Sunday, 9 August 2009

இயக்குனர் பாலுமகேந்திராவுடன் கிணற்றடியில் நிகழ்ந்த சந்திப்பு.

மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு ‘ஓ பக்கங்கள்’ ஞானி அவர்களின் வீட்டுக் கிணற்றடியில் எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களின் எழுத்து அனுபவத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த மாத நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தவர் ‘கேமராக் கவிஞர்’ என்று போற்றப்படும் இயக்குனர் பாலுமகேந்திரா.


படைப்புகள் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பார்வையாளர்களை பார்த்து கேட்டார். பலரும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக, காலத்தை பதிவு செய்வதாக, உருவமும் உள்ளடக்கமும் கொண்டதாக, செய்தியை (மெஸேஜ்) கொண்டிருப்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். வரவேற்ற பாலுமகேந்திரா அவர்கள் உருவமும் உள்ளடக்கமும் முக்கியம் என்றார். அது பற்றி விளக்கவும் செய்தார்.


பாட்டி வடை சுட்ட கதையை ஒராயிரம் வருடங்களாக சொல்லி வருகிறோம். இன்னும் ஒரு கோடி ஆண்டுகளாயினும் சொல்லுவோம். ஆனால் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்றார்.


எல்லாச் சிறுகதைகளுக்கும் முடிவுகளை நாமே சொல்லிவிட முடியாது. சில கதைகளின் முடிவுகளை வாசகனின் பார்வைக்கே விட்டுவிட வேண்டியதிருக்கும் என்றார். நெருங்கிய நண்பனின் தாய் இறந்துவிடுகிறாள். அந்த நண்பனின் தாயின் கையால் இவனும் பலமுறை சாப்பிட்டிருக்கிறான். அந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டிற்கு செல்கிறான். அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் அமர்ந்திருக்கும் அவனின் கையைப் பற்றி தடவிக் கொடுப்பதில் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. இதை வார்த்தைகளால் நிரப்ப முடியாது என்றார்.


ஒரு சிறுகதையை குறும்படமாக எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றி கூறினார். உதாரணத்திற்கு பாட்டி வடை சுட்ட கதை எடுத்துக் கொண்டு விளக்கினார். ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தார். இதில் ஒரு ஊர் அடங்கியிருக்கிறது. அந்த ஊர் எப்படிப்பட்டது. கிராமமா, நகரமா, மலைப்பிரதேசமா என்பது போன்றவை கவனிக்க வேண்டும். பாட்டி- பாட்டி என்றால் எந்த மாதிரி பாட்டி? சுமங்கலியான பாட்டியா? விதவைப் பாட்டியா? காதில் பாம்படம் மாட்டியிருக்கும் பாட்டியா? போன்றவை இதுபோல் கவனிக்க வேண்டும் என்றார்.இந்த மூன்று வார்த்தைகளிலேயே இவ்வளவு கவனிக்க வேண்டியிருப்பதென்றால் முழுக்கதைக்கும் எவ்வளவு மெனக்ககெட வேண்டியிருக்கும் என்பதை விளக்கினார்.


தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் இளைஞர்களிடம் கடைசியாக படித்த நாவல் என்ன? சிறுகதை என்ன? என்று கேள்வி கேட்பதாகவும், அவர்கள் படிக்கவில்லையென்றால் படிக்க சொல்வதாகவும் அதன்பிறகே அவர்களுக்கு திறமை இருந்தால் சேர்த்துக் கொள்வதாகவும் கூறினார். தனது உதவி இயக்குனர்களிடமும் தினசரி ஒரு கதையை படித்து அதை அவர்கள் எப்படி சீன் பிரிக்கிறார்கள், குறிப்பு எடுக்கிறார்கள் என்பதை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


பதேர் பாஞ்சாலி நாவலைப் படித்த பிறகே அதை படமாக பார்த்ததாகவும், நாவலைவிட சத்யஜித்ரே படமாக்கியிருந்த விதம் அருமையாக இருந்ததாகவும் தெரிவித்தார். பிரபல தொலைக்காட்சி அவரிடம் 52 வாரங்களுக்கு தொடர் எடுத்து தரும்படி கூறியபோது தான் படித்து மகிழ்ந்த சிறுகதைகளை தொடராக எடுத்ததாக தெரிவித்தார். அப்படி எடுக்கப்பட்ட எழுத்தாளர் ‘மாலன்’ அவர்களின் சிறுகதையை (ஞானி அருமையாக வாசித்தார்.) வாசிக்கச் செய்து, அந்த சிறுகதையை தான் படமாக மாற்றிய போது தான் செய்த மாற்றங்களை கண்டுணர செய்தார். (நிகழ்ச்சி முடிவில் அந்தப் படம் திரையிடப்பட்டது.)


எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் ‘பிரசாதம்’ கதையை படமாக மாற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாக பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலாக கூறினார். யுவசந்திர சேகரன், மாலன் கதைகளை படிக்க தான் பரிந்துரைப்பதாக ஒரு கேள்விக்கு தெரிவித்தார். இதனால் ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகளை தான் மதிக்கவில்லை என்று பொருளல்ல என்றும் கூறினார்.


மூன்றாம்பிறை படம் பார்த்த பலர் இப்படி படம் எடுப்பது சுலபம். கமர்ஷியலாக உங்களால் படம் எடுத்து வெற்றிபெற முடியுமா என்று (நீங்கள்) கேட்டதற்காகவே அந்தப் படத்தின் பெயரையும்) ‘நீங்கள் கேட்டைவை’ என்று வைத்ததாகவும் சொல்லி கலகலப்பூட்டினார்.


இந்நிகழ்வில் நமது பதிவர்கள் லக்கிலுக், பைத்தியக்காரன், அக்னி, அதிஷா,ஆ.முத்துராமலிங்கமும், பொன்.வாசுதேவன், முத்துவேல் ஆகியோரும் வந்திருந்தனர்.


பின்பு முத்துராமலிங்கம் சொன்னார்- தமயந்தி மற்றும் உமாஷக்தி அவர்களும் வந்திருந்ததாக...

இந்த இடுகையில் இன்னும் சில விடயங்கள் விடுபட்டிருக்கலாம். வந்திருந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.அல்லது இடுகைகளாகவும் போடலாம்.

32 comments:

நட்புடன் ஜமால் said...

அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் அமர்ந்திருக்கும் அவனின் கையைப் பற்றி தடவிக் கொடுப்பதில் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. இதை வார்த்தைகளால் நிரப்ப முடியாது என்றார்.]]



நிதர்சணம்.

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி நண்பரே!

anujanya said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அன்பு. நல்லா எழுதி இருக்கீங்க.

அனுஜன்யா

Vidhoosh said...

நல்லா எழுதிருக்கீங்க.

வாசித்து கேட்பது எனக்கும் பிடித்தமான ஒன்று. யாரிடம் கேட்பது? அதற்காகவே நானே modulation-னோடு வசித்து ரெகார்ட் செய்து மீண்டும் கேட்டுக் கொள்வேன்.

:) நல்ல பகிர்வு.

-வித்யா

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான சந்திப்பை அதே சுவாரஸ்யம் சற்றும் குறையாமல் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் அன்புமணி!
நன்றிகள் பல!

Jawahar said...

பாலு நம் தலைமுறைக்குக் கிடைத்த உன்னதமான படைப்பாளி. எனக்கே இதைப் படித்த போது பாட்டி வடை சுட்ட கதையை திரும்ப எழுதிப் பார்க்க ஆசை வந்தது. நான்கு நல்ல சிறுகதைகளை தொகுத்து ஒரு முழு நீள திரைப்படமாக அவர் எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.

என் தேர்வுகள் :

சுஜாதாவின் அம்மோனியம் பாஸ்பேட்,ஜெயகாந்தனின் குருபீடம் மற்றும் அக்ரகாரத்துப் பூனை,ஜெயந்தனின் துப்பாக்கி நாயக்கர்.

செய்வாரா?

http://kgjawarlal.wordpress.com

அகநாழிகை said...

அன்புமணி,
நான் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு வந்ததால் தாமதமாகத்தான் வந்தேன். நிகழ்வின் ஆரம்பத்தில் நடைபெற்றதை உங்கள் பதிவின் வாயிலாக அறிந்து கொண்டேன். பகிர்தலுக்கு நன்றி.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

ஆ.ஞானசேகரன் said...

