Tuesday 28 July, 2009

உங்களுக்காக... (28.07.2009)

டித்தள்ளுபடி தரும் திட்டம் வந்ததெப்படி?

ஆடிமாதம் வந்தால் போதும் வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். மக்களும் பொருட்களை அள்ளிக்கொண்டு வருவார்கள். தள்ளுபடி வழங்க ஆடி மாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
இதற்கு முக்கிய காரணம் விவசாயிகள்தான். அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு என்பதறிவோம். அப்போதெல்லாம் பிரதான தொழிலே விவசாயம்தான். விவசாயிகள் ஆடி மாதம்தான் தங்கள் நிலங்களில் விவசாயத் தொழிலை ஆரம்பிப்பார்கள். தங்களின் கையிருப்பைக் கொண்டு விதைகள், உரங்கள் வாங்கவும், தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கவென செலவிடுவார்கள். தை மாதம்தான் அறுவடை செய்வார்கள். அப்போதுதான் அவர்களிடம் மீண்டும் பணப்புழக்கம் இருக்கும். ஆடி - தை மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வியாபாரம் மந்தமாக இருக்கும். அந்த மந்த நிலையைக் களைந்து பொதுமக்களை ஈர்த்து வியாபாரம் செய்யவே இந்த ஆடித்தள்ளுபடி திட்டம்' வந்தது எனலாம்.


ழைப்பவர்களுக்குத்தான் எப்போதும் பெருமை என்பதை சிறுவர்களிடமும் பாடல்களின் வழியாக புகுத்திய பழைய பாட்டு ஒன்று. (நீங்களும் பாடியிருப்பீர்கள் தானே?)

மழ வருது
மழ வருது
நெல் அள்ளுங்க.

முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

ஏர் உழர மாமனுக்கு
எண்ணி வையுங்க

சும்மாக்கிடக்கிற
மாமனுக்கு சூடு வையுங்க.


ஞ்ச ஒழிப்புத்துறை சுறுசுறுப்பா ஆயிட்டாங்களா? இல்லை மக்களிடம் விழிப்புணர்வு வந்துடிச்சான்னு தெரியலைங்க. சமீப காலமாக லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது. இதைப்படிக்கும் போது உங்களுக்கும் இவரையெல்லாம் பிடிக்காம இருக்கிறாங்களேன்னு யாரையாவது பார்த்து நெனைச்சிருக்கீங்களா? இன்னும் ஏன் மனசுக்குள்ளே நெனைக்கிறீங்க... செயல்படுத்திட வேண்டியதுதானே. எப்படி தெரியப்படுத்துறது? நம்மள அடையாளம் வைச்சிக்கிட்டு பின்னாடி பழிவாங்குவாங்களேன்னு பயம் இருக்கா? அப்ப ஒன்ணு செய்யுங்க...

இந்த எண்ணுக்கு போன் (பொது தொலைபேசியிலிருந்துதான் போன் பண்ணுங்களேன்...)

தொலைபேசி எண் - 044- 2825 5899

செல் - 94440 49224

மெயிலும் அனுப்பலாங்க... Spl acchn @ cbi.gov.in


ப்புறம் பெண்களை கிண்டல் செய்யறவங்களைப் பற்றி புகார் சொல்ல, சாலை விபத்து பற்றிய தகவல் சொல்ல விரும்புறீங்களா அதுக்கு ஒரு ஒரு செல் பேசி எண் இருக்குங்க...

செல் - 95000 99100 இந்த எண்ணுக்கு எஸ்.எம். எஸ். பண்ணினா போதும் உடனடி நடவடிக்கைன்னு சொல்றாங்க.


சைட்டாலஜி என்றால் என்ன தெரியுமா?

மனதை அரிக்கும் பெண்களைப் பற்றியது இல்லைங்க...
மண்ணை அரிக்கும் செல்/ கரையான் பற்றி படிக்கும் படிப்புக்குத்தான் இப்படி சொல்றாங்கோ...


ப்புறம் படிச்சிட்டீங்களா கருத்துக்களை மறக்காம பின்னூட்டமா தெரிவிச்சிட மறக்காதீங்க.

தமிழிஷ்-ல் இந்த இடுகை.

23 comments:

Vidhoosh said...

அது "மழ வருது மழ வருது" என்றே வர வேண்டும்.

Vidhoosh said...

அவியல் நல்லாருக்கு. காய்கறிகள் கொஞ்சம் கம்மி.

துபாய் ராஜா said...

ஆடித்தள்ளுபடி - எங்கள் நெல்லை நிறுவனங்கள் மூலம் தான் சென்னைக்கு வந்தது என நினைக்கிறேன்.சரியா ?

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புதுறை சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதை சமிபத்தில் ஊருக்கு வந்திருந்த பொழுது கண்டு மகிழ்ந்தேன்.

சொல்லரசன் said...

//சமீப காலமாக லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது.//

பிடிபட்டவர்கள் தண்டனை பெற்றார்களா?

