Wednesday 15 July, 2009

அன்பு - 50!



குடந்தையில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பின்னால் வாய்க்கால் இருந்தது. விடுமுறை தினங்களில் என் நண்பர்கள் எல்லாரும் அந்த வாய்க்காலில் மீன் பிடிப்போம். வாய்க்கால் ஓரம் இருக்கும் மூங்கில் குத்தில் சிறிய மூங்கில் குச்சியை உடைத்து அதில் இருக்கும் முள்ளை அகற்றிவிட்டு, கடையில் நரம்பு நூலும், மீன் (பிடிக்க பயன்படும்) முள்ளும் வாங்கி, தூண்டில் தயார் செய்வோம்.

பின்பு மண்புழுக்களை தேடிப் பிடித்து அதை துண்டுகளாக்கி அந்த முள்ளில் மாட்டி, அந்த வாய்க்காலில் மீன் பிடிப்போம். மீன் பிடிப்பதற்கு வசதியாக வாய்க்கால் ஓரம் இருக்கும் இலவ பஞ்சு மரத்தில் (தலையணை, மெத்தை தயாரிக்க பயன்படும் இலவபஞ்சு மரம். பருத்திச் செடிகளிலும் பஞ்சு கிடைக்கும்.) ஏறி அதன் கிளையில் அமர்ந்து கொண்டு மீன் பிடிப்போம்.

அப்படித்தான் அன்றும் மீனுக்காக தூண்டிலை வீசி காத்திருந்தோம். தூண்டிலின் தக்கை துடிக்கவும் வேகமாக இழுத்தோம். அந்த தூண்டிலில் மாட்டியிருந்தது, மீனல்ல பாம்பு. அலறியடித்துக் கொண்டு தூண்டிலை வீசியெறிந்துவிட்டு ஓடி வந்துவிட்டோம். அன்றிலிருந்து மீன் பிடிப்பதையே விட்டுவிட்டோம்.

பி.கு.: அந்த வாய்க்காலை நம்பியிருந்த வயல்பகுதி குடியிருப்பாக மாறிவிட்டதால் இப்போது அந்த வாய்க்காலும் கழிவு நீர் வாய்க்காலாக மாற்றம் அடைந்துவிட்டது.

னக்கு திருமணம் முடிந்த மறுநாள் காலை சிற்றுண்டி சாப்பிட நானும், எனது அண்ணன் மற்றும் மைத்துனர்களுடன் அமர்ந்தேன். அனைவருக்கும் இலையில் இட்டலி(வி)யை வைத்தார்கள். நாங்கள் சாப்பிட அமர்ந்திருக்கும் அறைக்கு எதிரில் என் அத்தைப் பெண்கள் (மூத்தவர்களும், இளையவர்களும்) நின்று கொண்டு எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நம்மைப்பற்றி கமெண்ட் அடிக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டு என்னை நானே பார்த்துக் கொண்டேன். எல்லாம் சரியாத்தானே இருக்கு? பின் ஏன் சிரிக்கிறார்கள்?

இரண்டு இட்டலி சாப்பிட்டிருப்பேன். என் மனைவி உள்ளிருந்து, அந்த இட்டலி என்று குரல் கொடுப்பதற்குள் அவரின் வாயைப் பொத்தி உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள். அந்த நேரம் என் அப்பா அங்கு வர அனைவரும் அங்கிருந்து இடத்தைக் காலி செய்துவிட்டார்கள். அப்போது வேகமாக வந்த என் அண்ணி என் இலையிலிருந்த இரண்டு இட்டலிகளை எடுத்துக் கொண்டு வேறு இட்டலி வைத்தார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் சிரித்ததற்கும், அண்ணி இப்பொழுது இரண்டு இட்டலிகளை எடுத்துச் செல்வதற்கும் என்ன காரணம் என்று குழப்பத்துடன் எழுந்து போனேன். பிறகு என் மனைவி வந்து கூறியதுதான் விடயமே புரிந்தது. அந்த இரண்டு இட்டலியில் ஒன்றின் உள்ளே புளியங் கொட்டையை வைத்திருக்கிறார்கள். மற்றொன்றின் மீது தூள் உப்பை தூவியிருக்கிறார்கள் என்று.

