கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...
இப்போதெல்லாம் எண்ணெய் பதார்த்தங்களை விலக்கிவிடுகிறேன். மசாலா ஐயிட்டங்களையும்தான். கோழிக்கறி சூடு என்றார்கள் அதனால் அதையும் தள்ளி வைத்தாகிவிட்டது. காய்கறிகளில் கேரட் தவறாமல் இடம்பெறுவது போல் பார்த்துக் கொள்கிறேன். கேரட் கண்களுக்கும் நல்லதாமே! இல்லையென்றால் கண்ணாடி போடுவது போலாகிவிட்டால் அழகே போய்விடும். அதோடு கிண்டல் வேறு செய்வார்கள்.
உடையலங்காரத்திலும் முன்பைவிட அதிகம் கவனம் செலுத்துகிறேன். அடிக்கடி முகம் கழுவுதலும் நடக்கிறது. முகப்பரு வராமல் பார்த்துக் கொள்வதும் பரு வந்தால் கிள்ளாமல் அதைப் போக்கவும் செய்கிறேன். கிள்ளினால் சீழ் பிடித்து வடுவாக மாறிவிடும் என்று டீ.வியில் டாக்டர் ஒருவர் சொன்னது ஞாபகத்தில் அப்படியே படிந்துவிட்டது. முகம் அழகாயிருப்பது முக்கியமல்லவா. அழகுக்குத்தான் இந்த உலகத்தில் முக்கியத்துவம். குணம் இரண்டாம் பட்சம்தானே.
எனக்கு தலைமுடி சுருள் சுருளாக அழகாக இருக்கும். பார்ப்பவர்கள் அனைவரும் அப்படித்தான் சொல்வார்கள், 'இந்த தலைமுடிதான் உனக்கு அழகு' என்று. இப்போது ஆங்காங்கே ஒன்றிரண்டு வெள்ளை முடி தென்படுகிறது. இருக்காதா பின்னே வயது முப்பதை நெருங்கிவிட்டதே...
இப்போதெல்லாம் என் குடும்பத்தினருக்குகூட என்னைப் பிடிக்கவேயில்லை. அதுபற்றிகூட நான் கவலைப்படவில்லை. பாசமாக இருந்த என் தம்பி, 'இவளுக்கு எப்ப கல்யாணம் ஆகிறது நான் எப்ப கல்யாணம் செய்துக்கிறது. என்கூட படிச்ச பசங்களுக்கு எல்லாம் கல்யாணமாகி குழந்தைங்க கூட இருக்கு' என்று அலுத்துக் கொள்கிறான். அதைக் கேட்கும்போது எனக்கு வருத்தம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது.
17 comments:
அழகுக்குத்தான் இந்த உலகத்தில் முக்கியத்துவம். குணம் இரண்டாம் பட்சம்தானே.\\
உண்மை நண்பரே!
முதிர் கண்ணி ...
கதை அருமை அன்புமணி!
பால்ய விவாகம் ஒரு பக்கம்.
விவாகத்துக்கு வழியற்ற முதிர்கன்னிகள் இன்னொரு பக்கம்.
சமூகம் செய்து கொள்ளும் பாலன்ஸ்:(?
தன் நிலை உயர சக உதரம் கூட மற்றவர்களை உதறும் நிலை தான் இங்கே இருக்கிறது .
மெழுகு”வர்த்தினி”..?
குடந்தை அன்புமணி,
கதை நன்றாக இருக்கிறது. இன்னும் பெரியதாக எழுதியிருக்கலாம்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
/'இவளுக்கு எப்ப கல்யாணம் ஆகிறது நான் எப்ப கல்யாணம் செய்துக்கிறது. என்கூட படிச்ச பசங்களுக்கு எல்லாம் கல்யாணமாகி குழந்தைங்க கூட இருக்கு' என்று அலுத்துக் கொள்கிறான். அதைக் கேட்கும்போது எனக்கு வருத்தம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது. /
அந்த சிரிப்பின் பின்னே சொல்லப்படாத ஆயிரம் வலிகளை உணரமுடிகிறது.
:)
கதை நன்றாக உள்ளது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
கடுகு சிறுத்தும் காரம் குறையவில்லை.. அருமையாக உள்ளது நண்பா
வித்தியாசமா இருக்கு
திருமணமாகாத ஒரு முதிர்கன்னியின் குமுறலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
வாசு அவர்கள் சொன்னது போல இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம்.
இருந்தாலும் ரசிக்க முடிந்தது. வாழ்த்துக்கள் அன்புமணி !!!
ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளவிதம் அருமை!!
பரபரப்பு திருப்பங்கள் இல்லாத விதத்தில் அமைந்திருப்பது அருமை!
//முகம் அழகாயிருப்பது முக்கியமல்லவா. அழகுக்குத்தான் இந்த உலகத்தில் முக்கியத்துவம். குணம் இரண்டாம் பட்சம்தானே.//
உலகத்தின் உண்மை உணர்வை வெளிப்படுத்திவிட்டீர்கள்... கதையின் போக்கு அருமை
வருகை தந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
கொடுமை :-(
Post a Comment