Tuesday 26 May, 2009

ஏதாவது செய்யணும் பாஸ்...

The crazy traffic in Chennai

ஏதாவது செய்யணும் பாஸ்...
இந்தத் தலைப்பில் பலர் எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது டிராபிக்ஜாம் தான். இன்று உலகம் முழுவதுமே இந்தப் பிரச்சினை இருக்கிறது. காலையில் வீ்ட்டைவிட்டு கிளம்பினால் அலுவலகம் போய் சேருவதற்குள் போதுபோதுமென்று ஆகிவிடுகிறது. பஸ்ஸில் பயணிப்பது பெரும்பாடு என்று அங்க இங்க கடன் வாங்கி அல்லது லோன் போட்டு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கினாலும் போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க முடியாது. அகலமான சாலையானாலும் சாலையின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்திவைக்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு தொல்லை ஏற்படுகிறது. இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் காவல்துறையினர் தவிக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை சம்பந்தமாக குடந்தை காவல்துறையினர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வியாபாரிகளை அழைத்துப் பேசினர். அந்தக்கூட்டத்தில் ஒரு புத்திசாலித்தனமான யோசனையை கொண்டுவந்தனர். அதற்கு எல்லாரும் ஒத்துழைப்பது என்றும் முடிவு செய்தனர். அந்த முடிவு என்ன என்று கேட்கிறீர்களா...

வாரத்தின் ஏழுநாட்களை 3+ 3+1 என்று பிரித்துக் கொண்டனர்.
திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் சாலையின் இடது புறத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டும்.
வியாழன், வெள்ளி, சனி கிழமைகளில் வலது புறத்தில் நிறுத்தவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் இருபுறங்களிலும் நிறுத்திக்கொள்ளலாம். அப்படி மீறுபவர்களின் வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். இப்போது குடந்தையில் போக்குவரத்து சீராக இருக்கிறது.
இதை சென்னையிலும் நடைமுறைப்படுத்திப் பார்கலாம்!

35 comments:

ஆ.சுதா said...

ஆஹா!! நல்ல யோசனையா இருக்கே. சென்னயில 'ஏதாவது செய்யுறாங்களா பார்ப்போம் பாஸ்'

வியா (Viyaa) said...

nalla yosanai anbumani..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல யோசனை, நல்ல பகிர்வு நண்பா..

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயம் தான்

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல யோசனை. நடந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் வண்டி வைத்து இருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு இடைஞல் இல்லாமல் வண்டியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். முதலில் சுயக் கட்டுப்பாடு முக்கியம்.

குடந்தை அன்புமணி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
ஆஹா!! நல்ல யோசனையா இருக்கே. சென்னயில 'ஏதாவது செய்யுறாங்களா பார்ப்போம் பாஸ்'//


செய்யணும் பாஸ் காலைநேரத்தில் வேலைக்கு செல்வதற்குள் வியர்த்து விறுவிறுத்து போகுது. அப்புறம் ஆபிஸ் போய் என்னத்தை செய்ய...

குடந்தை அன்புமணி said...

நன்றி!
வியா, ஆ.ஞானசேகரன்,ஜமால்

குடந்தை அன்புமணி said...

//இராகவன் நைஜிரியா said...
மிக நல்ல யோசனை. நடந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் வண்டி வைத்து இருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு இடைஞல் இல்லாமல் வண்டியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். முதலில் சுயக் கட்டுப்பாடு முக்கியம்.//

நீண்ட இடைவெளிக்கு பிறகு நம்ம பக்கம் வந்தமைக்கு மகிழ்ச்சி! நீங்க சொல்வதும் நடைமுறைக்கு வரவேண்டியது முக்கியம்தான்.

மணிஜி said...

உருப்படாத சென்னை வாகனஓட்டிகளுக்கு ஒரு உருப்படியான ரோசனைதான்(மஞ்சு வாங்குது)

Unknown said...

