மக்கள் விழிப்புணர்வு இயக்கம்,
3/20, 16ஆவது குறுக்குத் தெரு, நியூகாலனி,
குரோம்பேட்டை,
சென்னை - 600 044
***********************
நீங்கள் அய்க்கூ எழுதுபவரா?
நீங்கள் எழுதிய சிறந்த பத்து அய்க்கூவை கீழ்க்காணும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூபாய் 1,200 பரிசை பெறலாம்.
கடைசி தேதி- இம்மாதம் இறுதிக்குள். அதாவது செப்டம்பர் 30க்குள்.
முகவரி- கன்னிக்கோயில் ராஜா,
30/8 கன்னிக்கோவில் முதல் தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.
**************************
ஆச்சிக்கு பாராட்டுக்கள்!

அனைவராலும் அன்புடன் ‘ஆச்சி’ என்றழைக்கப்படும் நடிகை மனோரமா ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மணமகன், மணமகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என்னும் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளார். இந்த முயற்சி நல்ல முயற்சி. இதனால் குழந்தையின்மையால் வரும் விவகாரத்து, உயிர்க் கொல்லியால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுவது போன்றவை தடுக்கப்படும். ஆச்சியின் இந்த முயற்சி வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன்.
‘தென்கச்சி’ சுவாமிநாதன் மறைவு

‘தென்கச்சி’ சுவாமிநாதன். இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவரின் ‘இன்று ஒரு தகவல்’ பிரபலம். இப்படி இவர் சொன்ன தகவல்களை வானதி பதிப்பகம் புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஊராட்சி மன்ற தலைவராகவும் ஏழு வருடங்கள் (தென்கச்சியில்) இருந்திருக்கிறார். ஊரில் விவசாயமும் செய்தவர். அந்த அனுபவத்தில் வானொலி நிலையத்தில் விவசாய செய்திகளை ஒலிபரப்ப ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வர, அதைப் பார்த்து விண்ணப்பித்து, விவசாயம் தெரிந்ததால் இவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைத்தாம். பின்பு படிப்படியாக வளர்ந்து உதவி ஆசிரியர், ஆசிரியர், உதவி நிலைய இயக்குனர் என்று வளர்ந்து வந்தவர்.‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்பு சன் தொலைக்காட்சியிலும் அந்நிகழ்ச்சியை வழங்கி உலகப் புகழ் பெற்றார்.சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.