வலையுலகில் இடப்படும் இடுகைகளை நீங்கள் எவ்விதம் தேர்ந்தெடுத்து படிப்பீர்கள்?
1.நண்பர்களின் இடுகையை மட்டுமே படிப்பேன்.
2.என் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தருபவர்களின் இடுகைகளை மட்டும் படிப்பேன்.
3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
4.தலைப்பைப் பார்த்துதான் படிப்பேன்.
5.என் வலையில் பாலோவராக இருப்பவர்களின் படைப்புகளை மட்டும்தான் படிப்பேன்.
6.தொடர்ந்து என் வலையில் பின்னூட்டமிடுபவர்களின் இடுகைகளை படிப்பேன்.
7.பிரபல பதிவர்களின் இடுகைகளை மட்டும்தான் படிப்பேன்.
8.பெண் பதிவர்களின் இடுகைகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.
9.இலக்கியம், கவிதை படைப்புகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.
10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.
அல்லது... (உங்கள் சாய்ஸ் என்ன...?)
தயவு செய்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். இதில் அரசியல், உள்குத்து ஏதும் இல்லை.
42 comments:
எனக்கு காசு கொடுத்து யாரு கூப்பிடுறாங்களோ அவங்க பதிவை மட்டும்தான் நான் படிப்பேன்.
(கொடுத்த காசுக்கு இவ்ளோ தான் கூவ முடியும், அடுத்த காசோலையை விரைவில் கூரியரில் அனுப்பவும்.)
******இலவச இணைப்பா.******
உங்க பதிவு நல்லா இருக்கு.
///3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
4.தலைப்பைப் பார்த்து படிப்பேன்.
10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.
அல்லது... \\\
இதுதான் என் சாய்ஸ். நீங்க எப்படி?
1.நண்பர்களின் இடுகையை மட்டுமே படிப்பேன்.
(நண்பர்கள் என எவரையும் எப்பொழுதும் சேர்த்துக் கொள்வதில்லை, ஏனோ ஒரு சிலரின் பதிவுகள் பிடிக்கப் போய் அவர்களது பதிவுகள் படிப்பதுண்டு.)
2.என் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தருபவர்களின் இடுகைகளை மட்டும் படிப்பேன்.
(தொடர் வருகையாளர்கள் என எவரும் இதுவரை இல்லை என்றே கருதுகிறேன், அவ்வப்போது வந்தவர்களின் இடுகைகளைப் பார்வையிட்டதுண்டு)
3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
(இது ஓரளவுக்கு உண்மையாக இருக்கிறது என்னைப் பொருத்தவரை)
4.தலைப்பைப் பார்த்துதான் படிப்பேன்.
(சுவாரஸ்யமான தலைப்புகளைப் பார்த்துப் படித்து ஏமாந்து போனதும் உண்டு)
5.என் வலையில் பாலோவராக இருப்பவர்களின் படைப்புகளை மட்டும்தான் படிப்பேன்.
(அப்படியெல்லாம் எந்த ஒரு எண்ணமும் இல்லை, இந்த பாலோயர்கள் எல்லாம் எல்லா நேரங்களிலும் பாலோ பண்ணுவார்களா என்பதே கேள்விக்குறிதான்)
6.தொடர்ந்து என் வலையில் பின்னூட்டமிடுபவர்களின் இடுகைகளை படிப்பேன்.
(அப்படியொரு சூழ்நிலைக்கெல்லாம் நான் என்னை உட்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் இல்லவே இல்லை எனலாம்)
7.பிரபல பதிவர்களின் இடுகைகளை மட்டும்தான் படிப்பேன்.
(எனக்கு நகைப்பூட்டக்கூடிய விசயம் இதுதான், ஒருவரது பதிவுகள் பலரால் படிக்கப்பட்டால் அவர் பிரபல பதிவர் ஆகிவிடுவாரா என்ன? என்னைப் பொருத்தவரை ஒரு பதிவு இட்டவரும் பிரபல பதிவர் தான்)
8.பெண் பதிவர்களின் இடுகைகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.