ஆமாம் பாஸ்.உங்க கவிதை குரல்
வலை திறந்த மால்வேர் வைரஸ்
என்று தகவல் வருது.

நேத்து போய் ஓடி வந்துட்டேன்.

Unknown said...

ஆமாம் பாஸ்.உங்க கவிதை குரல்
வலை திறந்த மால்வேர் வைரஸ்
என்று தகவல் வருது.

நேத்து போய் ஓடி வந்துட்டேன்.

பழமைபேசி said...

தகவல் பரிமாற்றத்திற்கு நன்றிங்க!

அ.மு.செய்யது said...

இது ஒரு நல்ல யோசனை.


ஆனால் இது சென்னை போன்ற மிகப்பெரிய நகரங்களுக்கு ஒத்து வருமா ? என்பது சந்தேகமே.

காரணம் சென்னைவாசிகள் முக்கால்வாசி பேரின் வாகனங்களை போலிஸ் கைப்பற்ற வேண்டி வரும்.

Suresh said...

நல்ல விஷியம் பாஸ் :-)

சொல்லரசன் said...

இராகவன் நைஜிரியா said...
//மேலும் வண்டி வைத்து இருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு இடைஞல் இல்லாமல் வண்டியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். முதலில் சுயக் கட்டுப்பாடு முக்கியம்.//

இந்த சுயக் கட்டுபாடு ஒவ்வொரு மனிதருக்கும் வந்தால் (உங்களையும்,என்னையும் உட்பட)ஏதாவது செய்யவேண்டிய அவசியமே இல்லை

அகநாழிகை said...

நல்லா எழுதியீருக்கிங்க நண்பா,

‘அகநாழிகை‘
பொன்,வாசுதேவன்

தேவன் மாயம் said...

குடந்தை காவல்துறையினர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வியாபாரிகளை அழைத்துப் பேசினர். அந்தக்கூட்டத்தில் ஒரு புத்திசாலித்தனமான யோசனையை கொண்டுவந்தனர்///

நம்ம போலீஸா! ஆச்சரியமப்பா!!

Arasi Raj said...

நல்லாக்கீதே ....

வேணும்னா சொல்லுங்க...இங்க இருக்குற சாலை விதிகள் எல்லாம் சொல்றேன்.....அரசாங்கத்துக்கு நல்ல காசும் கிடைக்கும்...எல்லாரும் ஒழுங்கா சொன்ன மாதிரியும் செய்வாங்க

வேத்தியன் said...

நல்ல விடயம் தான்...

ஆதவா said...

சான்ஸே இல்லை... சென்னையிலெல்லாம் இப்படி நடக்கனும்னா......!!!

இன்னும் கொஞ்சம் நாள்ல, அண்டர் கிரவுண்ட்ல தான் நிறுத்துவாங்க!!!

நல்ல பதிவு!!

குடந்தை அன்புமணி said...

தண்டோரா சார்... மஞ்சு சாங்குதுன்னா என்ன சார்?

குடந்தை அன்புமணி said...

// கே.ரவிஷங்கர் said...
ஆமாம் பாஸ்.உங்க கவிதை குரல்
வலை திறந்த மால்வேர் வைரஸ்
என்று தகவல் வருது.

நேத்து போய் ஓடி வந்துட்டேன்.//

அய்ய்யோ... இப்ப என்ன செய்ய? தெரிந்தவர்கள் சொல்லுங்க...

குடந்தை அன்புமணி said...

// பழமைபேசி said...
தகவல் பரிமாற்றத்திற்கு நன்றிங்க!//

தங்கள் வருகைக்கும் நன்றிங்க!

குடந்தை அன்புமணி said...

//காரணம் சென்னைவாசிகள் முக்கால்வாசி பேரின் வாகனங்களை போலிஸ் கைப்பற்ற வேண்டி வரும்.//

அ.மு.செய்யது சார்... அப்படியாவது அவர்கள் திருந்துவார்களா பார்க்கலாம்...

குடந்தை அன்புமணி said...

// Suresh said...
நல்ல விஷியம் பாஸ் :-)//

தங்கள் வருகைக்கும் நன்றிங்க!

