Sunday 7 June, 2009

கேள்வி பிறந்தது அன்று...

பதிவர்களை பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள உதவும் இந்தப் பதிவுக்கு என்னையும் அழைத்த சொல்லரசன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் தாத்தாவின் பெயர் சுப்பிரமணி. அதனால், பேரன், பேத்திகளின் பெயரில் மணி இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.(பெயரில் மட்டுமாவது இருக்கட்டும் என்று நினைத்தார்போலும்.) நல்ல தமிழ் பெயர் என்பதால் எனக்கும் என் பெயர் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் என் அம்மா கண்கலங்க, நானும்...ஊரில் என் சகோதரனுடன் இருக்கிறார்கள்.(சென்னை வாழ்க்கை என் தாய், தந்தையருக்கு பிடிக்கவில்லையாம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பள்ளிப்பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவன்.இதிலிருந்து என் கையெழுத்து எப்படி இருக்கும் என்று ஊகிக்கலாம். இப்பொழுது மெதுவாக எழுதினால் மட்டும் அழகாக இருக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

இதுதான் என்றில்லை. ஆனாலும் என் அம்மா சமைக்கும் அசைவ உணவு என்றால்...ம்! (என் மனைவிக்கும் சரி, என் சகோதரிக்கும் சரி, அந்த பக்குவமான சமையல் வராது.)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமாம். தொடர்வது அவர்கள் கையில்தான் இருக்கிறது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் கால்நனைக்க மட்டுமே பிடிக்கும். அருவி... அதை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். ஆற்றில் குளிப்பதுதான் மிகவும் பிடித்தமானது. என் பள்ளிக்காலம் முழுவதும் எங்க ஊர் அரசலாற்றில்தான் குளியல்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை. அதில் தெரியும் அகத்தை.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

எல்லோரிடமும் எளிதில் பழகிவிடுவதுதான் பிடித்த விசயம்.பழகியவர்கள் ஏதேனும் கோரிக்கைகள் வைக்கும்போது, எனக்கு தகுதிக்கு மீறியதாக இருப்பதைகூட, உடனே முடியாது என்று சொல்லத் தயங்குவது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது, என்மீது கொண்ட காதல். பிடிக்காதது... கோபம்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா, அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

க்ரே கலர் பேண்ட், ரோஸ் கலர் சட்டை.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அலுவலகத்தில் கணிணியைப் பார்த்துக்கொண்டு...கேட்க ஏதுமில்லை.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சையும், நீலமும் கலந்த,ராமர் கலர்.

14.பிடித்த மணம்?

மணமானவர்களுக்கே பிடித்த அதே மல்லிகை.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

ஆ.முத்துராமலி்ங்கம்,முத்துவேல், புதியவன். கவிதைகள், கவிதைகள், கவிதைகள்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

அரசியல் சம்பந்தமான அலசல் பதிவுகள்.

17. பிடித்த விளையாட்டு?

கபடி. ஊரில் நடந்த போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கேனாக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?

கண்ணாடி அணிபவர் அல்ல. கணினி முன்பு வேலை, அதனால் சீக்கிரமே அந்த வேளை வரலாம்...

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

காதல் படங்கள், காமெடிப்படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
ராமன் தேடிய சீதை (டீவியில்.)

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர், மழைக்காலம்.


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

பா.விஜய்- ன் 'உடைந்த நிலாக்கள் பாகம் -2'

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதாவது.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: கடலலை
பிடிக்காத சத்தம்: தரையில் தேய்கப்படும் கரகர சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கிலோ மீட்டர் தெரியாது. இடம். திருத்தணி.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கதை, கவிதை எழுதுவது. மேடையில் பாடியது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கோவிலில் காதலர்கள். அவ்ரகள் செய்யும் சில்மிசங்கள்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சற்றே சோம்பேறித்தனம்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

பொள்ளாச்சி பக்கம் போய்வரணும்.( பெரிய லிஸ்ட்டே இருக்கு...)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

யாருக்கும் தொந்தரைவில்லாமல், சந்தோசமாக.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

புத்தகம் படிப்பது.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

போனா வராது. (ஒரு வரிதானே கேட்டீங்க?)

31 comments:

பழமைபேசி said...

விபரமா இருக்கு...வாழ்த்துகள்!

பழமைபேசி said...

//உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

பொள்ளாச்சி பக்கம் போய்வரணும்//

அது சரி, எனக்கு கும்பகோணம் வரணும்!

