Friday, 26 June, 2009

பதிவர் உண்மைதமிழனுக்கு எனது எச்சரிக்கை!

பதிவர் நைஜீரியா ராகவன் அவர்கள் ஒன்றரை மாத விடுப்பில் சென்னைக்கு வந்திருக்கிறார். நைஜீரியாவிலிருந்து வரும் வழியில் துபாயில் கலையரசன் உட்பட பல பதிவர்களை சந்தித்து உரையாடிய நிகழ்வை வேலூரான் பதிவாக போட்டிருந்தார்.

ராகவன் அண்ணன் 'இடைவெளி' என்ற பதிவில் விடுமுறை பற்றி எழுதியிருக்கும்போதே அவருக்கு பின்னூட்டத்தில் சென்னைக்கு வந்ததும் போன் பண்ணுங்கண்ணா என்று கூறியிருந்தேன்.

அவரை ஏர்போர்ட்டிலேயே சந்திக்கத்தான் விருப்பம். ஆனால் பாருங்க லீவு கிடைக்கவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் வழி தெரியவில்லை. அவராக தொடர்பு கொண்டால்தான் உண்டு என்ற அளவில் அவரிடமிருந்து வரும் போன்காலுக்காக காத்திருந்தேன்.

வியாழக்கிழமை வழக்கம் போல் வேலை முடிந்ததும் பஸ் ஏறி சென்ட்ரல் நிலையத்தில் இறங்க எத்தனிக்கும்போது போன் வந்தது. யாரென்று பார்த்தால் அண்ணன் ராகவன் அவர்கள்தான். சுமார் பத்து நிமிடம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் திருவல்லிக்கேணியில் இருப்பதாக சொல்ல, திருவல்லிக்கேணியில் எங்கு என்று நான் கேட்டேன். அவர் சொன்ன முகவரி எனது அலுவலகத்திலிருந்து நடைதூரம்தான் என்று சொன்னேன். எப்ப சந்திக்கலாம் என்றபோது அவரின் முகவரி கூறினார். மறுநாள் வேலை முடிந்ததும் இரவு ஏழரை மணிக்கு அவரது இல்லத்தில் சந்தித்தேன். அன்புடன் வரவேற்றார். பிறகு அவரது குடும்பத்தினரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

பிறகு அவருடன் பேசிக் கொண்டே ராகவன் அண்ணாவின் நண்பர் வைத்திருக்கும் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு வந்தோம். வரும் வழியில் துபாய் பதிவர் சந்திப்பு பற்றியும், சென்னை வந்ததும் இங்கு புதுகை அப்துல்லா, அ.மு. செய்யது, தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன், ஜீவன், ரசனைக்காரி ராஜி, ரம்யா, நாமக்கல் சிபி முதலான பதிவர்களை சந்தித்தது பற்றியும் கூறினார். அந்த வாய்ப்பை தவறவிட்டனே என்று வருந்தினேன். எனது தொலைபேசி நம்பரை அதற்கு பிறகுதான் இணையத்தில் இருந்து எடுத்ததாகவும் அதனால் அழைக்க முடியவில்லை என்றார்.

பதிவர்கள் எழுதும் கவிதைகள் பற்றியும், புரியாத கவிதைகள்,மொக்கை கவுஜைகள் பற்றியும் சுவையாக பேசிக்கொண்டு வந்தோம். கும்பகோணத்திலிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் பேசிக் கொண்டே வந்ததில் அவரின் நண்பரின் அலுவலகம் வந்திருந்தது. அந்த (மணி) நண்பரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் நெடுநாள் பழகியவர்போல இனிமையாகவே பழகினார். அண்ணனின் நண்பர்கள் எல்லாரும் அவர்போல்தான் இருப்பார்கள் போலும். அங்கிருந்து அவர்கள் வெளியில் கிளம்புவதாகத் தெரிந்தது. நான் நாசுக்காக, 'கிளம்புகிறேன்' என்றேன். அண்ணனும், அவரது நண்பரும் காரிலேயே போய்விடலாம் என்று சொல்ல, எங்களின் பேச்சு காரிலும் தொடர்ந்தது. அவர்கள் இருவருக்குமுள்ள நட்பு பற்றி பேச்சு தொடர்ந்தது. என்னை டி.எம்.எஸ்ஸில் இறங்கிவிட்டனர். வரும் ஞாயிறன்று மாலை 4.30 மணிக்கு தி.நகர் நடேசன் பார்க்கில் நடைபெறும் பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என்று கூறினேன். நிச்சயம் வருகிறேன் என்றார். இனியமையான அனுபவங்களை தாங்கிய அந்த சந்திப்போடு அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

