Wednesday, 7 January, 2009

ரயில் பயணத்தில்...


தாம்பரத்தில் இருந்து அலுவலகத்துக்கு கிளம்பினேன். மின்சார (ரயில்) தொடர்வண்டியில்தான் செல்வது வழக்கம். என்னுடைய அலுவலக நேரத்திற்கு செல்ல வேண்டுமானால் காலை எட்டு மணிக்கு வண்டி ஏறினால்தான் சரியாகச் சென்று சேரமுடியும்.இன்றும் அப்படித்தான் வண்டி ஏறினேன். வண்டி கிளம்பி மெதுவாக நகரத்தொடங்கியது. பள்ளி/கல்லூரி மணாவர்கள் எப்போதும் ஓடி வந்து ஏறித்தான் தன் வீரத்தை காட்டுவார்கள். (இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதனால் ஏற்படும் ஆபத்தை உணராமல்.) அப்போது நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடி வந்து தட்டுத்தடுமாறி ஏறினார். அவர் ஏறியதை பார்த்து வண்டியில் இருந்தவர்கள் எல்லாம் பதறிப் போனார்கள். சிலர் வாய்விட்டு திட்டவும் செய்தார்கள். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் என் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தார்.நான் எப்போதுமே வண்டியின் வலது பக்கச் சாளரத்தின் (ஜன்னல்) அருகே அமர்வது வழக்கம். (ஏன் தெரியுமா? காதைக் கொண்டாங்க... வலது பக்கமே பிளாட்பாரம் வரும். வண்டி ஏற நிற்பவர்களை பார்த்துக் கொண்டே வருவதற்காகத்தான். அவ்வளவுதானா என்று கேட்பவர்களை என்ன சொல்ல.... பார்த்து என்பதற்கு சைட் என்று சொன்னால்தான் டக்கென்று புரியுமோ? ஹி...ஹி...) என்னருகில் அமர்ந்தவர் சார், நீங்க கொஞ்சம் இப்படி மாறி உட்கார்ந்துகிறீங்களா? என்றார்.ஓடி வந்ததில் அவருக்கு ஏராளமாக வியர்திருந்தது. நானும் பெரிய மனது பண்ணி மாறி அமர்ந்தேன். சாளரத்தின் அருகில் அமர்ந்தவர், ஒவ்வொரு ரயில் நிலைய நிறுத்தம் வந்ததும் முடிந்தவரை சாளரத்தின் பக்கம் நெருங்கி எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தார். நாம எவ்வளவோ தேவலாம் போ-ருக்கே, சரியான காட்டானா இருப்பான் போ-ருக்கு என்று நினைத்துக் கொண்டேன். வெளியில் வேடிக்கைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு, அவரையே பார்த்துக் கொண்டு வந்தேன். அவர் எதற்கும் ச-க்கவில்லை. சென்னை பூங்கா ரயில் நிலையம் வந்ததும் அவசரமாக இறங்கி ஓடினார். நானும் இறங்க வேண்டிய நிறுத்தம் அதுதான். அவரின் பின்னாலேயே இறங்கி, ஆர்வம் மிகுதியால் அவரின் மீதே பார்வையை ஒடவிட்டேன். வேகமாகச் சென்றவர் அங்கு பயணச்சீட்டு எடுக்க நின்றிருந்த ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தார். அந்தப் பெண் பதறித் திரும்பினாள். இவரைப் பார்த்ததும் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள். அவர் ஏதோ பேச, பதிலுக்கு அந்தப் பெண்ணும் பேசினாள். ஓகோ. இது குடும்ப பிரச்சினை போ-ருக்கு என்று அப்போதுதான் எனக்கு தோன்றியது.அப்புறம் என்னாச்சுங்கிறீங்களா?எனக்கு அலுவலகத்துக்கு நேரமாச்சு. அதனால நான் கிளம்பிட்டேங்க. என்ன ஆச்சுன்னு எனக்கும் தெரிஞ்சுக்க ஆர்வமாத்தான் இருக்கு. என்ன பண்றது.....

9 comments:

நட்புடன் ஜமால் said...

நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேர நாட்டில் உள்ள ...

இராகவன் நைஜிரியா said...

//(இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதனால் ஏற்படும் ஆபத்தை உணராமல்.) //

எடுத்துச்சொன்னாலும், யோவ் பெரிசு உன் வேலைப் பாரு அப்படின்னு சொல்லுவாங்க...

இராகவன் நைஜிரியா said...

//அப்புறம் என்னாச்சுங்கிறீங்களா?எனக்கு அலுவலகத்துக்கு நேரமாச்சு. அதனால நான் கிளம்பிட்டேங்க. என்ன ஆச்சுன்னு எனக்கும் தெரிஞ்சுக்க ஆர்வமாத்தான் இருக்கு. என்ன பண்றது.....//

கதைய இப்படி பாதில் நிறுத்தக்கூடாது.. ரொம்ப தப்பு... அவ்..அவ்...அவ்....

அன்புமணி said...

\\நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேர நாட்டில் உள்ள ... \\
உங்க ஆசீர்வாதத்திற்கு நன்றி ஜமால்.

அன்புமணி said...

\\எடுத்துச்சொன்னாலும், யோவ் பெரிசு உன் வேலைப் பாரு அப்படின்னு சொல்லுவாங்க...\\
நான் மிடில் ஏஜ்தான் ராகவன்சார்.

அன்புமணி said...

\\கதைய இப்படி பாதில் நிறுத்தக்கூடாது.. ரொம்ப தப்பு... அவ்..அவ்...அவ்....\\
சீக்கிரம் நான் எழுதின கதையை பதிவு போடுறேன்.

அன்புமணி said...

\\எடுத்துச்சொன்னாலும், யோவ் பெரிசு உன் வேலைப் பாரு அப்படின்னு சொல்லுவாங்க...\\
நான் மிடில் ஏஜ்தான் ராகவன்சார்.

Bhuvanesh said...

// அவ்வளவுதானா என்று கேட்பவர்களை என்ன சொல்ல....
அவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது! நீ மேலே சொல்லு நைனா!!

//நானும் பெரிய மனது பண்ணி மாறி அமர்ந்தேன்

இந்த சின்ன வயசுல இவ்வளவு பெரிய த்யாகம் செய்யரதுனா சும்மாவா ??

Bhuvanesh said...

//சரியான காட்டானா இருப்பான் போ-ருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
நம்மள மாதிரி டிஜெண்டா சைட் அடிகலையா ??

//என்ன ஆச்சுன்னு எனக்கும் தெரிஞ்சுக்க ஆர்வமாத்தான் இருக்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...