(இது இயல்பாகவே வந்துவிடும் போலிருக்கிறது போல, அதனால்தான் இப்படியொரு கேள்வியே எழுந்து இருக்கிறது. அப்படி பலர் படிப்பார்கள் எனும் பட்சத்தில் அனைவரும் பெண் பெயர் கொண்டு எழுதலாம் தான். ஆண்பால் ஈர்ப்பு பெண்பாலிடம் தான், அது எழுத்திலுமா என்ன?!)
9.இலக்கியம், கவிதை படைப்புகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.
(தரம் பார்த்து பிரித்துப் படிக்கும் அளவுக்குப் போதிய அறிவு எனக்கில்லை, கவிதைகள் அதிகம் நேசிப்பேன்)
10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.
அல்லது... (உங்கள் சாய்ஸ் என்ன...?)
(முதலில் மொக்கை என்ற வார்த்தையைக் கண்டாலே எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை, எந்த ஒரு விசயம் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். தனிப்பட்ட பிரச்சினை பதிவுகளைப் படிக்கும்போது சுவாரஸ்யமாக எனக்கு இருக்கும். ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்களோ என எண்ணம் எழாமல் இல்லை, ஆனால் அவர்களது நிலையை எண்ணி அவர்களது எண்ணத்துக்கு மதிப்பு தருவதுண்டு.
இந்த வலைப்பூ உலகம் வந்த பின்னர் வித்தியாசமான எழுத்துலகம் கண்டது என்னவோ உண்மை.
உண்மையைச் சொல்லப்போனால் நான் ஒரு வலைப்பதிவரே அல்ல!)
வாய்ப்புக்கு மிக்க நன்றி ஐயா.
உங்கள் பதிவுக்கு எனது கருத்து 4வதாக குறிப்பிடப்பட்ட தலைப்புக்களைப் பார்த்து பிடித்திருந்தால் மட்டும் படிப்பேன்! - கருத்துரையும் பிடித்திருந்தால் மட்டுமே போடுவேன்! காரணங்கள் ஒன்று நாம் 6 அறிவுடையவர்கள் சும்மா தேவையில்லாமல் எழுதும் உப்புச் சப்பற்றவற்றை வாசிக்க உண்மையிலேயே விருப்பம் கிடையாது. 2. நாம் ஈழத்தவர்கள் உள் மனங்களில் நிறைய வேதனைகள் - இதை யாராலும் ...... 3. ஒரு பழமொழி - எங்கள் வீட்டின் முகப்பில் இன்றும் இருக்கிறது - ஊரில்! நேரம் பெறுமதியானது. நேரம் பொன்னைவிடப் பெறுமதியானது. பொன் கொடுத்தாலும் நேரம் வராது! ஏதோ எழுத வேண்டும் போல இருந்தது - எழுதினேன். தவறிருந்தால் மன்னிக்கவும்! வாழ்த்துக்கள்!
இப்பதான் முதன் முதலா உங்க பதிவிற்கு வந்திருக்கேன். நீங்க யாருன்னே உண்மையில் தெரியாது,.. ஆக தலைப்புதான்,..
பிரபல / புதிய பதிவர்களே...]]
அப்படியா!
நாம 3ஆம் ஜாதிப்பா
நான் கலை இலக்கியம், கவிதை தொடர்பான பதிவுகளை அதிகம் படிப்பேன் பதிவர்கள் யாராக இருந்தாலும் சரி நல்ல பதிவாக இருந்தால் படிப்பேன் பின்னூட்டம் இடுவேன்...
பொதுவாக பழைய பதிவர்கள் கூகிள் ரீடரில்தான் பதிவுகளை படிக்கிறார்கள். அவ்வப்போது தமிழ்மணம் போன்ற திரட்டிகளுக்கு வந்து செல்கிறார்கள். அப்போது கண்ணில் படும் சில புதிய பதிவுகள் படிக்கிறார்கள். அதில் எதாவது சில பதிவு நன்றாக இருக்கும் பட்சத்தில் ரீடரில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
இன்னொரு வகையாக வேறு எதாவது பதிவில் ஒருவரின் பின்னூட்டம் நன்றாக இருக்கும் பட்சத்தில் கவரப்பட்டு அவரின் பதிவுக்கு சென்று படித்து வாசகராவதும் உண்டு.