அதுசரி தலைப்பிற்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லையே என்று குழப்பம் வேண்டாம்.... உண்மைத் தமிழனிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும். அதற்காகவே பதிவர் சந்திப்புக்கு கட்டாயம் வருவேன் என்றார் ராகவன் அண்ணன். என்ன கேள்வி கேட்பார் என்பது சஸ்பென்ஸ். எனவே, உண்மைத்தமிழன் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.

ராகவன் அண்ணனை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவர் சந்திப்புக்கு மறக்ககாம வந்திடுங்க...!

26 comments:

வண்ணத்துபூச்சியார் said...

அப்போ உண்மை தமிழனுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு செய்து விடணும்.

அது சரி.. அவரு..சந்திப்புக்கு வந்தா தானே கேள்வி கேட்பது..??

ஆ.ஞானசேகரன் said...

//ராகவன் அண்ணனை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவர் சந்திப்புக்கு மறக்ககாம வந்திடுங்க...! //

வாழ்த்துகள் நண்பா... எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்

ஜீவன் said...

வணக்கம்! அன்பு மணி எங்கள் சந்திப்பின்போது நீங்களும் இருந்திருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்! விரைவில் சந்திக்கலாம்!!

குடந்தை அன்புமணி said...

// வண்ணத்துபூச்சியார் said...
அப்போ உண்மை தமிழனுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு செய்து விடணும்.

அது சரி.. அவரு..சந்திப்புக்கு வந்தா தானே கேள்வி கேட்பது..??//

உண்மைத்தமிழன் கண்டிப்பாக வருவார் என்றே நினைக்கிறேன்... தங்கள் வருகைக்கும், பாலோவர் ஆனதற்கும் மிக்க நன்றி!

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
//ராகவன் அண்ணனை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவர் சந்திப்புக்கு மறக்ககாம வந்திடுங்க...! //

வாழ்த்துகள் நண்பா... எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்//

நிச்சயமா, கேட்டதாக சொல்றேன்.

குடந்தை அன்புமணி said...

//ஜீவன் said...
வணக்கம்! அன்பு மணி எங்கள் சந்திப்பின்போது நீங்களும் இருந்திருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்! விரைவில் சந்திக்கலாம்!!//

அந்த சந்திப்பை தவறவிட்டமைக்காக மிகவும் வருந்துகிறேன் நண்பரே! நிச்சயமாக விரைவில் சந்திக்க வாய்ப்பு உருவாகும். உருவாக்குவோம்!

நாமக்கல் சிபி said...

அந்த சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள்

1. புதுகை அப்துல்லா
2. அ.மு. செய்யது
3. இராகவன் நைஜீரியா
4. தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன்
5. ஜீவன்
6. ரசனைக்காரி ராஜி
7. நாமக்கல் சிபி

நாமக்கல் சிபி said...

அந்த சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள்

1. புதுகை அப்துல்லா
2. அ.மு. செய்யது
3. இராகவன் நைஜீரியா
4. தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன்
5. ஜீவன்
6. ரசனைக்காரி ராஜி
8. ரம்யா
9. நாமக்கல் சிபி

சொல்லரசன் said...

எப்படி இப்படி?

குடந்தை அன்புமணி said...

//நாமக்கல் சிபி said...
அந்த சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள்

1. புதுகை அப்துல்லா
2. அ.மு. செய்யது
3. இராகவன் நைஜீரியா
4. தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன்
5. ஜீவன்
6. ரசனைக்காரி ராஜி
8. ரம்யா
9. நாமக்கல் சிபி//

தகவலுக்கு மிக்க நன்றி சிபியாரே! மாற்றங்கள் செய்துவிட்டேன்.

குடந்தை அன்புமணி said...

//சொல்லரசன் said...
எப்படி இப்படி?//

அப்படி, அப்படி!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அப்பாடா..

தப்பிச்சேண்டா சாமி..!

