Tuesday, 7 July 2009

குட்டிச் சுவர்

கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...

ப்போதும் ஊருக்குப் போனாலும் சொந்த பந்தங்களை எல்லாம் பார்த்து நலம் விசாரிக்கிறேனோ இல்லையோ சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரை ஒரு ரவுண்ட் வந்தால்தான் ஒரு திருப்தி கிடைக்கிறது. கடைசியாக அந்தக் குட்டிச் சுவர்மீது கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வருவதுதான் என்னுடைய வ(ப)ழக்கமாக வைத்திருக்கிறேன். அந்தக் குட்டிச் சுவருக்கு ஒரு வரலாறே உண்டு.

என் நண்பர்கள் அனைவரும் வழக்கமாக சந்திக்கும் இடம் அந்த குட்டிச்சுவர்தான். பேருந்து நிலையம் அருகில் அமைந்திருந்ததால்தான் அந்தக் குட்டிச் சுவர் எங்களால் தத்தெடுக்கப்பட்டது. வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் ('ஜொள்'விட்டுக்) கொண்டு அமர்ந்திருப்போம்.

அது மட்டுமல்ல... என் நண்பர்களின் சோக கதைகள் சந்தோஷங்கள் எல்லாம் பரிமாறிக் கொள்வதும் அங்கேதான். பேருந்து நிலையம் அருகே அப்படி ஒரு இடம் அமைவதே அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்தை வாங்க பிரபல நிறுவனத்தினரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பாகப் பிரிவினை தகராறில் வழக்கு கோர்ட்டில் இருந்தது எங்களுக்கு சாதகமாக இருந்தது.

படிப்பு முடிந்து ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு ஊராக வேலைக்கு கிளம்பிவிட்டோம். இப்போதெல்லாம் போனில்தான் தொடர்பு. என்ன இருந்தாலும் முகம் பார்த்து பேசுவது போல் வருமா? இப்போது அந்தக் குட்டிச் சுவர் அனாதையாக நிற்கிறது. எப்போதும் ஊருக்கு வந்தாலும்... (முதல் பாராவை திரும்பவும் படித்துக் கொள்ளவும்.)

வருடங்கள் பல கழித்து இப்போது சொந்த ஊருக்கு சென்றபோதும் வழக்கமாக செல்லும் இடங்களுக்கு சென்றுவிட்டு அந்தக் குட்டிச் சுவர் இருக்கும் இடத்திற்கு சென்றபோது, அங்கே மிகப் பெரிய வணிக வளாகம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அந்த வளாகத்திற்குள்ளே ஆண், பெண் நண்பர்கள் பலர் அரட்டை அடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

25 comments:

கபிலன் said...

குட்டி சுவர் பலரின் வாழ்க்கையில் இருந்து அகற்ற முடியாத ஒன்று என்பது உண்மை தான்.
நல்ல பதிவு!

நட்புடன் ஜமால் said...

கபிலன் சொன்னதைத்தான் நானும் சொல்ல விழைந்தேன் ...

மணிஜி said...

தஞ்சை ரயிலடியின் பின் புறம் நான் மற்றும் நண்பர்கள் கழித்த பொழுதுகள் நிணைவுக்கு வந்தது....இன்றும் அந்த இடம் அப்படியேதான் இருக்கிறது..அடுத்த செட் அங்கே..

முனைவர் இரா.குணசீலன் said...

அந்த குட்டிச்சுவருக்குப் பின்னால் இப்படியொரு கதையா........

அ.மு.செய்யது said...

பழைய ஞாபகங்களை கிளறி விட்டீர்கள் அன்புமணி !!

குட்டிச்சுவர்ல உக்காந்து ஈவ்டீஸிங் செஞ்சி, கிரிமினல் ரேட்டு கூடிய நாட்கள் அதிகம்.

இப்ப‌வும் சாஃப்ட்வேர் க‌ம்பெனில‌ அந்த‌ ப‌ழ‌க்க‌ம் போக‌ல‌..

க.பாலாசி said...

//அந்த வளாகத்திற்குள்ளே ஆண், பெண் நண்பர்கள் பலர் அரட்டை அடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.//

நீங்கள் அப்போது வெளிப்படையாக செய்ததை இப்போது அந்த வளாகத்துக்குள்ளேயே செய்கிறார்களோ?

குடந்தை அன்புமணி said...

// கபிலன் said...
குட்டி சுவர் பலரின் வாழ்க்கையில் இருந்து அகற்ற முடியாத ஒன்று என்பது உண்மை தான்.
நல்ல பதிவு!//

உண்மைதான். அது ஒரு கனாக்காலம்.

