைந்து கொண்டிருக்கிறேன் என்றார் ஓவியக்கவிஞர் அமுதபாரதி.( ஓவியமும், கவிதையும் படைக்கும் ஆற்றல் பெற்ற இவருக்கு ஓவியக்கவிஞர் என்ற பட்டம் அளித்தாராம் கவிஞர் கண்ணதாசன்.) மரபுக்கவிதை,புதுக்கவிதையைவிட அய்க்கூ நம்மை கற்பனையை விரிவடைய வைக்கும். அதனால் அய்க்கூமீது அதிக ஈடுபாடு கொள்கிறேன் என்றார். காஞ்சிபுரத்தில் இருந்த பல்கலைகழகத்தை சேர்ந்த போதிதர்மா என்பவர் சீனாவுக்கு அய்க்கூ வடிவத்தை பரப்பினாராம். அவர்களுக்கு தமிழ் புரியாது என்பதால் தியானம் (அய்க்கூ கவிதை தியான நிலைக்கு நம்மை கொண்டு செல்வதால் அதை தியானம் என்று அழைத்தாராம் அவர்) என்பதை தியான் என்று சொல்ல, அவர்களிடமிருந்து எழுத்துருவை பெற்ற ஜப்பானியர்கள் அதை சென் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதுவே அய்க்கூ என்று அழைக்கும்படி ஆயிற்று என்றார்.
கிரிஜா மணாளன். இவரை கவிஞர் என்றுதா்ன இதுவரை நினைத்திருந்தேன். இவர் ஒரு பதிவர் என்று இன்றுதான் அறிந்துகொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தோம். அவரின் வலை முகவரி...
smskavignarkal-world.blogspot.com
tiruchikavignkaral.tamilblogs.com
kavithaigal.tamilblogs.com


நாணற்காடன்: இவரின் கவிதையை ஏற்கனவே தங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். இவரை வயதானவராக இதுவரை நினைத்திருந்தேன். முப்பது வயதுக்குள் தான் இருக்கும், இவர் இந்தி ஆசிரியராக சேலம் ராசிபுரத்தில் பணிபுரிகிறாராம். இந்தி ஆசிரியர் என்பதில் எனக்கு வேதனை ஏதுமில்லை. தமிழ் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சிகள் செய்கிறேன் என்றார்.

பொன் விசிறி தொகுப்பிலிருந்து சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு...
சுவரில் ஆணிகள்
சொல்லாமல் சொல்லும்
அடியின் வலி!

அரைஞான் கயிறு
அறுத்தெறியப்பட்டது
சிதையில் பிணம்!

மேஜைக்கடியில்
நீளும் கைகளில்
துப்பப்பட்டது எச்சில்!

19 comments:

ச.முத்துவேல் said...

மகிழ்ச்சியளிக்கிறது இப்பதிவு. நன்றி.(நாணற்காடனோடு எனக்கும் தொலைபேசி வழி நல்ல அறிமுகம் உண்டு)

சென்ஷி said...

//மேஜைக்கடியில்
நீளும் கைகளில்
துப்பப்பட்டது எச்சில்! //

அருமை :)

இராகவன் நைஜிரியா said...

அருமையான இடுகை நண்பரே...

// அரைஞான் கயிறு
அறுத்தெறியப்பட்டது
சிதையில் பிணம்! //

அருமை. கடைசியில் போகும் போது அரைஞான் கயிறு கூட வராது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்.

ஆ.ஞானசேகரன் said...

மகிச்சியான நிகழ்வை பகிர்ந்ததில் மகிழ்ச்சியே>>>
//மேஜைக்கடியில்
நீளும் கைகளில்
துப்பப்பட்டது எச்சில்! //

ரசிக்கும் வரிகள்

ஆ.முத்துராமலிங்கம் said...

சுறுக்கமா அழகா எழுதிட்டீங்க அன்புமணி. புத்தம் பற்றி நானும் ஒரு தனி இடுகை இடுவேன்.

