Sunday, 15 March, 2009

அறிவு வித்தியாசங்கள்

கவிஞர் அப்துல்ரகுமான் மிகச்சிறந்த கவிஞர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் 'கஜல்'வகை கவிதைகள் எழுதுவதில் தமிழில் அவருக்கு நிகர் அவர்தான். ஒரு பிரபலமான வார இதழில் அவருடைய கேள்வி பதில் பகுதி வெளியானது. அதில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி: கண்ணுக்கு மூடி(இமை) வைத்த இறைவன், செவிக்கு வைக்காதது ஏன்? அதற்கு அவர் சொன்ன பதில்: செவி உண்டியலில் நாம் எதிர்பாராத நேரத்திலும் காசு விழலாம், அதனால்தான்.
எவ்வளவு அருமையான பதில் பாருங்கள். அதுசரி எதுக்கு இவ்வளவு சப்பைபக்கட்டு என்கிறீர்களா?
இன்னைக்கு ரயிலில் வரும்போது எதிரில் ஒருவர் போனில் பேசிக்கொண்டிருந்தார். அது என் காதில் விழுந்ததா... அதை உங்ககிட்ட சொல்லிடணும்னு தோணிச்சு... அதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம யோசிச்சப்ப அப்துல்ரகுமான் உதவி செய்தார். எதிர்முனையில பேசினவங்க ஏதோ பிரச்சினையைப் பற்றி அவர்கிட்ட சொல்லியிருப்பாங்க போல, அதுக்கு அவரு ஒரு குட்டி ... இல்ல இல்ல... ரொம்ப குட்டி கதை சொன்னாரு...
ஒத்தையடிப்பாதையில யானை வந்திட்டுகிட்டிருந்திச்சு.எதிரில ஒரு பன்றி சேறுசகதியில புரண்டு எழுந்து அப்படியே வந்திட்டிருந்திச்சு. அதைப்பார்த யானை ஒதுங்கி பன்றிக்கு வழிவிட்டு விலகி நின்னுச்சாம். அதைப்பார்த்த பன்றி, "எவ்வளவு பெரிய யானை என்னைப்பார்த்து பயந்து ஒதுங்கி வழிவிட்டு விலகி நிற்குதேன்"னு திமிரோடநடந்ததாம். அந்த பன்றிக்கு அவ்வளவுதான் அறிவுன்னுட்டு போவியா" ன்னு எதிரில இருந்தவர் சொன்னாரு.யானை பலம் வாயந்தது. பன்றியைப்பற்றித்தான் உங்களுக்கே தெரியும். அட... எவ்வளவு அருமையான விளக்கம் கொடுத்தாரு. நாமகூட சூரியனை பார்த்து நாய் குலைக்குதுன்னுட்டு போ என்று சொல்வோம் அதையே இவர் வேறு பாணியில சொல்லியிருக்காரு. இருந்தாலும் நல்லா இருந்ததால உங்ககிட்ட பகிர்ந்துகிட்டேன். (எனக்கும் ஒரு பதிவுக்கு ஆச்சு)

13 comments:

நட்புடன் ஜமால் said...

உங்க பதிவு பற்றி பேசும் முன்

எனக்கு ஒரு சந்தேகம்

கஜல் என்றால் என்ன

எனக்கு புரியும் படி சொல்லுங்களேன்

நட்புடன் ஜமால் said...

\\இருந்தாலும் நல்லா இருந்ததால உங்ககிட்ட பகிர்ந்துகிட்டேன்\\

நல்ல விடயம்

அதுவும் அருமையா மனசுல பதியற மாதிரி பகிர்ந்து இருக்கீங்க ...

நன்றி.

குடந்தைஅன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
உங்க பதிவு பற்றி பேசும் முன்

எனக்கு ஒரு சந்தேகம்

கஜல் என்றால் என்ன

எனக்கு புரியும் படி சொல்லுங்களேன்//

இந்த வகை கவிதைகள் காதலைப்பற்றியே இருக்கும். அதிலும் சோகம், காதல், மகிழ்ச்சி கலந்திருக்கும். எதிர்பாராத வார்த்தைகள் வந்து விழும். இவ்வகை கவிதைகளை எனது நண்பர் பாரதிமோகன் முயற்சி செய்திருக்கிறார். அந்த கவிதைகளை விரைவில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

ஆதவா said...

கமெண்ட் ஃபாரம் மாத்திட்டீங்களா... என்னால பின்னூட்டம் போடவே முடியலை... பழைய படி மாற்றுங்களேன்!!!///

கஜல் கவிதைகளளயும் எதிர்பார்க்கிறேன் அன்பு!!

அப்துல் ரகுமானின் திருப்ப பதில்.... அட போட வைக்கிற்து!!!

குடந்தைஅன்புமணி said...

//ஆதவா said...
கமெண்ட் ஃபாரம் மாத்திட்டீங்களா... என்னால பின்னூட்டம் போடவே முடியலை... பழைய படி மாற்றுங்களேன்!!!///

கஜல் கவிதைகளளயும் எதிர்பார்க்கிறேன் அன்பு!!

அப்துல் ரகுமானின் திருப்ப பதில்.... அட போட வைக்கிற்து!!!//


நண்பர்களின் யோசனைப்படிதான் கருத்துப்படிவம் மாற்றினேன். என்ன மாதிரியான சிரமம் என்று அறிய விரும்புகிறேன். விரைவில் கஜல் கவிதைகள் வலையில் வரும்!

karpakam said...

இனிமே காதை விழிப்பாக வைத்துக்கொள்ள வேண்டியதுதான்!

நிலாவும் அம்மாவும் said...

எனக்கு பாக்யராஜ் படம் பார்த்த உணர்வு வருது....

நல்ல இருக்குங்கோவ்வ்

வருங்கால முதல்வர் said...

எனக்கு பாக்யா படிச்சா மாதிரி ஒரு பீலிங்ஸ்

குடுகுடு

குடந்தைஅன்புமணி said...

//நிலாவும் அம்மாவும் said...
எனக்கு பாக்யராஜ் படம் பார்த்த உணர்வு வருது....

நல்ல இருக்குங்கோவ்வ்//


தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!

குடந்தைஅன்புமணி said...

//வருங்கால முதல்வர் said...
எனக்கு பாக்யா படிச்சா மாதிரி ஒரு பீலிங்ஸ்

குடுகுடு//

மிக்க நன்றி!தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...

MayVee said...

nalla think pannurangappa....
note pannunga aiyya...
adutha pukAR viruthu ungalukku thaan .....

"(எனக்கும் ஒரு பதிவுக்கு ஆச்சு) "

ellam saringa...
aanal yen intha kola veri

குடந்தைஅன்புமணி said...

//MayVee said...
nalla think pannurangappa....
note pannunga aiyya...
adutha pukAR viruthu ungalukku thaan .....

"(எனக்கும் ஒரு பதிவுக்கு ஆச்சு) "

ellam saringa...
aanal yen intha kola veri//

????

Anonymous said...

அதுவா காதிலை விழுந்திச்சா!
அப்துல் ரகுமானின்... பதில் நச்
இதான் குட்டி கதையா!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...