அனைத்து உலக மகளிர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்! உலக மகளிர் தினத்தை முன்னிட்டு என் நண்பனின் கவிதை. எல்லோரும் தங்களின் மனைவி்யை பற்றி இப்படி யோசித்திருப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான்?!
பால் வண்டிச் சப்தத்தில்
விழித்துக் கொள்கிறது
மனைவியின் காலை.
முற்றத்தில் குவித்த
பாத்திரங்களைக்
துலக்குதல் தொடங்கி...
பள்ளிக்கு செல்லும்
மகனின் கையசைப்பு வரை
தீவிரப்படும்
அவளின் சுழற்சி.
இருப்பதைக்கொண்டு
பகல் உணவுமுடித்தவளை
மலைக்க வைக்கும்
அவிழ்த்தெறிந்த
முந்தைய அழுக்குகள்...
மல்லுக்கு நின்றபின்
மறுபடி செல்வாள்
அடுக்களையுத்தத்திற்கு.
இரவில்
எல்லாம் முடிந்ததென
எடுத்து வைப்பாள்
கொட்டாவி விட்டபடி
காலை முதல்
இரவு வரை-
அடுக்களையில் உழன்றவளை
அணைக்கத் தொடுகையில்
கூசுகிறது மனசு.
- கோ. பாரதிமோகன், கும்பகோணம்.
மேற்கண்ட கவிதை நடுத்தர வர்க்கத்தினரிடையே நடைபெறும்.
மேல்தட்டு மக்களிடையே எப்படி நடைபெறும் என்பது பற்றிய எனது குசும்பு கீழே...
காலையில எந்திரிச்சு,பாத்திரம் விளக்கி, காபி போட்டு, பிள்ளைகளை குளிபாட்டி, சாப்பிட வைச்சு, அவருக்கு டிபன் எடுத்து அனுப்பி, துணிகளை துவைச்சு...ஸ்... டயடா எனக்கா... நெவர்... ஏன்னா, எல்லா வேலையும் சமையற்காரிதானே செய்றா! (இது எப்படி இருக்கு!)
31 comments:
\\பால் வண்டிச் சப்தத்தில்
விழித்துக் கொள்கிறது
மனைவியின் காலை.\\
காலை உதறுகின்றான்
காளை
\\இருப்பதைக்கொண்டு
பகல் உணவுமுடித்தவளை
மலைக்க வைக்கும்
அவிழ்த்தெறிந்த
முந்தைய அழுக்குகள்...\\
மிக அழகு
உண்மை ...
\\அடுக்களையில் உழன்றவளை
அணைக்கத் தொடுகையில்
கூசுகிறது மனசு.\\
அடடா மிகவும் அருமை
இதனை படிக்கையில்
என மனமும் கூசுகிறது
இப்படி காதலிக்க தெரியவில்லையே என்று
\\எல்லா வேலையும் சமையற்காரிதானே செய்றா! (இது எப்படி இருக்கு!)\\
அட
என்ன ஆச்சு அன்பு ...
//நட்புடன் ஜமால் said...
\\எல்லா வேலையும் சமையற்காரிதானே செய்றா! (இது எப்படி இருக்கு!)\\
அட
என்ன ஆச்சு அன்பு ...//
மேல் தட்டுப் பெண்கள் குடும்பத்தை கவனிப்பதில்லை என்பதை குறிப்பிடவே அப்படி சொன்னேன். மற்றபடி ஏதுமில்லை.
//பால் வண்டிச் சப்தத்தில்
விழித்துக் கொள்கிறது
மனைவியின் காலை. //
தப்பு... தப்பு...
கணவனின் காலை...
தம்பி எந்த ஊட்ல மனைவி எழுந்துகிறாங்க...
//அடுக்களையில் உழன்றவளை
அணைக்கத் தொடுகையில்
கூசுகிறது மனசு. //
கரெக்டுதான்.
ஊட்டுகாரம்மாவுக்கு அப்ப ஹெல்ப் பண்ணிகிட்டு இருந்தா, இப்ப கூசாதில்ல.
//இருப்பதைக்கொண்டு
பகல் உணவுமுடித்தவளை
மலைக்க வைக்கும்
அவிழ்த்தெறிந்த
முந்தைய அழுக்குகள்... //
உண்மைதாங்க...
//காலையில எந்திரிச்சு,பாத்திரம் விளக்கி, காபி போட்டு, பிள்ளைகளை குளிபாட்டி, சாப்பிட வைச்சு, அவருக்கு டிபன் எடுத்து அனுப்பி, துணிகளை துவைச்சு...ஸ்... டயடா எனக்கா... நெவர்... ஏன்னா, எல்லா வேலையும் சமையற்காரிதானே செய்றா! (இது எப்படி இருக்கு!)//
இது சூப்பர்.
