Thursday 18 June, 2009

சந்தர்ப்பம் அமைந்துவிட்டால்...

ன் அப்பாவிடம் நான் மட்டுமே சகஜமாக பேசுவேன். எனது சகோதரனோ, சகோதரியோ நேர்நின்றுகூட பேசமாட்டார்கள். நான் கடைக்குட்டி என்பதால் எனக்கு சில சலுகை. அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, குடும்ப விவகாரங்கள் என்று எதுவும் பேசுவோம்.
என் அப்பா நடத்துனராக பணியாற்றியவர். பணியின்போது நடைபெறும் சம்பவங்களையும் சொல்வார். அப்படித்தான ஒருமுறை பேசும்போது, திறமை பற்றி பேச்சு வந்தது. நன்கு படித்த இளைஞன் ஒருவன், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவித்து, குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலைக்கு சேர்ந்திருக்கிறான். குடும்ப சூழ்நிலைக்காக அந்த வேலையில் சேர்ந்தாலும், வேலையில் தன் திறமையை காண்பிக்க பயன்படுத்திக் கொண்டான் என்பதுதான் சிறப்பு.
ஓட்டல் அமைந்திருந்த இடம் ஒரு வங்கிக்கு அருகில். வங்கி ஊழியர்கள் வழக்கமாக அந்த ஓட்டலுக்கு வருவார்கள். அந்த ஊழியர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடி, தன் வேலையை காண்பித்திருக்கிறார். நாளடைவில் வங்கி ஊழியர்களும் அந்த சப்ளையரும் நெருக்கமாகிவிட்டார்கள். வங்கிப் பணிக்கு ஆள் தேவைப்பட்டபோது, அந்த சப்ளையரை சிபாரிசு செய்திருக்கிறார்கள். திறமையால் அந்த சப்ளையர் வங்கி ஊழியராகிவிட்டார்.

குடந்தையில் இப்போது பாரத் ஆடியோ கேபிள் (உள்ளூர் எஃப்.எம்.) பிரபலம். பெருநகரங்களில் ஏகப்பட்ட எஃப்.எம். வந்துவிட்டாலும், குடந்தையில் இன்னும் அந்த வசதிகள் வரவில்லை. அரசின் ரெயின்போ எஃப்.எம். மட்டுமே. பிரபல எஃப். எம். போலவே நேயர் விருப்பம், நேரடி நிகழ்ச்சி, தொலைபேசி வழி விருப்பப் பாடல்கள், பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சி (இதற்கு தனிக்கட்டணம் ரூ 20 செலுத்தினால் வாழ்த்து தெரிவிப்பதோடு, விருப்பமான 2 பாடல்களும் ஒலிபரப்புவார்கள்), விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று களை கட்டுகிறது. மாத சந்தாவாக ரூபாய் 25 வசூலிக்கிறார்கள். சுமார் ஆயிரம் சந்தாதாரர்கள் இருக்கிறார்களாம். (வருமானத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.)
காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி இரவு பதினொன்றுக்கு முடிவடையும். குடந்தையை நான்கு பகுதியாக பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட நேரங்களுக்கு இன்னார் ஒலிபரப்புவது என்று பகிர்ந்து கொண்டுள்ளார்கள். தீபாவளி, புத்தாண்டு போன்ற சமயங்களில் இரவு இரண்டு மணிவரை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.
அந்த ஆடியோ கேபிள் உருவான வரலாறு ரொம்பவும் சுவாரசியமானது. பட்டுப்புடவை நெய்து தரும் பணிபுரியும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான அம்மன்கோவில் தெரு, அரசலாறு வழிநடப்பு, பீர்மன் கோவில் தெரு, துவரங்குறிச்சி தெரு போன்ற பகுதிகளில் இளஞர்கள் பாட்டு போட்டுக் கொண்டு அலுப்புத் தெரியாமல் வேலை செய்வார்கள். பெண்கள் தறி வேலையை வீட்டிற்குள்ளும், பாவு (பட்டுப்புடவை செய்ய பயன்படும் பட்டு நூல்) காயவைக்கும் வேலையை ஆண்கள் தெருவிலும் செய்துவருவார்கள். வீட்டிற்குள் ஒரு ஸ்பீக்கரும், தெருவில் வேலை செய்பவர்களுக்காக ஒரு ஸ்பீக்கரும் வைத்தார்கள். இந்த முறை அக்க பக்கத்து வீடுகளில் வேலை செய்பவர்களும் விருப்பப்பட, இன்று குடந்தை முழுவதும் பரந்து விரிந்துவிட்டது.
அதன் வளர்ச்சியை விளம்பரங்களும் ஒலிபரப்பப்படுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் முறையான அனுமதி வாங்கி நீங்களும் செய்யலாம்... ஜோலிக்கு ஜோலி... (ஜோலி - வேலை) ஜாலிக்கு ஜாலி...