கல்யாண மாப்பிள்ளைகளாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையா இருக்கணும்ங்கிறதுக்காக இதைச் சொல்றேன். (இல்லைன்னா இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.... கல்யாண மாப்பிள்ளைகளை இப்படியெல்லாம் கலாட்டா செய்யவும் வழியிருக்கு...)


அதுசரி.... தலைப்பு எதற்கு அன்பு-50! இது என் 50-வது இடுகை. அதுதான் வேறொன்றுமில்லை.

நன்றி - யூத்புல் விகடன் குட் பிளாக்ஸ்-ல் இந்த இடுகை...

56 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் 5o வது பதிவுக்கு வாழ்த்துக்கள். சுவையாகவும் இருக்கிறது.

குடந்தை அன்புமணி said...

//ஜெஸ்வந்தி said...
உங்கள் 5o வது பதிவுக்கு வாழ்த்துக்கள். சுவையாகவும் இருக்கிறது.//

மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

Raju said...

வாழ்த்துக்கள் தலைவா..!
அடிச்சு ஆடுங்க அண்ணே..!

மணிஜி said...

அன்பு..பார்த்து..வேப்பங்கொட்டையை வச்சுட போறாங்க..50 க்கு வாழ்த்துக்கள்.

புதுப்பாலம் said...

நகரில் இருந்த பெரும்பாலான குளம், குட்டை, வாய்க்கால்கள் எல்லாம் காய்ந்தும் விட்டது. மண் போட்டு மூடியும் விட்டார்கள். நீங்கள் சொல்வது போல் சில வாய்க்கால்களில் கழிவு நீர் தான் செல்கிறது.
காவேரி ஆற்றின் நிலமையும் மோசமாக உள்ளது. மணலை காணவில்லை. பெரிது பெரிதாக கண்ட செடிகள் முலைத்து கிடக்கிறது. கோடைக்காலத்தில் மாலை நேரத்தில் அங்கு சென்று விளையாட, அமர்ந்து காற்று வாங்க லயக்கற்ற இடமாகிவிட்டது.

அன்புடன்
இஸ்மாயில் கனி
http://kaniraja.blogspot.com

முனைவர் இரா.குணசீலன் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.....

குடந்தை அன்புமணி said...

// டக்ளஸ்... said...
வாழ்த்துக்கள் தலைவா..!
அடிச்சு ஆடுங்க அண்ணே..!//

தம்பியுடையான் படைக்கு அஞ்சர்ன். ஆடிடுவோம்.

குடந்தை அன்புமணி said...

//தண்டோரா said...
அன்பு..பார்த்து..வேப்பங்கொட்டையை வச்சுட போறாங்க..50 க்கு வாழ்த்துக்கள்.//

புதுமாப்பிள்ளைகளுக்குத்தானே மணிஜி. வாழ்த்துக்கு நன்றி.

குடந்தை அன்புமணி said...

நீங்க சொல்வதும் உண்மைதான் கனி ராஜ். ஊருக்கு சென்றபோது காவேரி, அரசலாற்றை பார்க்கும்போது கண்ணில் கண்ணீரே வருகிறது. நிர்வாகம் சரியில்லை...
தண்டோரா அவர்கள் பதிவிட்டு உசுப்பேத்தனும்.

குடந்தை அன்புமணி said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...//

நன்றி குணசீலன்.

குடந்தை அன்புமணி said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...//

நன்றி குணசீலன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

5o வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

தூண்டிலிலே நீங்கள் நினைத்த மீன் மாட்டவில்லை.

நினைத்தபடி மாப்பிள்ளை தூண்டிலில் மாட்டாமல் தப்பித்தார்.

