Monday, 24 August 2009
காது கொடுத்துக் கேட்டேன்...
தினசரி பணிக்கு ரயிலில் பயணம் செய்வது என் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்படிச் செல்லும்போது புத்தகங்கள் படிப்பது வழக்கம். கூட்டம் அதிகமாக இருக்கும்போது புத்தகம் படிப்பது இயலாமல் போய்விடும். அப்போது வேடிக்கை பார்த்தவாறு வருவேன். சில சமயம் மற்றவர்களின் செயல்களை, உரையாடல்களை காதில் வாங்குவதும் உண்டு. அப்படி காதுகொடுத்து கேட்டவைதான் இவை...
காட்சி-1
ஒரு இளைஞன் செல்போனில் தன் நண்பனுடன் பேசுபவை...
‘நேத்து அவளை அழைச்சிக்கிட்டு பரங்கிமலை ரயில்வே ஸ்டேசன்ல உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தேன் மச்சி. அப்ப பார்த்து ஒரு போலீஸ்காரன் வந்து எங்களை எழுப்பி விசாரிச்சான்.’
‘............’
‘நாங்க ரயில்வே பிளாட்பாரத்திலதான் உட்கார்ந்திருந்தோம்.’
‘.............’
‘இல்லடா... எக்ஸ்பிரஸ் ரயில் போகும்ல அந்தப் பிளாட்பாரத்தில...’
‘.....’
‘அங்கதான் யாரும் இருக்கமாட்டேங்களேன்னு...’
‘......’
‘அவ மாம்பலத்திலதான் வேலை பார்க்கிறா. நான்தான் பேசிக்கிட்டிருக்கலாம்னு அங்க அழைச்சிட்டு போனேன். ரொம்ப நேரம்கூட இல்லடா. பத்துநிமிசம் பேசிக்கிட்டிருப்போம். வழக்கமா நடக்கிறதுதான். ஆனா நேத்துதான் அப்படி வந்து விசாரிச்சாங்க போலீஸ்.’
‘......’
‘பேசிக்கிட்டிருக்கும் போதே அந்த போலீஸ் அடிச்சிட்டான்டா.’
‘.....’
‘ஏன்சார் அடிக்கிறீங்கன்னு நான் கேட்டேன். அவன் திரும்பவும் அடிக்க வந்தான். நான் கையைப் பிடிச்சிட்டேன். அப்புறம் விசாரிச்சிட்டு விட்டுட்டான். பாவம் அவதான் ரொம்ப பயந்துட்டா.’
‘.....’
‘இனிமே நான் கூப்பிட்டா அவ வருவாளான்னு தெரியலை... சரி நான் அப்புறம் பேசுறேன் மச்சி.’
(பயணம் செய்த அனைவரும் அவனை கவனித்ததால் பேச்சை முடித்துக் கொண்டான் என்று நினைக்கிறேன்.)
காட்சி-2
‘ஹலோ... இன்னைக்கு ராத்திரி சரக்கு அங்கிருந்து மூவ் ஆகிடும். ராத்திரியே இங்க வந்திடும். ஆனா நாம காலையில மாத்திகிடலாம். கோயம்பேடு வெங்காய மண்டிக்கு வந்திடுங்க. காலைல ஆறரை மணிக்கு மாத்திக்கலாம். நிச்சயம் வந்திடும்.எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்கிட்டு உங்களுக்கு போன் பண்ணிச் சொல்றேன்.
(பேசறதைப் பார்த்தா கள்ளக்கடத்தல் பண்ணுறவங்க மாதிரியே பேசுறாரே... ஒருவேளை அப்படியும் இருக்குமோ...)
காட்சி-3
ஒரு ஜோடியை ரயில்வே போலீஸ்காரர் அழைத்துக் கொண்டு செல்ல, என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒரு கூட்டம் பின் தொடர்ந்து வந்தது. (நீயும்தானே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.... இல்லங்க... நான் அந்த போலீஸ்காரர்கள் அறைக்கு வெளியே நின்றுதான் ரயில் ஏறுவது வழக்கம்.)
உள்ளே அழைத்துச் சென்ற போலீஸ்காரர் சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தார்.