ராகவன் அண்ணனை எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க..!

குடந்தை அன்புமணி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அப்பாடா..

தப்பிச்சேண்டா சாமி..!

ராகவன் அண்ணனை எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க..!//

என்னப்பு! அந்த முருகன்மேல பாரத்தைப்போட்டு்ட்டு பதிவர் சந்திப்புக்கு வாங்க... நாங்கள்ளலாம் இருக்கோம்ல...

Suresh said...

அட நல்ல விஷியம் நண்பா நானும் அவர திருச்சி வரும் போது சந்திப்பேன்

கலக்கல் பதிவர் சந்திப்பு மிஸ் செய்வது வருத்தமே

நல்ல விஷியம் நண்பா :-)

நான் சிறுகதை போட்டிக்கு ஒரு கதை எழுதியுள்ளேன் தங்களின் கருத்தும் மார்க்கும் அரிய ஆர்வமாய் உள்ளேன் ;)

காதலுக்கு கண்ணில்லை ? - உரையாடல் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதை.!

பழமைபேசி said...

அண்ணனுக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுங்க.... ஆனா, ஊருக்கு வர்ற விசயத்தை எனக்கு அவர் சொல்லவே இல்லை.... அவ்வ்......

குடந்தை அன்புமணி said...

// பழமைபேசி said...
அண்ணனுக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுங்க.... ஆனா, ஊருக்கு வர்ற விசயத்தை எனக்கு அவர் சொல்லவே இல்லை.... அவ்வ்...//

பதிவு போட்டிருந்தாரே... கவனிக்கலையா... இருந்தாலும் நான் சொல்லிடுறேன்...

குடந்தை அன்புமணி said...

//நான் சிறுகதை போட்டிக்கு ஒரு கதை எழுதியுள்ளேன் தங்களின் கருத்தும் மார்க்கும் அரிய ஆர்வமாய் உள்ளேன் ;)//

இதோ வர்றேன்...

ஆ.முத்துராமலிங்கம் said...

சந்திப்பு இனிமையானதை இனிமையோடு பகிர்ந்தமை சந்தோசமே!!

சரி நாளை சந்திப்போம்.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... நம்மை இப்படி மாட்டியாச்சா...

வாழ்க தம்பி அன்பு மணி

நையாண்டி நைனா said...

எங்க அண்ணனுக்கே எச்சரிக்கை விடும் உங்களை நாங்கள் கண்டிக்கிறோம்... நீங்கள் வரும்போது உங்களுக்கு வைலட்டு கொடி காமிப்போம்... (எத்தனை நாளுக்கு தான் கருப்பு கொடியையே காட்டுறது... )

இப்படிக்கு
நையாண்டி நைனா
பொருளாளர்
அகில உலக உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை.

நையாண்டி நைனா
தலைவர்
அகில உலக உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை -மும்பை கிளை.

அ.மு.செய்யது said...

ராகவன் அவர்களுடன் சந்திப்பு ஒரு சுவாரசியமான அனுபவம் தான் இல்லையா ??

RAMYA said...

உங்களை நாங்கள் நிஜமாவே மிஸ் பண்ணிட்டோம்.

அன்னைக்கி நல்லா இருந்திச்சி :))

RAMYA said...

வருந்திகின்றோம் சகோதரா அடுத்த முறை சந்திப்போம் !

அபுஅஃப்ஸர் said...

நானும் துபாயில் அவரை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி

அடுத்த சந்திப்பை விரைவில் பதிவிடுவீர்கள் என்ற எதிர்ப்பார்ப்பில்

முனைவர்.இரா.குணசீலன் said...

வலைப்பதிவு எப்படியெல்லாம் மனிதர்களுக்குள் தொடர்பை ஏற்படுத்துகிறது..........

தூரம், எல்லை கடந்து உலகமே கிராமம் போலச் சுருங்கிவிட்டது......

தமிழிச்சி said...

உங்கள் பதிவைப் படிக்கும் போது இந்த வலையம் எப்படி மனிதர்களை இணைத்திருக்கிறது என்று வியக்க வைக்கிறது. உங்கள் இயல்பான பதிவு அழகாக இருக்கிறது.
உண்மைத் தமிழன் வந்தாரா? என்றும் எழுதுங்கள்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...