இன்னொரு வகை சர்ச்சைகளின் மேல் எப்போதும் ஈர்க்கப்படுவதால் சர்ச்சைக்குறிய பதிவுகள் படிக்கப்படும்.
எதாகினும் நன்றாக எழுதுவது மட்டும் புதிதாய் பதிவெழுத வந்தவர்களுக்கு வாசகர்களை பெற்றுதராது. மற்ற பதிவுகளில் பின்னூட்டம் இடவேண்டும். அது ஒப்புக்கு சப்பானியாக இல்லாமல் நேர்மையாக இருக்கட்டும்.
தமிழ்மணத்தில் உங்கள் இடுகை 5 நிமட நேரம்தான் இருக்கும் அந்த நேரத்திற்குள் எல்லோருடைய பார்வையிலும் படுவது சிரமம். ஆனால் மற்ற பதிவுகளில் உங்கள் பின்னூட்டம் எப்போதும் கண்களில் பட்டு ஒரு பழக்கப்பட்ட தோற்றத்தை கொடுக்கும்.
போதுமாங்க? :)
//7.பிரபல பதிவர்களின் இடுகைகளை மட்டும்தான் படிப்பேன்.///
:::))))))))
நானும் பிரபல பதிவர்தான் அன்பு!
ஆனா ஒன்னு புதிய பதிவர்களின் பதிவுகளை நான் படிப்பதுண்டு. ஆனால் பின்னூட்டம் மட்டும் போட்டதில்லை. அப்புறம் என்னை யாரு மதிப்பா?
நான் பிரபல பதிவராக்கும் ம்ம்ஹும்ம்!
:)
//3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.//
யார் எழுதியது என்றெல்லாம் பார்க்கமாட்டேன். அனைவரது இடுகைகளையும் நான் சென்று பார்க்கும் இடமெல்லாம் கிடைக்கும் லிங்க் களையும் சுட்டி புதியது என்ன என்பதையும் ஆர்வமுடன் பார்ப்பேன். அது பிடிக்கும்பட்சத்திலும், மாற்றுகருத்து இருக்கும்பட்சத்திலும் கண்டிப்பாக பின்னூட்டமிடுவேன். மற்றும் என்னை பின்தொடர்பவர்கள், நான் பின்தொடர்பவர்களையும் தவறாமல் பார்த்து பின்னூட்டமிடுவேன்.
1.நண்பர்களின் இடுகையை படிப்பேன்.
2.என் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தருபவர்களின் இடுகைகளை படிப்பேன்.
3.என் வலையில் பாலோவராக இருப்பவர்களின் படைப்புகளை படிப்பேன்
4.தொடர்ந்து என் வலையில் பின்னூட்டமிடுபவர்களின் இடுகைகளை படிப்பேன்
5.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
இதுதானுங்கோ நம்ம வழி
3 and 9
படிச்சாத்தான் தெரியும் அது மொக்கையா நல்லதான்னு.
அது யாருங்க பிரபல பதிவர்கள், பெண் பதிவர்கள் ?? விளங்க வைக்கவும். இங்கயுமா ஜாதி, இட ஒதுக்கீடெல்லாம்???
எனக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போடத் தெரியவில்லை. :(
எல்லா இடுகைகளையும் படிப்பேன். நேரம் கிடைப்பதைப் பொறுத்தது அது.
முதலில் படிப்பது நான் பாலோயராக இருப்பவர்களின் இடுகைகளை.
அடுத்து தமிழிஷில் தொடரும் இடுகைகளையும், பின்னர் பாப்புலர் இடுகைகளையும் படிப்பேன்.
இதுத் தவிர, இடுகைகளில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாகவும் படிப்பது உண்டு.
1. அப்படியென்று இல்லை
2. அப்படியும் சொல்லிவிட முடியாது
3. இப்படியும் சொல்லிவிடமுடியாது. எழுத்து பிடித்திருந்தால் நிச்சயம் படிப்பேன்..
4. நிச்சயமாக இல்லை. தலைப்பு ஏமாற்றும் என்பது தெரியும்ல..
