Monday, 11 January 2010

பொங்கல் வாழ்த்துகள்.



"வாங்க ராஜா எப்படி இருக்கீங்க? பொங்கல் வேலையெல்லாம் முடிஞ்சிருச்சா?''
"எல்லாம் முடிஞ்சிருச்சு. இன்னும் கரும்பு, காய்கறிகள் மட்டும் வாங்கினா பொங்கலை கொண்டாடிட வேண்டியதுதான்.''
"இந்த வருடம் கரும்பு ஒரு கழி முப்பது ரூபாய் வரைக்கும் விக்கும்னு பேசிக்கிறாங்க. போன வருடம் தமிழக அரசு பொங்கல் பரிசா வெல்லம், பச்சரிசி கொண்ட பை ஒன்னு கொடுத்தாங்க அது இந்த பொங்கலுக்கு கிடையாதாம்.''
"இது பழைய செய்திப்பா. அதுக்குப் பதிலாதான் காய்கறி அதிக விலைக்கு விக்கிறதால 12 விதமான காய்கறிகள் அடங்கிய பை தர்றாங்களாம். அதோட விலை ரூபாய் இருபத்தைந்தாம்.''
"பச்சரி, வெல்லம் கொண்ட பை போன வருடம் கொடுத்துட்டு இந்த வருடம் ஏன் தரலையாம்?''
"போன வருடம்தான் புதுசா தமிழ் புத்தாண்டு பொங்கல் அன்னைக்கிதான்னு அரசு அறிவிச்சுது. அதுக்காக கொடுத்தாங் களாம். இந்த வருடம் மக்களாகவே தமிழ் புத்தாண்டை கொண்டாடிடுவாங்கன்னு அரசு நம்புது போலிருக்கு''
"அதிருக்கட்டும் இன்னைக்கி ராத்திரி போகி கொண்டாட வந்திடுப்பா!''
"நிச்சயமா வந்திடுறேன். ஆனா, பிளாஸ்டிக், டயர் போன்ற எதுவும் எடுத்திட்டு வந்திடாதே. அதை எரிச்சா உடனே நடவடிக்கை எடுக்கறதுக்காக இருபது குழுக்களை அமைச்சிருக்காங்களாம். இரவு முழுவதும் கண்காணிக்க போறாங்களாம்.''
"நானும் படிச்சேன் ராஜா. பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களை எரிக்கிறதால மூச்சு திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை எல்லாம் ஏற்படுமாம். ஏற்கெனவே ஏகப்பட்ட நோய்கள் உலாவுது. இதில இதுவேற நாமளா தேடிக்கணுமா என்ன? நான் வீடு சுத்தம் செய்யும்போதே வேண்டாத பொருட்களை பிரிச்சி வைச்சிருக்கேன். அதை வைச்சி போகி கொண்டாடுவோம்.''
"பொங்கலுக்கு வேற எதாவது...?''
"வேற எதாவதுன்னா... தண்ணியடிக்க கூப்பிடுறியா?''
"பாருக்கு எல்லாம் போகவேணாம்... அப்படியே எங்காவது போயி கமுக்கமா சாப்பிட்டு வந்திடலாம்...''
"மவனே உனக்காகத்தான் டில்லி அரசாங்கம் ஒரு சட்ட நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்காங்க. பொது இடங்களில் மது அருந்திரவங்களுக்கு 50,000 வரைக்கும் அபராதமும், 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கலாம்னு முடிவு செய்திருக்காங்களாம்.''
"ம்... இதுக்கும் கெடுபிடி அதிகமாயிடுச்சா... நம்மெல்லாம் பெரிய பாருக்கு போக முடியுமா?''
"உன்னை மாதிரி ஆளுங்களுக்குத்தானே தமிழக அரசு டாஸ்மாக்கையே நடத்துது. தீபாவளிக்கே 47 கோடி வசூலாம். பொங்கலுக்கு எவ்வளவு பணத்தை கொண்டு போய் கொட்டப் போறீங்களோ? திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொங்கலுக்கு மறுநாள் கடைக்கு விடுமுறையாம்பா.''
"நல்லவேளை தகவல் கொடுத்தே. இல்லைன்னா அதிகமா பணம் கொடுத்து கள்ள மார்க்கெட்ல வாங்க வேண்டியிருக்கும். நம்ம சம்பாத்தியத்தில அப்படியெல்லாம் செய்ய முடியாதுப்பா..''
"இதைப் பத்திதான் இன்டர்நேசனல் லிவிங் பத்திரிகை ஒரு ஆய்வு செய்திருக்காங்க.''
"எதை... குடிக்கிறது பத்தியா?''
"இல்லப்பா.... வாழ்க்கைச் செலவு, கலாச்ôரம், ஓய்வு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுதந்திரம், ஆரோக்கியம், உள்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு, அபாயங்கள், பருவநிலை ஆகிய ஒன்பது அம்சங்கள் பற்றி 194 நாடுகளை வகைப்படுத்தியிருக்காங்க. அதில் தொடர்ந்து 5-ஆவது முறையா எல்லாவற்றிலும் சிறப்புபெற்று முத-டத்தில பிரான்ஸ்தான் இருக்கு. அதற்கடுத்து ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனியாம். அமெரிக்காவுக்கு 7-வது இடம்தான் கிடைச்சிருக்கு.''
"அமெரிக்காவுக்கே 7-வது இடம்னா, நம்ம இந்தியாவுக்கு வாய்பே இருந்திருக்காது''
"அதுதான் இல்ல... நம்ம அப்துல்கலாம் கண்ட கனவு நாடான இந்தியா 100 மேல இருந்து மெல்ல முன்னேறி 88-வது இடத்துக்கு வந்திருக்காம். அதுவே சந்தோசம் தரும் விசயம்தானே... சரிப்பா நான் கிளம்புறேன். அதுக்கு முன்னாலே ஒரு விசயத்தை சொல்லிடுறேன்...''
"போய்ட்டு வர்றேன்கிறீயா?''
"ஹே... இது பழைய ஜோக்குப்பா... நான் தினமலர் நெட் அட்ரஸ் தர்றேன். அந்த அட்ரஸை க்ளிக் பண்ணி பாரு. ஒரு புது விசயம் உனக்கு விளங்கும். நோட் பண்ணிக்க... http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=733 சரி இராத்திரி போகி கொண்டாட்டத்தில பார்ப்போம் வரட்டா...''
"சரிப்பா...''