நன்றாக இருக்கிறது பதிவு:)!

ஐம்பதுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் அன்புமணி!

இராகவன் நைஜிரியா said...

தம்பி தங்களின் 50 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

// கல்யாண மாப்பிள்ளைகளாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையா இருக்கணும்ங்கிறதுக்காக இதைச் சொல்றேன். //

என்னிக்கு கல்யாணத்திற்கு சம்மதிச்சாங்களோ அன்னிக்கு புத்தியெல்லாம் தானா காணமப் போயிடும்... அதுக்கு பின் எப்படி புத்திசாலித்தனமா நடப்பது?

க.பாலாசி said...

என்னுடைய எண்ணம் அப்போது அந்த பாம்பு என்ன ஆகியிருக்கும் என்பதுதான். ச்ச பாவம் இல்ல...

அப்பறம் விரைவில் சதம் காண வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

// பி.கு.: அந்த வாய்க்காலை நம்பியிருந்த வயல்பகுதி குடியிருப்பாக மாறிவிட்டதால் இப்போது அந்த வாய்க்காலும் கழிவு நீர் வாய்க்காலாக மாற்றம் அடைந்துவிட்டது. //

இன்னும் சில வருடங்களில், தஞ்சைப் பகுதி முழுவதும் அப்படித்தான் ஆகிவிடும். காவிரியில் தண்ணீர் என்பதே காணல் நீராகிப் போகும் போது, அரசாலாற்றைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை.

குடந்தை அன்புமணி said...

நன்றி...
அமித்து அம்மா, ராமலக்ஷ்மி அக்கா

குடந்தை அன்புமணி said...

//இராகவன் நைஜிரியா said...
// கல்யாண மாப்பிள்ளைகளாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையா இருக்கணும்ங்கிறதுக்காக இதைச் சொல்றேன். //

என்னிக்கு கல்யாணத்திற்கு சம்மதிச்சாங்களோ அன்னிக்கு புத்தியெல்லாம் தானா காணமப் போயிடும்... அதுக்கு பின் எப்படி புத்திசாலித்தனமா நடப்பது?//

இதற்கான பின்னூட்டம் என் மனைவியிடம் கேட்ட பிறகு இடப்படும்.

குடந்தை அன்புமணி said...

//இராகவன் நைஜிரியா said...
தம்பி தங்களின் 50 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.//

பின்னூடட்த்திலும், போனிலும் வாழ்த்து சொன்னதற்கும் பதிவு, இடுகை பற்றிய விளக்கத்திற்கும் நன்றிங்கண்ணா.

குடந்தை அன்புமணி said...

//பாலாஜி said...
என்னுடைய எண்ணம் அப்போது அந்த பாம்பு என்ன ஆகியிருக்கும் என்பதுதான். ச்ச பாவம் இல்ல...

அப்பறம் விரைவில் சதம் காண வாழ்த்துக்கள்.//

எங்களுக்கும் பாவமாத்தான் இருந்திச்சு. அதையும் மிஞ்சி பயமா இருந்ததால எகிறிட்டோம்.

தங்கள் வாழ்த்துகளுக்கும நன்றி.

குடந்தை அன்புமணி said...

// இராகவன் நைஜிரியா said...
// பி.கு.: அந்த வாய்க்காலை நம்பியிருந்த வயல்பகுதி குடியிருப்பாக மாறிவிட்டதால் இப்போது அந்த வாய்க்காலும் கழிவு நீர் வாய்க்காலாக மாற்றம் அடைந்துவிட்டது. //

இன்னும் சில வருடங்களில், தஞ்சைப் பகுதி முழுவதும் அப்படித்தான் ஆகிவிடும். காவிரியில் தண்ணீர் என்பதே காணல் நீராகிப் போகும் போது, அரசாலாற்றைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை.//

நினைச்சுப் பார்க்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குண்ணே...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Congratulation! for 50th issue. Malarum nenivokal super!!!