ஆ.ஞானசேகரன் said...

///சொல்லரசன் said...

//சமீப காலமாக லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது.//

பிடிபட்டவர்கள் தண்டனை பெற்றார்களா?///

அப்படி போடு... ரிபீட்ட்ட்ட்

அ.மு.செய்யது said...

//அப்புறம் பெண்களை கிண்டல் செய்யறவங்களைப் பற்றி புகார் சொல்ல, சாலை விபத்து பற்றிய தகவல் சொல்ல விரும்புறீங்களா அதுக்கு ஒரு ஒரு செல் பேசி எண் இருக்குங்க...//

அது நான் இல்லீங்க..என்ன வுட்ருங்க...

புதிய தொடரா ?? நல்லா இருக்கு...தொடர்ந்து எழுதுங்கள்.

தேவன் மாயம் said...

கலக்குங்க அன்புமணி!!!

நட்புடன் ஜமால் said...

நல்ல பாடலது


[[சும்மாக்கிடக்கிற
மாமனுக்கு சூடு வைங்க.]]

சோம்பேறிகள் ...

மற்றும் ‘தகவல்’ களுக்கு நன்றி.


சைட்டாலஜி - சூப்பராயிருக்கே.

கார்த்திகைப் பாண்டியன் said...

கலந்து அடிக்கிறதுல உங்களோட முதல் முயற்சி.. நல்லா இருக்கு நண்பா

குடந்தை அன்புமணி said...

// Vidhoosh said...
அது "மழ வருது மழ வருது" என்றே வர வேண்டும்.//

நீங்கள் கூறியபடி மாற்றிவிட்டேன். மிக்க நன்றி.

குடந்தை அன்புமணி said...

//Vidhoosh said...
அவியல் நல்லாருக்கு. காய்கறிகள் கொஞ்சம் கம்மி.//

ஆமாங்க... விக்கிற விலைவாசியில (இருக்கிற போட்டியில, சரக்கு) கொஞ்சம் கம்மியாத்தான் போடும்படியா ஆயிடுச்சு.

குடந்தை அன்புமணி said...

//துபாய் ராஜா said...
ஆடித்தள்ளுபடி - எங்கள் நெல்லை நிறுவனங்கள் மூலம் தான் சென்னைக்கு வந்தது என நினைக்கிறேன்.சரியா ?//

இருக்கலாமுங்க... ஆனா சரியா தெரியலைங்க...

குடந்தை அன்புமணி said...

//சொல்லரசன் said...
//சமீப காலமாக லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது.//

பிடிபட்டவர்கள் தண்டனை பெற்றார்களா?//

பழமொழி சொன்ன கேட்டுக்கணும்... ஆராய்ச்சியெல்லாம் செய்யக்கூடாது.

குடந்தை அன்புமணி said...

நன்றி...
அ.மு.செய்யது
தேவன்மாயம்

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
நல்ல பாடலது


[[சும்மாக்கிடக்கிற
மாமனுக்கு சூடு வைங்க.]]

சோம்பேறிகள் ...

மற்றும் ‘தகவல்’ களுக்கு நன்றி.


சைட்டாலஜி - சூப்பராயிருக்கே.//

இதுமாதிரி இனி- அடிக்கடி வரும்.

குடந்தை அன்புமணி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
கலந்து அடிக்கிறதுல உங்களோட முதல் முயற்சி.. நல்லா இருக்கு நண்பா//

இதுன்னு முன்னமே ஒரு தபா இப்படி செய்திருக்கேனே...

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு மழை வரும்போதெல்லாம் நீங்க குறிப்பிட்ட அந்த பாட்டும் ஞாபகத்துக்கு வரும்.

தகவல் பகிர்வுக்கு நன்றி

குடந்தை அன்புமணி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
மழை வரும்போதெல்லாம் நீங்க குறிப்பிட்ட அந்த பாட்டும் ஞாபகத்துக்கு வரும்.

தகவல் பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கு மிக்க நன்றி அமித்து அம்மா.

Suresh Kumar said...

தகவல்களை போட்டு தாக்குறீங்களே நன்றி உங்கள் தகவல்களுக்கு

நையாண்டி நைனா said...

good post nanbaa...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஆடிக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாற..அருமையான தகவல்கள் அனைத்தும்

நாஞ்சில் நாதம் said...

/// மழ வருது
மழ வருது
நெல் அள்ளுங்க.

முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

ஏர் உழர மாமனுக்கு
எண்ணி வையுங்க

சும்மாக்கிடக்கிற
மாமனுக்கு சூடு வையுங்க.\\\\


சின்ன வயசுல பாடியது
ரெம்ப நாள் கழிச்சு ஞாபகபடுத்துனீங்க

ராமலக்ஷ்மி said...

நல்ல தகவல்களின் தொகுப்பு.

மழ வருது பாட்டு சிலகாலம் முன்னே வலையிலேதான் படித்து அறிந்தேன்:)!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...