5. அப்படியில்ல
6. நிச்சயமாக இல்லை.
7. சுத்தமாக இல்லை,
8. பதிவுகளில் ஆண் பெண் வித்தியாசம் பார்ப்பதில்லை
9. ஆம்
10. ரசிப்பதோடு சரி.. முன்னுரிமை தருவதில்லை.
11. பொதுவாக எனக்கு நேரமில்லாததால் அதிக பதிவுகளை வாசிக்க முடிவதில்லை.. பதிவரைத் தொடர்ந்தால், நிச்சயம் படிக்கிறேன்!! பதில் எழுதாவிடினும்....
நான் ஃபாலோ செய்பவர்களையும்,தமிழ்மணத்தில் பளிச்சென படும் பதிவுகளையும் படிப்பேன்.
மேலும் ஒன்பதாம் எண்ணில் குறிப்பிடப்பட்டவாறு,இலக்கியம் கவிதைக்கு முக்கியத்துவம் தருவேன்.
அப்படி கட்டுப்பாடெல்லாம் இல்ல. திரட்டிகளில் கண்ணில் படும் பதிவுகள், நான் ஃபாலோ செய்யும் பதிவுகள், பின்னூட்டங்கள் (பிற தளங்களிலும்) ரேண்டமாக தென்படும் அன்பர்கள் என எல்லோரையும் படிப்பது தான் வழக்கம். என்ன திடீர்னு?
நான் பின் தொடரும் வலைகளை முதலில் படிப்பேன்.
சாய்ஸ் கேட்டதால்:
நண்பர்களின் வலையையும் படிப்பேன்
அனைத்து நல்ல பதிவுகளையும் படிப்பேன்.
இது எதிலும் அடங்காத ஒரு விதத்தில் நான் படிக்கிறேன். சில நேரங்களின் இனிய நண்பர்களின் பதிவு விடுபட்டு ஏனென்று தெரியாமல் யாரோ சிலருடைய பதிவுகளில் பின்னூட்டமிட்டுக்கொண்டு இருப்பேன்.
நன்றி அன்புமணி, உங்கள் பதிவுக்குக்கூட நான் சில நாட்களாக வரவில்லை.
அதற்காக வருந்தவேண்டாம். அன்பு மனதில் உள்ளது நண்பரே!! என் பின்னூட்டங்களில் அது நிறைய சமயங்களில் இல்லை.
மூன்றாவதாகச் சொல்லப் பட்டிருப்பது-எல்லாப் பதிவுகளையும் படிப்பேன், நேரம் அனுமதிக்கிற வரை.
இன்றைக்குச் சுமாராக எழுதும் பதிவர் என்றைக்கும் அப்படியே எழுதுவார் என்றோ, இன்றைக்கு சூப்பரப்பு'ன்னு எல்லாராலும் கொண்டாடப் படுபவர் நாளைக்கும் சூப்பரான பதிவை எழுவார் என்றோ யாராவது உறுதியாகச் சொல்ல முடியுமா?
வாசிப்பு என்பது ஒரு உன்னதமான அனுபவம், அவ்வளவே!
தலைப்பைப் பார்த்துதான் படிப்பேன்.
அன்பின் ஜீவா. வணக்கம். வலையுலகில் ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 290 என்று தமிழ் மணம் கூறுகிறது. அத்தனை இடுகைகளையும் அனைவராலும் படிக்க முடிவதில்லை. காரணம் எல்லாருடைய வீட்டிலும் கணினி வசதி இருக்மென்று சொல்ல முடியாது. பலரும் அலுவலக கணினியில்தான் காலத்தை ஓட்டுகிறார்கள் என்பது உண்மை. அலுவலக நேரத்தில் அனைவரின் இடுகைகளையும் படிக்க முடியமென்பது சாத்தியமற்றது. ஆகவே, தன் வலைத்தளத்திற்கு தவறாமல் வருபவர்களின் வலைத்தளத்திற்கு முன்னுரிமை தருகிறார்கள் என்பது எண்ணம். நான் அப்படித்தான் படிக்கிறேன். என் வலைத்தளத்திற்கு வருபவர்கள் இடுகைகள் இடாதபோதுதான் மற்றவர்களின் இடுகைகளை படிக்க நேர்கிறது. பல புதிய இடுகைகளை அவர்கள் தரும் தலைப்பை வைத்துத்தான் உள்ளே செல்கிறேன். எல்லாருடைய இடுகைகளையும் படிக்க ஒரு நாள் போதாது. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம். இல்லையேல் நானும் ஒரு இடுகைதான் போடணும்.