‘என்ன சார்?’ ஒரு ஆர்வம் விரும்பி கேட்டார்.
‘ரொம்ப நேரம் அங்க உட்கார்ந்திக்கிட்டு இருந்தாங்க. என்ன இங்க உட்கார்ந்திருக்கீங்கன்னு கேட்டா ஃப்ரண்ட்ஸாம். அந்தப் பெண் கழுத்தில தாலி கிடக்கிது. வேலைக்கு வந்தா வேலை முடிஞ்சதும் வீட்டுக்குப் போகாம இங்க என்ன பேச்சு வேண்டிக்கிடக்குது. இது என்ன பார்க்கா? வந்து கூத்தடிக்கிறதுக்கு’ என்றார் சிரித்துக் கொண்டே.
(ஒருவேளை அன்னைக்குத்தான் அந்த போலீஸ்காரர் நிம்மதியா தூங்கியிருப்பாரோ... எனக்கு விதி படம் ஞாபகத்துக்கு வந்தது... வேறொண்ணும் இல்லீங்க.)
அப்புறம்..படிச்சிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். எனது மற்றொரு வலைத்தளமான தகவர்மலர் பார்த்தீங்களா?
லேபிள்கள்:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
ம்ம்ம்ம்... நல்லா கேக்க்க்க்குறீங்க
தீவிரவாதிங்கள புடிக்கறத விட்டுட்டு எவனோ எவளையோ கடல போடா தள்ளிகிட்டு வந்தா அவங்க கிட்ட காசு பண்ண மேரட்டுறாங்க.
//கதிர் - ஈரோடு said...
ம்ம்ம்ம்... நல்லா கேக்க்க்க்குறீங்க//
தினசரி முக்கால் மணிநேரப் பயணம். வேற என்ன பண்ணறதுங்க...
//DHANS said...
தீவிரவாதிங்கள புடிக்கறத விட்டுட்டு எவனோ எவளையோ கடல போடா தள்ளிகிட்டு வந்தா அவங்க கிட்ட காசு பண்ண மேரட்டுறாங்க//
தங்களின் முதல் வருகைக்கும் முதலில் நன்றி. காசு கேட்டு மிரட்டுறதுகூட பரவாயில்லை போல, சிலபேர் இந்த மாதிரி தனியா போறவங்கள்கிட்ட வழிப்பறி மற்றும் சில இடங்களில் அத்துமீறி நடப்பதாகவும் தகவரல். எனவே காதலர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்று நம்பி போய் ஆபத்தில் மாட்டிக்காதீங்க.
உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது....இரயிலில் இது மட்டும்தானா....? இன்னும் சொல்லுவீங்களா...?
உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது....இரயிலில் இது மட்டும்தானா....? இன்னும் சொல்லுவீங்களா...?
அடிக்கடி காதுல கேட்டதை கொடுங்க.
நல்ல பொழுதுபோக்குங்க..
நானும் சிலசமயம் இப்படி கேட்ட அனுபவம் உள்ளது..
//(ஒருவேளை அன்னைக்குத்தான் அந்த போலீஸ்காரர் நிம்மதியா தூங்கியிருப்பாரோ... எனக்கு விதி படம் ஞாபகத்துக்கு வந்தது... வேறொண்ணும் இல்லீங்க.)//
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ‘காதலர்களை’ பிரிக்கிறதே போலீஸ்காரங்க பொழப்பா போச்சு...
நல்ல பதிவிடல் அன்பரே...
மணி,உலகத்தை நல்லாக் கவனிச்சு காதையும் கொடுத்துப் பாத்தீங்கன்னா உங்களுக்குத்தான் முதல்ல பைத்தியம் பிடிக்கும்.விடுங்க.
அப்படியே ஏதாவது டிடெக்டிவ் வேலை செய்யலாம் அன்பு!!! காது ரொம்ப ஷார்ப்!!!
// ஹேமா said...
மணி,உலகத்தை நல்லாக் கவனிச்சு காதையும் கொடுத்துப் பாத்தீங்கன்னா உங்களுக்குத்தான் முதல்ல பைத்தியம் பிடிக்கும்.விடுங்க.//
வழிமொழிகிறேன்.