பழமைபேசி said...

//கண்ணாடி அணிபவரா?

இல்லை. //

நீங்களும் பிழைச்சிட்டீங்க....

கண்ணாடி அணிபவர் அல்ல என்றே வரவேண்டும்.

பழமைபேசி said...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60308022&format=html

Raju said...

அருமையான எளிமையான பதில்கள்..

தமிழ் said...

கேள்விகள் பிறந்தால்
தங்களைப் பற்றி
பதிலகள் கிடைக்கப் பெற்றது

வாழ்த்துகள்

குசும்பன் said...

//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கோவிலில் காதலர்கள்.//

அய்யா ஏன் அப்படின்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்!

ஒரே ஒரு கயிரை கட்டிட்டா ஜோடியா கோவிலுக்கு போகலாம், கயிறு கட்டும் முன்பு கோவிலுக்கு போக கூடாதா?

அவர்கள் செய்யும் சில்மிசங்கள் என்று வேண்டுமானால் சொல்லுங்கள் பொத்தாம் பொதுவாக காதலர்கள் என்று சொல்லாதீங்க!

தமிழ் அமுதன் said...

நல்ல நல்ல பதில்கள்!!

///(என் மனைவிக்கும் சரி, என் சகோதரிக்கும் சரி, அந்த பக்குவமான சமையல் வராது.)///

தங்க மணிய மட்டும் தனியா சொல்ல பயம் ????;;)

நட்புடன் ஜமால் said...

நல்ல பதில்கள்.


சத்தம்: கடலலை --- சற்றே வித்தியாசமான பதில்.

ச.முத்துவேல் said...

நன்றி நண்பரே.

நசரேயன் said...

விலா வரியா நல்லா விளக்கி இருக்கீங்க

வியா (Viyaa) said...

அருமை...

goma said...

முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை. அதில் தெரியும் அகத்தை.

.//

இது நான் ரசித்த பதில்
---------------
//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கோவிலில் காதலர்கள்
இது நான் ஏற்றுக் கொள்ள இயலாத பதில்-

காதலும் தெய்வாம்சமானதுதானே.
உண்மைக்காதல் என்றால் கோவிலில் இருக்கலாம் தப்பில்லை.
பொழுது போக்கான காதல் என்றால் அவர்கள் காதலர்களே இல்லை .அதனால் பாதகமில்லை.

goma said...

கடைசியாக அழுதது எப்பொழுது?

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் என் அம்மா கண்கலங்க, நானும்...ஊரில் என் சகோதரனுடன் இருக்கிறார்கள்.(சென்னை வாழ்க்கை என் தாய், தந்தையருக்கு பிடிக்கவில்லையாம்

உங்கள் பெற்றோர் ,சென்னையில் விருப்பமுடன் வாழ்வதற்கு வழி கிட்ட வாழ்த்துகிறோம்[வாழ்த்துவதற்கு வயசெல்லாம் தேவையில்லை.அக்கரையுடன் யார் வாழ்த்தினாலும் செல்லுபடியாகும்]

சொல்லரசன் said...

அருமையான பதில்கள் உங்களை பற்றி அறிந்துகொள்ளமுடிந்தது,இந்த கேள்வி பதில் தொடர்பதிவு அவசியமா? என்ற சர்ச்சை எழுந்தாலும்,வலையுலக நண்பர்களை பற்றி அவர்களின் கருத்துகளை அறியவைத்தது என்பது உண்மை.பழமைபேசியின் இல்லை/ அல்ல பதில்பற்றிய விளக்கத்தை அறிந்துகொள்ளமுடிந்தது.என்னுடைய அழைப்பை ஏற்றமைக்கு நன்றிங்க‌

ஆ.சுதா said...

நல்ல பதில்+பகிர்வுகள் அன்புமணி!

இராகவன் நைஜிரியா said...

கலக்கலோ கலக்கல்...

அரசாலாறு குளியல் இன்று வருமா என்ன...

அது எல்லாம் அந்தக் காலம்..

பழைய நினைவுகள்... ம்

ஆ.ஞானசேகரன் said...

உங்களைப் பற்றி அறிந்துகொண்டதில் மகிச்சி

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பதில்கள் நண்பா.. நாம எப்ப மீட் பண்ணலாம்? ஊருப்பக்கம் வரும்போது சொல்லுங்க

தேவன் மாயம் said...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சற்றே சோம்பேறித்தனம்.
///
இந்த சாத்தான் எல்லோரிடமும் இருக்குங்க!!