அன்பு நண்பர்களுக்கு இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

15 comments:

க.பாலாசி said...

நல்ல செய்தி... பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்காமல் இருப்பது நல்லது.

உங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

பட்டைய கிளப்புது பதிவு

ஒரு வித்தியாசமான நடையில் மிக சுவாரஸ்யமாய்

வாழ்த்துகள் நண்பரே!

sathishsangkavi.blogspot.com said...

அழகா இருக்கு உங்கள் பதிவு...

தங்கள் வருகைக்கு நன்றி....

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...

குடந்தை அன்புமணி said...

// க.பாலாசி said...
நல்ல செய்தி... பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்காமல் இருப்பது நல்லது.

உங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்//

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

// நட்புடன் ஜமால் said...
பட்டைய கிளப்புது பதிவு

ஒரு வித்தியாசமான நடையில் மிக சுவாரஸ்யமாய்

வாழ்த்துகள் நண்பரே!//

மிக்க மகிழ்ச்சி நண்பா.

குடந்தை அன்புமணி said...

//Sangkavi said...
அழகா இருக்கு உங்கள் பதிவு...

தங்கள் வருகைக்கு நன்றி....

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...//

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் said...

நம்ம அப்துல்கலாம் கண்ட கனவு நாடான இந்தியா 100 மேல இருந்து மெல்ல முன்னேறி 88-வது இடத்துக்கு வந்திருக்காம்//

மகிழ்ச்சியான செய்தி நண்பரே..

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
நம்ம அப்துல்கலாம் கண்ட கனவு நாடான இந்தியா 100 மேல இருந்து மெல்ல முன்னேறி 88-வது இடத்துக்கு வந்திருக்காம்//

மகிழ்ச்சியான செய்தி நண்பரே..//

இப்பதான் உங்கள் இடுகையை படித்துவிட்டு வருகிறேன். நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான செய்தியை தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சியே.

கலையரசன் said...

//நல்லவேளை தகவல் கொடுத்தே. இல்லைன்னா அதிகமா பணம் கொடுத்து கள்ள மார்க்கெட்ல வாங்க வேண்டியிருக்கும். நம்ம சம்பாத்தியத்தில அப்படியெல்லாம் செய்ய முடியாதுப்பா..''//

இந்த தடவை சேல்சு கேரளாவுல ஓனத்துக்கு வித்ததைவிட தாண்டனும்!! தமிழன் தலைவிரிச்சு நடக்கனும்!! பொங்கல், இட்லி, வடை வாழ்த்துக்கள்..

குடந்தை அன்புமணி said...

//கலையரசன் said...
//நல்லவேளை தகவல் கொடுத்தே. இல்லைன்னா அதிகமா பணம் கொடுத்து கள்ள மார்க்கெட்ல வாங்க வேண்டியிருக்கும். நம்ம சம்பாத்தியத்தில அப்படியெல்லாம் செய்ய முடியாதுப்பா..''//

இந்த தடவை சேல்சு கேரளாவுல ஓனத்துக்கு வித்ததைவிட தாண்டனும்!! தமிழன் தலைவிரிச்சு நடக்கனும்!! பொங்கல், இட்லி, வடை வாழ்த்துக்கள்..//

தமிழனா... தமிழச்சியா என்பது அவரவர் கையில் (மதுவின் அளவில்) இருக்கிறது.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்க்ல், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

தேவன் மாயம் said...

அன்புமணி!!! பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!

குடந்தை அன்புமணி said...

// தேவன் மாயம் said...
அன்புமணி!!! பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!//

தங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு மிக்க மகிழ்வை தருகிறது. தங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

//அன்பு நண்பர்களுக்கு இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.//

வாழ்த்துகள் நண்பா

அம்பிகா said...

iஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...