நட்புடன் ஜமால் said...

50க்கு வாழ்த்துகள்!


திருமண நிகழ்வு ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க ... :)

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு! ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் அன்புமணி!!

ஸ்ரீ.... said...

இலக்கியா,

50 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல உயரங்களைத் தொடுவதற்கும்!

ஸ்ரீ....

துளசி கோபால் said...

அரைச் சதமா?

இனிய வாழ்த்து(க்)கள்.

Praveenkumar said...

அண்ணே!!
உங்கள் 5o வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அனுபவ பதிவினை பதிந்து அரை சதம் அடிச்சீட்டீங்க விரைவில் சதம் காண வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

ஹா..ஹா,,

அட எங்க சொந்தக்காரங்கப் பய புள்ளக முதலிரவு ரூம்ல
அலாரம் வக்கிறதுல தொடங்கி,கீரீம் பிஸ்கட்ல கீரீம எடுத்துட்டு டூத் பேஸ்ட் வக்கிற வரைக்கும் அராஜகம் பண்ணுவாய்ங்க.

ஆஃப் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அம்பது அடிச்ச அண்ணன் அன்புமணி வாழ்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா.. வாழ்த்துகள்..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் செல்லம் ரம்யாக்குட்டிக்கு இந்த மாமாவின் அன்பு முத்தங்கள்...:-)))

தேவன் மாயம் said...

பி.கு.: அந்த வாய்க்காலை நம்பியிருந்த வயல்பகுதி குடியிருப்பாக மாறிவிட்டதால் இப்போது அந்த வாய்க்காலும் கழிவு நீர் வாய்க்காலாக மாற்றம் அடைந்துவிட்டது.///

எல்லா இடங்களிலும் நடக்கும் சோகம்!!

தேவன் மாயம் said...

50 அடித்ததற்கு வாழ்த்துக்கள்!1

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள். அதே இட்டலி இப்பயும் உண்டா?

குடந்தை அன்புமணி said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
Congratulation! for 50th issue. Malarum nenivokal super!!!//

வாழ்த்துகளுக்கு நன்றி சரவணக்குமார்.

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
50க்கு வாழ்த்துகள்!


திருமண நிகழ்வு ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க ... :)//

உங்க மச்சான்ஸ் பத்திரிகையெல்லாம் அடிச்சு ரகளை பண்ணுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். எடுத்துவிடுங்களேன்...

குடந்தை அன்புமணி said...

நன்றி....

ஜீவன், ஸ்ரீ, பிரவின்குமார், துளசிகோபால்

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
ஹா..ஹா,,

அட எங்க சொந்தக்காரங்கப் பய புள்ளக முதலிரவு ரூம்ல
அலாரம் வக்கிறதுல தொடங்கி,கீரீம் பிஸ்கட்ல கீரீம எடுத்துட்டு டூத் பேஸ்ட் வக்கிற வரைக்கும் அராஜகம் பண்ணுவாய்ங்க.

ஆஃப் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.//

அப்ப எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பரவாயில்லை போலிருக்கு...

குடந்தை அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அம்பது அடிச்ச அண்ணன் அன்புமணி வாழ்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா.. வாழ்த்துகள்..:-)))//

புது மாப்பிள்ளையாகப் போகிற உங்களுக்காகத்தான் இந்த மலரும் நினைவுகள்....

குடந்தை அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
உங்கள் செல்லம் ரம்யாக்குட்டிக்கு இந்த மாமாவின் அன்பு முத்தங்கள்...:-)))//

முத்தங்கள் உரியவருக்கு அனுப்பப்பட்டது.

குடந்தை அன்புமணி said...

//தேவன் மாயம் said...
பி.கு.: அந்த வாய்க்காலை நம்பியிருந்த வயல்பகுதி குடியிருப்பாக மாறிவிட்டதால் இப்போது அந்த வாய்க்காலும் கழிவு நீர் வாய்க்காலாக மாற்றம் அடைந்துவிட்டது.///

எல்லா இடங்களிலும் நடக்கும் சோகம்!!//

இருந்தாலும்... நல்லது செய்தவருக்கு முகத்தில் கரிபூசியது போன்ற உணர்வு....