குடந்தை அன்புமணி said...

//சொல்லரசன் said...
இராகவன் நைஜிரியா said...
//மேலும் வண்டி வைத்து இருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு இடைஞல் இல்லாமல் வண்டியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். முதலில் சுயக் கட்டுப்பாடு முக்கியம்.//

இந்த சுயக் கட்டுபாடு ஒவ்வொரு மனிதருக்கும் வந்தால் (உங்களையும்,என்னையும் உட்பட)ஏதாவது செய்யவேண்டிய அவசியமே இல்லை//

சரியாச் சொன்னீங்க சொல்லரசன்! (சொல்லரசன்னு இதற்காகத்தான் பேர் வைச்சாங்களா?)

குடந்தை அன்புமணி said...

// "அகநாழிகை" said...
நல்லா எழுதியீருக்கிங்க நண்பா,

‘அகநாழிகை‘
பொன்,வாசுதேவன்//

நன்றி நண்பரே! என்ன இருந்தாலும் உங்களைப்போல வருமா?

குடந்தை அன்புமணி said...

//thevanmayam said...
குடந்தை காவல்துறையினர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வியாபாரிகளை அழைத்துப் பேசினர். அந்தக்கூட்டத்தில் ஒரு புத்திசாலித்தனமான யோசனையை கொண்டுவந்தனர்///

நம்ம போலீஸா! ஆச்சரியமப்பா!!//

இது கும்பகோணம் போலீசாக்கும்!

குடந்தை அன்புமணி said...

//நிலாவும் அம்மாவும் said...
நல்லாக்கீதே ....

வேணும்னா சொல்லுங்க...இங்க இருக்குற சாலை விதிகள் எல்லாம் சொல்றேன்.....அரசாங்கத்துக்கு நல்ல காசும் கிடைக்கும்...எல்லாரும் ஒழுங்கா சொன்ன மாதிரியும் செய்வாங்க//

அது இருக்கட்டும். காலத்தை வென்றவரே... எப்ப வந்தீங்க...

குடந்தை அன்புமணி said...

//வேத்தியன் said...
நல்ல விடயம் தான்...//

தங்கள் வருகைக்கு நன்றிங்க!

குடந்தை அன்புமணி said...

//ஆதவா said...
சான்ஸே இல்லை... சென்னையிலெல்லாம் இப்படி நடக்கனும்னா......!!!

இன்னும் கொஞ்சம் நாள்ல, அண்டர் கிரவுண்ட்ல தான் நிறுத்துவாங்க!!!

நல்ல பதிவு!!//

நீங்க சொன்ன மாதிரி நடக்கவும் சான்ஸ் இருக்கு. சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி பார்க்கிங் கட்ட யோசனை இருக்காம்...

மணிஜி said...

பசங்க படம் பார்க்கலயா அன்பு. நல்ல யோசனைனு அர்த்தம்

நட்புடன் ஜமால் said...

எதுனா கோபமா பாஸ்

என் கருத்து தவிர மற்ற எல்லோருக்கும் பதில் சொல்லி இருக்கீங்க‌

எத இருந்தாலும் பேசி தீர்த்துக்களாம்

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
எதுனா கோபமா பாஸ்

என் கருத்து தவிர மற்ற எல்லோருக்கும் பதில் சொல்லி இருக்கீங்க‌

எத இருந்தாலும் பேசி தீர்த்துக்களாம்//


//குடந்தை அன்புமணி said...
நன்றி!
வியா, ஆ.ஞானசேகரன்,ஜமால்//
நமக்குள்ள என்ன பாஸ் கோபம்... நன்றின்னு போட்டதுக்கு முதலில் தாங்கள் கோபப்பட்டதை மறந்துட்டு போட்டுட்டேனேன்னு நினைச்சிட்டு இருந்தேன்... அடிக்கடி வாங்க...!

முனைவர் இரா.குணசீலன் said...

அட யோசனை நல்லாருக்கே

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...