Friday 3 July, 2009

நாட்டு நடப்பு

"வாங்க ராமசாமி. என்ன இன்னைக்கு காலையிலே வந்திட்டீங்க?'

"இன்னைக்கு சனிக்கிழமை இல்லையா வீட்டில எல்லாரும் ஊருக்கு கிளம்பிட்டாங்க. அதன் நானும் உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன். அது சரி என்ன விசேஷம் பேப்பரைப் பார்த்து சிரிச்சிகிட்டு இருக்கே?'

"திருச்சி ராம்ஜி நகரில் இருக்கிற பக்கிரிங்கிற பிக்பாக்கெட் திருடன், இப்ப தொழிற் பயிற்சி நிலையம் ஆரம்பிச்சிருக்கானாம்.'

"அப்படியா? வரவேற்கக்கூடிய விஷயம்தானே? அதுக்கு எதுக்கு சிரிக்கிற? தப்பு செய்யறவங்க திருந்திடுறது இயல்புதானே?'

"என்ன தொழிற் பயிற்சி நிலையம்னு நீ கேட்கலையே?'

"நீ இப்படி சொல்றத பார்த்தா, ஏதோ வில்லங்கமா இருக்கும் போலிருக்கே!'

"ஆமாப்பா. பிக்பாக்கெட் அடிக்கிறது எப்படி, ஜனங்ககிட்ட மாட்டிக்காம தப்பிக்கிறது எப்படின்னு பயிற்சி கொடுக்கிறானாம்.'

"அடக்கொடுமையே!'

"இன்னும் கேளு. பயிற்சிக்கு கட்டணம் 500 ரூபாயாம். தங்குமிடம், சாப்பாடு கூட இலவசமாம். இதுவரைக்கும் 100 பேருக்கு பயிற்சி கொடுத்திருக்கானாம்! திருச்சியில பயிற்சி எடுத்துக்கிட்ட ஆளுங்க புதுச்சேரியில வேலையைக் காட்டும்போது பிடிபட்டவங்களாலதான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கு.'

"கலிகாலங்கிறது சரியாத்தான் இருக்கு.'

"அதே ராம்ஜி நகரில இன்னுமொரு விஷயமும் நடந்திருக்கு. குடிநீர் குழாய்ல சாராய கலந்த தண்ணீர் வந்திருக்கு!'

"என்னப்பா செல்றே?'

"ராம்ஜி நகர் கள்ளச்சாராயத்துக்கு பேர் போன ஏரியாவாம். அரசு நடவடிக்கை எடுத்து ஒழிச்சாலும் இன்னமும் சிலர் திருட்டுத்தனமா செஞ்சிகிட்டுத்தான் இருக்காங்கன்னு அந்த ஏரியா மக்கள் சொல்றாங்களாம். அந்த ஏரியாவில ரோடு போடும்போது சாராய ஊறல் தொட்டி ஒடைஞ்சி அது குடிநீர் குழாயோட கலந்துடிச்சாம். மாநகராட்சி அதிகாரிங்க விரைந்து வந்து சரி பண்ணி ஆரம்பிச்சிருக்காங்களாம். அதுவரைக்கும் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்னு அறிவிச்சிருக்காங்களாம்.'

"சாராய பார்ட்டிகளை பிடிச்சிட்டாங்களா இல்லையா?'

"அதைப் பற்றி ஏதும் போடலை. அழகிரி மதுரையை கலக்க ஆரம்பிச்சிட்டாருப்பா. 320 கோடியில தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பிக்க இடத்தேர்வு பண்ணிக்கிட்டிருக்காங்களாம். இந்தியாவில ஐந்து இடங்கள்ல இதுபோல இருக்காம்.'

"நேற்று இரயில்வே பட்ஜெட் தாக்கல் செஞ்சாங்களே ஏதாவது சிறப்பு சலுகைகள் உண்டா?'

"புதுசா 57 ரயில் விடப்போறாங்களாம். இதுல 6 ரயில் தமிழ்நாட்டுக்கு. டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் பெண்களுக்கு சிறப்பு ரயில் விடப் போறாங்களாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைகூட உலக தரத்துக்கு மாற்றம் செய்யப் போறாங்களாம்.'

"அது சரி, கட்டண உயர்வு...?'

"எதுவுமில்லைப்பா. திருச்சி, மதுரை உட்பட 49 ரயில் நிலையங்களில் பல்நோக்கு வணிக வளாகங்கள் கட்டப் போறாங்களாம். அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழைகளுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் 25 ரூபாய்க்கு கொடுக்கப் போறாங்களாம்.'

"பரவாயில்லையே... மம்தாவும் நல்லாத்தான் பட்ஜெட் போட்ருக்காங்கன்னு சொல்லுங்க.'

"இதையேதான் பிரதமரும் சொல்லிருக்காரு.இன்னும்கூட இருக்கு பெண் பயணிகள் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை அமைக்கப் போறாங்க. தனியாருடன் சேர்ந்து மருத்துவ கல்லூரியும் அமைக்கப் போறாங்களாம். அதோட பத்திரிகைகாரர்களுக்கு, முதியோர்களுக்கு, மாற்றுத்திறன் கொண்டவர்களுக்குன்னு சிறப்பு சலுகைகள்.இப்படி சிறப்பாத்தான் இருக்கு.'

"பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து பற்றி எதுவும் நியூஸ் இல்லையா?'

"மத்திய அமைச்சர் தன்னோட கருத்தை தான் சொல்லியிருக்கார். மாநில அரசுகிட்ட கேட்கும்போது, மூத்த கல்வியாளர்கள், நிபுணர்கள் கிட்ட கருத்து கேட்டு நடவடிக்கை எடுப்போம்னு சொல்லியிருக்கார் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.'

"சரிப்பா பசி எடுக்குது. சாப்பிட்டுட்டு வர்றேன். மீதியை அப்புறம் பேசிக்குவோம்.'

"சரி. சாயங்காலம் படத்துக்கு போவோம். நாடோடிகள் படம் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. மறக்காம வந்திடு.'

"சரிப்பா வர்றேன்.'

நன்றி- தினகரன்.

18 comments:

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு நன்றி!!

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கே... அடிக்கடி இதே போல் போடுங்க நண்பா

ஆ.ஞானசேகரன் said...

அப்பறம் ஒரு கும்பல் குழந்தையை கடத்துராங்களாமே.. அத பத்தி பதிவு எழுதலாமுனு இருக்கேன்

மணிஜி said...

ராம்ஜிநகர் வாசிகள் வருடத்திற்கு மூன்று முறை வேட்டைக்கு கிளம்புவார்கள்..பூஜை,விருந்து எல்லாம் அமர்க்களமாக இருக்கும்..சில போலிஸ் அதிகாரிகள் கூட மப்டியில் கலந்து கொள்வதுண்டு(பங்கும் உண்டு)
ஒரு பெரிய பதிவே அதை பத்தி போடலாம்..வழக்கம் போல் இந்த முறையும் தமிழகம் ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிக்கபட்டு விட்டது.

குடந்தை அன்புமணி said...

//ஜீவன் said...
நல்ல பதிவு நன்றி!!//

வருகைக்கு நன்றி ஜீவன்.

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்லாயிருக்கே... அடிக்கடி இதே போல் போடுங்க நண்பா//

செய்துட்டா போச்சு.

அப்பறம் ஒரு கும்பல் குழந்தையை கடத்துராங்களாமே.. அத பத்தி பதிவு எழுதலாமுனு இருக்கேன்

இப்படி ஓப்பனா சொல்லிட்டு பதிவு போடக்கூடாது. அப்புறம் முந்திக்குவாங்க.

குடந்தை அன்புமணி said...

// தண்டோரா said...
ராம்ஜிநகர் வாசிகள் வருடத்திற்கு மூன்று முறை வேட்டைக்கு கிளம்புவார்கள்..பூஜை,விருந்து எல்லாம் அமர்க்களமாக இருக்கும்..சில போலிஸ் அதிகாரிகள் கூட மப்டியில் கலந்து கொள்வதுண்டு(பங்கும் உண்டு)
ஒரு பெரிய பதிவே அதை பத்தி போடலாம்..வழக்கம் போல் இந்த முறையும் தமிழகம் ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிக்கபட்டு விட்டது.//

உங்க பதிவை எதிர்பார்க்கிறேன் தோழரே!

ஆ.ஞானசேகரன் said...

//இப்படி ஓப்பனா சொல்லிட்டு பதிவு போடக்கூடாது. அப்புறம் முந்திக்குவாங்க.//

யாரு போட்ட என்னா? விழிப்புணர்வு வந்தா சரி நண்பா

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
//இப்படி ஓப்பனா சொல்லிட்டு பதிவு போடக்கூடாது. அப்புறம் முந்திக்குவாங்க.//

யாரு போட்ட என்னா? விழிப்புணர்வு வந்தா சரி நண்பா//

உண்மைதான் நண்பரே. நான் பொதுவாக சொன்னேன். விரைவில் பதிவிடுங்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா..

அ.மு.செய்யது said...

தொழிற்பட்டறை,சாராயம்

பகீர் தகவல்கள்.

பகிர்வுக்கு நன்றி அன்புமணி.

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும் நன்றி!
காத்த்திகை பாண்டியன், அ.மு.செய்யது.

க.பாலாசி said...

நல்லதொரு இடுகை. வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர...

சொல்லரசன் said...

நாட்டு நடப்பு நல்லஇருக்கே தொடருந்து நடத்துங்கோ

ஆதவா said...

தினமலர்ல கூட டீக்கடை பெஞ்சு என்ற பெயரில் போடுவார்கள்... நாட்டு நடப்பை இரண்டு பேர் பேசுவதைப் போன்று வித்தியாசமான உரையாடல்...

பகிர்வுக்கு நன்றி அன்புமணி!

ஆ.சுதா said...

புதுசா இருக்கே!! பகிர்வு தேவை!

Unknown said...

நல்லா இருக்குங்க.

நசரேயன் said...

நடப்பு நல்லா இருக்கு

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...