ஆகா.. நல்லதோர் சந்திப்பை நல்ல பதிவாக பதிந்தமைக்கு முதலில் நன்றி நண்பா... அதேபோல் நடந்த பேசிய அத்தனையும் பகிர்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்..

ஹேமா said...

கருத்துக்கள் சிறப்பு.கூடியவர்கள் திறமைசாலிகள் அல்லவா !

நாஞ்சில் நாதம் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அன்பு. நல்லா எழுதி இருக்கீங்க.

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் அமர்ந்திருக்கும் அவனின் கையைப் பற்றி தடவிக் கொடுப்பதில் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. இதை வார்த்தைகளால் நிரப்ப முடியாது என்றார்.]]

நிதர்சணம்.//

உண்மைதாங்க.

குடந்தை அன்புமணி said...

தங்கள் வருகைக்கு நன்றி...

சென்ஷி

அனுஜன்யா

குடந்தை அன்புமணி said...

//Vidhoosh said...
நல்லா எழுதிருக்கீங்க.

வாசித்து கேட்பது எனக்கும் பிடித்தமான ஒன்று. யாரிடம் கேட்பது? அதற்காகவே நானே modulation-னோடு வசித்து ரெகார்ட் செய்து மீண்டும் கேட்டுக் கொள்வேன்.

:) நல்ல பகிர்வு.

-வித்யா//

அட... உங்க நடைமுறைகூட வித்தியாசமா இருக்கே...

குடந்தை அன்புமணி said...

//ராமலக்ஷ்மி said...
சுவாரஸ்யமான சந்திப்பை அதே சுவாரஸ்யம் சற்றும் குறையாமல் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் அன்புமணி!
நன்றிகள் பல!//

பாலுமகேந்திரா ஆங்கிலத்தில் பேசியதை, போதிய ஆங்கில அறிவு இல்லாததால் என்னால் முழுமையாக வெளியிட முடியவில்லை.

குடந்தை அன்புமணி said...

//Jawarlal said...
பாலு நம் தலைமுறைக்குக் கிடைத்த உன்னதமான படைப்பாளி. எனக்கே இதைப் படித்த போது பாட்டி வடை சுட்ட கதையை திரும்ப எழுதிப் பார்க்க ஆசை வந்தது. நான்கு நல்ல சிறுகதைகளை தொகுத்து ஒரு முழு நீள திரைப்படமாக அவர் எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.

என் தேர்வுகள் :

சுஜாதாவின் அம்மோனியம் பாஸ்பேட்,ஜெயகாந்தனின் குருபீடம் மற்றும் அக்ரகாரத்துப் பூனை,ஜெயந்தனின் துப்பாக்கி நாயக்கர்.

செய்வாரா?

http://kgjawarlal.wordpress.com//

நல்ல தேர்வுகள் நண்பா.முதல் வருகைக்கு மிக்க நன்றி.

குடந்தை அன்புமணி said...

//"அகநாழிகை" said...
அன்புமணி,
நான் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு வந்ததால் தாமதமாகத்தான் வந்தேன். நிகழ்வின் ஆரம்பத்தில் நடைபெற்றதை உங்கள் பதிவின் வாயிலாக அறிந்து கொண்டேன். பகிர்தலுக்கு நன்றி.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//

எனக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் கிடைக்கும் ஒருநாள் விடுமுறையில் வீட்டையும் கவனிக்க வேண்டியிருப்பதால் முடியவில்லை.தாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியைப் பற்றி இடுகையிட முடிந்தால் மகிழ்வேன்.

அ.மு.செய்யது said...

/சுஜாதாவின் அம்மோனியம் பாஸ்பேட்,ஜெயகாந்தனின் குருபீடம் மற்றும் அக்ரகாரத்துப் பூனை,ஜெயந்தனின் துப்பாக்கி நாயக்கர்.
//

அக்ரஹாரத்து பூனை ஜெயகாந்தன் எழுதியதா ???