த்திரிகை நடத்திய அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, "நாமெல்லாம் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன?" என்று முத்துராமலிங்கம் என்னிடம் கேட்டார். தூங்கிக் கொண்டிருந்த என் ஆசைகளை திரும்பவும் தூண்டிவிட்டுவிட்டார். "யோசிப்போம்" என்றேன். சாத்தியமா? என்று தீவிரமாக யோசித்தும் வருகிறேன்.

20 comments:

Raju said...

பத்திரிக்கையா..?
வாழ்த்துக்கள்.

மணிஜி said...

பத்திரிக்கைல எழுத எனக்கும் ஒரு வாய்ப்பு அன்பு...பிளீஸ்

சொல்லரசன் said...

விரைவில் ஆரம்பிக்க வாழ்த்துகள்

சென்ஷி said...

:-)

பத்திரிக்கை விரைவில் கருவிலிருந்து உருவாக வாழ்த்துக்கள் நண்பரே!

//பட்டுப்புடவை நெய்து தரும் பணிபுரியும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான அம்மன்கோவில் தெரு, அரசலாறு வழிநடப்பு, பீர்மன் கோவில் தெரு, துவரங்குறிச்சி தெரு போன்ற பகுதிகளில் இளஞர்கள் பாட்டு போட்டுக் கொண்டு அலுப்புத் தெரியாமல் வேலை செய்வார்கள்.//

:-))

நானும் இதை முன்பு பார்த்ததுண்டு..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துக்கள் அன்புமணி! பிரபலமானதும் இணையத்தை மறந்து விடாதீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

புதிய பத்திரிக்கைக்கு வாழ்த்துகள் அன்பு.

விரைவில் சந்திப்போம்.

"உழவன்" "Uzhavan" said...

அந்த ஆடியோ கேபிள் உருவான வரலாறு ரொம்பவும் சுவாரசியமானதுதான். An innovative persons only can introduces changes and new ideas. Great!
//"நாமெல்லாம் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன?" //
வாழ்த்துக்கள் மட்டுமல்ல.. தேவைப்பட்டால் பதிவுலக நண்பர்களிடமிருந்து எல்லா உதவிகளும் கிடைக்கும். Start music :-)

எம்.எம்.அப்துல்லா said...

பத்திரிக்கைல எழுத எனக்கும் ஒரு வாய்ப்பு.....

நசரேயன் said...

எழுத எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க

நட்புடன் ஜமால் said...

நல்லதொரு முயற்சி

வாழ்த்துகள்

பத்திரிக்கையை படிக்க எனக்கும் வாய்ப்பு தாருங்கள்

தேவன் மாயம் said...

பத்திரிகை நடத்திய அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, "நாமெல்லாம் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன?" என்று முத்துராமலிங்கம் என்னிடம் கேட்டார். தூங்கிக் கொண்டிருந்த என் ஆசைகளை திரும்பவும் தூண்டிவிட்டுவிட்டார். "யோசிப்போம்" என்றேன். சாத்தியமா? என்று தீவிரமாக யோசித்தும் வருகிறேன்.//

தேவன் மாயம் said...

யோசித்து நல்ல முடிவு எடுங்கள் அன்பு!

குடந்தை அன்புமணி said...

