Wednesday, 18 March, 2009

தனிக்குடித்தனம்

ணி ரெண்டாகிவிட்டதை கடிகாரம் சொல்லி ஓய்ந்தது. அகிலா மிகவும் களைத்துப்போய் இதயம் கனத்துப்போய் அமர்ந்திருந்தாள். அவள் கணவன் சேகர் இன்னும் வீடு வந்து சேரவில்லை. இரண்டுமாத காலமாகவே இப்படித்தான் நடந்து கொள்கிறான். மாமியார், மாமனாருடன் தெற்கு தெருவில் ஒன்றாக இருந்தபோது இப்படி நடந்து கொண்டதேயில்லை. இரவு பத்து மணிக்குமேல் வெளியில் சென்றதுமில்லை, தங்கியதுமில்லை. கூட்டுக்குடித்தனம் சரிப்பட்டு வரவில்லை அகிலாவுக்கு.

எதந்கெடுத்தாலும் மாமியார், மாமனாரைக்கேட்டு செய்வது பிடிக்கவில்லை. தினயாக பேசமுடியவில்லை. ஒரு சினமாவுக்கு போக முடியவில்லை. இப்படி ஏகப்பட்ட 'இல்லை' கூட்டுக்குடித்தனத்தில். கணவனிடம் வற்புறுத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து தனியே குடிவந்த சந்தோசம் கொஞ்ச நாட்கள்டகூட நிலைக்கவில்லை. ஒன்றாக இருந்தபோது ஒழுங்காக இருந்த சேகர், வீ்ட்டுக்கு தாமதாமக வருவதைக்கூட பொறுத்துக்கொண்ட அகிலாவால் கணவன் குடிக்கவும் ஆரம்பிக்க வெறுத்துப்போனாள். முதலில் குடிக்கவில்லை பாக்குதான் போட்டிருக்கிறேன் என்றவன் பிறகு ஒத்துக்கொண்டான். 'அப்படித்தான் செய்வேன்' என்று கூற அதிர்ந்துபோனாள். நாளாக நாளாக இரவு வீட்டிற்கு வரும் நேரம் மாறிக்கொண்டிருந்தது. அரிசியில்லை, பருப்பு இல்லை என்று சொல்லவே பயந்தாள். 'நான் எங்கே போறது? சும்மா தொந்தரவு பண்ணினே,நான் எங்கேயாவது போயிடுவேன்' என்று மிரட்டலாய் கூறினான்.

சந்தர்ப்பம் இப்படி இருக்க, ஒரு வயசு குழந்தைக்கும் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று வர ரொம்பவும் வெறுத்துபோனாள். அம்மா வீட்டுக்குபோகலாம் என்றாள், அம்மாக்காரி கடுமையாக திட்டினாள். 'எங்க பேச்சை மீறி, தனிக்குடித்தனம் போனில்ல... அனுபவி! உனக்கு கீழே ஒருத்தி இருக்கா... இங்க வந்தீன்னா அவ வாழ்க்கை பாழாய் போகும். அதனால இங்க வர்ற வேலைமட்டும் வச்சுக்காதே!' என்றாள்.
அகிலாவுக்கு இப்போதுதான் உறைத்தது. தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என்று.பொழுதும் விடிந்தது. இதுவரை அவனும் வரவில்லை.ஒரு கடிதம் எழுதி கணவன் பார்க்கும் இடத்தில் வைத்துவி்ட்டு, ஒருமுடிவோடு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்.

தாமதமாக வீடுவந்த சேகர், வழக்கத்திற்கு மாறாக வீடு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டான். வழக்கமாக சாவி வைக்கும் இடத்திலிருந்து சாவி எடுத்து திறந்து உள்ளே சென்றவன், கண்ணாடிக்கருகில் காற்றில் படபடத்துக்கொண்டிருக்கும் கடிதத்தை எடுத்துப் படித்தான். மெல்ல புன்னகைத்துக்கொண்டான். கூட்டுக்குடித்தனத்தின் அருமையை உணர்ந்து கொண்ட அகிலாவுக்காக குடிகாரனாக போட்ட வேசத்திற்கு நல்ல பலன் கிடைத்ததில் மகிழ்ந்து போனவன் வீட்டை காலி செய்ய டெம்போவுக்கு சொல்ல கிளம்பினான். மறக்காமல் மாமியாருக்கும் நன்றி சொல்லி போன் செய்தான்.

15 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! இன்னும் இது இருக்கே!

மிக்க சந்தோஷம் அன்பான மணியே

ஜீவன் said...

நல்லா இருக்கு அன்புமணி!!

ஜோதிபாரதி said...

அருமை அன்பு!

Anonymous said...

ஹாஹாஹா
நல்லா இருக்கு!
நல்ல ஐடியாதான்?

உருப்புடாதது_அணிமா said...

அருமையாக இருக்கு..

இராகவன் நைஜிரியா said...

ம்.. தனிக்குடுத்தனம் போகக்கூடாது.. கூட்டு குடும்பம்தான் சரி என்பதற்கான நல்ல கதை.

இராகவன் நைஜிரியா said...

//அகிலா மிகவும் களைத்துப்போய் இதயம் கனத்துப்போய் அமர்ந்திருந்தாள். //

ஓ இங்கேயும் இதயம் கனத்து போச்சுங்களா?

நசரேயன் said...

எதிபாராத முடிவு.. நல்லா இருக்கு

நிலாவும் அம்மாவும் said...

அநியாயம்..அக்கிரமம்....ஏமாற்று வேலை....ஹி ஹி .....நல்ல ஐடியாங்க...பொண்ணுங்க படிக்காம ஆண்கள் மட்டும் படிச்சா work out ஆகும்

thevanmayam said...

எதந்கெடுத்தாலும் மாமியார், மாமனாரைக்கேட்டு செய்வது பிடிக்கவில்லை. தினயாக பேசமுடியவில்லை. ஒரு சினமாவுக்கு போக முடியவில்லை. இப்படி ஏகப்பட்ட 'இல்லை'///

இல்லைகள் மற்றும் தொல்லைகள்!

thevanmayam said...

அம்மாக்காரி கடுமையாக திட்டினாள். 'எங்க பேச்சை மீறி, தனிக்குடித்தனம் போனில்ல... அனுபவி! உனக்கு கீழே ஒருத்தி இருக்கா... இங்க வந்தீன்னா அவ வாழ்க்கை பாழாய் போகும். அதனால இங்க வர்ற வேலைமட்டும் வச்சுக்காதே!' என்றாள்.///

தாய்ன்னா இப்படித்தான் இருக்கவேண்டும்!

thevanmayam said...

கூட்டுக்குடித்தனத்தின் அருமையை உணர்ந்து கொண்ட அகிலாவுக்காக குடிகாரனாக போட்ட வேசத்திற்கு நல்ல பலன் கிடைத்ததில் மகிழ்ந்து போனவன் வீட்டை காலி செய்ய டெம்போவுக்கு சொல்ல கிளம்பினான்.///

இப்படி ஒரு வேசமா?

thevanmayam said...

மறக்காமல் மாமியாருக்கும் நன்றி சொல்லி போன் செய்தான். ///

மாமியாருடன் கூட்டணியா? ஓகே ஒகே!!

thevanmayam said...

ஓட்டும் போட்டாச்சு அன்பு..

பழமைபேசி said...

//thevanmayam said...
ஓட்டும் போட்டாச்சு அன்பு..
//

நானும்...இஃகிஃகி!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...