பின்குறிப்பு- ஜீவா அவர்களின் வலைப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம்தான் இது. அவரின் வலைத்தள முகவரி- http://gg-mathi.blogspot.com/
பல புதிய வலைப்பதிவர்கள் தங்களின் இடுகைகளை யாரும் படிக்கப்படாததாலும், பின்னூட்டம் இடப்படாததாலும் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாக அறிகிறேன். அவர்களுக்கு நம் பதிவர்களின் மனநிலையை எடுத்துரைப்பதற்காகவே இவ்விடுகை. வேறொன்றுமில்லை. இதன் மூலம் பதிவர்களின் விருப்பங்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். புதிய பதிவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.வருகை தந்து கருத்துரை இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி தோழர்களே...
நமக்கு கிடைக்கிற நேரத்தில எந்த பதிவு படிக்கனும்னு நமக்கு தோணுதோ அதை படிப்போம் . உங்க பதிவை கூட நான் பலமுறை படித்திருக்கிறேன் ஆனால் பின்னூட்டம் பெரிதாக இட்டதில்லை . இனி தொடரும்
படிக்கணும்னா தோணினா படிப்பேன். நீங்க எனக்கு என்னோட பதிவுகளில் பின்னூட்டம் போட்டு இருக்கீங்க. ஆனா நான் உங்கள் பதிவுகளை அதிகம் படித்ததில்லை. படித்த பதிவுகளுக்கும் பின்னூட்டம் போட்டதாக நினைவு இல்லை. இன்று படிக்கனும்னு தோணிச்சு படிச்சி பின்னூட்டமும் போட்டுட்டேன். காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சிக்கோங்க:)
தமிழ்மணம் மற்றும் மற்ற திரட்டிகளில் கண்ணில் படும் பதிவுகளை எல்லாம் படிப்பேன்.
விருப்பபதிவர்களது வலைப்பூவிற்கு வாரமிருமுறை செல்வேன்.
3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
order:
1.நண்பர்களின் இடுகையை படிப்பேன்.
4.தலைப்பைப் பார்த்து படிப்பேன்.
10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.
நேரம் கிடைக்கும் போது தமிழிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் போன்ற திரட்டிகளில் தலைப்புகளை பார்த்து பிடித்தால் முழுவதும் இடுகைகள் படிப்பேன் பிடித்தால் கண்டிப்பா பின்னூட்டம் போடுவேன்..
அதன் பின்பு...
1.நண்பர்களின் இடுகையை படிப்பேன்.
2.என் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தருபவர்களின் இடுகைகளை படிப்பேன்.
3.என் வலையில் பாலோவராக இருப்பவர்களின் படைப்புகளை படிப்பேன்
4.தொடர்ந்து என் வலையில் பின்னூட்டமிடுபவர்களின் இடுகைகளை படிப்பேன்
5.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
முக்கியமா பின்னூட்டமே வராத பதிவு என்றால் உடனே பின்னூட்டம் போடுவேன் ரொம்ப நல்லா இருந்தா போன் போட்டு பாரட்டுவேன்
ஆண் பெண் பதிவர்கள் என்று பிரித்து படிப்பதில்லை ...
செம ஜாலியா இருக்கனும் பதிவுகள் அட்வஸ் போட்டா தாங்காது அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனைகள் சின்னதா சிரிச்சு கருத்து சொல்லுற பதிவார் இருந்தாலும் சரி, கவிதையானலும் சரி, கதையானலும் சரி :-) நல்லா மனசை தொட்டா ரைட்டு தான்
புதிய பதிவர்கள் என்றால் என் நண்பர்களும் பரிந்துரை செய்வது உண்டு :-) கவலை வேண்டாம் நல்ல பதிவுகள் காலத்தை வென்று நிக்கும் ;)
ஏன் அன்புமணி.,உங்களுக்கு இப்படி ஒரு பதிவு போடத் தோன்றியது?