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
கபிலன் சொன்னதைத்தான் நானும் சொல்ல விழைந்தேன் ...//

அதே... அதே...

குடந்தை அன்புமணி said...

//தண்டோரா said...
தஞ்சை ரயிலடியின் பின் புறம் நான் மற்றும் நண்பர்கள் கழித்த பொழுதுகள் நிணைவுக்கு வந்தது....இன்றும் அந்த இடம் அப்படியேதான் இருக்கிறது..அடுத்த செட் அங்கே..//

இடங்கள் மாறினாலும் நண்பர்களின் சுற்று உலா மாறாதது...

குடந்தை அன்புமணி said...

// முனைவர்.இரா.குணசீலன் said...
அந்த குட்டிச்சுவருக்குப் பின்னால் இப்படியொரு கதையா...//

ஏகப்பட்டது இருக்கு நண்பா... ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை.

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
பழைய ஞாபகங்களை கிளறி விட்டீர்கள் அன்புமணி !!

குட்டிச்சுவர்ல உக்காந்து ஈவ்டீஸிங் செஞ்சி, கிரிமினல் ரேட்டு கூடிய நாட்கள் அதிகம்.

இப்ப‌வும் சாஃப்ட்வேர் க‌ம்பெனில‌ அந்த‌ ப‌ழ‌க்க‌ம் போக‌ல‌..//

பார்த்துங்க...

குடந்தை அன்புமணி said...

//பாலாஜி said...
//அந்த வளாகத்திற்குள்ளே ஆண், பெண் நண்பர்கள் பலர் அரட்டை அடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.//

நீங்கள் அப்போது வெளிப்படையாக செய்ததை இப்போது அந்த வளாகத்துக்குள்ளேயே செய்கிறார்களோ?//

இடம் மாறினாலும் எதுவும் மாறவில்லை.

ராமலக்ஷ்மி said...

இந்தக் குட்டிச் சுவர் போலவே நினைவுகளால் நாம் பிறந்த வளர்ந்த வீடு, பள்ளி கல்லூரியில் குறிப்பிட்ட வகுப்பறைகள், மரத்தடி போன்றவை நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விடத்தான் செய்கின்றன.

குடந்தை அன்புமணி said...

//ராமலக்ஷ்மி said...
இந்தக் குட்டிச் சுவர் போலவே நினைவுகளால் நாம் பிறந்த வளர்ந்த வீடு, பள்ளி கல்லூரியில் குறிப்பிட்ட வகுப்பறைகள், மரத்தடி போன்றவை நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விடத்தான் செய்கின்றன.//

உண்மையோ உண்மை.

கார்த்திகைப் பாண்டியன் said...

எங்களுக்கு குழாயடி நண்பா.. எங்க டீம் பேரே குழாயடி குரூப்ஸ் தான்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான நினைவுகள்

(போட்டோவில் இருக்கும் உங்கள் அன்புச் செல்லத்தின் பெயர்தான் இலக்கியாவா ?)

வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
எங்களுக்கு குழாயடி நண்பா.. எங்க டீம் பேரே குழாயடி குரூப்ஸ் தான்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்..//

குழாயடியா...? வித்தியாசமான ஏரியாதான்.

குடந்தை அன்புமணி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
அழகான நினைவுகள்

(போட்டோவில் இருக்கும் உங்கள் அன்புச் செல்லத்தின் பெயர்தான் இலக்கியாவா ?)

வாழ்த்துகள்//

இல்லை அமித்து அம்மா... செல்லத்தின் பெயர் ரம்யா...

"உழவன்" "Uzhavan" said...

ஃபினிஷிங் நச்!
 
"எப்போதும்" என்பதற்குப் பதில் "எப்போது" என்று மட்டும் இருந்தாலே போதும் என நினைக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

விகடன் Good Blog_ல் இப்பதிவு. வாழ்த்துக்கள் அன்புமணி!

நசரேயன் said...

நல்ல கொசுவத்தி

குடந்தை அன்புமணி said...

நன்றி...
உழவன், நசரேயன்

குடந்தை அன்புமணி said...

// ராமலக்ஷ்மி said...
விகடன் Good Blog_ல் இப்பதிவு. வாழ்த்துக்கள் அன்புமணி!//

தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி அக்கா.

அகநாழிகை said...

அன்புமணி,
குட்டிச்சுவர் பற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சிறுகதையாகக்கூட எழுதியிருக்கலாம். சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டினார்கள், இதுபற்றி ‘வெற்றிடம்‘ என்ற தலைப்பில் நான் ஒரு கதையாக எழுதியிருக்கிறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நாஞ்சில் நாதம் said...

:)))

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...