நல்ல-காது
இனிமேல் சென்னையில் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது பார்த்து பேச வேண்டும் போல..
உங்க அவதானிப்பு, ஒரு புத்தகம் படிப்பதை விட நிறைய விஷயங்களை சொல்லி தருகிறது.
//கிளியனூர் இஸ்மத் said...
உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது....இரயிலில் இது மட்டும்தானா....? இன்னும் சொல்லுவீங்களா...?//
என் காதுக்கு எட்டும்போது உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
//துபாய் ராஜா said...
அடிக்கடி காதுல கேட்டதை கொடுங்க.//
நிச்சயமாங்க.
//பட்டிக்காட்டான்.. said...
நல்ல பொழுதுபோக்குங்க..
நானும் சிலசமயம் இப்படி கேட்ட அனுபவம் உள்ளது..//
அப்ப எடுத்துவிடுங்க...
//க. பாலாஜி said...
//(ஒருவேளை அன்னைக்குத்தான் அந்த போலீஸ்காரர் நிம்மதியா தூங்கியிருப்பாரோ... எனக்கு விதி படம் ஞாபகத்துக்கு வந்தது... வேறொண்ணும் இல்லீங்க.)//
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ‘காதலர்களை’ பிரிக்கிறதே போலீஸ்காரங்க பொழப்பா போச்சு...
நல்ல பதிவிடல் அன்பரே...//
சந்திப்புக்கான இடம் தேர்வு முக்கியம் நண்பரே... கூட்டம் குறைவாக இருக்கிறது என்பதற்காக ஒதுக்குப்புறமாக ஒதுங்கினால் ஆபத்தும் கூடவே வரும்.
//ஹேமா said...
மணி,உலகத்தை நல்லாக் கவனிச்சு காதையும் கொடுத்துப் பாத்தீங்கன்னா உங்களுக்குத்தான் முதல்ல பைத்தியம் பிடிக்கும்.விடுங்க.//
//சந்ரு said...
// ஹேமா said...
மணி,உலகத்தை நல்லாக் கவனிச்சு காதையும் கொடுத்துப் பாத்தீங்கன்னா உங்களுக்குத்தான் முதல்ல பைத்தியம் பிடிக்கும்.விடுங்க.//
வழிமொழிகிறேன்.//
நம்மப் போல எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு இவ்வாறான கவனித்தல் நிச்சயம் உதவுங்க. பயப்படாதீங்க...
//தேவன் மாயம் said...
அப்படியே ஏதாவது டிடெக்டிவ் வேலை செய்யலாம் அன்பு!!! காது ரொம்ப ஷார்ப்!!!//
ராஜேஸ்குமார் நாவல் அதிகம் படிச்சிருக்கேன் தேவா சார்...
//நட்புடன் ஜமால் said...
நல்ல-காது//
ஆமாங்க... எல்லாம் உங்களுக்காகத்தான்.
//அ.மு.செய்யது said...
இனிமேல் சென்னையில் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது பார்த்து பேச வேண்டும் போல..
உங்க அவதானிப்பு, ஒரு புத்தகம் படிப்பதை விட நிறைய விஷயங்களை சொல்லி தருகிறது.//
மிக்க மகிழ்ச்சி செய்யது...
அலோ அன்பு.. வேற வேலை இல்லயா? :-)) ஐயோ பாவம். அவங்களையும் விடாம தொரத்துறீங்களே. நல்ல வேளை உங்க கயில் கேமரா மொபைல் இல்லயோ? :-)
நல்லாக் கேக்குறீங்க
வாஜாரே !! நம்ப தோஸ்துங்கோ, லிஸ்ட்டுல சேந்ததுக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !!
அப்பால , இன்னா மேரி காது குட்து கேக்குறீங்க பா !! இது மேரி கேட்டத கோர்வையா சொல்லறதுக்கு இன்னாமேரி ஒரு அப்செர்வேசன் ஓணும்,
சூப்பர் தல . கலக்கல்
:))))
க்
அட நம்ம ஆளு. நானும் இதேயேத்தான் செய்யுறேன்
Post a Comment