உங்கள் பதிவை யார் , ஏன் படிக்கிறார்கள் என்று அறியும் ஆவலா? .......
ஹா ஹா ஹா
///1.நண்பர்களின் இடுகையை மட்டுமே படிப்பேன்.
3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.///
என்னோட சாய்ஸ் 1 & 3.
எல்லாவற்றையும் படிப்பேன்..
ஆனால் ஒன்று நான் படிக்கும்போது எனக்கு புரிந்தால் தொடர்ந்து படிப்பேன். இல்லையென்றால் ............
பல புதிய வலைப்பதிவர்கள் தங்களின் இடுகைகளை யாரும் படிக்கப்படாததாலும், பின்னூட்டம் இடப்படாததாலும் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாக அறிகிறேன். அவர்களுக்கு நம் பதிவர்களின் மனநிலையை எடுத்துரைப்பதற்காகவே இவ்விடுகை. வேறொன்றுமில்லை. இதன் மூலம் பதிவர்களின் விருப்பங்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். புதிய பதிவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.//////
முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி கொள்கிறேன்,எனக்கு வருத்தங்கள் ஏதுமில்லை. இந்த பதிவு (பின்னுட்டத்திற்கு பதில்கள் .... நீண்டதால் :)") என் பார்வைகளிருந்தே தவிர, எனது பதிவுகளுக்கானது இல்லை.சில,பல நல்ல தோழமைகள் எப்பொழுதும் ஆதரவு தருகிறார்கள் எனது பதிவிற்கு. மேலும் கைதட்டல் சப்தங்களினால் பூக்கள் பூப்பதில்லை....
பொதுவா எல்லோருடைய பதிவையும் பார்ப்பேன். தலைப்பு இழுத்தா உள்ளே போவேன்.
கவிதை மட்டும் கொஞ்சம் தூரம்.
மத்தபடி நகைச்சுவைப் பதிவுகளுக்கு முன்னுரிமை உண்டு அது யார் எழுதினாலும் சரி.
ஆனா ஒன்னு எல்லாருக்கும் பின்னூட்டம் எழுத நேரம் இல்லை. அப்படியும் சில இடுகைகளைப் படிக்கும்போது எதாவது சொல்லணுமுன்னு ஒரு வேகம் வரும். எடுத்துக்காட்டு: இந்த இடுகைதான்:-))))
3,9
வணக்கம்
நான்.....ம்ம்ம்ம்
\\3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
4.தலைப்பைப் பார்த்து படிப்பேன்.\\
இதுதான் நான் படிப்பது
இராஜராஜன்
ஒரு வாரத்தில் பெரும்பாலும் 5 நாட்கள் மட்டுமே இந்த வலையுலகத்தில் மேய்வதுண்டு. (ஏன்னா 2 நாள் ஆபீசு லீவுல:-)
இதில் 1 முதல் 9 வரையான அனைத்துமே மாறிமாறி வரும். இருப்பினும் 7 வதில் உள்ள 'மட்டும்தான்' என்பதை நீக்கிவிடலாம். அடுத்து 8 வதில் உள்ள வரியில் 'முன்னுரிமை' என்பதனை நீக்கி விடலாம். அவர்களின் இடுகைகளையும் படிப்பேன்.
இதுமட்டுமல்லாது, இளமை விகடனின் குட் ப்ளாக்ஸ் மற்றும் நண்பர்கள் அறிமுகம் செய்யும் சிலரது இடுகைகள்.. அவ்வளவே.. போதுமா :-))
எல்லாத்தையும் படிப்போம்ல!! ஏன்னா எங்களுக்கு படிக்க மட்டும் தான் தெரியும்!!
இப்பதான் முதன் முதலா உங்க பதிவிற்கு வந்திருக்கேன். நீங்க யாருன்னே உண்மையில் தெரியாது,.. ஆக தலைப்புதான்,..
///3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.
4.தலைப்பைப் பார்த்து படிப்பேன்.
10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.
அல்லது... \\\
Post a Comment