குடந்தை அன்புமணி அவர்களே,
இன்று கொஞ்சம் ஆணி அதிகம். அதனால அப்பாலிக்க வரேன்
மகளிர் தின வாழ்த்துக்கள்.... மகளிரணியனரே!
உங்கள் நண்பரின் கவிதை பிரமாதம், அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. அழகான ஆரம்பம் அம்சமான முடிவு.
எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள்... இவ்வளவும் முடித்த பின்னர் வேலைக்குச் செல்வார்கள்.. நான் இங்கே பழக்கப்பட்டவன்.. ஒவ்வொரு பெண்மணிகளும் தம் கடமையாக எண்ணி செய்வதை எண்ணி வியந்தவன்.....
(மவனே நாளைக்கு வாடி.... உனக்கு வெச்சிருக்கேன் ஆப்பு என்று என் காதில் மனைவி ஓதுகிறாள்...ஹி ஹி ஹி.... இது அன்புமணிக்கு..)
உங்க குசும்பு...... ரொம்ப நக்கலய்யா!!!!
//இராகவன் நைஜிரியா said...
குடந்தை அன்புமணி அவர்களே,
இன்று கொஞ்சம் ஆணி அதிகம். அதனால அப்பாலிக்க வரேன்//
வாங்க.. பணியை முடிச்சிட்டே வாங்க...
//(மவனே நாளைக்கு வாடி.... உனக்கு வெச்சிருக்கேன் ஆப்பு என்று என் காதில் மனைவி ஓதுகிறாள்...ஹி ஹி ஹி.... இது அன்புமணிக்கு..)//
அங்கயும் அப்படித்தான்னு கேள்வி!
மகளிர் தின வாழ்த்துக்கள்.. உங்கள் நண்பரின் கவிதை அருமை என்றால் உங்க குசும்பு ரொம்ப ஓவர்.. ஆமா..
நல்லதொரு கவிதை. வீட்டில் வேலைகளைப் பங்கிட்டுச் செய்யும் ஆண்கள் தற்போது எமக்குள் முன்னேற்றம் கண்டுள்ளது நன்மையே.
எனினும் பெண்மீதான தளைகள் அறுபடாமல் இன்னும் நிறையவே இருக்கிறது.
குசும்பு கொஞ்சம் ஓவர் பறவாயில்லை.
சாந்தி
//கார்த்திகைப் பாண்டியன் said...
மகளிர் தின வாழ்த்துக்கள்.. உங்கள் நண்பரின் கவிதை அருமை என்றால் உங்க குசும்பு ரொம்ப ஓவர்.. ஆமா..//
ரொம்ப ஓவராத்தான் போயிட்டனோ?
// tamil24.blogspot.com said...
நல்லதொரு கவிதை. வீட்டில் வேலைகளைப் பங்கிட்டுச் செய்யும் ஆண்கள் தற்போது எமக்குள் முன்னேற்றம் கண்டுள்ளது நன்மையே.
எனினும் பெண்மீதான தளைகள் அறுபடாமல் இன்னும் நிறையவே இருக்கிறது.
குசும்பு கொஞ்சம் ஓவர் பறவாயில்லை.
சாந்தி//
முதன்முதலாக எனது வலைத்தளத்திற்கு வருகை புரிந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன்! அடிக்கடி வாங்க!
நண்பரோட கவிதை நல்லாயிருக்குது.
// ச.முத்துவேல் said...
நண்பரோட கவிதை நல்லாயிருக்குது.//
மிக்க நன்றி! உங்கள் கருத்துக்கள் உரியவருக்கு சேர்ப்பிக்கப்படும்.
குசும்பு நல்லா இருக்கு
//உருப்புடாதது_அணிமா said...
குசும்பு நல்லா இருக்கு//
அணிதிரண்டு வந்த தங்களுக்கு நன்றி!
அனைத்து உலக மகளிர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்! உலக மகளிர் தினத்தை முன்னிட்டு என் நண்பனின் கவிதை. எல்லோரும் தங்களின் மனைவி்யை பற்றி இப்படி யோசித்திருப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான்?!///
ஆஹா!!அருமை!!!
\\அடுக்களையில் உழன்றவளை
அணைக்கத் தொடுகையில்
கூசுகிறது மனசு.\\//
உண்மைதான்!!!
\\எல்லா வேலையும் சமையற்காரிதானே செய்றா! (இது எப்படி இருக்கு!)\\
//
கடைசியில் ஒரு உண்மை!!
குசும்பு ....நல்லாருக்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
குசும்பு ஜாஸ்த்தியா இருக்கு, இருந்தாலும் எழுத்து வரிகள்
ரசிக்கும்படியாகவும் இருக்கு.
நேரத்திற்கு தகுந்த மாதிரி அருமையா எழுதி இருக்கீங்க.
நல்லா இருக்கு!
குசும்பு... நல்ல ரைமிங் கலக்கல்
கவிதையும் நல்லா இருக்கு...
Post a Comment