குடந்தை அன்புமணி said...

//தேவன் மாயம் said...
50 அடித்ததற்கு வாழ்த்துக்கள்!//

ஏற்றுக் கொண்டேன். (நன்றி சொல்லக்கூடாது என்று சொன்னதால் இப்படி சொல்லும்படி ஆகிவிட்டது...)

குடந்தை அன்புமணி said...

// குடுகுடுப்பை said...
வாழ்த்துக்கள். அதே இட்டலி இப்பயும் உண்டா?//

கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது நண்பா... அதே இட்டலி இப்ப இருந்தா நல்லாவா இருக்கும்?

வாழ்த்துகளுக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

50வது பதிவுக்கும் யூத்புல் விகடன் புகழுக்கும் வாழ்த்துகள் நண்பா

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
50வது பதிவுக்கும் யூத்புல் விகடன் புகழுக்கும் வாழ்த்துகள் நண்பா//

மிக்க நன்றி...வாழ்த்துக்கும், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கும்....

சொல்லரசன் said...

அரைசதம் அடித்த அன்புக்கு வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

// சொல்லரசன் said...
அரைசதம் அடித்த அன்புக்கு வாழ்த்துகள்//

மிக்க நன்றி சொல்லரசன். நீங்களும் விரைவில் அரைசதம் அடிக்க வேண்டுகிறேன்.

ஹேமா said...

வணக்கம் அன்புமணி.அருமையான நினவலைகளோடு உங்கள் 50 ஆவது பதிவோடு சந்திக்கிறேன்.
வாழ்த்துக்களும் கூட.

குடந்தை அன்புமணி said...

// ஹேமா said...
வணக்கம் அன்புமணி.அருமையான நினவலைகளோடு உங்கள் 50 ஆவது பதிவோடு சந்திக்கிறேன்.
வாழ்த்துக்களும் கூட.//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

Anonymous said...

முதல் வாழ்த்து 50க்கு இரண்டாவது வாழ்த்து இளமை விகடனில் உங்க பதிவு அப்புறம் சிறந்த இந்த பதிவுக்கு...

Anonymous said...

http://blogintamil.blogspot.com/2009/07/blog-post_3111.html nangalum ungalai arimugapaduthi erukompa inga parunga....

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழரசி. வலைச்சரத்தில் இரண்டு நாட்கள் இடுகையிடாததாலும், ஞாயிறன்று வலைச்சரம் பக்கம் வரஇயலாததாலும் பார்க்க முடியவில்லை. மன்னியுங்கள் தோழி. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

உங்க மச்சான்ஸ் பத்திரிகையெல்லாம் அடிச்சு ரகளை பண்ணுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். எடுத்துவிடுங்களேன்...]]

அந்த பாக்கியம் எனக்கு இல்லை நண்பரே!, என்னோடது காதல் திருமணம்.

யூத்துக்கு(ம்) வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

/// நட்புடன் ஜமால் said...
உங்க மச்சான்ஸ் பத்திரிகையெல்லாம் அடிச்சு ரகளை பண்ணுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். எடுத்துவிடுங்களேன்...]]

அந்த பாக்கியம் எனக்கு இல்லை நண்பரே!, என்னோடது காதல் திருமணம்.

யூத்துக்கு(ம்) வாழ்த்துகள்//

அப்படியா...அப்போ அந்த காதல் அனுபவத்தை எழுதுங்க நண்பா...

நாஞ்சில் நாதம் said...

வாழ்த்துக்கள் 50 வது பதிவிற்கு

குடந்தை அன்புமணி said...

//நாஞ்சில் நாதம் said...
வாழ்த்துக்கள் 50 வது பதிவிற்கு//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...