நட்புடன் ஜமால் said...

கவிஞரின் அறிமுகம் (அறியாத எனக்கு) நன்று அன்புமணியே.


\\மேஜைக்கடியில்
நீளும் கைகளில்
துப்பப்பட்டது எச்சில்! \\

அருமை வரிகள், இங்கனம் நடந்தால் சந்தோஷம்

thevanmayam said...

சந்திப்பு பற்றி நல்ல பதிவு!
சந்தோசம்!!

thevanmayam said...

/ அரைஞான் கயிறு
அறுத்தெறியப்பட்டது
சிதையில் பிணம்! //

ஆசை!! கடைசியில் கயிறுகூட இல்லை!!மிக நன்று!

thevanmayam said...

சுவரில் ஆணிகள்
சொல்லாமல் சொல்லும்
அடியின் வலி!
///

சே!

கவிக்கிழவன் said...

நன்றாக உள்ளது

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சது ரொம்ப சந்தோஷம்..:-)

ஆதவா said...

ஆ.முத்துராமலிங்கம் பதிவில் விவரத்தை அறிந்தேன். நீங்கள் சில கவிதைகள் கொடுத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, மூன்றாவது கவிதை சரியான அடி!!! (கவர்மெண்ட் ஸ்டாஃப் இருந்தீங்கன்னா படிங்கப்பூ!)

நாணற்காடன்... பெயரே சுண்டியிழுக்குது!

குடந்தை அன்புமணி said...

//ச.முத்துவேல் said...

மகிழ்ச்சியளிக்கிறது இப்பதிவு. நன்றி.(நாணற்காடனோடு எனக்கும் தொலைபேசி வழி நல்ல அறிமுகம் உண்டு)//

அடு்த்தமுறை நீங்களும் இலக்கிய கூட்டத்துக்கு வாங்க முத்துவேல்!

குடந்தை அன்புமணி said...

நன்றி!
சென்ஷி,ஆ.ஞானசேகரன்,கவிக்கிழவன்

குடந்தை அன்புமணி said...

//அருமை. கடைசியில் போகும் போது அரைஞான் கயிறு கூட வராது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்.//

ஆமாம் ராகவன் அண்ணே!

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...

கவிஞரின் அறிமுகம் (அறியாத எனக்கு) நன்று அன்புமணியே.


\\மேஜைக்கடியில்
நீளும் கைகளில்
துப்பப்பட்டது எச்சில்! \\

அருமை வரிகள், இங்கனம் நடந்தால் சந்தோஷம்//

எல்லாருடைய ஆவலும் அதுதான்.

குடந்தை அன்புமணி said...

// thevanmayam said...

சந்திப்பு பற்றி நல்ல பதிவு!
சந்தோசம்!!//

உங்க சந்தோசம் என்து சந்தோசம்!

குடந்தை அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சது ரொம்ப சந்தோஷம்..:-)//

விரைவில் நாமும் சந்திப்போம்!

குடந்தை அன்புமணி said...

நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சது ரொம்ப சந்தோஷம்..:-)

3 June, 2009 1:44 AM
Delete
//ஆதவா said...

ஆ.முத்துராமலிங்கம் பதிவில் விவரத்தை அறிந்தேன். நீங்கள் சில கவிதைகள் கொடுத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, மூன்றாவது கவிதை சரியான அடி!!! (கவர்மெண்ட் ஸ்டாஃப் இருந்தீங்கன்னா படிங்கப்பூ!)

நாணற்காடன்... பெயரே சுண்டியிழுக்குது!//

இலக்கியக்கூட்டத்துக்கு இதுதான் முதல்முறை வருகை என்றார் முத்துராமலிங்கம். அதனால் அவரை எழுதச் சொன்னேன். விடுபட்டவை மட்டும் நான் எழுதினேன்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...