அருமையானதொரு சந்திப்பு..நல்ல பகிர்வு....சென்னையில் இல்லாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
ஆகா.. நல்லதோர் சந்திப்பை நல்ல பதிவாக பதிந்தமைக்கு முதலில் நன்றி நண்பா... அதேபோல் நடந்த பேசிய அத்தனையும் பகிர்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்...//

பேசிய அத்தனையும் என்று சொல்ல முடியாது. என் நினைவில் இருந்த விசயத்தை மட்டுமே இடுகையிட்டிருக்கிறேன். நன்றி நண்பா.

குடந்தை அன்புமணி said...

//ஹேமா said...
கருத்துக்கள் சிறப்பு.கூடியவர்கள் திறமைசாலிகள் அல்லவா !//

எனக்கு புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது...
ஹி...ஹி...

குடந்தை அன்புமணி said...

//நாஞ்சில் நாதம் said...
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அன்பு. நல்லா எழுதி இருக்கீங்க.//

நன்றி நண்பா...

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
/சுஜாதாவின் அம்மோனியம் பாஸ்பேட்,ஜெயகாந்தனின் குருபீடம் மற்றும் அக்ரகாரத்துப் பூனை,ஜெயந்தனின் துப்பாக்கி நாயக்கர்.
//

//அக்ரஹாரத்து பூனை ஜெயகாந்தன் எழுதியதா ???//


எனக்கு தெரியவில்லையே... யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க...

//அருமையானதொரு சந்திப்பு..நல்ல பகிர்வு....சென்னையில் இல்லாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.//

அதுக்கென்ன எனக்கு கிடைக்கிறதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தானே நான் இருக்கேன். கவலையை விடுங்க...

நேசமித்ரன் said...

நல்லதோர் பகிர்வு நண்பரே
பாலு அற்புதங்களின் வாசல்களைத் திறந்து காட்டும் கலைஞன்
அவருடனான இங்கள் சந்திப்பை பதிவிட்டது மகிழ்வுக்குரியது

குடந்தை அன்புமணி said...

// நேசமித்ரன் said...
நல்லதோர் பகிர்வு நண்பரே
பாலு அற்புதங்களின் வாசல்களைத் திறந்து காட்டும் கலைஞன்
அவருடனான இங்கள் சந்திப்பை பதிவிட்டது மகிழ்வுக்குரியது//

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .
இதுவரை இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? என்ற கேள்விக்கு வீடு, சந்தியாராகம் மட்டுமே என்றார். என்ன கொடுமை என்றால் அந்த இருபடத்திற்குரிய நெகட்டிவ் அழிந்து போய்விட்டதாம்.

ஈரோடு கதிர் said...

மிக அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.

நன்றி அன்பு மணி

Anonymous said...

சுவாரஸ்யம் குறையாம சந்திப்பை எழுதியிருக்கீங்க.

துளசி கோபால் said...

அடடா...அருமையான நிகழ்வாக இருந்துருக்கே.....

திசைஎட்டும் விழாவுக்குப் போனதால் இதைத் தவறவிடும்படியா ஆச்சு.


பகிர்வுக்கு நன்றி.

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

ஈரோடு-கதிர்
சின்ன அம்மிணி

குடந்தை அன்புமணி said...

//துளசி கோபால் said...
அடடா...அருமையான நிகழ்வாக இருந்துருக்கே.....

திசைஎட்டும் விழாவுக்குப் போனதால் இதைத் தவறவிடும்படியா ஆச்சு.


பகிர்வுக்கு நன்றி.//

திசை எட்டும் விழா பற்றி இடுகை போடுங்களேன்...

நர்சிம் said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

அதுவும் வடை சுட்ட கதையில் ஆரம்ப வார்த்தைகளுக்கே எவ்வளவு பார்வை தேவைப்படுகிறது என்பது நல்ல பகிர்வு.நன்றி

குடந்தை அன்புமணி said...

//நர்சிம் said...
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

அதுவும் வடை சுட்ட கதையில் ஆரம்ப வார்த்தைகளுக்கே எவ்வளவு பார்வை தேவைப்படுகிறது என்பது நல்ல பகிர்வு.நன்றி//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி

குடந்தை அன்புமணி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
பகிர்வுக்கு நன்றி//

தங்கள் வருகைக்கும் நன்றி.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...