குடந்தை அன்புமணி said...

//பழமைபேசி said...

//கண்ணாடி அணிபவரா?

இல்லை. //

நீங்களும் பிழைச்சிட்டீங்க....

கண்ணாடி அணிபவர் அல்ல என்றே வரவேண்டும்.//

பழமைபேசி! உங்கள் ஆலோசனைப்படி மாற்றிவி்ட்டேன். மிக்க நன்றி!

குடந்தை அன்புமணி said...

டக்ளஸ்,திகழ்மிளிர், ஆ.ஞானசேகரன், ஆ.முத்துராமலிங்கம்,வியா (Viyaa), நசரேயன்...நன்றி! தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்.

குடந்தை அன்புமணி said...

//அவர்கள் செய்யும் சில்மிசங்கள் என்று வேண்டுமானால் சொல்லுங்கள் பொத்தாம் பொதுவாக காதலர்கள் என்று சொல்லாதீங்க!//

குசும்பன்! உங்க கருத்தைத்தான் நான் சொல்ல வந்தேன்... அவசரத்தில் அப்படி வந்திடுச்சு! மாற்றிவிட்டேன்!

குடந்தை அன்புமணி said...

//ஜீவன் said...

நல்ல நல்ல பதில்கள்!!

///(என் மனைவிக்கும் சரி, என் சகோதரிக்கும் சரி, அந்த பக்குவமான சமையல் வராது.)///

தங்க மணிய மட்டும் தனியா சொல்ல பயம் ????;;)//

உண்மைதானே சொன்னேன்!

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...

நல்ல பதில்கள்.


சத்தம்: கடலலை --- சற்றே வித்தியாசமான பதில்.//

நட்புடன் ஜமால் said...

நல்ல பதில்கள்.


சத்தம்: கடலலை --- சற்றே வித்தியாசமான பதில்.

குடந்தை அன்புமணி said...

//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கோவிலில் காதலர்கள்
இது நான் ஏற்றுக் கொள்ள இயலாத பதில்-

காதலும் தெய்வாம்சமானதுதானே.
உண்மைக்காதல் என்றால் கோவிலில் இருக்கலாம் தப்பில்லை.
பொழுது போக்கான காதல் என்றால் அவர்கள் காதலர்களே இல்லை .அதனால் பாதகமில்லை.//

இதற்கு பதலாக ஒரு பதிவே போடலாம். குசும்பனுக்கு சொன்ன பதிலை ஒருமுறை படியுங்கள்.

குடந்தை அன்புமணி said...

//சொல்லரசன் said...

அருமையான பதில்கள் உங்களை பற்றி அறிந்துகொள்ளமுடிந்தது,இந்த கேள்வி பதில் தொடர்பதிவு அவசியமா? என்ற சர்ச்சை எழுந்தாலும்,வலையுலக நண்பர்களை பற்றி அவர்களின் கருத்துகளை அறியவைத்தது என்பது உண்மை.பழமைபேசியின் இல்லை/ அல்ல பதில்பற்றிய விளக்கத்தை அறிந்துகொள்ளமுடிந்தது.என்னுடைய அழைப்பை ஏற்றமைக்கு நன்றிங்க‌//

என்னைப்பற்றியும் பதிவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த தங்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

குடந்தை அன்புமணி said...

// இராகவன் நைஜிரியா said...

கலக்கலோ கலக்கல்...

அரசாலாறு குளியல் இன்று வருமா என்ன...

அது எல்லாம் அந்தக் காலம்..

பழைய நினைவுகள்... ம்//

ஆமாண்ணா! இப்ப போய் ஆற்றைப் பார்த்தால்... கண்ணில்தான் நீர் வருது...

குடந்தை அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பதில்கள் நண்பா.. நாம எப்ப மீட் பண்ணலாம்? ஊருப்பக்கம் வரும்போது சொல்லுங்க//

அதே!ஊருப்பக்கம் வரும்போது சொல்லுங்க

குடந்தை அன்புமணி said...

\\thevanmayam said...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சற்றே சோம்பேறித்தனம்.
///
இந்த சாத்தான் எல்லோரிடமும் இருக்குங்க!!\\

நிஜம்தானா? எங்க வீ்ட்டு அம்மணிக்கிட்ட சொல்லுங்களேன்...!

புதியவன் said...

அனைத்தும் யதார்த்தமான பதில்கள் அன்புமணி

என்னையும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கீங்க
விரைவில் பதிவிடுகிறேன்...

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...