// டக்ளஸ்....... said...
பத்திரிக்கையா..?
வாழ்த்துக்கள்.//

//சொல்லரசன் said...
விரைவில் ஆரம்பிக்க வாழ்த்துகள்//

//சென்ஷி said...
:-)

பத்திரிக்கை விரைவில் கருவிலிருந்து உருவாக வாழ்த்துக்கள் நண்பரே!//

//இராகவன் நைஜிரியா said...
புதிய பத்திரிக்கைக்கு வாழ்த்துகள் அன்பு.

விரைவில் சந்திப்போம்.//

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, ஆதரவும் தேவை!

குடந்தை அன்புமணி said...

// தண்டோரா said...
பத்திரிக்கைல எழுத எனக்கும் ஒரு வாய்ப்பு அன்பு...பிளீஸ்//

//எம்.எம்.அப்துல்லா said...
பத்திரிக்கைல எழுத எனக்கும் ஒரு வாய்ப்பு...//

//நசரேயன் said...
எழுத எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க//

உங்களுக்காகவே... பத்திரிகை. நிச்சயமாக அனைவருக்கும் வாய்ப்பு உண்டு!

குடந்தை அன்புமணி said...

//சென்ஷி said...
:-)

பத்திரிக்கை விரைவில் கருவிலிருந்து உருவாக வாழ்த்துக்கள் நண்பரே!

//பட்டுப்புடவை நெய்து தரும் பணிபுரியும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான அம்மன்கோவில் தெரு, அரசலாறு வழிநடப்பு, பீர்மன் கோவில் தெரு, துவரங்குறிச்சி தெரு போன்ற பகுதிகளில் இளஞர்கள் பாட்டு போட்டுக் கொண்டு அலுப்புத் தெரியாமல் வேலை செய்வார்கள்.//

:-))

நானும் இதை முன்பு பார்த்ததுண்டு..//

மிக்க நன்றி! குடந்தையில் இப்போதும் பார்க்கலாம் நண்பரே!

குடந்தை அன்புமணி said...

// " உழவன் " " Uzhavan " said...
அந்த ஆடியோ கேபிள் உருவான வரலாறு ரொம்பவும் சுவாரசியமானதுதான். An innovative persons only can introduces changes and new ideas. Great!
//"நாமெல்லாம் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன?" //
வாழ்த்துக்கள் மட்டுமல்ல.. தேவைப்பட்டால் பதிவுலக நண்பர்களிடமிருந்து எல்லா உதவிகளும் கிடைக்கும். Start music :-)//
உங்களைப்போல ஆர்வமுள்ளவர்கள் இருக்கும் வரையில், ஆதரவு இருக்கும் வரையில்... எனக்கென்ன கவலை!

குடந்தை அன்புமணி said...

//thevanmayam said...
யோசித்து நல்ல முடிவு எடுங்கள் அன்பு!//

நிச்சயமாக! மிக்க நன்றி தேவா சார்!

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
நல்லதொரு முயற்சி

வாழ்த்துகள்

பத்திரிக்கையை படிக்க எனக்கும் வாய்ப்பு தாருங்கள்//

பின்னூட்ட சுனாமியை மறக்க முடியுமா? ஆரம்பிக்க சந்தர்ப்பம் அமைந்துவிட்டால் தகவல் உங்களை தேடி வரும்!

குடந்தை அன்புமணி said...

//ஜெஸ்வந்தி said...
வாழ்த்துக்கள் அன்புமணி! பிரபலமானதும் இணையத்தை மறந்து விடாதீர்கள்.//

நீங்கள் எல்லாம் இல்லாவி்ட்டால் பத்திரிகையே இல்லை!

ஆ.ஞானசேகரன் said...

//பத்திரிகை நடத்திய அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, "நாமெல்லாம் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன?" என்று முத்துராமலிங்கம் என்னிடம் கேட்டார். தூங்கிக் கொண்டிருந்த என் ஆசைகளை திரும்பவும் தூண்டிவிட்டுவிட்டார். "யோசிப்போம்" என்றேன். சாத்தியமா? என்று தீவிரமாக யோசித்தும் வருகிறேன். //

நன்றாக யோசித்து முடிவு எடுங்கள். திட்டமிடுதல் மிக முக்கியம்

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...