Saturday, 18 July 2009

உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது



இந்த விருதை ரங்கன் அவர்கள் ஆரம்பித்து வைத்து அதற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார். எனக்கு இந்த நண்பருக்கு விருததை, மௌனராகங்கள் ஜெஸ்வந்தி அவர்கள் வழங்கியிருக்கிறார்.

இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.

2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.

3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.

4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.

இந்த நண்பர்கள் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் இந்த விருதை நான் யாருக்கும் வழங்கப் போவதில்லை. இதற்காக எனக்கு வலையுலகில் நண்பர்கள் யாருமில்லையா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் எனக்கு நண்பர்களே. அதனால்தான் இந்த விருதை ஒருவருக்கு கொடுத்து மற்றொருவரை நான் இழக்க விரும்பவில்லை. நான் எடுத்த இந்த முடிவுக்கு ஆரம்பித்து வைத்த ரங்கன் மற்றும் எனக்கு வழங்கிய ஜெஸ்வந்தியும் மன்னிப்பார்களாக...
ரங்கன் அவர்கள் விருது பற்றிய விதிமுறைகளை மதித்து எனது வலையில் இதை அலங்கரிக்க வைத்துள்ளேன். நன்றி.

20 comments:

நட்புடன் ஜமால் said...

தங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே!

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள். உங்கள் முடிவுக்கு மதிப்பளிக்கும் வேளையில் யாருக்காவது வழங்கியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

ஸ்ரீ....

Vidhoosh said...

நல்ல முடிவு. :) என் புன்னைகையும் உங்களுக்கு பரிசாக அளிக்கிறேன் நண்பரே.

தேவன் மாயம் said...

நல்லா இருங்க சாமி!

Praveenkumar said...

என் மனமார்ந்த பாராட்டுகள்......அண்ணே!!!

நீங்க சொன்னது "எல்லாரும் எனக்கு நண்பர்களே. அதனால்தான் இந்த விருதை ஒருவருக்கு கொடுத்து மற்றொருவரை நான் இழக்க விரும்பவில்லை. நான் எடுத்த இந்த முடிவுக்கு ஆரம்பித்து வைத்த ரங்கன் மற்றும் எனக்கு வழங்கிய ஜெஸ்வந்தியும் மன்னிப்பார்களாக"...
இது உங்களது பரந்த மனதினை இது காட்டினாலும்.......

அண்ணே!
இது போன்று பிறபதிவர்களும் நினைத்தால் பதிவர்களுக்கு ஊக்கம், உற்சாகமும் கிடைக்காது....என்பது என் கருத்து.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா, யாருக்காவது வழங்கி இருக்கலாம் என்றே தோன்றுகின்றது

முனைவர் இரா.குணசீலன் said...

இது புதுசா இருக்கே....

எப்படியோ நட்பின் பரப்பு விரிவாக இப்படியொரு வழி.....

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.....

முனைவர் இரா.குணசீலன் said...

விருதின் வடிவம் அழகாக உள்ளது...

க.பாலாசி said...

//அதனால்தான் இந்த விருதை ஒருவருக்கு கொடுத்து மற்றொருவரை நான் இழக்க விரும்பவில்லை//

Good Decision.

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள் அன்புமணி.
உங்கள் முடிவு சரியானது.

Venkatesh Kumaravel said...

ஏற்கனவே ஒரு விருது ரவுண்டு அடிச்சிக்கிட்டு இருக்குங்களே... எனிவே... இது தான் நீட் ஆஃப் தெ ஹவர்... நட்புகளை புதுப்பித்து நம் ஒற்றுமையை காட்ட வேண்டும். :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் எண்ணத்தை நான் மதிக்கிறேன். விருதினை உங்கள் வலையத்தில் இணைத்ததுக்கு நன்றி அன்புமணி.

butterfly Surya said...

வாழ்த்துகள் நண்பரே!

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் நண்பரே...

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணன் பிரவீன்குமாரை வழிமொழிகின்றேன்

:)

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் நண்பரே

Prapa said...

வாழ்த்துக்கள் , இருந்தாலும் ஒரு சின்ன கவலை , விருது தரமாட்டீன்களே !
நேரமிருந்தால் நம்ம பக்கமும் வந்து போங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் நண்பரே...:-))))))))))

வியா (Viyaa) said...

வாழ்த்துகள் :)

குடந்தை அன்புமணி said...

இதுவரை 19 பேர் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்கள். இதில் ஏழு பேர் மட்டுமே மற்றவர்களுக்கு வழங்கியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறீர்கள். அதிக மெஜாரிட்டியை மதிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...